சமீபத்திய பதிவுகள்

என்ன இயக்குனர் சீமான் மண்ணிப்புக் கேட்க வேண்டுமா?இல்லாவிட்டால் மரண தண்டணையா??

>> Thursday, February 26, 2009

StumbleUpon.com Read more...

நீங்கள் லாப்டாப் கணினிகள் உபயோகிப்பவர்களா?? :உங்களுக்கு ஒரு எச்சரிக்கை

கையடக்கக் கணினிகளால் உடலின் உறுப்புகளுக்கு பெரும் பாதிப்பு எச்சரிக்கை !

pycalswnrlcat0e3j5cag7267gca73agdscamwqswwcaxwp49ecaca3wj5can9zts6caxifeg0cacafs1ecaslyw4bcai00qbncaje63hecascqz61casb5edjca6nuhnkcaypwq4nகையோடு எடுத்துச் சென்று பாவிக்கும் லாப்டாப் கணினிகள் பாவனையாளருக்கு பல்வேறு உடலியல் சுகயீனங்களை ஏற்படுத்துவதால் இவற்றை தொடர்ந்து ஒரு நாளைக்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பாவிக்க வேண்டாமென உடலியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தோள்பட்டை, கழுத்து, கை விரல்கள், முழங்கை, கை மூட்டுக்களில் சேதம் விளைவிக்கும் கருவிகளாக இவை இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

http://www.nerudal.com/nerudal.1117.html

StumbleUpon.com Read more...

சிறுநீர் கழித்தவருக்கு $1,000 அபராதம்

 சிறுநீர் கழித்தவருக்கு $1,000 அபராதம்

 பொது இடத்தில் சிறுநீர் கழித்ததால், டாக்ஸி ஓட்டுநர் யாங் டென்ங் ஹுவாட்டுக்கு $1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இக்குற்றத்திற்கு விதிக்கப்படும் அபராதங்களில் இதுவே ஆக அதிகமாகும். யாங் டென்ங் ஹுவாட், பாசிர் பாஞ்சாங் சாலையில் கடந்த ஆண்டு ஜூன் 27ம் தேதி சிறுநீர் கழித்த குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
தன் டாக்ஸியிலிருந்து இறங்கிய யாங், ஒரு மின்சார பெட்டியின் பின்புறத்தில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தபோது அப்பக்கமாக காரில் சென்ற மற்றொரு ஆடவரும் அவரின் உறவினரும், கத்தினர்.
ஆனால் அவர்களை யாங் பொருட்படுத்தவில்லை.
டாக்ஸி எண்ணை எழுதிக்கொண்ட அந்த ஆடவர், மூன்று நாட்கள் கழித்து, நில போக்குவரத்து வாரியத்திடம் புகார் செய்தார்.
இந்த புகார், தேசிய சுற்றுப்புற முகவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

 

StumbleUpon.com Read more...

இலங்கை தூதர் பங்கேற்ற விழாவில் எதிர்பாராத வகையில் உள்ளே புகுந்து கலக்கிய கர்நாடக தமிழர்

StumbleUpon.com Read more...

ஈழத்தமிழருர்களுக்கான ஆதரவு கூட்டத்தில் 20 பேர் தீக்குளிக்க முயற்சி

 



புதுக்கோட்டை அருகே தமிழின உணர்வாளர்கள் நடத்திய ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு கூட்டத்தில் 20 பேர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.










வடகாடு கிராமத்தில் தமிழின உணர்வாளர்கள் சார்பில் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு அப்பகுதியின் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் விசை ஆனந்த் தலைமை தாங்கினார்.  (புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ளது வடகாடு கிராமம். இது புதுக்கோட்டை காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் புஷ்பராஜின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.)

திரைப்பட இயக்குனரும், நடிகருமான மணிவன்னண், திரைப்பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, ஓவியர் புகழேந்தி ஆகியோர் சிறைப்புரை ஆற்றினார்கள்.

இந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் புகைப்படம் இடம்பெற்ற தட்டிகள் நூற்றுக்கணக்கில் இடம்பெற்றிருந்தன. இந்த தட்டிகளை அகற்ற வேண்டும் என்று காவல்துறையினர் கூட்ட அமைப்பாளர்களிடம் கூறினார்கள்.

அப்போது கூட்டத்திற்கு தலைமை வகித்த விசை ஆனந்தின் தலைமையில் 5 பேர் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்கப் போவதாக கூறினார்கள். இதையடுத்து போலீசார் அமைதியானார்கள்.

மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. மூர்த்தி தலைமையில் காவல்துறையினரே பிரபாகரன் படம் இடம்பெற்றிருந்த தட்டிகளை, அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது தேமுதிக பிரமுகர் மன்மதன் தலைமையில் 15 பேர் பொதுக்கூட்ட மேடையிலேயே மண்ணெண்ணெயை தங்களின் மேல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க போவதாக கூறினார்கள்.

இதையடுத்து தட்டிகளை அகற்றுவதை போலீசார் கைவிட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

StumbleUpon.com Read more...

தமிழீழ விடுதலைப்புலிகளும் ,இலங்கை அரசாங்கமும் மனித உரிமைகளை மீறுகின்றன

இலங்கை அரசாங்கமும் துணைக்குழுக்களும் மனித உரிமைகளை மீறுகின்றன: அமெரிக்க இராஜாங்க திணைக்களம்
இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப்புலிகளும் மனித உரிமைகளை மீறிவருவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள 2008 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ள அதேவேளை அரசாங்கத்துடன் இயங்கும் துணைக்குழுக்களும் மனித உரிமைகளை மீறுகின்றன என தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் ஆதரவுடன் செயற்பட்டு வரும் ஈபிடிபி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ஆகியவற்றின் உறுப்பினர்களே இந்த மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

கொலைகள், கடத்தல்கள் மற்றும் கைதுகள், காணாமல் போதல் போன்ற நடவடிக்கைகள், யாவும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு பகுதியில் இடம்பெறுவதால், அரசாங்கமே இந்த சம்பவங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஈபிடிபி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ஆகிய அமைப்புகளின் உறுப்பினர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கின் பிரதேசங்களில் உளவாளிகளாக செயற்பட்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை கொலை செய்தல் மற்றும் கடத்திச்செல்லல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்தநிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் தமது பிரதேசத்தில் ஆட்களை தடுத்து வைத்தல், பேச்சு சுதந்திரமின்மை, ஊடக சுதந்திரமின்மை மற்றும் சிறுவர்களை படைகளுக்கு சேர்த்தல் போன்ற மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது.

http://www.tamilwin.com/view.php?2aIWnTe0dvj0q0ecQG7r3b4P9Ei4d2g2h3cc2DpY3d436QV3b02ZLu3e

StumbleUpon.com Read more...

புதுக்குடியிருப்பு:திணறுகிறது இலங்கை ராணுவம்

     
 
 

altஇலங்கையில் நடைபெற்றுவரும் சண்டையில் விடுதலைப் புலிகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் இலங்கை ராணுவம் திணறுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இலங்கையின் வடக்குப் பகுதியில் மிகவும் குறுகிய பரப்பளவுக்குள் புலிகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ராணுவம் தெரிவித்தது. ஆனால் புலிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக ராணுவம் முன்னேறுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

 

புதுக்குடியிருப்பு என்ற பகுதி மட்டுமே புலிகள் வசம் தற்போது உள்ளதால், அதை தக்கவைப்பதற்கு அவர்கள் கடுமையாக எதிர்த்துப் போராடி வருகின்றனர்.

 

இந்நிலையில் கொம்புவில் பகுதியில் செவ்வாய்க்கிழமை கடும் சண்டைக்குப் பிறகே ராணுவம் அப்பகுதியை பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

புதுக்குடியிருப்பை கைப்பற்றுவதற்காக இதுவரை நடந்த சண்டையில் விடுதலைப் புலிகள் பலர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறிய ராணுவம், அவர்களின் எதிர்ப்பை சமாளிக்கமுடியாமல் திணறுகிறது.

 

ஆனால் அப்பாவி பொதுமக்களுக்கு உயிரிழப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக மெதுவாக முன்னேறிவருவதாக ராணுவம் கூறுகிறது.

 

ஆனையிறவு அருகே உள்ள சலாய் என்ற இடத்தில் நடந்த சண்டையில் லேசான பின்னடைவு ஏற்பட்டுள்ளதை இலங்கை ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.

 

பலமட்டாளம் என்ற இடத்தில் புலிகளுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தியதாக இலங்கை ராணுவத்தின் 58வது படைப்பிரிவின் தலைவர் தெரிவித்தார்.

http://www.swissmurasam.net/2008-10-17-05-11-45/12488-2009-02-26-10-02-15.html

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP