சமீபத்திய பதிவுகள்

டவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது?

>> Saturday, October 31, 2009

 
 

பல வாசகர்கள் தாங்கள் சில கேம்ஸ் மற்றும் டிவிடி கிளிப்களை டவுண்லோட் செய்கையில் இடைப்பட்ட நேரத் திலேயே அவை தொடர்பு விட்டுப் போகின்றன என்றும் இதற்கான காரணம் தெரியவில்லை என்றும் எழுதி உள்ளனர். ஒரு சிலர் சில காரணங்களை எழுதி அவை சரியான காரணங்கள் தானா என்று கேட்டுள்ளனர். இது போன்று இடையே டவுண்லோட் முறி வதற்கான காரணங்களை இங்கு காண்போம். 

1. இன்டர்நெட் இணைப்பு: டவுண்லோட் செய் வது இடையே அறுந்து போவதற்கான பொதுவான ஒரு காரணம் இன்டர்நெட் இணைப்பு துண்டிக்கப்படுவதுதான். டவுண் லோட் ஆகிக் கொண்டிருக்கையில் இன்டர் நெட் இணைப்பு துண்டிக்கப்பட்டால் டவுண்லோட் முழுமையாக தோல் வியடையும். ஏன் இப்படி ஆனால் என்ன என்றெல்லாம் மாற்று வழி எல்லாம் இதற்குக் கிடையாது. டவுண்லோடிங் செயல் பாட்டிற்கு அத்தியாவசிய அடிப்படைத் தேவை இன்டர்நெட் கனெக்ஷன் தான். அது இல்லாத பட்சத்தில் நிச்சயம் டவுண் லோட் செயல்பாடு நின்றுதான் போகும். எனவே டவுண்லோட் அறுந்து போகும் நிகழ்வில் முதலில் நீங்கள் சோதனை செய்ய வேண்டியது இன்டர்நெட் தொடர்பு உள்ளதா என்பதுதான். அது இல்லை என்றால் மீண்டும் இணைப்பை ஏற்படுத்தி டவுண்லோட் செய்திடலாம்.


2. சர்வர் இணைப்பு: இரண்டாவது முக்கிய காரணம் டவுண்லோட் செய்திடும் கம்ப்யூட்டருக்கும் பைலைக் கொண்டிருக்கும் சர்வருக்கும் இணைப்பு துண்டிக் கப்படுவதுதான். இந்த இணைப்பு துண்டிக்கப்பட்டாலும் டவுண்லோட் செய்வது நின்று போகும். இதற்குக் காரணம் உங்கள் கம்ப்யூட்டரோ அல்லது இன்டர்நெட் இணைப்போ அல்ல. இந்த நிகழ்வுக்குக் காரணம் சர்வர் கம்ப்யூட்டரில் உள்ள பிரச்சினைதான். அல்லது இடையே உள்ள இணைப்பில் உள்ள பிரச்சினை. இதனை நம் பக்கத்தில் எதுவும் செய்ய முடியாது. மீண்டும் அந்த சர்வர் அல்லது இணைப்பு சரியாகும் போது மட்டுமே டவுண்லோட் செயலைத் தொடங்க முடியும்.


3. டைம் அவுட் கனெக்ஷன் (Timed out conection)  நீங்கள் டவுண்லோட் செய் திடும் பைல் இறங்க அதிக நேரம் எடுத்துக் கொண்டால் பைலை வழங்கும் சர்வர் நேரம் ஆகிவிட்டது என்று இணைப்பைத் துண்டித்துக் கொள்ளும். அதாவது டவுண்லோட் பாதியில் நின்று விடும். இது சர்வருக்கு ஏற்படும் ஓவர்லோடினால் கூட இருக்கலாம்; அல்லது இன்டர்நெட் இணைப்பின் வேகம் மிகவும் மெதுவாக இருக்கலாம். இதற்கும் கவலைப்பட வேண்டியது இல்லை. இது தானாகச் சரி செய்யப்படும்போது மீண்டும் இணைப்பை ஏற்படுத்தி டவுண்லோட் செய்திடலாம்.

மேலே சொன்ன நிகழ்வுகளுக்கான தீர்வு கள் என்ன? அதிலேயே குறிப்பிட்டுள்ளபடி மீண்டும் இணைப்பு ஏற்படுத்தி டவுண்லோட் செய்திடும் பணியை மேற்கொள்ள வேண்டிய து தான். பெரும்பாலான நிகழ்வுகளில் அந்த நேரம் பெரிய அளவிலான பைல்கள் டவுண்லோட் செய்திட உகந்ததாக இருக்காது. இன்டர்நெட் டிராபிக் பெரும் அளவில் இருக்கும்போது டவுண்லோட் சுமுகமாக இருக்காது. எனவே இன்டர்நெட் டிராபிக் குறைவாக இருக்கையில் டவுண்லோட் செய்திட முயற்சிக்கலாம். மேலும் பிரபலாமான பைல்களையும் அப் போதுதான் வெளியான முக்கிய பைலையும் பலர் ஒரே நேரத்தில் டவுண்லோட் செய்திட முயற்சி செய்வார்கள். அப்படிப்பட்ட பைலை நீங்கள் டவுண்லோட் செய்திட விரும்பினால் அதிகம் டவுண்லோட் முயற்சிகள் மேற் கொள்ளப் படாத நேரத்தில் டவுண்லோட் செய்திடலாம்.


இன்னொரு தீர்வு டவுண்லோட் செய்திட வேறு ஒரு சர்வரை நாடுவதுதான். சில முக்கிய பைல்களை உலகின் பல இடங்களில் உள்ள சர்வர்களில் வைத்திருப்பார்கள். அந்த பைல்களை டவுண்லோட் செய்திட அந்த தளங் களுக்குச் செல்கையில் வெவ்வேறான சர்வர் களுக்கு லிங்க் கொடுத்திருப்பார்கள். அல்லது உங் கள் பிரியமான சர்ச் இஞ்சின் மூலம் இந்த சர் வர்களின் முகவரிகளைப் பெற்று இயங்கலாம்.


அடுத்த தீர்வு டவுண்லோட் மேனே ஜர்களைப் பயன்படுத்துவதுதான். இப்போது இணையத்தில் இத்தகைய டவுண்லோட் மேனேஜர்கள் நிறைய இலவசமாகக் கிடைக் கின்றன. இவற்றைப் பயன்படுத்தி டவுண் லோட் செய்தால், டவுண்லோட் செய்கையில் இணைப்பு நின்று போனால் மீண்டும் இணைப்பு கிடைக் கையில் அந்த பைல் எது வரை டவுண்லோட் செய்யப்பட்டுள்ளது என்று பார்த்து மீண்டும் விட்ட இடத்தில் தொடங் கலாம். 


நம்மிடமே சில நேரங்களில் குறை இருக் கலாம். நீங்கள் இன்டர்நெட் இணைப்பிற்குப் பயன்படுத்துவது டயல் அப் தொடர்பாக இருந்து இந்த டவுண்லோட் அறுந்து போகும் பிரச்சினை அடிக்கடி ஏற்பட்டால் உடனே பிராட்பேண்ட் தொடர்பினைப் பெறவும். மெதுவாக இயங்கும் டயல்அப் இன்டர்நெட் எப்போதும் டவுண்லோட் விஷயத்தில் பிரச்சினையைக் கொடுக்கும்.


மேலே குறிப்பிட்டவை எல்லாம் சில பரிந்துரைகள் தான். நீங்கள் தான் உங்களுடைய இன்டர்நெட் அனுபவத்தின் அடிப்படையில், உங்கள் ஊரில், உங்கள் இல்லத்தில் உள்ள இணைப்பு எப்படி என்ன வேகத்தில் இருக்கிறது என்று பார்த்து அதற்கேற்ற வகையில் முடிவெடுக்கலாம். வாரத்திற்கு ஓரிரு முறை பெரிய அளவில் டவுண்லோட் செய்பவராக இருந்து, அடிக்கடி பாதிப்பு ஏற்பட்டால் நிச்சயம் தீர்வு ஒன்றுக்கு நீங்கள் முயல வேண்டும்.


source:dinamalar
--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP