PKaran_PAmmanசமீபத்தில் புலிகளின் அதி சக்திவாந்த வோக்கி டோக்கியை ஒட்டுக்கேட்ட இராணுவத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் டங்கோ டங்கோ "குருவி" காயப்படவில்லை அகற்றும் நடவடிக்கைக்கு தயார் என்ற வாசகங்கள் இராணுவத்தினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இந்தப் புனைபெயர் பொட்டம்மான் அல்லது சொர்னத்தைக் குறிக்கும் என்பதை இராணுவத்தினர் அறிந்துள்ளனர்.

காடுகளில் இன்னும் சில படையணிகளோடு புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இருப்பது தற்போது இலங்கை இராணுவத்திற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. இதேவேளை இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டிருந்த கொழும்பு பிரபா என்றழைக்கப்படும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினரிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவல்களுக்கமைய, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொழும்பு, வெள்ளவத்தை 33வது ஒழுங்கையில் உள்ள கட்டிடமொன்றின், 6வது மாடியை சோதனையிட இராணுவத்தினர் சென்றுள்ளனர். எனினும், அதற்கு முன்னரே, அங்கிருந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த இடத்தில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்கள் சிலர் ஒளிந்திருப்பதாக கைதுசெய்யப்பட்ட நபரினால் தகவலளிக்கப்பட்டு சில மணி நேரத்திற்குள், அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனை நோக்கும் போது, விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு தொடர்ந்தும் கொழும்பு நகரில் பலம் மிக்கதாக செயற்பட்டுவருவது உறுதியாவதாக இராணுவத் தகவல்கள் ஒன்று மேலும் தெரிவிக்கிறது.

எது எப்படி இருப்பினும் தாம் ஒட்டுக்கேட்ட செய்தியைவைத்து இராணுவம் தற்சமயம் தலையைப் பித்துகொண்டுள்ளதாக பெயர் குறிப்பிடவிரும்பாத இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.