சமீபத்திய பதிவுகள்

கடைசியாக வந்த செய்தி:ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி இறுதிக்குரல்

>> Friday, February 13, 2009





ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி எறிகணை வீச்சில் மரணம் !

சிறிலங்கா படையினர் நடத்திய அகோரமான பீரங்கித் தாக்குதலில் 132 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 358 பேர் காயமடைந்துள்ளனர். தயாகத்தில் மட்டுமல்ல புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள உறவுகளாலும் நன்கு அறியப்பட்ட ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் இழப்பு தொடர்பாக தற்போது புலம் பெயர் ஊடகங்களில் தொடர் உணர்வலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான புண்ணியமூர்த்தி சத்தியமூத்தி மரணமடைந்துள்ளார்.முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தாயகத்தில் இருந்து தாயகத்து நிலைமைகளை புலம்பெயர் ஊடகங்களுக்கு தொலைக்காட்சிகள் வழியாகவும் வானொலிகள் வழியாகவும் அச்சு ஊடகங்கள் வழியாகவும் இணைய ஊடகங்கள் வழியாகவும் வெளியிட்டு வந்தவர் சத்தியமூர்த்தி ஆவார்.
வன்னியில் உள்ள ஊடக இல்லத்தில் இருந்து ஊடகப் பணியை இவர் ஆற்றி வந்த இவர், யாழ். மண்டைதீவை தாய் மண்ணாகக் கொண்டவர்.
மட்டக்களப்பு பொலன்னறுவ மன்னம்பிட்டியில் நீண்டகாலம் வாழ்விடமாகக் கொண்ட இவர், ஒரு பிள்ளையின் தந்தையும் ஆவார். வன்னியில் உள்ள தேவிபுரம் மற்றும் வள்ளிபுனம் “மக்கள் காப்பு வலய” பகுதிகள் மீது நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய அகோரமான பீரங்கித் தாக்குதலில் 132 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 358 பேர் காயமடைந்துள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரம் மற்றும் வள்ளிபுனம் “மக்கள் பாதுகாப்பு வலய” பகுதிகள் மீது நேற்று வியாழக்கிழமை அதிகாலை தொடக்கம் செறிவான ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் நடத்தினர்.
நேற்று முழு நாளும் அதிகாலை தொடக்கம் மாலை வரை 6 ஆயிரம் எறிகணைகள் வரை இந்தப் பகுதியில் வீழ்ந்து வெடித்ததாக தெரிவிக்கின்றார். இதில் 132 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 358 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 91 பேர் மாத்தளன் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்களில் 10 பேர் மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகையிலேயே உயிரிழந்து விட்டனர்.
காயமடைந்த ஏனையவர்களின் நிலைமையும் ஆபத்தான கட்டத்திலேயே உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர் இறுதியாக புலம்பெயர் மக்களுக்காக வழங்கிய ஆய்வைக் கேட்க இங்கே அழுத்துங்கள்
http://eurotvlive.com/download/20090124/20090124_Saththiyamoorthy.mp3

http://www.alaikal.com/news/?p=12271

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP