சமீபத்திய பதிவுகள்

விடுதலைப் புலிகளின் வான் படை பலமிழந்தது

>> Sunday, February 22, 2009

விடுதலைப் புலிகளின் வான் படை பலமிழந்தது: இலங்கை ராணுவம்    
altகொழும்பில் நேற்று முன்தினம் தாக்குதலில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளின்
 2 விமானங்கள் வீழ்த்தப்பட்டதால் அவர்களின் வான் படை முற்றிலும்
பலமிழந்துவிட்டதாக இலங்கை ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.

 

புலிகளிடம் 3 விமானங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அதில் ஒன்று செப்டம்பர் 9ம்
தேதி சுட்டு வீழ்த்தப்பட்டது. மற்ற இரண்டும் நேற்று முன்தினம் வீழ்த்தப்பட்டதால்
புலிகளிடம் தற்போது விமானங்கள் எதுவும் இல்லை என்பதால் அவர்களின் வான்
படை முற்றிலும் பலமிழந்துவிட்டதாக ராணுவத் தரப்பில் கூறப்படுகிறது.

 

எனினும், இதுகுறித்து புலிகள் தரப்பில் கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

 

விடுதலைப் புலிகளின் அனைத்து விமான ஓடுதளங்களையும் கைப்பற்றிவிட்டதாக
இலங்கை ராணுவம் கூறிவந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 2 தற்கொலைப்
படை விமானங்கள் மூலம் கொழும்பில் புலிகள் தாக்குதல் நடத்தினர் என்பது
குறிப்பிடத்தக்கது.
 
http://www.swissmurasam.net/2008-10-17-05-11-45/12380-2009-02-22-19-49-00.html

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

1 கருத்துரைகள்:

தமிழர் நேசன் February 22, 2009 at 9:46 PM  

இந்த குட்டி விமானங்களை வைத்தே இந்த போடுன்னா, என் தலைவன்கிட்ட ஒரு மிக் ரகமோ ஒரு பால்கோன் F16 ரக விமானமோ இருந்தால், ஒரே வாரத்தில் ராஜபக்ஷேவும் அவன் கூட்டாலி கொடும் பாவிகளும் வந்து சிங்களத்தின் விடுதலைக்காக என் தலைவன் காலை வருடுவார்கள்...
அந்த பயம் தானே இந்த உலக சமூகத்தை, ஒப்பட்ற என் தலைவனையும் வீரம்மிக்க என் இனத்தையும் அளிக்க தூண்டுகிறது... உலகில் 1.5 சதவிகிதம் பங்கை கொண்ட ஒரு இனம் சொந்த நாடில்லாமல், மொத்த உலகத்தின் எதிப்பையும் மீறி பல நூறு அணு ஆயுதத்தின் சக்தியை தன் இன மக்களிடமே கொண்டுள்ளது என்பது தானே இந்த உலகத்தின் பயம்..
அதனால் தானே, ஒரு பேடி பயல் ராஜபக்ஷேவை முன்னிறுத்தி மொட்ட உலகமும், தன் ஆயுத பலம், பொருளாதார பலம், ராஜதந்திர பலம் இன்னும் பிற பலம் கொண்டு தமிழனை பூண்டோடு அழிக்க முற்ற்பட்டு விட்டது...
என் தாய் தமிழே எங்களை காப்பாற்று...

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP