சமீபத்திய பதிவுகள்

பைல்களுக்கு மாற்று பெயர் தரம் - ரீநேமர்

>> Wednesday, September 30, 2009

 
 

பைல் ஒன்றுக்கு ரீ நேம் தருவது நம் விருப்பம் என்றால் உடனே பைல் பெயரில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ரீ நேம் (கீஞுணச்ட்ஞு) தேர்ந்தெடுத்து, புதிய பெயர் கொடுத்து அமைத்துவிடுவோம். இதையே அந்த பைலைத் தேர்ந்தெடுத்து பின் எப்2 அழுத்தி பெயர் உள்ள விண்டோ, மறு பெயருக்குத் தயாரானவுடன் புதிய பெயரை டைப் செய்து அமைக்கலாம். ஆனால் பல பைல்களுக்கு மொத்தமாக பெயர் மாற்ற என்ன செய்யலாம்? அதே போல சில டைரக்டரிகளில் பரவிக் கிடக்கும் பைல்களுக்குப் பெயர் மாற்ற என்ன செய்திடலாம்? இதற்கான வழிகளைத் தருகிறது 

அட்வான்ஸ்டு ரீ நேமர் (Advanced Renamer)  என்ற இலவச புரோகிராம். இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்திட நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி :http://aren.hulubulu.net/ இந்த புரோகிராம் எட்டு வகையான வழிகளில் பைல்களுக்குப் புது பெயர் அளிக்கிறது. ஏற்கனவே பைல்களுக்கு உள்ள பெயர்களின் அடிப்படையில், பெயர்களில் சில சொற்களைச் சேர்க்கலாம்; சிலவற்றை எடுக்கலாம்; சின்ன பெரிய எழுத்துக்களை மாற்றலாம்; அல்லது முற்றிலும் புதிய பெயரைத் தரலாம்.

டிஜிட்டல் படங்களைக் கையாள்பவர்களுக்கு இந்த புரோகிராம் மிகவும் உதவி தருகிறது. குறிப்பிட்ட நிகழ்வு அல்லது வகை பட பைல்களை ஒரு தலைப்பில் கொண்டு வந்து, அவை ஒவ்வொன்றுக்கும் வித்தியாசம் காணும் வகையில் பெயர்களை இது தருகிறது. ஒரு நிகழ்வில் எடுக்கும் அனைத்து போட்டோக்களையும் அவற்றை அடையாளம் காணும் வகையில் இது பெயர்களைச் சூட்டுகிறது. பைல்களின் பண்புகளையும் இதில் மாற்றலாம்; எப்போது ஒரு பைலை பார்த்தோம்; எடிட் செய்தோம்; உருவாக்கினோம் என்பதற்கான அட்ரிபியூட்டுகளையும் இதில் மாற்றலாம். ஆங்கிலம் மட்டுமின்றி மேலும் பல ஐரோப்பிய மொழிகளிலும் பெயர் மாற்றத்தை மேற்கொள்ளலாம். இந்த புரோகிராம் விண்டோஸ் 2000 தொடங்கி அதன் பின் வந்த விஸ்டா வரையிலான தொகுப்புகளில் இயங்குகிறது. இதன் அண்மைக் காலத்திய தொகுப்பாக ரீநேமர் பதிப்பு 02.57.00.00 கிடைக்கிறது. இந்த தொகுப்பின் போர்ட்டபிள் பதிப்பு ஒன்றும் இதன் தளத்தில் தரப்படுகிறது. இதனை எந்த பிளாஷ் டிரைவிலும் எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். இந்த தளத்தில் மிக விரிவாக அனைத்து உதவிக் குறிப்புகளும் பல தலைப்புகளிலும் தரப்படுகின்றன.செல் செலக்ஷன் நீட்டிக்கும் வழிகள்
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் ஒரு செல்லைத் தேர்ந்தெடுக்கிறோம். பின்னரே இன்னும் பல செல்களைத் தேர்ந்தெடுத்திருக்கலாமே என்று எண்ணுகிறோம். இந்த எக்ஸ்டென்ஸன் ஒரு செல்லாக இருக்கலாம்; அல்லது முழு வரிசையாக இருக்கலாம்; அல்லது வரிசையில் உள்ள கடைசி தகவல் உள்ள செல்லாக இருக்கலாம். வெவ்வேறு வகையான இந்த நீட்டிப்புகளுக்கான ஷார்ட் கட் கீகளை இங்கு காணலாம்.
1. ஒரு செல் நீட்டிக்க – SHIFT+arrow key2. அதே நெட்டு வரிசை (column) அல்லது படுக்கை வரிசையில் (row)  உள்ள டேட்டா உள்ள கடைசி செல்வரை – CTRL+SHIFT+arrow key3. அந்த படுக்கை வரிசையின் தொடக்கம் வரை – SHIFT+HOME4. ஒர்க் ஷீட்டில் தொடக்கம் வரை நீட்டிக்க CTRL+SHIFT+HOME5. ஒர்க் ஷீட்டில் கீழாக வலது மூலையில் உள்ள பயன்படுத்திய செல் வரை நீட்டிக்க CTRL+SHIFT+END6. மேலும் கீழாக உள்ள ஒரு ஸ்கிரீன் வரை உள்ள செல்களுக்கு நீட்டிக்க – SHIFT+PAGE DOWN7. மேலும் மேலாக உள்ள ஒரு ஸ்கிரீன் வரை உள்ள செல்களுக்கு நீட்டிக்க – SHIFT+PAGE UP8. இந்த நீட்டிக்கும் வசதியை அமல்படுத்தவும் நிறுத்தவும் – F8

9. இந்த தேர்வுடன் இன்னொரு ரேஞ்ச் செல்களை இணைக்க SHIFT+F8 அழுத்த வேண்டும். இதனை அழுத்தும் முறை குறித்துப் பார்க்கலாம். இதன் பின் நீங்கள் இணைக்க விரும்பும் செல்களின் ரேஞ்ச் தொடங்கும் இடத்தில் ஆரோ கீகள் மூலம் கர்சரைக் கொண்டு செல்லவும். எப் 8 கீயை அழுத்தவும். அதன்பின் ஷிப்ட் + ஆரோ கீகள் மூலம் இணைக்க விரும்பும் அனைத்து செல்களையும் தேர்ந்தெடுக்கவும். 
10. கமெண்ட் உள்ள அனைத்துசெல்களையும் தேர்ந்தெடுக்க CTRL+/ தேர்ந்தெடுக்கப்பட்ட செல் தொகுதிக்குள் எப்படி கர்சரை நகர்த்தலாம் என்பது குறித்தும் இங்கு பார்க்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட செல் தொகுதிக்குள் மேலும் கீழுமாகச் செல்ல – Enter தொகுதிக்குள் கீழிருந்து மேலாகச் செல்லShift+Enter அழுத்தலாம்.

இடது வலதாகச் செல்ல, அல்லது ஒரே ஒரு நெட்டு வரிசை தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தால் கீழாக ஒரு செல் செல்ல – TAB வலது இடதாகச் செல்ல, அல்லது ஒரே ஒரு நெட்டு வரிசை தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தால்மேலாக ஒரு செல் செல்ல – Shift+TAB தேர்ந்தெடுக்கப்பட்ட செல் தொகுதியில் கடிகாரச் சுற்று வழியில் ஒவ்வொரு மூலைக்கும் செல்ல Ctrl+period வலது பக்கம் தொடர்ச்சியாக இல்லாத செல்களுக்கிடையே செல்ல – Ctrl+Alt+ Right Arrow இடது பக்கம் தொடர்ச்சியாக இல்லாத செல்களுக்கிடையே செல்ல – Ctrl+Alt+ Left Arrowஎழுத்து வகைக்கு ஒரு ஷார்ட் கட்
உங்களுடைய வேர்ட் டாகுமெண்ட்களில் குறிப்பிட்ட ஒரு எழுத்துவகையினை அடிக்கடி பயன்படுத்த எண்ணுகிறீர்கள். அதற்கு என்ன செய்கிறீர்கள்? ஒவ்வொரு முறையும் பாண்ட் கட்டம் சென்று, கிளிக் செய்து, பின் கிடைக்கும் பாண்ட் பட்டியலில் நீங்கள் பயன்படுத்த விரும்பும் பாண்ட்டினைத் தேர்ந்தெடுத்துப் பின் தொடர்ந்து டாகுமெண்ட் அமைக்கிறீர்கள். இதற்குப் பதிலாக, அந்த பாண்ட்டுக்கு ஒரு ஷார்ட் கட் கீ அமைத்து, அதனை அழுத்தி உடனே பாண்ட்டைப் பெறலாம். 
1. Tools  கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Customize  தேர்ந்தெடுக்கவும்.
2. கிடைக்கும் விண்டோவில் Commands  டேப்பில் கிளிக் செய்திடவும். பின் கீ போர்ட் பட்டனில் கிளிக் செய்திடுங்கள்.
3. இதில் Categories என்பதில் ஊணிணtண் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
4. பாண்ட்ஸ் கீழாக, நீங்கள் அடிக்கடி பயன்படுத்த விரும்பும் எழுத்து வகையினைத் தேர்ந்தெடுக்கவும். 
5. அடுத்து Press New Shortcut Key  என்ற டெக்ஸ்ட் பாக்ஸில் உங்கள் கர்சரை அமைக்கவும். 
6. அடுத்து [Alt]CS என்பதை அழுத்தவும். 
7. அடுத்ததாக Assign என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். 
8. பின் இருமுறை கிளிக் செய்து வெளியேறவும்.
இதில் ஒன்றை உணர்ந்து செயல்படவும். ஏற்கனவே ஷார்ட் கட் கீயாக உள்ள கீ இணைப்பை இதற்கு தேர்ந்தெடுக்கக்கூடாதுsource:dinamalar
--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP