சமீபத்திய பதிவுகள்

மக்கள் விடுதலை இராணுவம்: ஒரே கல்லில் இரண்டு மாங்காயா ?

>> Monday, December 7, 2009


 

 

கிழக்கில் புதிதாக ஆரம்பிக்கபட்டுள்ளதாகக் கூறப்படும் மக்கள் விடுதலை இராணுவம் குறித்து பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளது. கியூபாவுடனும், பாலஸ்தீன விடுதலை அமைப்புடனும் இணைந்து இந்த மக்கள் விடுதலை இராணுவம் செயற்படப் போவதாக தமிழர்களின் அபிமானத்தைப் பெற்ற லண்டன் டைம்ஸ் ஊடகம், ஊடாக செய்தியை வெளியிட்டுள்ளது. அதன் தலைவர் எனத் தம்மை அடையாளப்படுத்தியுள்ள கொமாண்டர் கோணேஸ் என்பவர் லண்டன் டைம்ஸுக்கு நேர்காணல் ஒன்றையும் வழங்கியுள்ளார்.

1970 துகளில் கியூபா மற்றும் பாலஸ்தீன நாடுகள் எமது விடுதலைப் போராட்டத்திற்கு உதவியது என்பதில் ஜயமில்லை. இருப்பினும் அப்போது இருந்த அரசியல் பின்ணணி, புரட்சி அமைப்புக்களின் கொள்கைகள் என்பன எமது விடுதலைப் போராட்டத்திற்கு அவர்கள் உதவ ஏதுவாக இருந்தது. இருப்பினும் தற்போதைய பூகோள அரசியல் நிலையைக் கருத்தில் கொண்டால் கியூபா நாடானது இலங்கைக்கு பல உதவிகளை வழங்கிவருவதுடன், ஆயுதக் கொள்வனவில் எவ்வகையான ஆயுதங்களைக் கொள்வனவுசெய்ய வேண்டும் என அறிவுரைகளையும் கூறிவருகிறது.

இதேபோல பாலஸ்தீன நாடும் தற்போது பல பின்னடைவுகளைச் சந்தித்து, "ஹமாஸ்", "பத்தா" என இரு போராட்ட அமைப்பு தமக்குள்ளே பலப்பரீட்சையில் ஈடுபட்டுள்ளது. இந் நிலையில் பாலஸ்தீன விடுதலை அமைப்பு, வேறு நாடுகளில் உள்ள போராட்டங்களுக்கு உதவும் என வெளிப்படையாகக் கூறமுடியாது.

அத்துடன் இலங்கை அரசின் முகமூடியைக் கிளித்து பல விடையங்களை தமிழர்களுக்குச் சார்பாக எழுதி, உண்மை நிலையை வெளியுலகிற்க்குக் கொண்டுவந்து, தமிழர்களின் அபிமானத்தை பெற்ற லண்டன் டைம்ஸ் ஊடகம் ஊடாக இந்தச் செய்தி ஏன் வெளிவரவேண்டும் ? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள். சமீபகாலமாக ஹம்சா இங்கிலாந்தில் செயல்பட்டுவருவதால், இவரூடாக இச் செய்திகள் பிரசுரமாகியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. அத்துடன் இவ்வாறான ஒரு ஊடகத்தில் செய்தி வந்தால் தமிழர்கள் நம்புவார்கள் என ஹம்சா நிணைத்திருக்கலாம். நாம் என்ன அவ்வளவு முட்டாள்களா ?

இனிக் கிழக்கு மாகாணத்தில் புதிதாக ஆரம்பித்துள்ள இந்த மக்கள் விடுதலை இராணுவத்தின் நோக்கம் என்னவாக இருக்கலாம் என ஆராய்ந்தால், இதுவரை காலமும் தளபதி ராம் அவர்களை வைத்து இலங்கை அரசு ஆடிவந்த நாடகம் தற்போது அம்பலமாகியுள்ளதால், கிழக்கில் உள்ள சில தமிழ் இளைஞர்களுக்கு அரசாங்கம் ஆயுதங்களைக் கொடுத்து புதிதாக மக்கள் விடுதலை இராணுவம் என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளதாக அதிர்வு இணையத்திற்கு சில தகவல்கள் கசிந்துள்ளன. இருப்பினும் இதனைச் சுயாதீனமாக உறுதிசெய்ய முடியவில்லை.

இலங்கையில் தேர்தல் சூடு பிடித்துள்ளவேளையில், எதிர்கட்சிப் பிரமுகர்கள் சிலரை இலங்கை அரசானது மறைமுகமாக தீர்த்துக்கட்ட இது ஒரு முணைப்பாக இருக்கலாம். எதிர்க் கட்சிப் பிரமுகர்களை தீர்த்துக்கட்டிவிட்டு, அதனை முன்போல விடுதலைப் புலிகள் தான் செய்தார்கள் என தற்போது கூறமுடியாது. அப்படியாயின் தென்னிலங்கையில், மகிந்தவின் அரசு செல்வாக்கை இழக்கநேரிடும். அதற்காக இப்படி ஒரு அமைப்பை இலங்கை அரசு ஏற்படுத்தியுள்ளது. 

அத்துடன் நின்றுவிடாமல் புலம்பெயர் மக்கள் அல்லது ஈழத்தில் உள்ள இளைஞர்கள் திரும்பவும் ஒரு ஆயுதப்போராட்டத்தை தொடங்க நினைத்திருந்தால், மக்கள் விடுதலை இராணுவம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதே இனி நாம் ஏன் ஒன்றை ஆரம்பிக்கவேண்டும் என எண்ணுவார்கள். அதைவிட அது உண்மையான போராட்ட இயக்கம் என சில இளைஞர்கள் எண்ணி சேரவும் நிணைப்பார்கள், அப்படி சேர நினைக்கும் இளைஞர்களையும் இலங்கை அரசு இலகுவாக இனம்காண முடியும். எனவே மக்கள் விடுதலை இராணுவம் என்று ஒன்றை ஆரம்பித்துள்ளது ஒரே கல்லில் இரண்டு மாங்காயை வீழ்த்தவா என்ற சந்தேகம் வலுப்பெறுகிறது. 

இவர்கள் உண்மையான போராட்ட இயக்கமாக இருந்தால் விரைவில் இவர்கள் நடவடிக்கை மூலம் இது தெளிவாகத் தெரியும். தற்போது உள்ள சூழ் நிலையில் எதையும் எடுத்த எடுப்பில் நாம் நம்பிவிட முடியாது என்பதே யதார்த்தம்.

அப்படியே ஒரு புதிய ராணுவக் கட்டமைப்பு இந்த 7 மாதத்தில் கொமாண்டர் கோணேஸ் உருவாகியிருந்தாலும், தம்மை ஒரு இராணுவக் குழு என இவர்கள் இவ்வளவு வேகமாக ஏன் தம்மை அறிமுகப்படுத்தவேண்டும் ? அவ்வாறு அவர்கள் தம்மை அடையாளப்படுத்தியதை ஏன் சிங்கள ஊடகங்கள் பெரும்செய்தியாக வெளியிடவேண்டும், குறிப்பாக அரச கட்டுப்பாட்டில் உள்ள சிங்கள ஊடகங்கள் இச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதின் அர்த்தம் என்ன ? இவற்றை எல்லாம் பொறுத்திருந்து மிக அவதானமாக தமிழ் மக்கள் நிதானத்துடன் பார்க்கவேண்டும் என அதிர்வு இணையம் மக்களை வேண்டி நிற்கிறது. உண்மையாகப் போராடும் அமைப்பை மிகச் சுலபமாக நாம் அடையாளம் காணலாம் என்பதில் ஜயமில்லை. இதனையே நாம் செய்தும் இருக்கிறோம். தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப விரைவில் ஒரு உண்மையான போராட்ட அமைப்பு களமிறங்கும். அது விடுதலைப் புலிகளின் அதி நவீன படை அமைப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 


மலரும் தமிழீழம் விரைவில்... ஏன் என்றால் மாண்ட மாவீரரின் இலட்சியம் அதுவென்றபடியால்...


source:athirvu


--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP