சமீபத்திய பதிவுகள்

விடுதலைப்புலிகளிடம் இரசாயன ஆயுதங்கள்

>> Wednesday, February 25, 2009

ஈழ மக்களை பாரிய அழிவுக்குள்ளாக தள்ளிக்கொண்டிருக்கும்  லங்கை அரசாங்கம் தன்னுடைய மனிதக்கொலைபாதகத்தை உலகம் பார்க்ககூடாது என்பதாற்காக புலிகள் மீது பல குற்றச்சாட்டுகளை எழுப்பிவருகிறது.அதில் ஒன்றுதான் விடுதலைப்புலிகள் இரசாயன ஆயுதங்களை கொள்வனவு செய்ய முயற்சி 
 
 
மேலும் வாசிக்க
 
 
மோசமான அழிவுகளை ஏற்படுத்தும் இரசாயன ஆயுதங்களை கொள்வனவு செய்ய புலிகள் முயற்சி – அரசாங்கம்
மோசமான அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய இரசாயன ஆயுதங்களை சர்வதேச ஆயுத சந்தையில் கொள்வனவு செய்ய தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செலயாளர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார்.

தெர்மோபெரிக் எனப்படும் மிக மோசமான ஆயுதம் மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் போன்றவற்றை கொள்வனவு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெர்மோபெரிக் ஆயுதங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் தாக்குதல்களினால் குறித்த பிரதேசத்தில் பாரிய தீப்பிழம்பு ஏற்படும் எனவும் சுற்று புறத்தில்காணப்படும் ஒட்சிசனின் அளவு வீழ்ச்சியடையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான ஆயுதங்களின் மூலம் யுத்த களத்தில் பாரிய அழிவுகள் ஏற்படக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைபேசி உரையாடல் மற்றும் வேறும் தொடர்பாடல்களை ஒட்டுக் கேட்டதன் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்தத்தை விரும்பவில்லை எனவும், குறித்த யுத்தநிறுத்த காலத்தில் தமது படைபலத்தை விரிவுபடுத்தவே முனைவதாக அவர்
தெரிவித்துள்ளார்.

அண்மையில் கிடைக்கப் பெற்ற தகவல்கள் குறித்து முழுமையான கருத்து வெளியிட முடியாது எனவும், யுத்தம் முடிவடைந்த பின்னர் இது குறித்து மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/view.php?2a46QVb4b3bP9ES34d3IWnT3b02r7GQe4d24YpDce0ddZLuIce0dg2hr2cc0vj0q3e

StumbleUpon.com Read more...

இலங்கையில் அக்கிரமம்:சுடரொளி ஆசிரியர் வித்தியாதரன் கடத்தப்பட்டுள்ளார்

 
 
உதயன் மற்றும்  சுடரொளி செய்திதாள்களின் பிரதம ஆசிரியர் வித்தியாதரன்  இன்று முற்பகல் 9.45 அளவில் கடத்திச்செல்லப்பட்டுள்ளார்
கொழும்பின் புறநகர் கல்கிஸ்ஸையில் வைத்து வெள்ளை வேனில் வந்த சீருடை அணிந்தவர்களால் பலாத்காரமாக வித்தியாதரன் கடத்திச்செல்லப்பட்டதாக நேரில் கண்டோர் தெரிவித்துள்ளனர்
 
கல்கிஸ்ஸையில் உள்ள மஹிந்த மலர்சாலையில் வைக்கப்பட்டிருந்த பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது
 
அருகில் இருந்தோர் தடுத்தபோதும் அவர்களை தடுத்து விட்டு விசாரணைக்கு அழைத்துசெல்லவேண்டும் எனக்கூறியே  வித்தியாதரன் கடத்தப்பட்டுள்ளார்.

 

http://www.tamilwin.com/view.php?2aIWnTe0dvj0q0ecQG7r3b4P9EE4d2g2h2cc2DpY3d436QV3b02ZLu3e

StumbleUpon.com Read more...

புதிய தமிழ் தாய் வாழ்த்து பாடல் ஏ.ஆர்.ரகுமான் இசையில்

ஏ.ஆர்.ரகுமான் இசையில் உலக தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்

விழாவில், கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், ''ஆஸ்கார் விருது பெற்ற தமிழன் ஏ.ஆர்.ரகுமானை பாராட்டி, உலகமே எழுந்து நின்று கை தட்டுகிறது. இந்திய திரையுலகுக்கு தலைமை தாங்கும் தகுதி, தமிழ் திரையுலகுக்கு வந்து இருக்கிறது.

உலக திரையுலகுக்கு தலைமை தாங்கும் தகுதி, இந்திய திரையுலகுக்கு வந்து இருக்கிறது.

மலேசிய தமிழர்கள் நடத்திய விழா ஒன்றில் நானும், ஏ.ஆர்.ரகுமானும் பங்கேற்றோம். அங்கு தமிழ்த்தாய் வாழ்த்து என்ற பெயரில், வேறு ஒரு பாடலை பாடினார்கள். இங்கு அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ``நீராரும் கடலுடுத்த'' என்ற பாடலை அவர்கள் பாடவில்லை.

``நீராரும் கடலுடுத்த'' பாடலில், இந்திய எல்லைகள் குறிக்கப்பட்டு இருக்கிறது. அதை உலக தமிழன் எப்படி பாடுவான்? இந்த சிக்கலை தீர்க்க உலக தமிழர்களுக்காக, புதிய தமிழ் தாய் வாழ்த்து பாடலை எழுதப்போகிறேன்.

அந்த பாடலுக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமான் சம்மதித்து இருக்கிறார்'' என்று தெரிவித்தார்.
 

StumbleUpon.com Read more...

புதுக்குடியிருப்பின் தீவிர‌ சமர் குறித்த காணொளி செய்தி

StumbleUpon.com Read more...

விடுதலைப்புலிகளை ஒழித்துவிடுவோம் என்ற இலங்கை அரசின் கனவு பலிக்காது

விடுதலைப்புலிகளை ஒழித்துவிடுவோம் என்ற இலங்கை அரசின் கனவு பலிக்காது: வீரமணி



விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்துவிடுவோம் என்று இலங்கை அரசாங்கம் காணும் கனவு ஒருபோதும் பலிக்கப் போவதில்லை என்பது உலகறிந்த உண்மை என்றும், இலங்கை அரசுக்குப் பொருளாதாரத் தடை உள்பட அனைத்து நிர்ப்பந்தங்களையும் ஏற்படுத்த உலக நாடுகள் முன்வரவேண்டும் என்றும் திராவிடர் கழக தலைவர் வீரமணி கூறியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


இலங்கையில், ஈழத் தமிழர்களை, தீவிரவாதத் தடுப்பு என்ற ஒரு பொய்க் காரணத்தைக் கொண்டு, பூண்டோடு அழிக்கவும், சொந்த நாட்டிலேயே அவர்களை நிரந்தர அகதிகள் முகாமில் கட்டாய வேலை செய்ய வைக்கும் கொத்தடிமைகளாக்கிடவுமான ஒரு நிலையை இலங்கை அதிபர் ராஜபக்சேவும், அவரது ராணுவமும் அன்றாடம் செய்து வருகின்றன!

அங்கு நடைபெறுவது பச்சையான இனப்படுகொலைதான் என்பதை உலக நாடுகள் தங்களது கண்களை அகலமாகத் திறந்துகொண்டு பார்ப்பதோடு, இந்தப் போர் நிறுத்தப்பட்டு, அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, துரித முடிவு காணவேண்டும் என்பதை அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட அய்ரோப்பிய நாடுகள், அய்.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன்

ஆகியோர் வெளிப்படையாகக் கூறியும், இலங்கை ராணுவம் தனது போரை நிறுத்தாமல், விடுதலைப்புலிகளை அழித்து விட்டோம், அழித்துவிட்டோம்! என்று கூறி, நாளும் ஆயிரக் கணக்கில் தமிழர்களைப் பலியாக்கி வருகிறது.


நேற்றுகூட இலங்கைப் போர் குறித்து, அய்ரோப்பிய கூட்டமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்,

இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக அய்ரோப்பிய ஒன்றியம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. அங்கு உருவாகியுள்ள மனித அவலங்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் கொல்லப்படுவது தொடர்பாக ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம் என்று கூறியுள்ளது.


விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையில் சமரசம் செய்து வைக்க அமெரிக்கா, அழைக்கவில்லை என்றாலும், தற்போதைய போரை முடிவுக்குக் கொண்டுவர தேவையான எல்லா உதவிகளையும் செய்யும் என்று கூறியுள்ளது அமெரிக்கா.

தொப்புள்கொடி உறவுள்ள நமது தமிழ்நாடு இந்திய யூனியனின் ஒரு முக்கிய மாநிலம். தமிழ் மக்கள் இந்தியக் குடிமக்கள் என்ற முறையில், இரு தரப்பும் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று இந்தியக் குடியரசுத் தலைவர் தமது உரையில் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகளின் அரசியல் பேச்சாளர் போர் நிறுத்தத்தினை ஏற்று பேச்சுவார்த்தைக்கு வரத் தயார் என்று அறிவித்துள்ள நிலையில், அதை ஏற்க மறுத்து, கேலி பேசி, அவர்கள் தோல்வியால் இப்படி கூறுகிறார்கள் என்று கூறும் இலங்கை அரசுதானே இப்போது சண்டித்தனம் செய்கிறது. விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்துவிடுவோம் என்று அவர்கள் காணும் கனவு ஒருபோதும் பலிக்கப் போவதில்லை என்பது உலகறிந்த உண்மை!

அவர்கள் கொரில்லா முறையில் ஈடுபட்டால், இலங்கை அரசுக்கு எப்போதும் நிம்மதியோ, வெற்றியோ இருக்காது!

இந்தத் தோல்வி   குழப்பங்களால் வெறிபிடித்து அலையும் இலங்கை அரசும், இலங்கை இராணுவம் "கொத்து குண்டுகளை" வீசி கூட்டம் கூட்டமாய் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிக்கிறது.

ஏவுகணைமூலம் வீசப்படும் இக்குண்டுகள் சிறியவை; அதில் 2 ஆயிரம் குண்டுகள் வரை உள்ளே வைக்கப்பட்டு வீசப்படுகின்றன. என்னே கோரம்! எவ்வளவு கொடுமை! அய்.நா. உரிமை விவகாரங்களுக்கான துணைப் பொதுச் செயலாளர் சர் ஜான் ஹோம்ஸ் இலங்கையில் மூன்று நாள்கள் சுற்றுப்பயணம் செய்துள்ளார். வவுனியா பகுதியில் இலங்கை அரசு ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்புப் பகுதிகளைப் பார்வையிட்டார். அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்தார்.

அப்படி ஆய்வு செய்த நிலையில் அவர் கூறியுள்ளார்: அகதிகளாக வாழும் அப்பாவித் தமிழர்களின் நிலைமை கவலை யளிப்பதாக இருக்கிறது. அவர்களின் மறுவாழ்வுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் விரைவாக மேற்கொள்ளுமாறு இலங்கை அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் தெரிந்துகொள்ளவேண்டியது என்ன? அகதிகளாக அடக்கப்பட்டுள்ள மக்களுக்குக்கூட தேவையான உதவிகளை, வசதிகளை இலங்கை அரசு செய்யவில்லை என்பது விளங்க வில்லையா?

எந்த வகையிலும் ஈழத் தமிழர்களை ஒழிப்பது, அல்லலுக்கு ஆளக்குவது என்பதுதான் அந்த அரசின் வெறிபிடித்த நோக்காக இருக்கிறது என்பதையும் புரிந்துகொண்டால், அங்கு என்ன செய்யப்படவேண்டும் என்கிற எண்ணமும், உணர்வும் ஏற்படாமல் போகாது. இத்தோடு தமிழர்களை நிரந்தர அகதிகளாக்கிட அய்க்கிய நாடுகளின் சபையும், வேறு சில நாடுகளும் முயற்சிக்கின்றன; இது மறைமுகமான இன அழிப்பு முயற்சியாகும். விடுதலைப்புலிகள் தான் அவர்களை மனிதக் கேடயங்களாக்கி வெளியேற அனுமதிக்காமல் தடுக்கிறார்கள் என்ற ஒரு திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரத்தை உலகம் முழுவதும் செய்கின்றது இலங்கை அரசு.

அதனை மற்ற நாடுகளும் சிந்தனா சக்தி சிறிதுமின்றி கிளிப்பிள்ளைப்போல பேசுகின்றன!

சர்வதேசப் பார்வையாளர்கள் முன்னிலையில் தமிழர்களை ஒப்படைக்கத் தயார் என்று விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளாரே தமிழர்களைக் கேடயமாக விடுதலைப்புலிகள் வைத்திருந்தால் இப்படி கூற முன்வருவார்களா?

விடுதலைப்புலிகள் சில ஆயிரங்களே உள்ளதாக இலங்கை அரசு கூறுகிறது; பல லட்சக்கணக்கில் சுமார் 3 முதல் 4 லட்சம் தமிழர்களை அவர்கள் விருப்பத்திற்கு மாறாக தடுத்து நிறுத்துதல் (மனிதக் கேடயமாக) இயலுமா? ஒருபோதும் முடியாது. அந்த மக்கள் அங்கேயே சொந்த மண்ணிலேயே தங்களது வாழ்க்கை அழிந் தாலும் பரவாயில்லை என்றெண்ணித்தானே இருக்கிறார்கள்!

இருதரப்பில் ஒரு தரப்பு போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு முன்வரும்போது, ஏற்காதவர்கள்மீதுதானே உலக நாடுகள் உரிய பொருளாதாரத் தடை, புறக்கணிப்பு, உதவிகளை நிறுத்தி வைத்தல் போன்ற கடும் நடவடிக்கைகளை எடுப்போம் என்று கூறவேண்டும்!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அவர்களை நேரில் சந்தித்து இலங்கைத் தமிழர் நல உரிமை பேரவைத் துணைக் குழு, நிலைமைகளை விளக்கியபோது அவர்கள் அதைக் கேட்டு உரிய நடவடிக்கை எடுத்து உதவுவதாக சொன்ன முறையில் உண்மையான ஆதரவு நிலவரம் இருந்தது.

அதன் ஒரு பிரதிபலிப்பு தென் மாநிலங்களில் ஈழத் தமிழருக்கு மருந்து, உணவு முதலிய பொருள்களை காங்கிரஸ் கட்சி வசூலிக்கவேண்டும் என்ற அவரது அறிவிப்பை, நாம் மனதாரப் பாராட்டி வரவேற்கிறோம்!

அவருக்குள்ள மனிதநேயம் ஆட்சியில் உள்ள சில அதிகாரிகள், சில அமைச்சர்களுக்கு இல்லாதது மிகவும் வருத்தத்திற்கும், வேதனைக்கும் உரியது. காரணம், இராஜாவை மிஞ்சும் இராஜ விசுவாசிகளாக அவர்கள் இருப்பதே!

அங்கு விடுதலைப்புலிகளை ஒழித்துக்கட்டிவிட்டு அரசியல் தீர்வு என்பது ஏமாற்று வித்தை; எவரும் ஏற்கவே முடியாது! நடைமுறை சாத்தியமும் அல்ல.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=4063

StumbleUpon.com Read more...

அமெரிக்காவில் அவமானப்பட்ட இலங்கைப் படைகள்

  


"ஒரு குரல்...........

பார்த்தால் இலங்கை ஜனாதிபதி.....

நாங்கள் எவ்வளவு புலி பிடிக்கிறம் ஆயுதத்தோட ... இதப் பிடிக்க மாட்டமா... எகத்தாளமாக...

சரி அனுமதி அளிக்கப்பட்டது...."

 

அமெரிக்காவில் காட்டின் அருகாமையில் அமைந்த ஒரு கிராமம்....

அங்கே ஒரு பிரச்சினை...

என்னவென்றால்... காட்டில் இருந்து ஒரு புலி வரும்.. உயிர்களைக் கொல்லும்..

ஆனால் பொலிஸ் வந்து தேடியதும் அதைக் கண்டு பிடிக்க முடியாது...

காட்டுக்குள் ஓடி விடும்..

இக் கதை தொடர்ந்து கொண்டே இருந்நது......

உயிரிழப்புகளும் குறையவில்லை புலியையும் பிடிக்க முடியவில்லை...

அமெரிக்காவின் சிறப்புப் படைகள் அக் காடுகளுக்கு சென்று வேட்டை நடத்தியும் முடியவில்லை...

வேறு நடுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு பிரித்தானியா.. றஸ்யா.. சீனா இன்னும் பல..... ஒண்ணும் புடுங்க முடியல....

புலியின் அட்டகாசமும் குறையவில்லை. கடைசியாக எல்லா நாடுகளையும் ஒன்று கூட்டி புலி பிடிக்கும் மகாநாடு நடத்தப்பட்டது. அதிலே அவமானம் எந்க நாட்டாலும் முடியல என பேசப்பட்ட போது....

எங்களைக் கேட்கலயே.......

ஒரு குரல்...........

பார்த்தால் இலங்கை ஜனாதிபதி.....

நாங்கள் எவ்வளவு புலி பிடிக்கிறம் ஆயுதத்தோட ... இதப் பிடிக்க மாட்டமா... எகத்தாளமாக...

சரி அனுமதி அளிக்கப்பட்டது....

இலங்கை முப்படைகளும் அமெரிக்க காட்டுக்கள்...

நாள்கள் மாதங்களாயிற்று...

மாதங்கள் வருடங்களாயிற்று..

போன இலங்கைப்படை திரும்பவேயிலலை...

கடைசியில் உலகப் படைகள் அனைத்தும் சேர்ந்து... இலங்கைப் படைகளை மீட்க அக் காடு சென்றன..

அஙகே காட்டில் ஒரு இடத்தில் புகை கிளம்புவது கண்டுபடைகள் அத் திசை நோக்கி விரைந்தன...

அங்கே அவை கண்ட காட்சி ஒரு பன்றி தலை கீழாக நெருப்பின் கீழ் கட்டித் தொங்க விடப்பட்டிருந்தது. கீழே இலங்கைப் படையினர் அப்பன்றியை குண்டாந் தடிகளால் தாக்கியவாறு கூறிக்கொண்டிருந்தனர் "ஒத்துக் கொள்ளு ... நீதான் புலி" உடனே சென்றவர்கள் அப்பாவி பன்றியை விடுவித்து கேட்டனர்.

ஒரு வருடாமாக உன்னிடம் இதையா கேட்டு வதைத்தனர். அதற்கு பன்றி "பரவாயில்லிங்க... எனக்கு ஒரு வருசமாதான்... ஆனா இலங்க தமிழங்களுக்கு 25 வருடமா இதத்தான்பண்றாங்க" என்றது சிரித்தவாறு......

- ஆதவி

 

http://www.tamilkathir.com/news/1075/58//d,full_view.aspx

StumbleUpon.com Read more...

இதை சொல்வது சிறிலங்கா அரசின் தொலைக்காட்சி:விசுவமடுவில் கடுமையான மோதல்

விசுவமடுவில் கடுமையான மோதல்: சொல்வது சிறிலங்கா அரசின் தொலைக்காட்சி
 
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடுவில் சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெறுவதாக சிறிலங்கா அரசாங்கத்தின் தொலைக்காட்சியான 'ரூபவாஹினி' ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிற்பகல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசுவமடுவுக்கு அடுத்துள்ள புதுக்குடியிருப்பு பிரதேசத்தை படையினர் கைப்பற்றி விட்டதாக அமைச்சர் கேகலிய ரம்புக்வெல நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.
ஆனால், இன்று பிற்பகல் 1:30 நிமிடத்துக்கு ஒளிபரப்பான 'ரூபவாஹினி' செய்தியில் விசுவமடுவில் மோதல் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் புதுக்குடியிருப்பு பிரதேசத்தை கைப்பற்றும் நடவடிக்கையில் படையினர் ஈடுபடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு முன்னுக்குப் பின் முரணான செய்திகளை அரச தொலைக்காட்சி ஒளிபரப்புவதுடன் சில திரிபுபடுத்தப்பட்ட காட்சிகளை காண்பிப்பதாகவும் வன்னி கள நிலைமைகளை நன்கு தெரிந்த வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP