சமீபத்திய பதிவுகள்

ஐ.நா.வின் மௌனம் அதிர்ச்சி அளிக்கிறது: சமூக சேவகி மேதா பட்கர்

>> Monday, June 1, 2009

இலங்கைத் தமிழர்கள் மீது தாக்குதல்: ஐ.நா.வின் மௌனம் அதிர்ச்சி அளிக்கிறது: சமூக சேவகி மேதா பட்கர்

            லங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை தடுக்காததது அதிர்ச்சி அளிக்கிறது என்று சமூக சேவகி மேதா பட்கர் கூறியுள்ளார்.

சென்னை செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இலங்கையில் குழந்தைகள், குடிமக்கள் மீது நடைபெற்ற வன்முறைத் தாக்குதலை தடுத்து நிறுத்துவதில் ஐ.நா. இன்னமும் செயல்படாமல் இருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

இலங்கையில் போர் முடிவுக்கு வந்தாலும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், நிவாரண முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்னமும் குற்றுயிரும், குலையுயிருமாக வாழ்வுக்குப் போராடும் நிலையில் தவிக்கின்றனர்.

நாங்கள் எப்போதும் ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. அதே நேரத்தில் இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தில் நடைபெற்ற போராட்டத்தை ஆதரித்துள்ளோம்.

இலங்கையில் வவுனியா பகுதியில் நடந்த உள்நாட்டுப் போரில், காயமுற்றுத் தவித்த தமிழர்களுக்கு சிகிச்சை அளித்ததற்காக டாக்டர்கள் சத்தியமூர்த்தி, வரதராஜன், சண்முகநாதன் ஆகியோர் அந்நாட்டு ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். இதுவரை இவர்கள் விடுவிக்கப்படவில்லை.

மனிதநேய அடிப்படையில் உயிர்காக்கும் சிகிச்சை அளிப்பது டாக்டர்களின் கடமை. தங்களது கடமையை பரிவுடன் செய்த ஒரே காரணத்துக்காக இவர்களைக் கைது செய்துள்ளது மிகுந்த கண்டனத்துக்கு உரியதாகும். இவர்களை விடுவிக்குமாறு இலங்கை அரசை, சர்வதேச சமுதாயம் நிர்பந்திக்க வேண்டும் என்றார்.

StumbleUpon.com Read more...

என் மக்களே எழுந்து நில்லுங்கள்!, அருட்தந்தை ஜெகத்கஸ்பர்

 

இருபது ஆண்டுகளுக்கு முன் படித்த புத்தகம் ஒன்று தந்த கருத்துக்களை நினைவுக்குக் கொண்டு வர முயல்கிறேன். புத்தகத்தின் பெயர் ""தோல்வியின் பண்பாடு" – Culture of Defeat ஆசிரியர் பெயர் நினைவில் இல்லை. ஆனால் அவர் ஜெர்மனி நாட்டுக்காரர். இரண்டாம் உலகப் போருக்குப் பின் எழுதப்பட்டது.

படுதோல்வியின் வலியிலும் அவமானங்களிலும் உழன்ற ஜெர்மனி நாட்டு மக்களை பின்புலமாகக் கொண்டு வெளிவந்த புத்தகம். அப்புத்தகத்தின் மறக்க முடியாத சில வரிகள் இவை: ""உன்னை தோற்கடித்தவனின்

இலட்சி யங்களை விட உனது இலட்சியங்கள் உயர்ந்தவையாக இருந்தால், எதிரியின் ஒழுக்கத்தை விட உனது ஒழுக்கம் மேலானதாக இருந்தால் நீ உண்மையில் தோற்றுப் போகவில்லை. அழிவினூடேயும் நீ தலைநிமிர்ந்து நிற்கலாம்!".

நான் பலமுறை பார்த்தும் சலித்துப் போகாத ஆங்கிலத் திரைப்படம் கிளாடியேட்டர் (Gladiator) மகத்தான ராணுவத் தளபதியான மாக்சிமுஸ், சதியால் சந்தையில் அடிமையாக்கப்பட்டு, உரோமாபுரி நகரத்து மக்களின் கேளிக்கைக்காக உயிரை பணயம் வைத்து சண்டையிடும் கிளாடியேட்டர் ஆகி, அப்பேரரசின் மன்ன னுக்கே சவால் விட்ட கதைதான் கிளாடியேட்டர். அப்படத்தின் ஒரு இடத்தில் மாமன்னன் ஜூலியஸ் சீசர் மாக்சிமுஸை தன் போர்க்களக் கூடாரத் திற்கு இரவுப் பொழுதில் அழைப்பார். ""வா… மாக்சிமுஸ் என் காதோடு கதை பேசு… உரோமாபுரி என்றால் என்ன?" என்று கேட்பார். என்ன பதில் சொல்வ தென்று தெரியாமல் திரைப்படத்தின் கதாநாயகன் மாக்சிமுஸ் நிற்பான். அவனை உற்றுப் பார்த்து சீசர் சொல் வார். ""உரோமாபுரி என்பது ஓர் எண்ணம். வனைவு. உயர்ந்தவை என நாம் கனவு கொள்ளும் அனைத்திற்கும் தாய்மடி கிடைக்குமிடம். மாக்சிமுஸ்… உரோமாபுரியின் இன்றைய ஒழுக்கம் அவநம்பிக்கை தருகிறது. இன்னும் ஓர் கடும்பனிக் காலத்தை அது தாக்குப் பிடித்து நிற்குமென நான் நம்பவில்லை. உன் படைகளை தயாராய் வைத்திரு. உரோமாபுரிக்கு நீ தேவை" என்பார் சீசர்.

""சியர்சியாவின் சிவந்த குன்றுகளிலே அடிமைகளின் பிள்ளைகளும் அடிமைப் படுத்தியவர்களின் பிள்ளைகளும் ஒன்றாகக் கரம் கோர்த்து விளையாடித் திரியும் காலம் வரும் எனக் கனவொன்று வைத்திருக்கிறேன்… I have a dream் என்ற மார்ட்டின் லூத்தர் கிங் அவர்களின் உரையை நாம் மறக்க முடியுமா? அரை நூற்றாண்டிலேயே அவரது அரசியற் பேரன் பராக் ஒபாமா அடிமை வரலாற்றின் பழைய ரத்தக் கறைகளை புதிய கனவுகளால் கழுவிடும் உன்னதத்தினை காண்கிறபேறு நமது கண்களுக்குக் கிடைக்க வில்லையா?

கிளி ஜோசியக்காரர்களை எனக்குப் பிடிக்கும். நேரம் இருந்தால் எங்கு அவர்களை பார்த்தாலும் கையை நீட்டிவிடுவேன். அவர்கள் சொல்லும் எதையுமே நான் நம்புவதுமில்லை, அவர்கள் சொல்லும் எதுவும் நடப்பதுமில்லை. ஆனால், 50 ரூபாய் கொடுத்துவிட்டால் வஞ்சகமின்றி நம்பிக்கை வார்த்தைகளை மடி நிறைய கொட்டிக் கொடுப்பார்கள். நான் கை நீட்டுவதோ அவ் வார்த்தைகளுக்காக அல்ல. அவர்கள் கடைபிடிக்கும் தொழில்நுட்பத்தை ரசிப்பதற் காக. முதலில் ரெண்டும் கெட்டானாகத் தொடங்குவார்கள்… ஆபத்து என்பதுபோல் நடுவழியில் கொக்கி போடுவார்கள்… எல்லாம் சரியாகி பிரமாதமாக இருக்கும் என்ப தாக முடிப்பார்கள். இன்னும் 10 ரூபாய் போட்டுக் கொடுக்கலாம் போல் நமக்கு இருக்கும். நானறியா நாள் முதல் இயற்கை இரகசியமாய் வைத்திருக்கும் விஷயங்களில் ஒன்று நம்பிக்கை வார்த்தைகளுக்கு இருக்கிற உயிர் தரும் ஆற்றல்.

பைபிளில் நான் முப்பது ஆண்டுகளுக்கு முன் படித்து, இப்போதும் மறக்காமல் வைத்திருக்கிற பகுதிகள் எவையென்று கேட்டால் கடவுள் தன் தூதர்கள் வழி, தோல்விகளை மட்டுமே சம்பத்தாய் சுமந்து வந்த தன் யூத மக்களுக்கு வழங்கிய நம்பிக்கையின் வார்த்தைகள்தான். ""என் மக்களே… எழுந்து நில் லுங்கள்… உங்கள் துக்க உடைகளையும் துயரக் கோலத்தையும் தூரப் போடுங்கள். கிழக்கிலும், மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலுமாய் சிதறுண்டு போன என் பிள்ளைகளாகிய உங்களை மீண்டும் நான் கூட்டிச் சேர்ப்பேன்… அடிமைகளாய் சிதறிய உங்களை பெருமையின் ஆடைகள் அணிவித்து உரிமைக் குடிமக்களாய் கூட்டி வருவேன். அந்நாளில் பாலைவனத்தில் லீலி மலர்கள் பூக்கும். பாறைகளினின்று நீரூற்றுகள் புறப்படும்… இவ்வாறு பல நூறு வரிகளை நான் மறவாது மனப்பாடம் செய்து வைத்திருக்கிறேன். ஏனென்றால் ஒவ்வொரு வார்த்தையும் வசீகரமாய் தூவிச் செல்கிற நம்பிக்கை.

எனவே தான் நொறுங்கிப் போய், இருள் கவிந்து, செல்லும் திசை தெரியாது நிற்கும் நமது ஈழத்தின் ரத்த உறவுகளுக்கு நாம் தொடர்ந்து தரவேண்டியது நம்பிக்கை. எப்படி மழையும் பனியும் மண்ணில் விழுந்தபின் தம் பயனைத் தராது திரும்புவதில்லையோ அவ்வாறே நம்பிக்கை வார்த்தைகளும். எல்லா இரவுகளும் விடியும். எல்லா கொடுமைகளும் முடியும். இலையுதிர் காலம் இதுவென்றால் வசந்தம் விரைவில் வருமென்றுதானே அர்த்தம்?

நான் எழுத்தாளன் அல்ல. எழுதிப் பெரிய பழக்கமும் இல்லை. நண்பர் காமராஜ் அவர்களின் தொடர்ந்த வற்புறுத்தலின் பேரிலேயே "மறக்க முடியுமா?' எழுதத் தலைப்பட்டேன். எழுதத் தொடங்கிய மூன்றாம் வாரத்தில் ஈழத் தமிழ் மக்கள் மீதான இறுதி முற்றுகை தொடங்கியது. அதன்பின் என்னையே நான் ஆற்றுப்படுத்திக் கொள்ளும் களமாகவே தொடர்ந்து எழுதினேன். இக்களம் இல்லாதிருந்தால் ஒருவேளை நானே கூட உடைந்து போயிருப்பேன். நான் எழுதியவை உங்களில் எத்தனை பேருக்கு ஆறுதல் தந்ததென்பது எனக்குத் தெரியாது… ஆனால் நான் தகர்ந்து போய்விடாமல் தாங்கியது இந்த எழுத்து வடிகால்தான். எழுத்தின் வல்லமையை நீண்ட நாட்களுக்குப் பின் உணர உதவிய நக்கீரனுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.

கடந்த இதழ் படித்துவிட்டு ""எல்லாம்தான் முடிந்து போயிற்றே… இனியும் அவை பற்றி ஏன் எழுதிக் கிளற வேண்டும்… ஆட்சியில் இருப்போரிடமுள்ள தொடர்பு களை பழுது செய்யாமல் மக்களுக்கு இன்னும் நிறைய நல்ல காரியங்கள் செய்யலாமே…" என்று அக்கறை யுடன் அறிவுரை சொன்னார்கள். அவர்களுக்கெல்லாம் நான் முதலில் சொன்னது, "சரியாக முடியாதவரை எதையுமே முடிந்துவிட்டதாகக் கருத முடியாது'. Nothing is settled until settled right. மீண்டும் நாம் அனைவருமாய் சொல்வோம், சரியாக முடியாதவரை எதுவும் முடிந்ததாகக் கருதப்பட முடியாது.

முக்கியமாக காழ்ப்புணர்வும் பகைமிகு தன்மையுமின்றி இதய நேர்மையுடன் முன்வைக்கப் படும் உண்மைகள், உறவுகளையும், பரஸ்பர மதிப்பினையும் வலுப்படுத்துமென்பதே எனது ஜனநாயக அனுபவமும், நம்பிக்கையும். நானொன்றும் கட்டுப்பெட்டித்தனமான கத்தோலிக்க குருவானவர் அல்ல. கொஞ்சம் விட்டேத்திதான். என்னிடத்தில் குறைகளும் பல உண்டு. எனினும் சுயநலனுக்காய் பொய்கள் சொன்னதாய் நினைவில்லை. அதுவும் மனித உயிர்கள் சம்பந்தப்படுகையில் உண்மை சொல்லத் தயங்குவதுபோல் பாவம் வேறெதுவுமில்லை.

உண்மைக்கு உள்ள பிறிதொரு குணாதிசயம் விடாப்பிடித்தன்மை. பொதுவாக நீங்கள் பார்த்தீர்களென்றால், பொய் காற்று வேகத்தில் பரவும். எல்லா இடத்திலும் முதல் ஆளாய் போய் நிற்கும். ஆனால் உண்மை, ஆமை போல. உருண்டு, புரண்டு, விழுந்து, எழுந்து, சிராய்ப்புகள் பட்டு, களைத்துப் போய் -ஆனால் வந்து சேரும். காலதாமதம் ஆகுமே தவிர, உண்மை நிச்சயம் வந்து சேரும்.

இதனை நான் இங்கு குறிப்பிட தனிப்பட்ட காரணமும் உண்டு. "சென்னை சங்கமம்' தொடர்பானது அது.

2007 பெப்ருவரியில் முதல் "சென்னை சங்கமம்' நிகழ்ந்தது. தமிழக கலை-பண்பாட்டுக் களத்தில் தீர்க்கமான தாக்கங்களை உருவாக்கி தொடரும் "சென்னை சங்கமம்' அறிமுகமான கதை மிகவும் எளிமையானது. மயிலாப்பூர் லஸ் கோயில் சாலையிலுள்ள தமிழ் மையம் அலுவலகத்தில் கனிமொழி அவர்களோடான உரை யாடலில் பிறந்ததுதான் சென்னை சங்கமம். சென்னை நகர் கொண்டாடும் ஒரு பண்டிகை கூட தமிழர் பண்பாட்டு வரலாற்றை சார்ந்ததாக இல்லையே என்ற ஆதங்கத்தை அளவளாவி, ஏதேனும் செய்ய வேண்டுமெனப் பேசி, கிராமியக் கலைகளை மையப்படுத்தும் சிறியதோர் கலைவிழாவினை தை பொங்கல் காலத்தில் அமைக்கலாம் என முடி வெடுத்தோம்.

மிகச்சிறிய, ஆனால் செறிவான கலைவிழா எண்ணத்தை பூங்காக்கள், வீதிகளெங்கும் தமிழ் கலைகளின் மலர்ச்சியாய் விரிய வைக்கும் எண்ணம் தந்தது. சென்னை சங்கமம் போல் பெங்களூரில் ""பெங்களூரு ஹப்பா" நடத்தி வரும் குழுவினர். பெங்களூரில் நடத்துவது போல சென்னையிலும் நடத்தவேண்டுமென அவர்கள் வந்தி ருந்தார்கள். பல சுற்று விவாதங்கள் அவர்களோடு நடந்தன.

ஆனால் அவர்கள் பணம் செய்வதில் அதிக குறியாய் இருந்தது போன்ற எண்ணம் ஏற்பட்டதால் நாமே எல்லாம் செய்யலாம் என்று முடிவெடுத் தோம். அத்தெளிவான முடிவுக்கு காரணமாயிருந்தவர்களில் சுற்றுலாத் துறை செயலர் இறையன்பு அவர்களும் ஓவியர் மருது அவர்களும் முக்கியமான வர்கள். உண்மையில் "சென்னை சங்கமம்' என்று பெயர் சூட்டியது இறையன்பு அவர்கள். நீங்காது பதிந்துவிட்ட இளங்கன்று முகத்தினை முத்திரையாய் வரைந்தவர் மருது அவர்கள். இன்று சென்னை சங்கமம் இந்தியாவின் இரண்டாவது பெரிய கலை-பண்பாட்டு விழாவாக வளர்ந்து நிற்கிறது. ஈராயிரம் கலைஞர்கள், இருபது அரங்குகள், லட்சக்கணக்கான மக்கள் என பிரம்மாண்டமான இந்நிகழ்வை நிர் வகிக்கும் அனுபவங்களை எழுதவே ஏழெட்டு "மறக்க முடியுமா?' களங்கள் தேவைப்படும். அது இப்போதைக்கு அவசியமில்லை. ஆனால், எதிர்பாராத பெருவெற்றியோடு நின்ற முதல் சங்கமத் திற்குப் பின் நடந்த சில நிகழ்வுகள் மறக்க முடியாதவை.

(நினைவுகள் சுழலும்)

நன்றி நக்கீரன்:http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=3596:2009-06-01-05-28-27&catid=37:2008-09-21-04-34-04&Itemid=54

StumbleUpon.com Read more...

பதில் தெளிவானது. தலைவர் பாதுகாப்பாக உள்ளார். நீங்கள் உங்கள் பணியைத் தொடருங்கள்

 
 
 
  

தோற்றுப்போன மேற்குலகமும் தோற்றுவிக்கப்பட்ட சம்பவங்களும் - வேல்ஸிலிருந்து அருஷ் 

விடுதலைப்புலிகளின் முப்பத்து மூன்று வருடகால ஆயுதப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் கடந்த 18 ஆம் திகதி தெரிவித்திருந்தது. அது மட்டுமல்லாது கடந்த 18 ஆம் திகதியில் இருந்து தென்னிலங்கையில் பெரும்பான்மை மக்கள் பல வகையான வெற்றிக் கொண்டாட்டங்களை  நடத்தியும் வருகின்றனர்.

 

போரில் வெற்றி கண்டுவிட்டதாகக் கூறி மேற்கொள்ளப்படும் சில நடவடிக்கைகள் சிறுபõன்மை தமிழ் இனத்தை மேலும் அந்நியப்படவே வைத்துள்ளன. பாரிய மோதல்கள் கடந்த 18 ஆம் திகதி முடிவடைந்த பின்னர் தென்னிலங்கையில் இருந்து வெளிவந்த கருத்துக்களை உற்று நோக்கும் போது சில தகவல்
களைப் புரிந்து கொள்ள முடிகின்றது..

 

அதாவது நாலாம் கட்ட ஈழப்போரானது இலங்கை அரசினால் மட்டும் முன்னெடுக்கப்படவில்லை. அகில உலகத்தினதும் ஆதரவுகளுடன் தான் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

 

இந்தப் போரில் இலங்கை அரசுக்கு இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா என்பன ஆயுதங்களை வழங்கியிருந்தன. ஜப்பான், மலேசியா, மத்திய கிழக்கு நாடுகள், வியட்நாம், தமிழகத்தின் தற்போதைய ஆளும் கூட்டணி, முன்னாள் சோவியத்யூனியனில் இருந்து பிரிந்து சென்ற நாடுகள், கிழக்கு ஐரோப்பிய நாடுகள், மற்றும் ஆசிய நாடுகள் என்பன நேரடியான ஆதரவுகளை வழங்க மேற்குலகம் உட்பட ஏனைய நாடுகள் மறைமுகமான ஆதரவுகளை வழங்கியிருந்தன.

 

அகில உலகத்தின் இந்த போர் முனைப்புக்களை விடுதலைப்புலிகளும் அறிந்திருந்தனர். 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வன் வான் தாக்குதலில் கொல்லப்பட்ட போது நாலாம் கட்ட ஈழப்போரில் இந்திய மத்திய அரசு கொண்டிருந்த தீவிரத்தை அவர்கள் உணர்ந்து கொண்டனர்.

 

அந்தநிலையில்தான் வவுனியா வான்படைத் தளத்தின் மீதான வான்புலிகளின் தாக்குதல் மூலம் இந்தியாவின் பின்புலத்தை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியிருந்தனர்.

 

இந்திய பின்புலம் வெளிக்கொண்டுவரப்பட்ட பின்னர் விடுதலைப்புலிகளின் சமர்க்கள உத்திகளில் அதிக மாறுதல்களை அவதானிக்க முடிந்திருந்தது. அதாவது, விடுதலைப்புலிகள் தமது நிலங்களை தக்கவைப்பதற்கு அதிக சிரத்தை எடுக்கவில்லை. மறுவளமாக நிலங் கள் குறுகிய போதும் அதிக இழப்புக்களை ஏற்படுத்தும் தாக்குதல்களிலேயே அவர்கள் அதிக அக்கறை செலுத்தியிருந்தனர்.

 

இந்திய அரசும் இலங்கை அரசும் இணைந்து அனைத்துலகத்தினதும், ஐ.நாடுகள் சபையினதும் ஆதரவுகளுடன் நடத்திய இந்தப் போரை முறியடிப்பதற்கு விடுதலைப்புலிகள் தனியாக ஆயுதங்களை மட்டும் நம்பியிருக்கவில்லை.. அதனை முறியடிப்பதற்கு தந்திரங்களும், இராஜதந்திர அணுகுமுறைகளும் பெருமளவில் கையாளப்பட்டுள்ளன.

 

அனைத்துலக சமூகம் மீதான இராஜதந்திர அழுத்தங்களின் பெரும் பகுதியை உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் மேற்கொண்டிருந்தனர். தந்திரமான உத்திகளை விடுதலைப்புலிகள் களத்தில் பயன்படுத்திக் கொண்டனர். அதனூடாகத்தான் இந்த போரின் இறுதிக்கட்டம் பயணிக்கத் தொடங்கியது.  ஆனால் விசுவமடுவை படையினர் கைப்பற்றும் வரையிலும் அதிகளவில் பொதுமக்களின் இழப்புகளின்றி நகர்ந்த இந்தப் போர் அதன் பின்னர் பாரிய மனிதப்பேரவலங்களை ஏற்படுத்தியிருந்தது.

 

இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும், அனைத்துலகின் அழுத்தங்களுக்கும் எதிராக முப்பத்து மூன்று வருடங்கள் நடைபெற்ற போராட்டங்களில் தமிழ் மக்கள் எத்தகைய அவலங்களைச் சந்தித்திருந்தனர் என்பதை கடந்த ஐந்து மாதகாலப்பகுதியில் அனைத் துலக சமூகம் புரிந்து கொண்டது.  ஆனாலும் போரைத் தூண்டியதில் அவர்கள் காண்பித்த அக்கறைகளை மனிதப்பேரவலத்தை நிறுத்துவதில் காண்பிக்கவில்லை.

 

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மே 18 ஆம் திகதிவரையிலும் 7500 தொடக்கம் 10,000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும், 20,000 இற்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்திருக்காலம் எனவும் ஐ.நாவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், 20,000 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாகவும், 50,000 இற்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளதாகவும், 30,000 பேர் அங்கவீனமாகி இருப்பதாகவும் வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் போர் மிகவும் பாரிய மனிதப்பேரவலங்க ளுடன் ஓய்வுக்கு வந்ததே தவிர அதனை நிறுத்துவதற்கு யாரும் முன்வரவில்லை.

 

பாதுகாப்பு வலயத்தின் மீது  மேற்கொள்ளப் பட்ட தாக்குதலின் இறுதியான மூன்று நாட்களும் முக்கியமானவை.. சனிக் கிழமை (16) தொடக்கம் திங்ட்கிழமை (18) வரையிலும் பல சம்பவங்கள் மிகவும் குறுகிய நேரத்தில் நடைபெற்றிருந்தன. பெருமளவான மக்கள் கொல்லப்பட்டதுடன், பெருமளவான காயப்பட்ட மக்களையும், போராளிகளையும் பாதுகாப்பாக ஒரு மூன்றாம் தரப்பினுõடாக சரணடையவைக்கும் முயற்சிகளும் புலிகளால் அப்போது மேற்கொள்ளப்பட்டிருந்தன.

 

காயப்பட்ட போரளிகளை பாதுகாப்பாக நகர்த்தும் பொறுப்புகள் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பா. நடேசனிடமும், சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவ னிடமும், கட்டளைத் தளபதி கேணல் ரமேஸிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தன. ஏனைய போராளிகளும் பெருமளவான தளபதிகளும் 17 ஆம் திகதி இரவு வரையிலும் தொடர்ச்சி யாக மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்பு தாக்குதல் களில் வெளியேறியிருந்தனர்.

 

ஆனால் இந்த அணுகுமுறைகளை அனைத்துலக சமூகமும், அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்களும் புறந்தள்ளியிருந்தன. மேற்குலகம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வந்த போதும் இந்தியா அதனை தடுத்துவிட்டது.

 

தமிழக முதல்வர் கருணாநிதி, அமெரிக்காவின் பாதுகாப்பு திணைக்களம், இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக், ஐ.நாவின் செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியார், நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், அனைத்துலகத்தின் மூத்த ஊடகவியலாளர்கள் போன்ற அனைவரிடமும் காயமடைந்த மக்களினதும், போராளிகளினதும் பாதுகாப்புகளை உறுதிப்படுத்தும் உதவிகள் கேட்கப்பட்டன. ஆனால் எதுவும் நடைபெறவில்லை.

 

இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்திருந்தார் ஐ.நாவின் செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியார். அதாவது சரணடைபவர்களின் பாதுகாப்புகளை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தும் என நம்பியார் தெரிவித்திருந்தார். அதற்கு பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் "த ரைம்ஸ்' இதழின் ஊடகவியலாளர் மேரி கொல்வின் என்பவரின் தகவல் சாட்சியாக உள்ளது.

 

ஆனால் 18 ஆம் திகதி அதிகாலை அரசியல்துறை பொறுப்பாளர் பா. நடேசன், சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவன் போன்றோர் உட்பட சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டனர் எனவும் இது ஒரு திட்டமிட்ட படுகொலை என குற்றச்சாட்டுகள் எழுந்துள் ளன. அதற்கு ஆதரவாக இந்தியாவும், ஐ.நாவும் செயற்பட்டுள்ளதும் ஆதாரங்களு டன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இருந்த போதும் அனைத்துலகத்தின் ஆதரவுகள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கிடைக்க வில்லை.

 

ஆனால் இலங்கை மீதான போர்க் குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற வாதங்களை ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்திருந்தது. அதற்கு ஏதுவாக இலங்கை மீதான சிறப்பு விவாதம் ஒன்றை மேற்கொள்ளும் பொருட்டு கடந்த 26 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழு ஜெனிவாவில் கூடியிருந்தது. ஆனால் அதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. அனைத்துலக சமூகம் மீது தமிழ் மக்களுக்கு எஞ்சியிருந்த சிறு நம்பிக்கையும் சிதறடிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கைக்கு ஆதரவாகவும், மேற்குலகத்திற்கு எதிராகவும் ஆசிய நாடுகள் பல ஒருங்கிணைந்து குரல் கொடுத்தமை மேற்குலகத்தின் இந்துசமுத்திர பிராந்தியத்தின் மீதான கொள்கைகளுக்கு விழுந்த சாட்டை அடியாகும். அதாவது தமிழ் மக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட போரானது தமிழ் மக்களை விட மேற்குலகத்திற்கே அதிக தோல்வியைக் கொடுத்துள்ளது என்பது தான் தற்போதைய நிலையின் சுருக்கமான முடிவு.

 

இதனிடையே விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பாக ஒன்றுக்கு பின் ஒன்றாக முரண்பட்ட தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. விடுத லைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்த 17 ஆம் திகதி வீர மரணத்தை தழுவிக்கொண்டுள்ளதாக விடுதலைப் புலி களின் அனைத்துலக இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பிரதிநிதி செல்வராஜா பத்மநாதன் பி.பி.சி செய்தி நிறுவனத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.

 

ஆனால் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாக விடுதலைப்புலிகளின் அனைத்துலக புலனாய்வுப் பிரிவின் தலைவர் அறிவழகன் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இரண்டு அறிக்கைகளிலும் பல இராஜதந்திர நகர்வுகளின் தாக்கங்கள் உள்ளன.

 

இவ்விருவரும் விடுதலைப்புலிகளின் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள். அறிவழ கன் விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரி வின் இரண்டாம் நிலை தளபதிகளில் ஒரு வர். பத்மநாதன் கடந்த ஜனவரி மாதம் அனைத் துலக இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு பொறு ப்பான பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர். விடுதலைப்புலிகளின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவர்.

 

எனவே எந்த தகவல் சரியானது. எது தவறானது என்பது தொடர்பான குழப்பங்கள் எழுவது சகஜமே. இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு ஒரு தெளிவான சிந்தனையும், அரசியல் முதிர்ச்சியும் தேவை. விடுதலைப்புலிகளின் தற்போதைய நடவடிக்கைகளில் அதிகளவிலான இராஜதந்திர நகர்வுகள் பொதிந்துள்ளன. அதன் பின்னால் ஓர் அனைத்துலக வலைப்பின்னலை விடுவிக்கும் நடவடிக்கைகளும் உள்ளன.

 

அவர்கள் உலகிற்கு ஒரு தகவலை சொல்ல முற்பட்டுள்ளனர், அதே சமயம் தமிழ் மக்களுக்கும் அதனூடாக பிறிதொரு தகவலை கூறமுற்பட்டுள்ளனர். 
பல அழுத்தங்களும் அதன் மூலம் தேவையான பல அனுகூலங்களும் திரைமறைவில் நடைபெற்று வருகின்றன என்பதே இந்த இரு தகவல்களினதும் பொருள்.

 

இந்த இரு தகவல்களையும் உள்வாங்கிக்கொண்டு அரசியல் நகர்வுகளின் வேகத்தை விரைவுபடுத்த வேண்டிய பாரிய கடமை ஒன்று தமிழ் மக்களுக்குள்ளது என்பது மட்டுமே உண்மை. ஒரு விடுதலைப்போரில் சில தகவல்கள் நடைபெற்ற சம்பவங்களால் தோற்றுவிக்கப்படுபவை. ஆனால் சில தகவல்கள் ஒரு சம்பவத்தை உருவாக்குவதற்காக தோற்றுவிக்கப்படுபவை.

 

வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற தகவல்கள் வெளிவருவது இது முதல் தடவையல்ல. 1989 களில் இந்திய இராணுவம் அவர் இறந்துவிட்டதாக தகவல்களை பரப்பியிருந்ததுடன் ஆதாரங்களையும் முன்வைத்திருந்தது. ஆனால் 1990 களில் தான் அவர் மீண்டும் மக்கள் முன் தோன்றினார். அதனைப் போலவே 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் புலிகளின் தலைவர் இறந்து விட்டதாகவும் வதந்தி பரவியது.

 

இலங்கைக் கடற்படையினர் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலத்தை தேடும் பணியையும் முடுக்கிவிட்டிருந்தனர். ஆனால் பிரபாகரன் மீண்டும்வெளிவந்தார்.

 

 நான்காம் கட்ட ஈழப்போரை பொறுத்த வரை யில் அதன் இறுதிக்கட்டம் கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் திகதி கிளிநொச்சி நகரம் படையினரால் கைப்பற்றப்பட்டதிலிருந்து ஆரம் பமாகியிருந்தது. ஆனால் அதன் நகர்வுப் பாதை புரியாத புதிராகவே பலருக்கும் தோன்றியது.

 

மேலும் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இருப்பிடங்கள் தொடர்பான தெளிவான சான்றுகள் பலவற்றை விடுதலைப்புலிகள் தமது தளங்களில் விட்டும் சென்றிருந்தனர். அதாவது கடந்த பெப்ரவரி மாதம் விசுவமடு பகுதியை படையினர் கைப்பற்றிய போது நிலத்திற்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த இல்லம் ஒன்றில் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்தும் மேற்சட்டையை
யும், சில மருந்துப் பொருட்களையும், கோல்ட் கொமாண்டோ ரக துப்பாக்கியையும் விட்டு சென்றிருந்தனர்.

 

அதன் பின்னர் ஆனந்தபுரம் பகுதியில் விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களின் பல பிரத்தியேக ஆவணங்களை விட்டு சென்றிருந்தனர். வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அவரின் குடும்ப புகைப்படங்களும் வேறு சில பொருட்களும் தவறவிடப்பட்டிருந்தன. இந்த சம்பவங்கள் மூலம் இராணுவமும் இலங்கை அரசாங்கமும் ஒரு முடிவுக்கு வந்திருந்தன. அதாவது விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமது முற்றுகைக்குள் இருப்பதாக அவர்கள் கருதினர்.

 

எனவே அவர்களின் முழுப் படைப் பலமும், கவனமும் அங்கு செறிவாகியிருந்தது. கடற்படையின் முழு வளங்களும், வான்படையின் வேவு அணிகளின் முழுப்பலமும் அங்குதான் மையம் கொண்டிருந்தன. உண்மையில் வேலுப்பிள்ளை பிரபாகரன் இராணுவத்தின் முற்றுகைக்குள் சிக்கியிருப்பின் அவர் தொடர்பான தகவல்களை யாரும் அவரைத் தேடி வருவோரின் கண்ணில் படுமாறு பின்னால் விட்டு சென்றிருப்பாரா என்ற கேள்வியும்  எழுப்பப்படுகிறது. 122 மி.மீ பீரங்கிகளை எடுத்து செல்பவர்களுக்கு ஒரு கோல் கொமோண்டோ துப்பாக்கியை கொண்டு செல்வது கடினமõனது அல்ல.

 

இராணுவம் வீட்டின் கொல்லைப்புறத்திற்குள் நுழைந்தபோதுதான் புலிகளின் தலைவர் தப்பியோடியிருப்பார் என்ற வாதங்களும் பலவீனமானவை. எனவே சில சம்பவங்கள் அங்கு தோற்றுவிக்கப்பட்டுள்ளன என்பது உண்மை. அதற்கான காரணங்கள் என்ன?

 

மேலும் 18 ஆம் திகதி காலை இலங்கை நேரம் 8.00 மணியளவில் பாதுகாப்பு வலயத்தில் இருந்து ஒரு மூன்றாம் நிலை பொறுப்பாளரினதும், போரளியினதும் குரல்கள் அனைத்துலகத்தை எட்டியிருந்தன. அவர்களின் குரல்களில் இருந்து அவர்கள் மரணத்தின் இறுதி மணித்துளிகளை நெருங்கிக்கொண்டு இருக்கின்றனர் என்பது தெளிவாகியது..

 

இந்த உரையாடலில் பங்குபற்றியவர்களால் புலிகளுக்கு சில நூறு மீற்றர் தொலைவில் இராணுவத்தின் வெடியோசைகளை தொலைபேசியூடாக கேட்ட முடிந்தது..

 

எந்த வினாடியும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்படலாம் என்ற நிலை, அவர்களின் உறவுகளை பற்றி கேட்கவில்லை, எமது உறவுகளைப் பற்றி கேட்கவில்லை. மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் அணிவகுத்து நின்ற போதும் இறுதியாக எஞ்சியிருந்த ஒரு சில வினாடிகளில் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று தான். தலைவர் எங்கே?

 

பதில் தெளிவானது. தலைவர் பாதுகாப்பாக உள்ளார். நீங்கள் உங்கள் பணியைத் தொடருங்கள் என்பது தான் அது.

 

இன்று உலகெங்கும் ஒருங்கிணைந்து ஒரு குரலாக ஒலிக்கும் தமிழ் தேசியத்தின் ஆன்மாவை தமிழ்மக்கள் அணையவிட மாட் டார்கள், அதன் அழுத்தம் உலகின் நகர்வு களில் பல மாற்றங்களை ஏற்படுத்தி யிருந் ததையும் நாம் புறந்தள்ள முடியாது.

 

நன்றி - வீரகேசரி வாரவெளீயீடு

StumbleUpon.com Read more...

வெள்ளைக்கார விடுதலை புலி இலங்கையில் நாடுகடத்தல் காணொளி

StumbleUpon.com Read more...

டைட்டானிக் கப்பல் விபத்து:மில்வினா மரணம்

 
 
டைட்டானிக் கப்பல் விபத்து:உயிர் தப்பிய மில்வினா 95வருடங்களுக்கு பிறகு மரணம்
 
1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு டைட்டானிக் என்ற சொகுசு பயணிகள் கப்பல் புறப்பட்டு சென்றது. இதில் 2,233 பயணிகள் இருந்தனர்.
 
கப்பல் அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்தது. 15-ந்தேதி அதிகாலை நடுக்கடலில் சென்றபோது பனிக்கட்டில் மோதி கப்பல் மூழ்கியது.
 
இதில் பயணம் செய்த 1517 பேர் உயிர் இழந்தனர். 706 பேர் உயிர் தப்பி படகில் ஏறி உயிர் தப்பினார்கள்.
 
இந்த விபத்து உலகில் நடந்த பெரிய கோர விபத்தாக கருதப்பட்டது.
 
1985-ம் ஆண்டு இந்த கப்பல் மூழ்கி கிடந்த இடத்தை கண்டுபிடித்தனர். டைட்டானிக் கப்பல் மூழ்கியதை மையமாக வைத்து டைட்டானிக் என்ற சினிமா படம் எடுக்கப்பட்டது. இது வெற்றிகரமாக ஓடியது.
 
இந்த கப்பல் விபத்தில் உயிர் தப்பியவர்கள் அனைவரும் காலப்போக்கில் இறந்து விட்டனர்.
 
மில்வினா டீன் என்ற பெண் மட்டும் உயிருடன் இருந்தார். மில்வினா டீன் விபத்து நடந்தபோது 2 மாத கைக்குழந்தையாக இருந்தார்.
 
அவருடைய தந்தை வெர்ட்ரம், தாயார் ஜார்செட்டா, சகோதரர் வெல்ட் ஆகியோர் கப்பலில் பயணம் செய்தனர். விபத்தில் தந்தை இறந்து விட்டார். மற்ற 3 பேரும் படகில் ஏறி உயிர் தப்பினார்கள்.
 
மில்வினா டீன் இங்கிலாந்து சவுதாம்டன் நகரில் வசித்து வந்தனர். 97 வயதாகி விட்ட அவர் சமீப காலமாக உடல் நலம் சரி இல்லாமல் இருந்தார். முதுமை காரணமாக அவர் இறந்து விட்டார்.
 
கடைசி காலத்தில் வறுமையில் வாடினார். ஆஸ்பத்திரி பில் கட்ட கூட முடியாமல் தவித்த அவருக்கு டைட்டானிக் பட ஜோடி லியாண்டர்டோ காப்ரியோ, கேதே வின்ஸ்லட் ஆகியோர் பண உதவி செய்தனர்

StumbleUpon.com Read more...

கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது-தினமலர் பத்திரிக்கை

கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது என்று கத்தோலிக்க தலைவர் பாப்பரசர் அவர்கள் தெரிவித்ததாக செய்தி தினமலரில் வெளியாகியுள்ளது
.மேலோட்டமாக இந்த செய்தி சரிதான்.ஆனால் இது கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையைதான் குறிக்கும். மற்ற ஏனைய கிறிஸ்தவ பிரிவுகளை இந்த குறிக்காது.மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு தெரியாமல் கிறிஸ்தவர்களானவர்களை குறிக்காது.

இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் தங்கள் இஸ்லாமை விட்டு மாறுகின்றவர்களை கொலை செய்கின்ற வழக்கம் இன்னும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளது.அதனால் பலர் தங்கள் நம்பிக்கை மாற்றத்தை சட்ட பூர்வமாக வெளியே அறிவிப்பது இல்லை.

தினமலரில் வெளியான செய்தியை வாசிக்க படத்தின் மேல் அழுத்தவும்



StumbleUpon.com Read more...

நடேசன், புலித்தேவன் செத்த பின்தான் வெள்ளைக்கொடியை தூக்கினர்.-இலங்கை இராணுவ தளபதி

"நடேசன், புலித்தேவன் செத்த பின்தான் வெள்ளைக்கொடியை தூக்கினர்."என்னடா இப்படி ஜோக் எல்லாம் அடிக்கிறார்களே என்று நினைக்கிறீர்களா?பின்ன என்னங்க இந்த இலங்கை இராணுவ தளபதிக்கு பொய் சொல்லுறதுக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லை.நடேசன், புலித்தேவன் செத்த பின்தான் வெள்ளைக்கொடியை தூக்கினர் அப்படின்னு சொன்னாலும் சொல்லிடுவாரு போலிருக்குது.இது வரை சமாதான பேச்சு,வெள்ளை கொடி போன்ற வார்த்தைகள் எதையும் காதில் போட்டுக்கொள்ளாத இலங்கை அரசாங்கம் திடீர்ன்னு
 
 "அவர்கள் தமது வெள்ளைக் கொடிகளைக் காண்பிக்க தாமதித்து விட்டனர் என்பதே உண்மையாகும்"         
 
என்று காதில் பூ சுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இன்னும் ஒரு படி மேலே போய் அவர்கள் விடும் ரீல் கொஞ்சம் பெருசாவே இருக்குது.
 
அவர்கள் கொல்லப்பட்டு 10 நிமிடங்களின் பின்னர் என்னுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், அவர்களிருவரும் சரணடையப் போவதான விடயத்தினை எனக்குத் தெரிவித்தார்.  
 
இதெல்லாம் கேட்டு இலங்கை அரசாங்கத்தை தலையில் வைத்து கூத்தாட ஒரு சில கருங்காலிகள் இல்லாமலா இருக்கப்போகிறது.
 
செய்தியை முழுமையாக படிக்க கீழே செல்லுங்கள்.
 
நடேசன், புலித்தேவன் சரணடையும் விடயம் கொல்லப்பட்டு 10 நிமிடத்தின் பின்பே தெரியும்: இராணுவ தளபதி தெரிவிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் எஸ்.புலித்தேவன் மற்றும் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் ஆகியோர் பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடையப்போவதான விடயம் அவர்கள் கொல்லப்பட்டு 10 நிமிடங்களின் பின்னரே தெரியவந்தது. என  இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அவர்கள் வெள்ளைக் கொடியோடு வந்து சரணடையப் போவது குறித்த விடயம் சுமார் 7, 8 மணித்தியாலங்களுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தால் அவர்களை உயிரோடு கைது செய்திருப்போம் என்றும் இராணுவ தளபதி தெரிவித்தார்.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை உயிரோடு பிடிப்பதன் அவசியம் குறித்து நாமும் அறிவோம். அவர்களைக் கைது செய்வதன் மூலம் பல்வேறு விடயங்களை நாம் அறியக்கூடும். அவர்கள் சரணடையப் போவதைத் தெரிவிக்க தாமதமானதே கொல்லப்பட்டதற்கான காரணமாகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் இராணுவ தளபதி மேலும் கூறியுள்ளதாவது :

புலிகளின் சமாதான செயலக பொறுப்பாளர் எஸ்.புலித்தேவன் மற்றும் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் ஆகியோர் சரணடைய வந்த போதே படையினர் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர் என்று பல்வேறு தரப்பினர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போர் நடவடிக்கைகளின் போது புலி உறுப்பினர்கள் அனைவரும் சுமார் 300 மீற்றர் நிலப்பரப்புக்குள்ளேயே முடக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த 17ஆம் திகதி இரவு படையினரால் நடத்தப்பட்ட தாக்குதல்களின் போது அவ்வியத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.

அத்துடன் 18ஆம் திகதி அதிகாலை 3.30 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் போது நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் கொல்லப்பட்டமையும் உறுதி செய்யப்பட்டது.
அவர்கள் கொல்லப்பட்டு 10 நிமிடங்களின் பின்னர் என்னுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், அவர்களிருவரும் சரணடையப் போவதான விடயத்தினை எனக்குத் தெரிவித்தார்.

ஆயினும் அதற்குள் படையினரின் துப்பாக்கி ரவைகள் அவர்களிருவரின் உடலைத் துளைத்துவிட்டன. அவர்கள் சரணடையப் போவதை சுமார் 7அல்லது 8 மணித்தியாலங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தால் நாம் அவர்களைக் கைது செய்திருப்போம்.

சர்வதேச ரீதியில் அரசாங்கத்துக்கு வழங்கப்படும் அழுத்தங்கள் காரணமாக காப்பாற்றப்படுவோம் என்று எண்ணியே அவர்கள் அதுவரையில் சரணடையாமல் இருந்திருக்கலாம். இருப்பினும் அவர்கள் தமது வெள்ளைக் கொடிகளைக் காண்பிக்க தாமதித்து விட்டனர் என்பதே உண்மையாகும்." இவ்வாறு அவர் கூறினார்.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP