சமீபத்திய பதிவுகள்

சிஸ்டம் பாஸ்வேர்ட் மறப்பவர்களுக்கு

>> Sunday, November 8, 2009

 
 

போன் மூலமாகவும் கடிதம் மூலமாகவும் பல வாசகர்கள் என் சிஸ்டம் பாஸ்வேர்டை மாற்றினேன்; அல்லது பல நாட்களாக கம்ப்யூட்டரைத் தொடவில்லை. அதனால் பாஸ்வேர்ட் மறந்து போச்சு. என்ன செய்யலாம்? என்றெல்லாம் கேட்கின்றனர். இவர்களுக்கு ஒரு அருமருந்து ஒன்று தரப்போகிறேன். 

பாஸ்வேர்ட் டைப் செய்கிறோம். சில வேளைகளில் தவறாக டைப் செய்கிறோம். சில வேளைகளில் மறந்து போய் பழைய பாஸ்வேர்ட் அல்லது வேறு ஒரு பாஸ்வேர்ட் கொடுக்கிறோம். இதற்குப் பதிலாக ஒரு பிளாப்பி அல்லது யு.எஸ்.பி. டிரைவில் பாஸ்வேர்டைப் போட்டு வைத்து அதனைச் செருகி கம்ப்யூட்டரை ஆன் செய்தால் அதுவே பிளாப்பி அல்லது பிளாஷ் டிரைவிலிருந்து பாஸ்வேர்டை எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா? ஆஹா! என்கிறீர்களா! கீழே படியுங்கள். ஆஹா அஹஹா!! என்பீர்கள்.


இந்த டிஸ்க்கிற்குப் பெயர் பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க் (Password Reset Disk)  ஆகும். இந்த டிஸ்க் நீங்கள் பிளாப்பி டிஸ்க் அல்லது யு.எஸ்.பி. டிரைவ் வைத்துப் பயன் படுத்தினால் தான் சரியாக இருக்கும். 

1.முதலில் ஸ்டார்ட் கிளிக் செய்து கண்ட்ரோல் பேனல் தேர்ந்தெடுக்கவும். 


2. அதன்பின் யூசர் அக்கவுண்ட்ஸ் என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். 


3. இதில் உங்கள் அக்கவுண்ட்டில் கிளிக் செய்திடவும். 


4. இப்போது கிடைக்கும் விண்டோவில் இடது பக்கம் உள்ள சைட் பாரினைப் பார்க்கவும். இதில்Prevent a Forgotten Password என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். 

5. இனி Forgotten Password விஸார்ட் கிடைக்கும். 

6. இனி உங்கள் பிளாப்பி அல்லது பிளாஷ் டிரைவினைச் செருகவும். 


7. தற்போதைய விண்டோஸ் எக்ஸ்பி யூசர் அக்கவுண்ட் மற்றும் பாஸ்வேர்டினை டைப் செய்திடவும். பின் Nஞுதுt அழுத்தவும். சில நொடிகளில் உங்கள் Password  டிஸ்க் ரெடியாகிவிடும். 

8. இனி விஸார்டில் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.


9. இதில் Password Reset Disk என எழுதி வைக்க மறக்க வேண்டாம். இதனை எப்படி பயன்படுத்துவது? எப்போதாவது உங்கள் பாஸ்வேர்ட் மறந்து போய்விட்டதா? 

1.வெல்கம் ஸ்கிரீன் வந்தவுடன் உங்கள் யூசர் நேம் கிளிக் செய்து என்டர் அழுத்தவும். 


2. அடுத்து ஒரு மெசேஜ் கிடைக்கும். அதில் உங்கள் பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க்கினை செருகவும் என்று இருக்கும். 


3. அடுத்து "Use your password reset disk" என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்திடவும். 

4. மீண்டும் Password Reset Wizard என்ற விஸார்ட் திறக்கப்படும். தொடர்ந்து புதிய பாஸ்வேர்ட் அமைப்பதற்கான வழி முறை கிடைக்கும். அதனைப் பின்பற்றவும். புதிய பாஸ்வேர்ட் ஒன்றி னை அமைத்து இயக்கலாம்.

5. இனி மீண்டும் ஒரு Password Reset Disk தயாரிக்க வேண்டியதில்லை. இதனையே எப்போதெல்லாம் உங்கள் பாஸ்வேர்ட் மறந்து போகிறதோ அப்போதெல்லாம் இதனைப் பயன்படுத்தலாம். விஸ்டாவிலும் இதே போல நடைமுறையே கடைப்பிடிக்கப்படுகிறது.



அக்டோபர் 22 - தயாராய் இருங்கள்



இதோ அதோ என்று கூறப்பட்டு எதிர் பார்க்கப்பட்டு வந்த மைக்ரோசாப்டின் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண் டோஸ் 7 வரும் அக்டோபர் 22ல் வெளி யாக இருப்பதாக மைக்ரோசாப்ட் நிறு வனத்தால் உறுதி செய்யப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் காலண்டரில் அந்த நாளை ஒதுக்கித் தயாராய் இருந்தால் அன்றே அதனை விலைக்கு வாங்கி இன்ஸ்டால் செய்து கம்ப்யூட்டரில் புதிய அனுபவம் ஒன்றுக்குத் தயாராய் இருக்கலாம். விஸ்டா வெளியாகி 33 மாதங்கள் கழித்து அடுத்த தொகுப்பு வெளியாகிறது. சென்ற மே 5ல் முழுப் பதிப்பிற்கு முந்தைய பதிப்பு பொதுமக்களுக்கென வெளியிடப்பட்டது. விண்டோஸ் 7 ஆறுவகையான பதிப்புகளில் வெளியாகும்.



Windows 7 Starter :  ஒரே நேரத்தில் மூன்று அப்ளிகேஷன்களை மட்டுமே கையாள முடியும்.



Windows 7 Home Basic: எழுந்துவரும் சந்தைக்கு ஓர் அடிப்படையான தொகுப்பு



Windows 7: Home Premium  எடிஷன். இதில் ஏரோ யூசர் இன்டர்பேஸ், டச் மற்றும் மீடியா சென்டர் தரப்படும்.



Windows 7 Professional: ரிமோட் டெஸ்க் டாப் ஹோஸ்ட், மொபிலிட்டி சென்டர், பிரசன்டேஷன் மோட்.



Windows 7 Enterpriseவால்யூம் லைசன்ஸ் மட்டுமே தரப்படும். விர்ச்சுவல் டிரைவில் இருந்து மட்டுமே பூட் செய்யப்படும். பிட் லாக்கர் உண்டு. 



Windows 7 Ultimate;  குறைந்த அளவி லேயே கிடைக்கும். அனைத்து வசதிகளும் இருக்கும். விண்டோஸ் எக்ஸ்பி அல்லது விஸ்டா பயன்படுத்துபவர்களுக்கு பதிப்பை மேம்படுத்தி விண்டோஸ் 7க்கு மாற ஆப்ஷன் தரப்படும். இதற்கென தனியே கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். இது குறித்த தகவல்கள் மட்டும் இனிமேல் வெளியிடப் படும் என்று தெரிகிறது


-source:dinamalar

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP