சமீபத்திய பதிவுகள்

விடுதலைப்புலிகளின் தலைவரின் உருவத்தை கொண்ட இன்னொருவர்:காவற்துறைப் பேச்சாளர் அதிர்ச்சி தகவல்

>> Thursday, May 28, 2009

கொட்டாஞ்சேனையில் சுடப்பட்ட இளைஞரின் தந்தை விடுதலைப்புலிகளின் தலைவரின் உருவத்தை ஒத்தவர்: காவற்துறைப் பேச்சாளர்
 
கொழும்பு கொட்டாஞசேனை புதுச்செட்டித்தெருவில் இனந்தெரியாத ஆயுத தாரிகளின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நிலையில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இளைஞரின் தந்தைக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினருககு தவல்கள் கிடைத்துள்ளது என்று காவற்துறை ஊடகப்பேச்சாளரும் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இளைஞனின் தந்தைக்கும் இடையில் வியாபார நடவடிக்கைகள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவை தொடர்பாக தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய உருவத்திற்குச் சமனானதொரு உருவத்தையுடைய சந்தேக நபர் ஒருவரை பாதுகாப்பு தரப்பினர் இனங்கண்டுள்ளனர்.

கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பிரபல வர்த்தகரான சற்குணராஜா என்பவரே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளார்.

கொட்டாஞ்சேனை புதுச்செட்டித்தெருவில் நேற்று முன்தினம் பிற்பகல் இனந்தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்த விமலன் என்பவரின் தந்தையான சற்குணராஜாவே இவ்வாறு இனங்காணப்பட்ட சந்தேக நபர் எனத் தெரிவந்துள்ளது. அவர் தற்போது இந்தியாவில் உள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறப்படும் பதுங்கு குழியில் இருந்து பெருமளவிலான புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுள் பிரபாகரனும் அவரது உருவத்தை ஒத்த நபரொருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமொன்று இருந்துள்ளது. இந்தப் புகைப்படம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அது ஊடகங்களிலும் வெளியிடப்பட்டது.

இதனையடுத்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைப் போன்ற போலி நபர் ஒருவர் இருப்பதாக வெளிவந்த செய்தி அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை எற்படுத்தியது. இந்நிலையில் குறித்த புகைப்படத்தில் இருந்த போலிப் பிரபாகரன் குறித்த தீவிர விசாரணைகளை நடத்தி வந்த பாதுகாப்பு தரப்பினர் அவர் கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் என அடையாளம் கண்டுகொண்டுள்ளனர்.

இருப்பினும் அந்தச்சந்தேக நபருடைய புகைப்படம் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்ட சந்தர்ப்பத்தின்போது அவர் இந்தியாவுக்கு தப்பிச்சென்றுள்ளார் என்று பாதுகாப்பு தரப்பினர் நடத்திய விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இருந்தாலும் இது தொடர்பில் கொட்டாஞ்சேனை காற்துறையினர் உட்பட விசேட காவற்துறை குழுவொன்று தீவிர விசாரணைகளை நடத்திவருகின்றனர்
.

StumbleUpon.com Read more...

பிரபாகரன் விரைவில் வெளியே வருவார்-இன்று பழ.நெடுமாறன் தகவல்

பிரபாகரன் விரைவில் வெளியே வருவார்: நெல்லையில் பழ.நெடுமாறன் தகவல்
 
 
 
வைகோ எம்.பி.யாக வரக்கூடாது என்று முறையற்ற முறையில் செயல்பட்டுள்ளனர். அவர்கள் எம்.பி.யாக இருக்கும் போது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ராஜீவ் காந்தியிடமே நேருக்கு நேராக கேள்வி கேட்டு திணறடித்த துணிச்சல் பெற்றவர். தட்டி கேட்கும் குரல் நாடாளுமன்றத்தில் வரக்கூடாது என்பதற்காகத்தான் அவரை தோற்கடித்துள்ளனர்.

StumbleUpon.com Read more...

ஐநா(UN)வில் சண்டாளர்களுக்கே வெற்றி கிட்டியுள்ளது

சங்கீதம் 12:8 மனுபுத்திரரில் சண்டாளர் உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிவார்கள்.
 
 
சிறிலங்காவிற்கு எதிரான பிரேரணை ஐ.நா.வில் தோற்கடிப்பு: நிதியுதவி வழங்கவும் தீர்மானம்
சிறிலங்கா படையினர் நடத்தி முடித்த தமிழ் இனப் படுகொலையில் அரங்கேற்றப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு இந்தியா உள்ளிட்ட 22 நாடுகள் எதிராக வாக்களித்து சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்தியுள்ளன.

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற சிறப்பு மாநாட்டில் சிறிலங்கா அரசால் நடத்தப்பட்ட தமிழ் இனப் படுகொலையில் அரங்கேறிய மனித உரிமை மீறுல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற பிரேரணையை ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் சுவிற்சர்லாந்து அரசாங்கம் முன்வைத்திருந்தது.

தொடக்கம் முதலே இந்த பிரேரணைக்கு எதிராக இந்தியா தலைமையிலான ஆசிய நாடுகள் செயற்பட்டு வந்தன.

இதனால், இந்த பிரேரணை குறித்து பல்வேறு கருத்து முரண்பாடுகள் எழுந்ததால் பிரேரணையில் சில மாற்றங்களை ஏற்படுத்திய பின்னர் அது நேற்று புதன்கிழமை மாலையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.

இந்த பிரேரணைக்கு ஆதரவாக மேற்குலக நாடுகள் வாக்களித்தன. குறிப்பாக சுவிற்சர்லாந்து, ஜேர்மனி, பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி, கனடா, சிலி, மெக்சிக்கோ உள்ளிட்ட நாடுகள் வாக்களித்தன.

இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, இந்தோனேசியா, கியூபா, ரஸ்யா மற்றும் ஆபிரிக்க நாடுகளும் இந்த பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன.

எட்டு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்வதை தவிர்த்தன.

வாக்கெடுப்பின் முடிவில் பிரேரணைக்கு ஆதரவாக 17 நாடுகளும் எதிராக 22 நாடுகளும் வாக்களித்திருந்ததால் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான இந்த பிரேரணையை நிறைவேற்ற முடியாது அது தோல்வியடைந்துள்ளது.

இதேவேளையில் இதே கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசாங்கமும் தனது ஆதரவு நாடுகளின் ஆசியுடன் அனைத்துலக நாடுகளிடம் நிதியுதவி கோரும் பிரேரணை ஒன்றையும் முன்வைத்தது.

இந்த பிரேரணை மீதான விவாதமும் நேற்று இடம்பெற்றது.

சிறிலங்கா அரசாங்கத்திற்கு நிதியுதவி வழங்கும் இந்த பிரேரணைக்கும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளும் ஆபிரிக்க நாடுகளும் ஆதரவாக வாக்களித்தன. ஐரோப்பிய நாடுகள் நிதியுதவி வழங்குவதற்கு எதிராக வாக்களித்தன.

எனினும் வாக்கெடுப்பின் நிறைவில் சிறிலங்காவின் நிதியுதவி கோரும் பிரேரணைக்கு ஆதரவாக 29 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்திருந்தன. எட்டு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இதனால் சிறிலங்கா முன்வைத்த பிரேரணை தீர்மானம் ஆக்கப்பட்டு நிதியுதவி வழங்குவது என முடிவாகியுள்ளது.

இதனிடையே, இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள 41 முகாம்களில் மூன்று லட்சம் மக்கள் வசிப்பதால் பாரிய இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் பிரதிநிதி கவலை வெளியிட்டுள்ளார்.

மக்களின் தரத்தை அரசு பேண வேண்டும் எனவும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் எனவும் நாம் சிறிலங்கா அரசாங்கத்தினை கேட்டுக்கொள்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

StumbleUpon.com Read more...

பிரபாகரனின் பெற்றோர் வவுனியா வதை முகாம்களில் தங்கியுள்ளனர்

பிரபாகரனின் பெற்றோர் வவுனியா அகதி முகாம்களில் தங்கியுள்ளனர் – ஜனாதிபதி :

 
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெற்றோர் வவுனியா அகதி முகாமொன்றில் தங்கியிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
புதிதாக அமைக்கப்பட்ட அகதி முகாமொன்றில் பிரபாகரனின் பெற்றோரும், ஏனைய விடுதலைப் புலித் தலைவர்களின் உறவினர்களும் தங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெற்றோரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை மற்றும் வள்ளிபுரம் பார்வதி ஆகியோர் தம்மிடம் சரணடைந்துள்ளதாகவும் பொதுமக்களுடன் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்ற இவர்கள் படையினரிடம் சரணடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னியில் புகைப்பட அல்பம் ஒன்றை கைப்பற்றிய போதே பிரபாகரனின் பெற்றோர் தமிழ் நாட்டில் இருந்து சென்று வன்னியில் தங்கியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1924 ஆம் ஆண்டு சிங்கபூரில் பிறந்த பிரபாகரனின் தந்தையார், அங்கு தபால் துறையில் ஊழியராக பணியாற்றிய பின்னர், 1947 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்துள்ளார். ஓய்வுபெறும் போது, இவர் யாழ்ப்பாண கச்சேரியில் காணி அதிகாரியாக பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் வன்னியில் தங்கியிருந்த இவர்கள் படையினர் வன்னி பிரதேசத்தை சுற்றிவளைத்த பின்னர், பொதுமக்களுடன் இணைந்து அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்றுள்ளனர். புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெற்றோர் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாத போதிலும் பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழக்கு பதிவுசெய்யப்படக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மேலும் அகதி முகாம்களின் வசதிகளை அதிகரிப்பது குறித்து நேற்றைய கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
 
இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க துரித கதியில் செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இங்கு வலியுறுத்தியுள்ளார்.
 
அகதி முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மலசலகூடங்களுக்கு பதிலாக 2000 நிரந்தர மலசலகூடங்களை அமைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
 
அகதி முகாம்களில் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP