சமீபத்திய பதிவுகள்

இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு வழங்கப்பட்டது

>> Wednesday, October 7, 2009

இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு வழங்கப்பட்டது


ஸ்டாக்ஹோம், அக்.7-

இயற்பியல் துறைக்கான நோபல் பரிசுக்கு 3 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் பெயர் சார்லஸ் கவோ. இவர் சீனாவில் உள்ள ஷாங்காயில் பிறந்த பிரிட்டிஷ் அமெரிக்கர் ஆவார். ஒளியை பைபர் ஆப்டிக் கேபிள் மூலம் தொலை தூர இடங்களுக்கு கொண்டு செல்லும் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்தவர் சார்லஸ் கவோ.

டிஜிட்டல் சென்சரை பயன்படுத்தி முதன்முதலாக இமேஜிங் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் வில்லார்டு போயல், ஜார்ஜ் ஸ்மித் ஆகியோரும் இந்த விருதுக்காக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களில் வில்லார்டு கனடிய அமெரிக்கர் ஆவார். ஸ்மித் அமெரிக்கர் ஆவார்.

கவோவின் கண்டுபிடிப்பு தகவல் தொடர்பு துறையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. இணையதளம் போன்ற உலகளாவிய பிராட்பேண்டு தகவல் தொடர்பு சாதனங்கள் உருவாக வழி அமைத்து கொடுத்தது. இவர்கள் 3 பேருக்கும் 7 கோடி ரூபாய் நோபல் பரிசாக கிடைக்கும்.

source:daily thanthi 7/10/09

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இ-மெயில் மோசடி:அதிரடி ஜாங்கிட்... அமுக்கப்பட்ட ஓலபாஜி!





-மெயில் மூலமாக ஏகபோக ஆசை காட்டி, அப்பாவிகளை ஏமாற்றும் மோசடி கும்பல்களைப் பற்றி கடந்த 17.09.09 தேதியிட்ட ஜூ.வி-யில் 'நைஜீரியா மாப்பு... ஜாங்கிட் வைத்த ஆப்பு!' என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதில், நைஜீரிய டுபாக்கூர் பார்ட்டியான ஓசாமா தியோன் என்பவனின் தில்லாலங்கடி வேலை குறித்தும், சென்னை புறநகர் கமிஷனரான ஜாங்கிட் அவனை வளைத்துப் பிடித்த நடவடிக்கை குறித்தும் விரிவாகச் சொல்லி இருந்தோம். இந்நிலையில், 'எங்களுக்கும் ஆன்-லைன் லாட்டரியில் பரிசு விழுந்திருப்பதாகச் சொல்லி மெயில்கள் வந்திருக்கின்றன. அதை நம்பி பணத்தைக் கட்டுவோமா, வேணாமான்னு நாங்க யோசிச்சுகிட்டு இருந்த நேரத்திலதான் ஜூ.வி-யில் நைஜீரியா டுபாக்கூர் ஆசாமியைப் பற்றிய கட்டுரை வெளியிட்டிருந்தீங்க. இல்லை என்றால் நாங்களும் அந்த டுபாக்கூர் மெயில் களை நம்பி ஏமாந்திருப்போம்' என நம்மைத் தொடர்புகொண்டு பலரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.

இதற்கிடையில், நம் ஜூ.வி செய்தியைப் படித்துவிட்டு கமிஷனர் ஜாங்கிட்டிடம் அலறி அடித்துக்கொண்டு ஓடிய மாங்காடு பகுதியைச் சேர்ந்த சாத்தையா என்ற இன்ஜினீயர், ''உலக 'நோக்கியா' லாட்டரியில் எனக்கு பரிசு விழுந்திருக்கிறதா சொல்லி என்னோட செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது சார். அதை நம்பி சம்பந்தப்பட்ட இ-மெயில் முகவரியை கான்டக்ட் பண்ணினேன். எனக்கு அஞ்சு கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கிறதா தகவல் சொல்லப்பட்டது. தலைகால் புரியாத சந்தோஷத்தில அவங்க கேட்டிருந்த ஐம்பதாயிரம் பணத்தை கட்டினேன். அதுக்கப்புறம் பரிசுப் பணத்தைக் கொண்டுவர்றதுக்காக, சுங்க வரி, அந்நிய செலாவணி கட்டணும்னு சொல்லி பணம் கேட்டாங்க. ஒன்பது தவணையில 13 லட்ச ரூபாயை அவங்ககிட்ட இழந்திட்டேன். இப்போ ஜூ.வி படிச்சதுக்கு அப்புறம்தான் ஏமாந்து போயிட்டேங்கிறதே தெரியுது. எப்படியாச்சும் என்னோட பணத்தை மீட்டுக் கொடுத்திடுங்க சார்...'' எனக் கதறி இருக்கிறார்.

உடனே ஆக்ஷனில் குதித்த கமிஷனர் ஜாங்கிட், மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ஜெயக்குமார் தலைமையில் தனிப்படை அமைத்தார். ஏமாற்றப்பட்ட சாத்தையாவைப் போலவே நடித்த போலீஸார் பணம் கொடுப்பதாக ஆசை காட்ட, அடுத்தகணமே சேலையூர் அருகே அவன் தங்கி இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதிரடியாய் அங்கே சென்ற போலீஸ் படை அங்கிருந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஓலபாஜி என்பவனை வளைத்துப் பிடித்திருக்கிறது. அவனிடம் நடத்திய விசாரணையில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இந்த கும்பல்கள் கைவரிசையைக் காட்டியிருப்பது தெரிய வந்திருக்கிறது.

இதுகுறித்து ஜாங்கிட்டிடம் பேசினோம். ''லாட்டரி வாங்கா மலே பரிசு விழுவதாக அறிவிப்பு வந்தால் பொதுமக்கள் கொஞ்சமாவது யோசிக்கவேண்டும். கோடிக்கணக்கில் பரிசு விழுந்திருப்பதாகச் சொன்னவுடன், படித்தவர்களே இந்தக் கும்பல்களிடம் ஏமாந்து விடுகிறார்கள். இத்தகைய லாட்டரி மோசடிகளுக்கு ஆளாகி ஒன்றிரண்டு பேர் தற்கொலை செய்து விட்டார்கள். இனி லாட்டரியில் பரிசு விழுந்திருப்பதாக எஸ்.எம்.எஸ்., இ-மெயில், போன் என எது வந்தாலும், அதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக போலீஸில் புகார் செய்யவேண்டும். தங்களுக்குள் ஏரியாக்களைப் பிரித்துக்கொண்டு மோசடிகளை அரங்கேற்றும் இத்தகைய கும்பல்களை, மக்களின் ஒத்துழைப்பு கிடைத்தால் ஒருசில நாட்களிலேயே ஒழித்துக் கட்டிவிடலாம்.'' என அக்கறையோடு சொன்னார் ஜாங்கிட்.

- இரா.சரவணன்   
 
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

மருத்துவம்: 3 அமெரிக்கர்களுக்கு நோபல்

 

  
ஸ்டாக்ஹோம் (ஸ்வீடன்), அக். 6: அமெரிக்காவைச் சேர்ந்த எலிசபெத் பிளாக்பர்ன், கரோல் கிரெய்டர், ஜேக் சோஸ்டாக் ஆகியோருக்கு 2009-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

வயோதிகம் தொடர்பான முக்கியக் கண்டுபிடிப்புக்காக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இவர்களது கண்டுபிடிப்பு புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிக்கு பெரிதும் உதவும்.

வயோதிகத்துக்கு காரணமான செல் மற்றும் செல் பிரிதலின் போது குரோமோசோம்கள் எவ்வாறு பிரதி எடுக்கின்றன என்பதை இவர்கள் கண்டறிந்துள்ளனர்.

  நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக ஸ்வீடன் வானொலிக்கு அளித்த பேட்டியில் ஆய்வாளர்கள் மூவரும் தெரிவித்துள்ளனர்.

வரும் டிசம்பர் 10-ம் தேதி ஸ்டாக்ஹோம் மற்றும் ஆஸ்லோவில் நடைபெறும் விழாவில் இவர்களுக்கு நோபல் பரிசு  வழங்கப்படவுள்ளது. நோபல் பரிசில் தங்கப் பதக்கம், பட்டயம் மற்றும் சுமார்  ரூ. 7 கோடி ரொக்கம்  ஆகியவை அடங்கும். பரிசு தொகை மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.

 

எலிசபெத் பிளாக்பர்ன்

ஆஸ்திரேலியாவில் 1948-ல் பிறந்தவர். தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1975-ல் டாக்டர் பட்டம் பெற்றவர்.

ஜேக் சோஸ்டாக்

லண்டனில் 1952-ல் பிறந்தார். அமெரிக்கக் குடியுரிமை பெற்றுள்ள இவர் நியூயார்க்கின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் 1977-ல் டாக்டர் பட்டம் பெற்றார். 1979 முதல் ஹார்வர்டு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.

கரோல் கிரெய்டர்

அமெரிக்கரான கரோல் கிரெய்டர் 1961-ல் பிறந்தார். 1987-ல் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.

 

டைனமைட்டை கண்டுபிடித்த ஆல்பிரட் நோபலின்

நினைவாக 1901-ம் ஆண்டில் இருந்து பல்வேறு

துறைகளில் சாதனை புரிபவர்களுக்கு நோபல் பரிசு

வழங்கப்பட்டு வருகிறது.

source:dinamani

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

சவுதிஅரேபியாவில் மதகுரு நீக்கம்: இருபாலரும் சேர்ந்து படிக்கும் திட்டத்தை எதிர்த்ததால்

 இருபாலரும் சேர்ந்து படிக்கும் திட்டத்தை எதிர்த்ததால்


ரியாத், அக்.7-

சவுதி அரேபியாவில் புதிய பல்கலைக்கழகம் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தை சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா தொடங்கி இருக்கிறார். சவுதி அரேபியாவில் இதுவரை இல்லாதவகையில் முதல் முறையாக ஆணும் பெண்ணும் சேர்ந்து படிக்க இந்த பல்கலைக்கழகத்தில் வகை செய்யப்பட்டு உள்ளது.

ரூ.35 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட்டு உள்ள இந்த பல்கலைக்கழகத்தில் இருபாலரும் சேர்ந்து படிப்பதை குறை கூறி அந்த நாட்டின் மதகுரு ஷேக் சாத் அல் ஷேத்ரி பேசினார். அவர் டி.வி.சேனலுக்கு அளித்த பேட்டியில், இருபாலர் கல்வி மிகப்பெரிய பாவம் என்றும், தீமை பயக்கும் என்றும் அவர் கூறினார். இதை தொடர்ந்து முஸ்லிம் உலமாக்கள் கவுன்சிலில் இருந்து அவர் நீக்கப்பட்டார். மன்னர் அப்துல்லா இந்த நடவடிக்கையை எடுத்தார்.

source:dailythanthi 7/10/09

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

அமெரிக்கத் தமிழருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

 

 

ஸ்டாக்ஹோம் (ஸ்வீடன்), அக். 7: அமெரிக்கத் தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், அமெரிக்காவின் தாமஸ் ஸ்டெய்ட்ஸ், இஸ்ரேல் நாட்டின் அடா யோனத் ஆகிய மூவருக்கும் 2009 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மரபணுக் குறியீடுகளில் ரிபோசோம்களின் பங்கு குறித்த இவர்களின் ஆராய்ச்சிக்காக இந்த பரிசு கிடைத்துள்ளது.

வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் 1952 ஆம் ஆண்டு தமிழகத்திலுள்ள சிதம்பரத்தில் பிறந்தவர். இவர் அமெரிக்காவின் ஓகியோ பல்கலைக்கழகத்தில் 1976 ஆம் ஆண்டு இயற்பியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். கேம்பிரிட்ஜில் உள்ள எம்ஆர்சி ஆய்வகத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார்

source:dinamani 

StumbleUpon.com Read more...

இலங்கை கடற்படை சிப்பாய்களுக்கு இந்திய வீரர்கள் பயிற்சி: கொச்சியில் இருந்து 3 கப்பல்களில் கொழும்பு சென்றனர்


 
கொழும்பு,அக்.7-

இலங்கை கடற்படை சிப்பாய்களுக்கு 5 நாட்கள் பயிற்சி அளிப்பதற்காக இந்திய கடற்படை வீரர்கள் 3 கப்பல்களில் கொழும்பு சென்றுள்ளனர்.

5 நாட்கள் பயிற்சி

விடுதலைப்புலிகளுடனான போரில் இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு பல்வேறு உதவிகளை அளித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இலங்கை கடற்படைக்கு அதிநவீன கண்காணிப்பு கப்பலை கொடுத்தது.

இலங்கையில் போர் முடிவடைந்த பிறகு முதல்முறையாக, இலங்கை கடற்படை வீரர்களுக்கு இந்திய கடற்படை பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது. இப்பயிற்சி, கொழும்பு நகரில் நேற்றுமுன்தினம் (திங்கட்கிழமை) தொடங்கியது. 10-ந் தேதிவரை நடைபெறுகிறது.

3 கப்பல்களில் பயணம்

இந்தப் பயிற்சியை அளிப்பதற்காக, கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 140 கடற்படை மற்றும் கடலோர காவல்படை வீரர்கள் கொழும்பு சென்றுள்ளனர். அவர்கள் ஐ.என்.எஸ். ஷர்துல், ஐ.என்.எஸ். கிருஷ்ணா ஆகிய 2 கடற்படை போர்க் கப்பல்களிலும், வருணா என்ற கடலோர காவல்படை கப்பலிலும் கொழும்பு சென்றுள்ளனர். இக்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

2 கடற்படை கப்பல்களும் இங்கிலாந்து கடற்படையில் பணியாற்றியவை. அவை தற்போது இந்திய கடற்படை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த கப்பல்களில் ஹெலிகாப்டரையும் ஏற்றிச் செல்ல முடியும்.

கால்பந்து போட்டி

இந்தப் பயிற்சி குறித்து இலங்கை கடற்படை செய்தித்தொடர்பாளர் டி.கே.பி.தசநாயகே கூறியதாவது:-

விடுதலைப்புலிகளுடன் போர் நடைபெற்று வந்ததால், இதற்கு முன்பு இத்தகைய பயிற்சி நடைபெறவில்லை. பயிற்சியில், இலங்கை கடற்படையைச் சேர்ந்த சயுரா, சமுத்ரா ஆகிய கப்பல்களும் கலந்து கொள்கின்றன. இக்கப்பல்கள், 2000-ம் ஆண்டு விலைக்கு வாங்கப்பட்டவை. பயிற்சி அளிப்பதுடன், இலங்கையில் பல்வேறு இடங்களை இந்திய கடற்படையினர் சுற்றிப் பார்க்கிறார்கள். திரிகோணமலையில் உள்ள ராணுவ மற்றும் கடற்படை அகாடமிக்கும் அவர்கள் செல்கிறார்கள்.

மேலும், இரு நாட்டு கடற்படை வீரர்களுக்கும் இடையே கால்பந்து போட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
source:dailythanthi 7/10/2009
 

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

தாய்லாந்து பெண்னைக் கற்பழித்துள்ள இலங்கை இராணுவத்தினர்


கேகாலை மாவட்டம் வரகாபொல பகுதியில் உள்ள சர்வதேச ஆடை தயாரிப்பு நிலையத்தில் வேலைபார்க்கும் தாய்லாந்து பெண்ணை இலங்கை இராணுவத்தினர் கற்பழித்துள்ளதாக அவர் துல்கிரிய போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த வியாழக்கிழமை இச் சம்பவம் இடம்பெற்றதாக அறியப்படுகிறது. இந்தக் குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்ட இராணுவத்தினர் அனுராதபுரம் முகாமில் இருப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் மீது இன்னமும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

போர் முடிவிற்கு வந்த பின்னர் இராணுவத்தினர் பலவகையான குற்றச்செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்தவாரம் குருநாகலில் பாடசாலைப் பிள்ளைகள் செல்லும் வாகனத்தில், முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் குண்டைப் பொருத்தியிருந்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் சுமார் 25,000 தப்பியோடிய படையினருக்கும் அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்கியுள்ளதால், அவர்கள் தற்போது சுதந்திரமாக நடமாடுவதாகவும், குற்றச்செயல்கள் அதிகரிக்க அவர்களே காரணம் எனவும் அதிர்வின் நிருபர் தெரிவித்தார்.

இலங்கையில் பெண்கள் மீது பாலியல் பிரயோகங்கள் போரின்போது நடத்தப்பட்டது என்று கூறியிருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் அவர்கள், இலங்கையின் கடும் அழுத்தம் காரணமாக தனது கூற்றை சற்று மாற்றி தெரிவித்துள்ளவேளை, அவர் கூறியதை மெய்ப்பிக்கும் வகையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


source:athirvu
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP