சமீபத்திய பதிவுகள்

தமிழ் பாப் இசையில் கண்ணீர் வரிகள்-வீடியோ

>> Tuesday, July 28, 2009

StumbleUpon.com Read more...

இந்தியா மீது போர் தொடுக்குமா சீனா?

 

"இன்னும் மூன்றே ஆண்டுகளில், அதாவது 2012ம் ஆண்டுக்குள் இந்தியா மீது சீனா போர் தொடுக்கப் போகிறது" என்று அடித்துச் சொல்கிறார் பரத் வர்மா. 'இண்டியன் டிஃபென்ஸ் ரிவ்யூ' என்ற புகழ்பெற்ற பாதுகாப்புத் துறை பத்திரிகையின் ஆசிரியரான இவர், தேசத்தின் முக்கியமான பாதுகாப்பு நிபுணரும்கூட!

எதிர்காலம் பற்றிய கணிப்புகள் கலவரமூட்டுபவை. அந்தக் கணிப்பில் கசப்பு மருந்தும் கலந்திருந்தால் கேட்கவே வேண்டியதில்லை. இந்தியாவின் 113 கோடி மக்களையும் தூக்கமிழந்து, துக்கத்தில் தவிக்கவிடும் ஒரு கணிப்பைச் செய்திருக்கிறார் பரத் வர்மா. இதற்கு வர்மா பல காரணங்களைப் பட்டியல் போட்டுக் கொடுக்கிறார். எல்லாமே சரியாக இருப்பதுதான் நம் வயிற்றில் புளியைக் கரைக்கிறது.

விவசாயத் தொழிலாளர்களின் ஆதரவோடு சீனப்புரட்சியை சாத்தியமாக்கினார் மாவோ. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இறுக்கமான பிடியில் அந்த தேசம் இருந்தாலும், கடந்த 20 ஆண்டுகளாக கிராமப்புற வளர்ச்சியை கிடப்பில் போட்டுவிட்டு, நகர்ப்புறங்களை தொழில்மயம் ஆக்குவதில் ஆர்வம் காட்டியது அரசு. இந்த தொழில்புரட்சி விஸ்வரூபம் எடுத்ததன் விளைவாக, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆப்ரிக்க நாடுகள் என எந்த வித்தியாசமும் இன்றி, எல்லா நாடுகளின் மார்க்கெட்டையும் சீனப் பொருட்கள் நிறைத்தன. 'மேட் இன் சைனா' என்ற முத்திரை கொண்ட பொருள், மலிவான விலையில் கிடைக்காத நாடே இல்லை என்கிற அளவுக்கு சீனாவின் ஏற்றுமதி அபரிமிதமாக இருந்தது.

இப்போது உலகப் பொருளாதாரமே ஆட்டம் கண்டிருக்கும் நிலையில், சீன பொம்மைகளையும் எலெக்ட்ரானிக் அயிட்டங்களையும் சீந்துவாரில்லை. ஏற்றுமதி வர்த்தகம் அதல பாதாளத்துக்குச் சரிந்துவிட, சீன நிதிச் சந்தையிலிருந்து கோடிக்கணக்கான டாலர் அந்நிய முதலீடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டன. அந்நியச் செலாவணி கையிருப்பு பெரிதும் குறைந்துவிட, வேலையில்லாத் திண்டாட்டம் பெரிய தலைவலியாக உருவெடுத்திருக்கிறது.இன்னொரு பக்கம் கிராமப்புற விவசாயிகள் மத்தியில் எழுந்த கசப்புணர்வு, அரசுக்கு எதிரான போராட்டமாக ஆங்காங்கே வெடிக்கிறது.

எப்போதும் இல்லாதபடி இனக்கலவரங்களும் புதிய முரண்பாடுகளை உருவாக்க, சீன சமுதாயத்தின் மீது அரசின் பிடி தளர்ந்து வருகிறது. அரசின் எந்த முடிவையும் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்கிற இரண்டு தலைமுறைகளை உருவாக்கிய சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு, இந்த திருப்திகளை எப்படி சமாளிப்பது என்று புரியவில்லை. போருக்கு இது முதல் காரணம்!

இரண்டாவது காரணம் பாகிஸ்தான்… இந்தியாவின் ஸ்திரத்தன்மையை குலைக்கும்விதமாக பாகிஸ்தான் எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் சீனாவின் ஆசி உண்டு. தீவிரவாத முகாம்களை அமைத்து, பயிற்சி கொடுத்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ வைக்கும் குழப்பங்களுக்கும், வங்க தேசம், நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து தலைவலி தரும் தீவிரவாத இயக்கங்களுக்கும் பாகிஸ்தான் நேரடிக் காரணமாக இருக்கிறது என்றால், சீனா மறைமுகக் காரணம்! இப்போது தாலிபன் அமைப்பு பாகிஸ்தானிலேயே புகுந்து குழப்பத்தை ஏற்படுத்த, பாகிஸ்தானின் முழு கவனமும் அங்கு குவிந்துவிட்டது.அமெரிக்காவும் அங்கேயே பார்த்துக் கொண்டிருக்க, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் இப்போது பெரிய அளவில் எதுவும் செய்யமுடியாத நிலை.

மூன்றாவது காரணம் அமெரிக்கா… அணுசக்தி ஒப்பந்தத்தில் ஆரம்பித்து, ராணுவக் கூட்டுப்பயிற்சி வரை அமெரிக்காவும் இந்தியாவும் ரொம்பவே நெருங்கி வருவது சீனாவின் கண்களை உறுத்துகிறது. ஆசியாவின் வல்லமை பெற்ற சக்தியாக,சீனாவுக்குப் போட்டியாக இந்தியாவை உருவாக்குவதுதான் அமெரிக்காவின் நோக்கமோ என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுந்திருக்கிறது.

இதுபோன்ற சூழலில் மக்களின் கவனத்தை திசைதிருப்பி,அவர்களிடம் தேசபக்தியை ஏற்படுத்தவும், ஆசியாவின் 'சூப்பர் தாதா' எப்போதும் சீனாதான் என்பதை நிரூபிக்கவும், சீனா இந்தியா மீது போர் தொடுக்கும் என்கிறார் பரத் வர்மா. ''வட கொரியாவின் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளுக்கு மறைமுக உதவி செய்வது சீனாதான்.வடகொரியாவை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஜப்பானும் கண்டித்துவரும் வேளையில் அந்தநாடுகளில் ஏதோ ஒன்றின் மீது சீனா போர் தொடுக்கலாமே என்ற கேள்வி எழலாம். பொருளாதார மந்தநிலை நிலவும் வேளையில், இந்த நாடுகளை பகைத்துக்கொண்டால் பொருளாதாரத்தடை போன்ற நடவடிக்கைகளால் சீனா இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளப்படும். இந்தியா மாதிரியான தன்னைவிட பலம் குறைந்த தேசத்துடன் போரிடவே அது விரும்பும். வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பகுதியை அபகரித்துக்கொள்ளவும் இந்தப்போர் உதவும். இப்படி ஒருபுறம் சீனாவும், இன்னொருபுறம் பாகிஸ்தானும் போருக்கு வந்தால், அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கவேண்டும்'' என்கிற பரத் வர்மா, ''இப்போதைய நிலையில் இப்படி ஒரு சூழ்நிலைக்கு இந்தியா தயாராக இல்லை'' என வருத்தத்துடன் சொல்கிறார்.

இமயமலைக்கு இருபுறமும் இருக்கும் இந்த இரண்டு தேசங்களுக்கு இடையே நட்புறவை வளர்க்க எத்தனையோ முயற்சிகளை இந்தியா எடுத்திருந்தாலும்,இமயமலை அளவுக்கு நம்பிக்கையின்மை இருதரப்பிலும் வளர்ந்திருக்கிறது என்பதுதான் உண்மை. இந்தியா சுதந்திரம் பெற்ற அதே நேரத்தில் சீனாவில் புரட்சி தீவிரமாக இருந்தது. தேசியவாதிகள்பக்கமோ, புரட்சியாளர்களான கம்யூனிஸ்டுகள் பக்கமோ சாயாமல் இந்தியா நடுநிலை வகித்தது.கம்யூனிச தேசமாக சீனா உதயமானபோது அதை அங்கீகரித்த, கம்யூனிச ஆட்சியற்ற இரண்டாவது நாடு இந்தியா. (முதல் நாடு பர்மா). ஐக்கிய நாடுகள் சபையில் சீனா இணைவதற்கும் இந்தியா ஆதரவளித்தது. பரஸ்பரம் இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் மதித்து, அடுத்த நாட்டு உள் விவகாரங்களில் தலையிடாமல் இணைந்து செயல்பட வேண்டும்; எல்லை பிரச்னை போன்ற விஷயங்களை பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என 'பஞ்சசீலக் கொள்கை' 1954ம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது. சீன பிரதமர் சூ என் லாய் இந்தியாவுக்கு வந்து நட்புறவுடன் நேருவோடு கைகுலுக்கினார்.

ஆனால் உதட்டளவிலான இந்த நட்பை நீண்ட நாட்கள் நீடிக்க விடவில்லை சீனா. 58-ம் ஆண்டில், அசாம் மாநிலத்தின் வடபகுதியை தங்கள் தேசத்தின் ஒரு பகுதியாக சேர்த்து சீன அரசாங்கத்தின் அதிகாரபூர்வ மேப் வெளியாக, இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் காஷ்மீரின் லடாக் பகுதியிலுமாக சேர்த்து சுமா 40 ஆயிரம் சதுர மைல் பரப்புள்ள பகுதியை, 'இவை எல்லாமே சீனாவின் அங்கம்' என வெளிப்படையாக சொந்தம் கொண்டாடினார் சூ என் லாய். அடுத்த ஆண்டே திபெத்தில் சீனர்களின் ஆக்கிரமிப்புப் படை நிகழ்த்திய அட்டகாசங்களைத் தாங்கமுடியாமல் இந்தியா வந்து தஞ்சம் புகுந்தார் தலாய் லாமா. அவருக்கு இந்திய அரசு அடைக்கலம் கொடுக்க, சீன – இந்திய உறவில் வெளிப்படையான விரிசல் ஆரம்பித்தது.

லடாக் மற்றும் சிக்கிம் பகுதிகளுக்கு விடுதலை வாங்கித் தருவோம் என சர்வதேச வட்டாரங்களில் அவதூறு பிரசாரங்களை ஆரம்பித்த சீனா, 1962ம் ஆண்டு திடீரென எல்லையில் தாக்குதலை நடத்தியது. இந்தியாவின் தலைப்பகுதியாக இருக்கும் காஷ்மீரில் இரண்டை கொண்டைகள் போலத் தெரியுமே… அதில் வலதுபுறக் கொண்டை ஏரியா 'அக்சாய்சின்' பகுதி. ஆக்கிரமித்த திபெத்தோடு சாலைத் தொடர்புகளை ஏற்படுத்த, சீனாவுக்கு இந்த ஏரியா தேவை. இதற்காகவே போர் ஆரம்பித்தது. தன் லட்சியம் நிறைவேறியதும், ஆறே மாதங்களில் போர் முடிந்துவிட்டதாக சீனாவே அறிவித்தது.

காஷ்மீர் மாநிலத்தில் 38 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பகுதியை இப்படி வசப்படுத்தி வைத்திருக்கிறது சீனா. இது போதாதென்று, இன்னும் கொஞ்சம் இடங்களை அது பாகிஸ்தானிடமிருந்து வாங்கியது. ஏற்கனவே சுதந்திரம் வாங்கிய கையோடு, காஷ்மீரில் ஊடுருவிய பாகிஸ்தான், காஷ்மீரின் பெரும் பகுதியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

அதிலிருந்து 5120 சதுர கிலோமீட்டர் பகுதியை அது 63ம் ஆண்டு, சீனாவுக்கு தானமாக வழங்கி,தன் நட்பை பலப்படுத்திக் கொண்டது. கடைத் தேங்காயை வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதையாக, இப்படிப் போன இடங்களில் ஒரு கையகல நிலத்தைக்கூட நம்மால் திரும்பிப் பெறமுடியவில்லை என்பதுதான் நிதர்சனம்!

இந்தியாவுடனான வர்த்தக உறவுகளில் அக்கறை கொண்டிருப்பது போல சீன தலைவர்கள் அவ்வப்போது டெல்லி வந்து நடிக்கிறார்கள்; நம் பிரதமரோ, ஜனாதிபதியோ பெய்ஜிங் போகும்போதும் நடிக்கிறார்கள். ஆனால் சீன பொருட்கள் அதிக அளவில் இந்தியாவில் இறக்குமதி ஆகுமாறு பார்த்துக் கொள்வதுதான் அவர்களின் வேலையாக இருக்கிறது. என்ன இருந்தாலும், 113 கோடி மக்கள் கொண்ட உலகின் பெரிய மார்க்கெட்டில் வியாபாரம் செய்யாமல் இருக்கமுடியாதே!

அதேசமயம், 'எல்லை பிரச்னைகளை பேசித் தீர்த்துக் கொள்வோம்' என ஒருபக்கம் சொல்லிக்கொண்டே, வேட்டியை உருவும் கலையை நன்றாகவும் செய்கிறார்கள் அவர்கள். அருணாசல பிரதேசத்தின் 90 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பகுதியை தங்கள் நிலம் என்று சொந்தம் கொண்டாடும் சீனா, அதை இந்தியா ஆக்கிரமித்து வைத்திருப்பதாக பிரசாரம் செய்து வருகிறது.

'தெற்கு திபெத்' என அருணாசல பிரதேசத்தை சீனா அழைக்கிறது. கடந்த ஏப்ரலில் அருணாசல பிரதேசத்தில் சில நீர்மின் திட்டங்களை செயல்படுத்த ஆசிய வளர்ச்சி வங்கியிடம் நிதி கேட்டது இந்திய அரசு. 'அது சர்ச்சைக்குரிய பகுதி. எங்கள் இடம். அதில் இந்தியா எப்படி அணைகளும் மின் நிலையங்களும் கட்டலாம்?' என்று எதிர்கேள்வி கேட்டு, நிதியுதவி கிடைக்காமல் தடுத்துவிட்டது சீனா.

இந்த ஏரியாவில் அடிக்கடி விளையாட்டுத்தனமாக சீன ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் ஊடுருவுவதும், அப்புறம் கொஞ்ச நேரத்தில் சிரித்துக்கொண்டே திரும்பிப் போய்விடுவதும் அடிக்கடி நடக்கிறது. சமீபத்தில் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்ட இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆண்டறிக்கை, 'காஷ்மீரில் தாங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்திருக்கும் இந்தியப் பகுதிகள் வழியாக சீனாவும் பாகிஸ்தானும் சாலை தொடர்புகளை ஏற்படுத்தி வருவதாக' தெரிவிக்கிறது.

அதாவது இந்திய நிலத்தை ஆக்கிரமித்து, ரோடு போட்டு, ஆயுதங்களையும் தீவிரவாதிகளையும் பரிமாறிக் கொள்கிறார்கள். அருணாசலப் பிரதேசத்தில் இந்திய எல்லையை ஒட்டி, தனது படைப்பிரிவில் 30 டிவிஷன்களை சீனா குவித்து வைத்திருப்பதாகவும், அவர்கள் அடிக்கடி எல்லை தாண்டி ஊடுருவல் நிகழ்த்துவதாகவும் அந்த அறிக்கை சொல்கிறது. 30 டிவிஷன் என்பது கிட்டத்தட்ட 3 லட்சம்ராணுவ வீரர்கள். இந்திய & சீன எல்லை கிட்டத்தட்ட 4050 கிலோமீட்டர் நீளமானது. இந்த எல்லையின் சீனப் பகுதியில் சாலை வசதிகளும் ராணுவத்துக்குத் தேவையான கட்டிட வசதிகளும் சமீப ஆண்டுகளில் அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டன.

திடீரென போருக்குத் தேதி குறித்தால், ஒரே நாளில் பல படைப்பிரிவுகளை இங்கே கொண்டுவந்து இறக்க சீனாவால் முடியும். நம் பகுதியில் மண் ரோடுகள்தான் அதிகம். மாட்டு வண்டிகளில் ராணுவ வீரர்கள் போவது சாத்தியம் என்றால் நாமும் இதே 'வேகத்தில்' படைகளைக் குவிக்கலாம்!

பிரச்னை இதோடு முடியவில்லை… பாகிஸ்தானுக்கு நீண்டதூரம் சென்று தாக்கும் ஏவுகணை போன்ற பல ஆயுதங்களைக் கொடுத்திருக்கும் சீனா, பாகிஸ்தானின் குவடார் துறைமுகத்தை நவீனப்படுத்துவதில் ஏகப்பட்ட பணத்தைச் செலவிடுகிறது. அநேகமாக இதற்குப் பிரதிபலனாக அங்கு சீனா கடற்படை தளம் அமைத்துக்கொள்ள பாகிஸ்தான் அனுமதி வழங்கக்கூடும்.

இதேபோல வங்க தேசத்துக்கு போர் விமானங்களை வழங்கியிருக்கும் சீனா, அந்த நாட்டுக்கு அணு உலை அமைத்துத் தருவதாகவும் வாக்குறுதி கொடுத்திருக்கிறது. இதற்கு கைமாறாக, சிட்டகாங் துறைமுகத்தில் தனது கடற்படை கப்பல்களை நிறுத்திக்கொள்ள சீனா அனுமதி வாங்கப்போகிறதாம்!

இலங்கையிலும் இதே கதைதான்… புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பயன்படுத்த எஃப் 7 ரக விமானங்கள் உட்பட ஏராளமான ஆயுதங்களை அளித்த சீனா, அங்கிருக்கும் ஹம்பந்தோடா துறைமுகத்தை நவீனப்படுத்தி வருகிறது. அநேகமாக இங்கும் அதன் கடற்படை முகாமிட வாய்ப்பிருக்கிறது.

நேபாளத்தில் மட்டும்தான் சீனா மேற்கொள்ளும் முயற்சிகளை இந்தியாவால் முறியடிக்க முடிந்திருக்கிறது. பிரசாந்தா தலைமையில் அமைந்த மாவோயிஸ்ட் அரசு, இந்திய – நேபாள ஒப்பந்தத்தை முறிக்க முயன்றது. பிரசாந்தாவுக்கு சீனாவுன் முழு ஆசி உண்டு. ஆனால் நேபாள காங்கிரஸ் கட்சி சீனாவை எதிரியாகவும், இந்தியாவை நண்பனாகவும் பார்க்கும் கட்சி என்பதால், அங்கு சீன முயற்சிகள் ஜெயிக்கவில்லை.

இருந்தபோதிலும் இந்தியாவைச் சுற்றி கண்காணிப்பு மற்றும் படை வளையங்களை குவிப்பதில் சீனா வெற்றிபெற்று விட்டதாகவே தோன்றுகிறது. ஏற்கனவே நடந்த இந்திய & சீனப் போரில் விமானப்படையோ, கப்பற்படையோ பயன்படுத்தப்படவில்லை. காரணம், அது டெக்னாலஜி வளராத காலத்தில் மலைமுகடுகளில் நிகழ்ந்த யுத்தம். இப்போது நவீன போர்க்கப்பல்களும் துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகளுமே போர் வெற்றிகளை தீர்மானிக்க வல்லவை எனும்போது, அந்த சக்தியில் சீனாவை மிஞ்சும் திறன் நமக்கு இல்லை என்பது கவலை தரும் உண்மை!

இன்னொரு பக்கம் பாகிஸ்தானும் எல்லைப் பிரதேசத்தில் பதுங்கு குழிகளையும் கண்காணிப்பு கோபுரங்களையும் அதிகம் அமைத்து வருகிறது என்ற செய்தியும் வருத்தம் தருகிறது. ''மும்பை தாக்குதலுக்குப் பிறகு இந்தக் கட்டுமானங்கள் அதிகமாகி இருக்கிறது. நாங்கள் எத்தனையோ ஆட்சேபங்கள் தெரிவித்தும் அவர்கள் தரப்பில் எந்த மாற்றமும் இல்லை'' என இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் டைரக்டர் ஜெனரல் யு.கே.பன்சால் தெரிவித்திருக்கிறார்.

பரத் வர்மாவின் ஜோதிடம் பலிப்பதற்கு இப்படி ஏராளமான சாத்தியக்கூறுகள் இருந்தாலும், அது பலிக்காமல் போகக் கடவது என்றே நினைப்போம். சீன பாதுகாப்பு நிபுணர்களும் அப்படித்தான் ரீயாக்ட் செய்திருக்கிறார்கள். 'இப்படி பாதுகாப்பு நிபுணர்களை பேசவிட்டு, ராணுவத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை அதிகப்படுத்த இந்தியா முயற்சிக்கிறது' என குற்றம் சாட்டுகிறார்கள் சீன நிபுணர்கள்.

சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படை வசதிகளைவிட ராணுவத்துக்கு பல மடங்கு அதிகம் செலவிடுவது என்பது இந்தியா போன்ற வறிய நாடுகளுக்கு சாபம்! அந்த சாபம் பாகிஸ்தான் பிரிவினைக் காலத்திலிருந்தே நம் காலைச் சுற்றிக் கொண்டிருக்கிறது.

அது இன்னும் மோசமாவதற்கு சீனா காரணமாவதுதான் வருத்தம் தருகிறது.

- நாடோடி

StumbleUpon.com Read more...

யாரை எனக்குப் பிடிக்காது -பேசுகிறார் பிரபாகரன்

"அமைப்புரீதியாக பிரபாகரன் காட்டிய இறுக்கம் வரலாற்று ரீதியாக தமிழ்ச்சமூகம் பற்றின அவரது புரிதலில் இருந்தே பிறக்கிறது. அவரைப் பொறுத்தவரை கூட்டு மனப்பான்மையற்ற, நான் எனும் தன்முனைப்பு கொண்ட, பொது நன்மைக்காய் தியாகம் செய்யும் பண்பாட்டுக் குணாம்சமற்ற, எளிதில் துரோகம் செய்யும் பலவீனம் கொண்ட தமிழ்ச் சமூகத்தை துப்பாக்கி முனையிலும், கடுமை காட்டியுமே கட்டுக்குள் வைத்திருக்க முடியுமென அவர் நம்பினார்.

மற்றபடி தன்னில் அவர் மென்மையானவர். அதற்கும் மேலாய் ரசனையானவர்" என்றனர். இது நூறுசதம் உண்மை. "உங்க ளுக்கு பொதுவாக எப்படிப் பட்டவர்களை பிடிக்காது?' என நான் கேட்டபோது, முகமெல்லாம் சிறுபிள்ளைபோல் சிரித்துக் கொண்டே ""குசும்பு பிடிச்சவங் களை மற்றவர்கள் சந்தோஷமாக இருக்கிறதெ சகிக்க முடியாத வர்களை எனக்குப் பிடியாது" என்றார்.

போகிற போக்கில், ""சந் தோஷமா இருக்கிறதுக்குத்தானே வாழ்க்கை… எனக்கு சந்தோஷம் விருப்பமென்டா, மற்றவரது சந் தோஷத்தையும் நான் விரும்பணும் தானே" என்ற ஆழமான பார்வை யை பதிவு செய்தார்.

முன்னதாக நாம் குறிப்பிட்டோமே "விசுவாசப் பாதுகாப்பு அடிப்படைவாதப் பரிசேயர்கள்… கோடி ரூபாய் பந்தயம் கட்டிச் சொல்கிறேன்… இவர்களை நேரில் சென்று பாருங்கள். நிச்சயமாய் இவர்களுக்கு புன்னகைக்க வராது. மென்மையான ரசனைகள் எதுவும் இருக்காது, யாரையும் மனம் திறந்து பாராட்டி யிருக்க மாட்டார்கள். சொந்த பிள்ளைகள், பேரப்பிள்ளைகளைக் கூட கட்டியணைத்து அன்பு முத்தம் தந்திருக்க மாட்டார்கள்… எப்போதும் யாரையாவது குறை கூறிக்கொண்டே இருப்பார்கள். குறிப்பாக குசும்பு பிடித்தவர்கள்.

கடவுளை எனக்கு முழுமை யாகத் தெரியும் என்றோ, நான் கடவுளை காப்பாற்ற களமிறங்கி நிற்கிறேன் என்றோ ஒருவன் சொல்வானாகில் -ஒன்றேல் அவன் மூடன், அல்லது ஆபத்தான மோசடிக்காரன். மனிதன் கடவுளை காப்பாற்றப் போகிறேன் என பிரகடனம் செய்வது எவ்வளவு நகைப்பிற்குரிய மோசடி, இல்லையா? உண்மையில் கிறித்துவ வேதம் வாழ்வது என்னைப் போன்ற அருட்தந்தையர்களாலோ, பெரிய பேராயர்களாலோ, விசுவாசப் பாதுகாப்பு பரிசேயர்களாலோ அல்ல. வேதம் ஈராயிரம் ஆண்டுகளாய் வாழ்ந்ததும் வாழ்வதும் ஒரு மனிதனால். மாட்டுத் தொழுவத்தில் பிறந்து, எளிமையில் வளர்ந்து, ஏழைகளை அரவணைத்து, தொழுநோயாளரை தொட்டு அணைத்து விபச்சாரிக்கும் நேசம் தந்து, உண்மை -நீதிக்குரலாய் முழங்கி சிலுவை மரணத்திற்குத் தன்னையே கையளித்த இயேசு என்ற ஒரு மனிதனின் தியாக நினைவில்தான் வேதம் வாழ்கிறது.

ஞாயிறுதோறும் கோயில் திருப்பீடத்தில் நான் வழிபாடு நடத்துகையில் எனக்கு முன் ஐநூறு விசுவாசிகள் பக்தியுடன் முழந்தாள் படியிட்டு அமர்ந்திருக்கிறார்களென்றால் அது எனது தனிப்பட்ட யோக்கியத்துவங்களின் மகத்துவத்தினால் அல்ல. அந்த மக்கள் உண்மையில் வணங்கிப் பணிந்திருப்பது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் கல்வாரி மலையில் ஆணிகள் அறையும்படி கைகளை விரித்துக் கொடுத்த இயேசு பெருமானது தியாகத்தின் திருநினைவில்! தமிழ் ஈழம் ஒருநாள் மலராமல் போகாது என நான் திடமாக நம்புவதற்கும் அதுவே காரணம். தியாகத்தின் நினைவுகள் ஈழம் மலரும்வரை, மலர்ந்த பின்னும் எம் இனத்தை வழிநடத்தும்.

எனக்குத் தெரிந்த ஈழத்துக் குடும்பம். பெரும் பணக்காரக் குடும்பம். ஆண்டுக்கு 100 கோடிக்கும் மேல் தொழில் செய்கிறவர்கள். கனடா நாட்டில் வாழ்கிறார்கள். மூன்று பிள்ளைகள். மூவரும் ஆண்கள். இருவர் கனடாவில். மூன்றாமவர் போராளியாக அப் போது முல்லைத்தீவில் இருந்தார். பலமுறை பெற்றோர் விரும்பி எழுதினர். ""நீ கனடாவுக்கு வா… இங்கிருந்து கொண்டு இயக்கப் பணிகளை செய்" என்று இடைவிடாது வலியுறுத்தினர். அவன் வரவில்லை. சமாதான காலத்தில் தலைவரிடமே நேரிற்சென்று எடுத்துக் கூறினர். அவன் கனடாவுக்கு வந்தால் இங்கிருப்பதை விட விடுதலைக் காக அதிக பணிகள் செய்யலாம் என்றனர். தலைவரும் அதிகாரப் பூர்வமாய் அவன் கனடா செல்லும் அனுமதியை எழுத் துப் பூர்வமாகவே கொடுத்து கையெ ழுத்திட்டார். உள்ளப் பூரிப்புடன் அனுமதிப் பத்திரத்தை எடுத்துக் கொண்டு அன்பு மகனிடம் விரைந் தனர். ""தலைவரே சரி சொல்லிட்டார். எப்ப புறப்படலாம் தம்பி" என்கிறார் தந்தை. ஒரு நிமிடம் அமைதியாக இருந்த மகன் சொன் னான்: ""அப்பா, தப்பா நினைக்காதீங்கோ… உயிரோட இருக்கிற தலைவர்கிட்டெ அனுமதி வாங்கிட் டீங்கள். தமிழீழக் கனவை நம்பி உயிர் ஈகம் செய்த 17000-க்கும் மேலான போராளிகளிடம் எப்படி, எப்போ அனுமதி வாங்கப் போறீங்கள்? நான் போராடுறது தலைவருக்காக அல்ல. அவரது தலைமையில், தமிழீழத்துக்காகவும் அதுக்காக உயிர் கொடுத்த போராளிகளின் கனவு தோற்றுப் போகக்கூடாது என்பதற்காகவும்தான் நான் களத்தில் இருக்கிறேன். முதலில் அந்த 17,000 போராளிகளின் துயிலும் ஆத்மாக்களிடமிருந்து அனுமதிக் கையெழுத்து வாங்கிவிட்டு அதன்பிறகு தலைவரிடம் வாங்குங்கள், அப்போது நான் வருகிறேன்" என்றான். தந்தை கண்ணீருடனும் பெருமையுடனும் கனடா திரும்பினார். பெரும்பாலும் அந்தப் போராளி முல்லைத்தீவில் கடந்த மே மாதம் வீரகாவியமாகி யிருக்க வேண்டும்.

ஒன்றா, இரண்டா? எத்தனை ஆயிரம் தியாகங்களால் இந்த விடுதலையை வளர்த்தோம். வீணாகிக் கருகிடுமோ? செந்நீரில் வேர் பிடித்த ஈழ மரம் மீண்டும் துளிர்க்கும். தியாகங்கள் உள்ளிருந்து உயிர் நீர் ஊட்டும். விடுதலையின் பாடலை ஒருநாள் எமது மக்களின் நாவுகள் முழங்கும்.

(நினைவுகள் சுழலும்)
 

StumbleUpon.com Read more...

எல்லை மீறும் ஸ்ரீலங்கா தூதரகம்! – ஜெகத் கஸ்பர்

 


ருவகையில்இருளின் காலமே நமக்கு நம்பிக்கையாகவும் ஆயிற்று. நக்கீரன் வாசகர்கள்அத்தகு நம்பிக்கையின் குறியீடாக மாறியதையும் வரலாற்றிற்காய் இங்கு பதிவுசெய்ய விழைகிறேன்.

ஈரோட்டிலிருந்துஒரு தாய். நேரில் பார்த்ததில்லை. தொலை பேசினார். நக்கீரன் வாசகர்,""ஈழத்து அகதி, அனாதைக் குழந்தை கள் 20 பேரைத் தாருங்கள், எல்லாம் நான்பொறுப்பேற்கிறேன். மருத்துவம், பொறியியல், வர்த்தக மேலாண்மை… எந்தப்படிப்பென் றாலும் நான் படிக்க வைக்கிறேன்" என்றார். இந்த உரையாடல்நிகழ்ந்தது மே மாத இறுதியில். மீண்டும் தளபதி பால்ராஜ் அவர்களைப்படித்துவிட்டுப் பேசினார்.

இருவாரங்களுக்கு முன். திருச்சியிலிருந்து வந்திறங்கி விமான நிலையத்தை விட்டுவெளியே வந்து கொண்டிருந்தேன். மஞ்சள் மீட்டரும் கறுப்பு நிறமுமான வாடகைவாகன ஓட்டுநர் ஒருவர் வாகனத்தை விட்டிறங்கி ஓடோடி வந்து வணக்கம் சொன்னார்.""தலைவர் இருக்கிறாரில்லெ சார்…?" என்று படபடப்புடன் கேட்டார். நான்பதில் ஏதும் கூறாது நின்றேன். ""சார்… என்னாலெ வாகனம் ஓட்ட முடியும்,வாரம் ஒருநாள் தர முடியும், மாதம் செலவுகள் போக 300 முதல் 500 வரை மிச்சம்பிடித்து தர முடியும்" என்றார். உலகினர் கண்களுக்கு ஏழையாகவும் உணர்வில்மிக்க செல்வம் உடையவராகவும் என் முன் நின்ற இந்த மனிதரின் பெயரைக்கேட்குமுன்னரே காவலர் விசில் அடித்ததால் வாகனத்தை எடுக்க ஓடிவிட்டார்.

நெல்லையிலிருந்தும்ஒரு தாய். ஹோமியோபதி மருத்துவர். ""சோனியாகாந்தியும் ஒரு தாய்தானே. 100பெண்கள் நாங்கள் புதுடில்லி வரை நடந்தே போய் அவரது பாதங்களில் விழுகிறோம்.தண்டித்தது போதும், தாயாகிய நீங்கள் எம் தமிழ் உறவுகளை இனஅழித்தலிலிருந்து காப்பாற்றுங்கள் என மன்றாடுவோம்" என்றார்.

நல்லசிவன்என்ற உணர்வாளர் நெய்வேலி புத்தக விழாவில் நக்கீரன் வெளியிட்ட "வீரம்விளைந்த ஈழம்' படித்துவிட்டுப் பேசினார். நிறைய படிக்கிறவர், தெளிவானபார்வை களும், உறுதியான நிலைப்பாடு களும் உடையவரென்பதும் தெரிந்தது. ""100புத்தகங்கள் வாங்கி அரசுக் கல்லூரிகளின் தமிழ்த் துறைகளுக்கு அனுப்பிவையுங்கள். அச்செலவினை நான் ஏற்றுக் கொள்கிறேன்" என்றார்.

"வீரம்விளைந்த ஈழம்' படித்துவிட்டு சராசரி தினம் பத்து பேராவது கடிதம் எழுதுகின்றனர். எல்லா கடிதங்களிலும் இரண்டு விஷயங்கள் இழையோடி நிற்கின்றன. ஏழுகோடி தமிழர்கள் நாம் கையாலாகாதவர்களாய் இருந்துவிட்டோமே என்ற குற்றஉணர்வும், ஏதேனும் செய்ய வேண்டுமென்ற அங்கலாய்ப்பும்.

சென்னையிலுள்ளஸ்ரீலங்காவின் தூதரக அதிகாரிகளும் கூட மிகுந்த உணர்வுக் கொந்தளிப்பிலும்அங்கலாய்ப்பிலும் இருப்பதாக பத்திரிகைத்துறை நண்பர் ஒருவர் கவலையுடன்கூறினார். ""சற்றேறக்குறைய இங்கு எல்லோரையும் சரிக்கட்டி விட்டோம்,நக்கீரனையும் இந்த ஜெகத் கஸ்பரையும் மட்டும் வழிக்குக் கொண்டுவரமுடியவில்லை"யென்ற கோபமாம். ""குறிவைத்து அடித்தால்தான் சரிப்பட்டுவருவார்கள்" என்று சிலுப்பியதாகவும் சொன்னார்.

அவர்களதுவெற்றிப் பிரகடனம் உண்மைதான். சற்றேறக்குறைய இங்கு முக்கியமான பலரையும்அவர்கள் சரிக் கட்டி விட்டார்கள்தான். கடந்த பொங்கல் விழா காலத்தில் லிமெரிடியன் ஐந்து நட்சத்திர விடுதியில் பத்திரிகை துறை யினருக்காய்ஸ்ரீலங்கா தூதரகம் உல்லாச விருந்து வைத்ததும், 24 பேருக்கு தலா ஐந்துசவரன் தங்கச் சங்கிலி வழங்கியதும், தொடர்ந்து மூன்று நாளிதழ்களுக்கு தலாமுப்பது "லேப்-டாப்' கம்ப்யூட்டர்கள் அன்பளிப்பாக அனுப்பியதும்,தமிழுணர்வின் பாரம்பரியம் கொண்ட ஒரே ஒரு நாளிதழ் மட்டும்அக்கம்ப்யூட்டர்களை ஸ்ரீலங்கா தூதரகத்திற்கே திருப்பி அனுப்பியதும்…இன்னும் யார் யாருக்கு என்னென்ன "சப்ளை அண்ட் சர்வீஸ்' நடந்ததென்பதும்நமக்குத் தெரியும். இவையும் தெரியும். இதற்கு மேலும் தெரியும்.

"மன்னவனும்,நீயோ, வளநாடும் உனதோ?' என்று மதர்த்த கம்பனும், "நெற்றிக்கண் திறப்பினும்குற்றம் குற்றமே' என நிமிர்ந்து நின்ற நக்கீரனும், "தேரா மன்னா செப்புவதுஉடையேன்' என்று உண்மை முழங்கி காற்சிலம்பை வீசிய கண்ணகியும், "நாம்ஆர்க்கும் குடி அல்லோம்' என்று முழங்கிய நாயன்மார்களும் பெருமையுடன்உலவித் திரிந்த இப்புனித பூமியில் இன அழித்தலுக்குத் துணை நின்று கூலிபெறும் கூட்டமொன்று வாழ்வது காண நெஞ்சு பொறுக்குதில்லை தான். அங்குதுடித்துச் சிதறிய தமிழ் உயிர்களின் மரணப் பழியில் இவர்களுக்கும்தூரத்துப் பங்கு உண்டுதான். துரோகி கள், இழிநிலையோர் ஆனாலும் அவர்கள்இந்நிலத்தவர்கள்- நம் தமிழகத்தவர்கள்.

ஆனால்கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்ரீலங்கா தூதரகம் தனது எல்லைகளை நம் நிலத்தில்தங்கு தடையின்றி மீறி வருவது மட்டுமல்ல -"இங்கு எதுவும் செய்யலாம், எவரும்கேட்கமாட்டார்கள்' என்ற ஆணவத் திமிரோடு தங்களை நடத்திக் கொண்டு வருகிறது.

நாடுகளுக்கிடையேயானஉறவு ஒழுங்குகளின்படி அவர்கள் இந்திய அரசின் விருந்தினர்களாக இருக்கலாம்.ஆனால் தமிழர்களாகிய நம்மைப் பொறுத்தவரை இன அழித்தல் செய்த ஒரு கொலைகாரக்கும்பலின் பிரதிநிதிகள். இன்னும் 3 லட்சம் தமிழ் மக்களை திறந்த வெளிச்சிறையில் அடைத்து அணு அணுவாகக் கொன்றுவிடும் இரக்கமற்ற ஓர் கூட்டத்தின்ஊதுகுழல்கள். சாமிகளும், ஞானிகளும், ராமர்களும் அவர்களது பந்தியில்அமர்ந்து களிக்கட்டும். தமிழர் களது அழிவில் எப்போதும் களிப்பவர் கள்தான்அவர்கள். ஆனால் மானமுள்ள தமிழர்கள் நிறையபேர் இங்கு மிச்சம்இருக்கிறார்கள் என்பதை மட்டும் அவர்கள் நினைவில் கொள்ளட்டும்.

தி.மு.க.,அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., பா.ஜ.க., ம.தி.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம்., சிறுத்தைகள், ச.ம.க., புதிய தமிழகம் என எல்லா கட்சிகளினது தொண்டர்களுமே துன்புறும் ஈழத் தமிழனுக்காய் இதயத்தில் இரத்தம் சிந்தும்ஈரத்தமிழர் களாகவே இருக்கிறார்கள். கடந்த புதன் கிழமையன்றுவணக்கத்திற்குரிய மேயர் அவர்களை சந்திக்க மாநகராட்சி அலு வலகம்சென்றிருந்தேன். அமர்வு அரங்கில் கூடிநின்றோர் பலர் தி.மு.க.வின் கட்சிப்பொறுப்புகளில் இருப்பவர்கள். எல்லோரும் நக்கீரன் படிப்பதாகக் கூறினார்கள்.தமது உணர்வுகளை வெளிப்படுத்திய பாங்கு உண்மையிலேயே நெகிழ்ச்சி தந்தது.இப்போதைய போப்பாண்டவருக்கு முன்பிருந்த இரண்டாம் ஜான்பால் ஒரு முறைகுறிப்பிட்டார், ""மனித இதயங்கள் தரையில்லாத பாதாளங்கள் போல. எழுச் சிக்குமுறல்கள் எரிமலையாய் எப்போது வெடிக்குமென எவருக்கும் தெரியாது" என்று.

மதுரையில்கடந்த சனிக்கிழமை நாம் தமிழர் இயக்க கூட்டம் நடந்தது. "முட்கம்பிகளுக்குள்உயிர்வாடும் மூன்று லட்சம் தமிழர்களை விடுதலை செய்' என்று இயக்குநர்சீமான் முழங்கினார். இருபதாயிரத்திற்கும் மேலான இளைஞர்கள் உணர்வுப்பிழம்பாய் திரண்டிருந்தார்கள்.

கரம்பற்றும் நக்கீரன் வாசகர்கள் எல்லோரும் கேட்பது இரண்டு விஷயங்கள். முதலாவதுதலைவரைப் பற்றியது. இரண்டாவது ""ஈழம் இனி சாத்தியமா?" என்ற கேள்வி. நான்சொல்வது -இன்றில்லா விட்டாலும் என்றேனும் ஒருநாள் நிச்சயம் ஈழம் மலரும்.ஆனால் அதற்கு சில விஷயங்கள் நடந்தாக வேண்டும். அதில் முதலாவது இந்தியாவின்வெளியுறவுக் கொள்கையும், பாதுகாப்புக் கொள்கையும் மாறவேண்டும். அதுநடந்துவிட்டதென்றால் உலக அளவில் ஈழத்திற்கு ஆதரவான கருத்துருவாக்கம் வேகம்பெறும். வேலுப்பிள்ளை பிரபாகரன் இதனைத் தெளிவாக அறிந்திருந்தார். எனதுநேர்காண லின் நிறைவாக அவர் குறிப்பிட்டவை என்றும் மறக்க முடியாதவை:""இந்தியா வேகமாக வளர்ந்துவரும் ஒரு பிராந்திய வல்லரசென்ப தும்,இந்தியாவைக் கடந்து இப்பகுதியில் உலக ஒழுங்கு பெரிதாக மாறுபட்டு இயங்காதென்பதும் எமக்குத் தெரியும். இந்திய அமைதிப்படையின் வருகையும் தொடர்ந்தபல துன்பியல் நிகழ்வுகளும் எமது உறவுகளில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திவிட்டதோடு, எமது இறுதி இலக்கான ஈழம் அமைவதற்கும் சவாலாக நிற்கிறது.இந்நிலையை மாற்ற நேர்மையோடும் உளப்பூர்வமாகவும் விடுதலைப்புலிகள் இயக்கம்தொடர்ந்து முயற்சித்து வருகிறது" என்றார்.

ஆம்,இந்தியாவின் நிலைப்பாடு முதலில் மாறவேண்டும். எப்படி மாறும்? இதுவிஷயத்தில் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரு கருத்தில் இணைவதுஅதற்கான முதற்படி. குறைந்தபட்ச கோரிக்கை யாக 3 லட்சம் மக்களும் உடனடியாகவிடுவிக்கப்பட்டு தங்கள் வாழ் விடங்களுக்கு அனுப்பப்பட வேண்டும். நிலஉரிமை -கல்வி உரிமை -பண்பாட்டு, மொழி உரிமை -சட்ட -ஒழுங்கு உரிமைஆகியவற்றை உறுதி செய்யும் கூட்டாட்சி அரசியல் சட்ட ஏற்பாடுஆகியவற்றையேனும் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்துநடுவணரசுக்கு முன்வைக்கவேண்டும். இத்துணை பேரழிவு நடந்துவிட்ட பின்னரும்ஒருவரையொருவர் இழித்தும் பழித்தும் அரசியல் நடத்தாமல் இணைந்து கோரிக்கைவைத்தால் நடுவணரசு கேட்கும், கேட்டுத்தான் ஆகவேண்டும்.

இரண்டுவாரங்களுக்கு முன் ஞானி என்ற நாடகப் பேர்வழி வாரப்பத்திரிகையொன்றில்""இந்தவார மர்மம்" என தலைப்பிட்டு ""விடுதலைப்புலிகளுக்கும்பிரபாகரனுக்கும் தீவிர கொள்கை பிரச்சாரச் செயலாளராக செயல்படும் பாதிரிகெஜத்கஸ்பரும், புலி எதிர்ப்பை கொள்கை யாகக் கொண்ட மத்திய ஆளுங்கட்சியானகாங்கிரஸ் பிரமுகர் கார்த்திசிதம்பரமும் கஸ்பரின் தமிழ் மையத்தின்நிதிவசூல் நெடும் ஓட்டத்தில் இணைந்து செயல்படுவதன் மர்மம் என்ன?" என்றுகேட்டிருந்தார்.

முற்போக்குமுகம் தரித்து மிக நீண்ட காலம் தமிழர்களை மோசடி செய்த இவருக்கு நான் பதில்சொல்லவேண்டிய அவசியமில்லை. ஆனால் கார்த்தி சிதம்பரம் எனக்கு நண்பர் தான்,அவரது தந்தை எனது மதிப்பிற் குரியவர்தான்.

அக்கட்சியின்ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன் போன்றோரும் என் மிகுந்தமதிப்பிற்குரியவர்கள்தான். ஒளிந்து மறைப்பதும் நுட்பமாக இயங்குவதும்மோசடிக்காரர்களின் வேலை. நாம் அதைச் செய்யவேண்டிய தில்லை. நமக்கு இன்றுதேவை எல்லோரது நட்பும், ஞானியைப்போன்ற சூத்திரதாரிகளின் கூடாநட்பைதவிர்த்து அத்தனைக் கட்சித் தலைவர்களும் ஈழத்தமிழருக்காய் இணையும் நாள்விரைவாக வர உழைப்பது நம் யாவரதும் கடமை.

ஈழம் மலர வேறென்ன விஷயங்கள் நடக்க வேண்டும்?

(நினைவுகள் சுழலும்)

http://www.tamilspy.com/?p=1071

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP