சமீபத்திய பதிவுகள்

பயங்கரவாதத்தைச் சமாளிக்க... இந்தியாவில் முதல் முறையாக ஒரு பட்டப்படிப்பு!

>> Thursday, October 1, 2009

  தீவிரவாதிகள் அச்சுறுத்தலின் பின்புலத்தில் ஸ்ரீநகரில் வளர்ந்தவர், சுமாயா ரஃபீக் ஸாகர் என்ற 23 வயது இளம்பெண். அவர் தனது அடுத்தத் தலைமுறைக்கு பயங்கரவாதம் குறித்த அச்சமின்றி வாழ்வதற்காக ஒரு முடிவை எடுக்கிறார்.

முதுகலைப் பட்டம் ஒன்றைப் படிப்பது என்பதே அம்முடிவு!

முதுகலைப் பட்டம் படிப்பதற்கும், தனது அடுத்த தலைமுறையின் பயங்கரவாத அச்சத்தைப் போக்க முனைவதற்கும் என்ன தொடர்பு?

சுமயா படிக்கப் போகும் இரண்டு ஆண்டு கால முதுகலைப் பட்டப் படிப்பின் பெயர்... 'பயங்கரவாதத்தை எதிர்த்தல் மற்றும் அமைதி மேலாண்மை' (Counter Terrorism and Peace Management).

பயங்கரவாத அச்சுறுதல் மலிந்துள்ள இன்றையச் சூழலுக்கு மிகவும் தேவையான ஒரு படிப்பாகவே அறிமுகப்படுத்தப்படுகிறது, இந்த முதுகலைப் பட்டப்படிப்பு.

புனே-யில் உள்ள சர்ஹத் ரிசர்ச் சென்டர் அறிமுகப்படுத்தும் இந்தப் படிப்புக்கான வகுப்புகள், தேசத் தந்தை காந்தியடிகளின் பிறந்ததினமான அக்டோபர் 2-ம் தேதி துவங்குகிறது.

இந்த முதுகலைப்படிப்பை முதல் முறையாக பயிலும் 18 மாணவர்களில் ஒருவர் தான் ஸ்ரீநகரைச் சேர்ந்த மாணவி சுமாயா!

இந்தப் படிப்புக்கு அங்கீகாரம் பெறுவதற்கு, பல்கலைக்கழக மானிய ஆணையத்துக்கு சர்ஹத் ஆராய்ச்சி மையம் விண்ணப்பித்துள்ளது.

பயங்கரவாதத்தைச் சமாளிப்பதற்குச் சொல்லித் தரும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ள இந்தப் படிப்பை தேர்வு செய்வதற்கான காரணம் குறித்து விவரித்துள்ள மீடியா மாணவி சுமாயா, "ஏறத்தாழ கால் நூற்றாண்டுகளாக பயங்கரவாதக் காற்றைச் சுவாசித்து வருகிறேன். பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கி அடித்துக் கொல்லப்பட்டார். என்னுடைய குடும்பத்தில் அனைவரும் தூங்காமல் மரண பயத்துடன் விழித்திருந்த இரவுகள் ஏராளம். இதே பயத்துடன் எனது அடுத்த தலைமுறை வாழக்கூடாது என்பதே எனது விருப்பம்," என்றார்.

பயங்கராதம் மூலம் ஏற்படும் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்வு காணபதற்காகவே இந்தப் படிப்புக்கு தாம் விண்ணப்பித்ததாக அவர் தெரிவித்தார்.

மும்பை பயங்கரவாத சம்பவத்துக்குப் பிறகே, இந்த படிப்புக்கான பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளதாக கூறும் சர்ஹத் கல்வி நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் சஞ்சய் நேஹர் கூறுகையில், "இந்தியா கடந்த பல ஆண்டுகளாக பயங்கரவாத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. மும்பை தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாதத்தின் தாக்கம் பற்றியும், அதனை எதிர்கொள்வது பற்றியும் இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்வது மேலும் அவசியமாகியிருக்கிறது," என்றார்.

பயங்கரவாதக் கொள்கைகள், அதற்கான காரணங்கள், தேசியக் கொள்கை, பத்திரிகைகளின் பங்களிப்பு உள்ளிட்டவை முதலாம் ஆண்டிலும், பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் முதலியவை பற்றி இரண்டாம் ஆண்டிலும் சொல்லித் தரப்படும்.

சட்டம், நிர்வாகம், காவல்துறை, கல்வித் துறை, பாதுகாப்புத் துறை ஆகியவற்றில் வல்லுனர்களாக திகழ்பவர்களின் உதவியுடன், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் முகம்மது உர் ரஹ்மானின் வழிகாட்டுதலுடன் பாடத்திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளதாக கல்வி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

source:vikatan
--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP