சமீபத்திய பதிவுகள்

ஆயிரக் கணக்கான பட்டினிச்சாவில் புலிகள் தெரிவித்துள்ளனர்

>> Saturday, April 25, 2009

ஆயிரக் கணக்கான சிவிலியன்கள் பட்டினிச்சாவில் புலிகள் தெரிவித்துள்ளனர்

மோதல் தவிர்ப்பு வலயத்தில் உள்ள ஆயிரக் கணக்கான சிவிலியன்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கியுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 165,000 பொதுமக்கள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இன்னமும் இருப்பதாக குறிப்பிட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் தமது பிரதேசத்தில் உணவுக் கையிருப்பு முடிவடைந்துள்ளதாகவும், உடனடியாக உணவு விநியோகம் செய்யப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

வன்னிச் சிவிலியன்களுக்கு உணவு வழங்க சர்வதேச சமூகம் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டுமென தெரிவித்துள்ள அவர்கள், தொண்டு நிறுவனங்கள் யுத்த வலயத்திற்கு செல்ல அரசாங்கம் அனுமதி மறுத்துள்ள நிலையில் மக்கள் பேரவலத்தை எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை அரசாங்கம் மோதல் தவிர்ப்பு வலயத்திற்கான உணவு விநியோகப் பாதைகளை மூடியுள்ளதாக புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதனால் மோதல் தவிர்ப்பு வலயத்தில் உள்ள அப்பாவிச் சிவலியன்கள் பட்டினியால் வாடுவதாக புலிகள் தமது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் சர்வதேச சமூகத்திடம் விடுத்துள்ள கோரிக்கை கடிதம் ஆங்கிலத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

StumbleUpon.com Read more...

குடித்துவிட்டு ரோட்டில் தூக்கம்: வாய் வழியாக உடலுக்குள் புகுந்தது பாம்பு!

 
 
காஷ்மீர் மாநிலம் ஜம்முவை அடுத்த பக்ஷிநகரை சேர்ந்தவர் அஸ்வின்குமார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இவர் நாள் முழுவதும் போதையில்தான் உலா வருவார்.

நேற்று மாலை அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தினார். போதை அதிகமானதால் ரோட்டோரத்தில் படுத்தார். வாயை திறந்தபடி குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்தார்.
 
அப்போது 31/2 அடி நீளமுள்ள விஷபாம்பு திடீரென அஸ்வின்குமார் வாயில் புகுந்தது. பின்னர் அது அவரது வயிற்றில் புகுந்தது. இதனால் அவர் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
 
அப்போது அஸ்வின்குமார் வாயில் பாம்பின் வால் இருந்தது. உடனே அவர்கள் வாலை பிடித்து பாம்பை வெளியே எடுத்தனர்.
 
அப்போது பாம்பு இறந்த நிலையில் வெளியே வந்தது.
 
அஸ்வின்குமார் திடீரென மயக்கம் அடைந்தார். இதனால் பதறிப்போன அவர்கள் அவரை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். சிலமணி நேரத்தில் அவர் மயக்கம் தெளிந்தார். இதைப்பார்த்ததும் அவரது குடும்பத்தினர் மிகழ்ச்சி அடைந்தனர்.
 
டாக்டர்கள் அஸ்வின் குமாருக்கு இனியாவது மது அருந்துவதை விட்டு விடுங்கள். அந்த விஷ பாம்பு கடித்திருந்தால் உயிர் பிழைத்திருக்க முடியாது என்று அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்.

StumbleUpon.com Read more...

மனிதக் கேடய படை நகர்வுகள் விடுதலைப் புலிகளின் அணியினரால் முறியடிக்கப்பட்டுள்ளன

 மனிதக் கேடய படை நகர்வுகள் விடுதலைப் புலிகளின் குறிசூட்டு அணியினரால் முறியடிக்கப்பட்டுள்ளன

வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள எஞ்சிய பிரதேசங்களையும் மீட்பதற்கான பெரும் யுத்த நடவடிக்கைக்கு சிறீலங்காப் படையினர் தயாரான போதும் விடுதலைப் புலிகளின் எதிர்த் தாக்குதல்களால் அவை முறியடிக்கப்பட்டு வருகின்றன.

சிறீலங்காப் படையினர் மீண்டும் மீண்டும் இடம்பெயர்ந்த மக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியவாறு மேற்கொண்டு வரும் முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு வருகின்றது என பதிவு இணயத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:

சிறீலங்காப் படையினரின் யுத்த நடவடிக்கையினால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இராணு ஆக்கிரமிப்பால் சிறைப்பிடிக்கப்பட்ட மக்களை மனிதக் கேடமான முன்னகர்த்தியவாறு படையினர் மேற்கொண்ட படை நகர்வுகளின் போது படையினரை இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் குறி சூட்டு அணியினர் நடத்திய குறி சூட்டுத் தாக்குதல்களினால் அவை முறியடிக்கப்பட்டுள்ளன.

ஆக்கிரமிப்பு நகர்வுகளை சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட போதும் அவை விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்த் தாக்குதல்களால் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் ஆங்காங்கே உக்கிர மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதானல் படையினரின் நகர்வுகள் காலதாமதமாகி வருகின்றன.

மனிதக் கேடயங்களாப் பயன்படுத்தும் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ் மக்களை பச்சைப்புல்மோட்டைப் பிரதேசத்தில் சிறீலங்காப் படையினர் தடுத்து வைத்துள்ளனர். அங்கிருந்தவாறே நகர்வுகள் மேற்கொள்ளப்படும் முன்னணி நிலைக்கு மக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
 

StumbleUpon.com Read more...

கமல்,ரஜினியை சீண்டு முடியும் தினமலர் பத்திரிக்கையின் சின்னத்தனம்

திரைபட இயக்குனர் பாரதிராஜா ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுக்கிறார் என்பதை பொருத்துக்கொள்ள முடியாத தினமலர் பத்திரிக்கை அவருக்கும்,திரையுலகத்தினருக்கும் இடையே சீண்டு முடியும் தன்னுடைய சின்னப்புத்தியை தொடங்கியுள்ளது.

ஈழப்போராட்டத்தை வேரோடு வெட்டியெறிய துணிந்துள்ள மத்திய அரசின் கயமைத்தனத்தை எதிர்த்து தனக்கு வழங்கப்பட்ட பத்மஸரீ விருதை திரும்ப கொடுக்க ஆயத்தமாகியுள்ள பாரதிராஜாவுக்கும்,கமல்,ரஜினி போன்ற முன்னனி நட்சத்திரங்களுக்கும் இடையில் பகைமையை உண்டாக்கி ஈழ உணர்வை திரைப்பபடத்துறையில் இருந்து முற்றாக அழித்துவிட தினமலர் களம் இறங்கியுள்ளது.

தினமலரின் கயமைத்தனத்தை எத்தனையோ முறை அறிந்துகொண்டுள்ள நாம் இதனை சரியாக எடுத்துச்சொல்லவேண்டியுள்ளது.

கீழே உள்ள படத்தை பெரிதாக்கி அதில் அடிக்கோடு போடப்பட்டுள்ள வார்த்தை பிரயோகங்கள் எந்த விதமான பலனை எதிர்பார்த்து வெளியிடப்பட்டுள்ளது என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.








தினமலர் கட்டுரையை முழுமையாக படிக்க

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP