சமீபத்திய பதிவுகள்

மாவீரர் நாள் 2009

>> Wednesday, October 14, 2009

StumbleUpon.com Read more...

Muhammad and Aisha:ஒரு பெண் முதல் முறை பூப்பெய்தியவுடன் அவளுடன் பாலுறவு கொள்ளலாம்: அல்லாவின் அனுமதி

Muhammad and Aisha
A Muslim caller argues that when a girl gets her first period, God has given a sign that it's okay to have sex with her. Sam and I respond




source:answeringmuslims

StumbleUpon.com Read more...

பூமியில் இன்னும் மீட்பர்கள் இருக்கிறார்கள்!

பூமியில் இன்னும் மீட்பர்கள் இருக்கிறார்கள்!


எழுதினால் உருப்படியாக எழுதவேண்டும் என்ற எனது தீர்மானத்தில் கடந்த சில நாட்களாக எதுவும் எழுதாமல் வலைப்ப் பூக்ககளை மேய்ந்து கொண்டிருந்தேன். வாசிப்பது ஒரு சுகம். நல்ல பதிவுகளை தேடி தேடி ..........


வாசித்தேன். பல பதிவுகள் என்னை பாதித்தன, பக்குவப்படுத்தின, சமயத்தில் மிகவும் படுத்தவும் செய்தன. அவற்றைப் பற்றியல்ல இந்தக் கட்டுரை. நான் வாசித்தவற்றில் பல எனது இருதயத்தைக் கரைந்து போகச் செய்திருந்தாலும் சமீபத்தில் ஆனந்தவிகடனில் வாசித்த ஒரு கட்டுரை கண்களைப் பனித்தது. அதையே ஒரு மறுபதிப்பாக தருகிறேன்.


''என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் உன் னைத் தொடரும்.'' கண்களை மூடி பைபிளின் வார்த்தைகளை அத்தனை அழுத்தமாக உச்சரிக்கிறான் ஜெரோனியா ஜஸ்டின்... கடவுளின் குழந்தை!

ஜஸ்டினுக்குத் தலையும் முகமும் கலைந்து விநோதமாக இருக் கிறது. காதுகள் இருக்க வேண்டிய இடத்தில் இரண்டு சதைத் துண்டுகள். தெளிவான பேச்சு இல்லை. காது மடலும் துளைகளும் இல்லை. முகத்தில் தாடை எலும்பு இல்லை. கண்களின் கீழ் எலும்பு கள் இல்லை. இப்படிப் பல இல்லைகள். 16 வருடங்களாக வாழ்க் கையுடன் போராட்டம் நடத்தும் ஜெரோனியா... ஒரு தன்னம்பிக்கை வரலாறு. ஜெரோனியாவின் அப்பா இம்மானுவேல், அம்மா டல்சி பிரீடாவின் முகங்களில் 16 வருடங்களாகப் பையனை மருத்துவ மனைக்குத் தூக்கிச் சுமந்த களைப்பு அப்பிக்கிடக்கிறது.

எங்க சொந்த ஊர் தூத்துக்குடி. இவன் பிறந்த உடனே 'தலைப்பகுதி உறுப்புகளில் முழுமையான வளர்ச்சி இல்லை. மூளை வளர்ச்சியும் கொஞ்சம் குறைவா இருக்கு... பிழைக்கிறது ரொம்பக் கஷ்டம்'னு டாக்டர்கள் சொல்லிட்டாங்க. போகாத சர்ச்சோ, ஹாஸ்பிட்டலோ இல்லை. சென்னை டாக்டர் ஒருத்தர்தான் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்து, காதைச் சரிபண்ணுற முதல் ஆபரேஷனை செஞ்சார். அப்போ இவனுக்கு நாலரை வயசு. இவனுடைய நெஞ்சு விலாவில் இருந்து எலும்பு எடுத்து, காது மடல் போல ஒட்டிவிட்டாங்க. அப்போ தொண்டைக் குழியில் ஓட்டை போட்டு டியூப் செருகி சுவாசிக்கணும். ஒரு தும்மல், இருமல் வந்தாலும் அந்த டியூப் வெளியில் வந்துரும். மூச்சுக்காத்து கிடைக்காம இவனுக்கு நெஞ்சு தூக்கித் தூக்கிப் போடும். ஒரு விநாடிகூட கண் அசராம ஆள் மாத்தி ஆள் இவனைக் கண்காணிச்சுக்கிட்டே இருக்கணும். ரெண்டு வருஷம் கழிச்சுத் திரும்பவும் காது மடலில் ஆபரேஷன். காதில் துளைகள் இல்லைன்னாலும் கடவுள் புண்ணியத்தில் கொஞ்சம் சத்தமாகப் பேசினா, ஜெரோனியாவுக்குக் கேட்கும்.

ஏழு வயசு வரைக்கும் வெறும் பாலும் முட்டையும்தான் சாப் பாடு. மேல் தாடையும் கீழ்த் தாடையும் ஒண்ணு சேராம தனியா இருந்தது. ஒரு வருஷம் விட்டு விட்டு ஆபரேஷன் பண்ணினாங்க. மேல் தாடை விரிவடைய, கடைவாய்ப் பற்களை இணைச்சு ஒரு ஸ்க்ரூவால் ஆன கம்பியை மாட்டினாங்க. வாரம் ஒரு தடவை அந்த ஸ்க்ரூவை ஒரு மி.மீ. வீதம் அகலமாக்கணும். ரெண்டு வருஷப் போராட்டத்தில் மேல் தாடை ஓரளவுக்கு அகலமாச்சு. பேச்சுதான் பழைய மாதிரி இல்லாம குழறுது. 'ரெண்டு வருஷமா வாய்க்குள்ள கம்பி இருந்ததால பேச்சு கொஞ்சம் குழறுது. காலப் போக்கில் சரியாகிரும்'னு டாக்டர்கள் சொல்லியிருக் காங்க. நாளைக்குக் கீழ்த்தாடை ஆபரேஷன். அதே மாதிரி ஸ்க்ரூ கம்பி மாட்டணும்.'' மருத்துவமனை அறைகளே வாழ்க்கையாக மாறிப்போனதை விவரிக் கிறார் ஜஸ்டினின் அம்மா டல்சி பிரீடா.

ஜஸ்டின் இப்போது தூத்துக்குடி பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படிக்கிறான். ஃபெயிலாகாத அளவுக்குப் படிக்கும் ஜஸ்டின், taekowondo என்ற கராத்தே போன்ற தற்காப்புக் கலையில் பல கட்டங்களைக் கற்றிருக்கிறான். ''நாங்க சம்பாதிக்கிறது எல்லாமே ஆஸ்பத்திரிக்குதான் செலவாகுது. ஒவ்வொரு ஆபரேஷனுக்கும் லட்சக்கணக்கில் செலவு. இந்த 16 வருஷத்தில் கிட்டத்தட்ட 10 லட்ச ரூபாய்க்கு மேல் கடன். இதுக்கு மேல ஆகப்போற செலவுகளுக்கு என்ன பண்றதுன்னு தெரியலை. 18 வயசு வரைக்கும் தான் எலும்புகள் வளரும்கிறதால எல்லா ஆபரேஷ னையும் இன்னும் ரெண்டு வருஷத்துக்குள் பண்ணி ரணும். இவனோட கண்ணுக்குக் கீழே எலும்புகளை டோனர்கிட்டே இருந்து வாங்கிப் பொருத்தணும். எங்களை இவ்வளவு தூரம் கொண்டுவந்து சேர்த்த கர்த்தர் மீதி இருக்குற தூரத்துக்கும் வழி காட்டாமலா போயிருவார்?'' மிச்சம் இருக்கும் நம்பிக்கையோடு பேசுகிறார் இம்மானுவேல். சலனமற்ற முகத்தோடு இருவரையும் பார்த்துப் புன்னகைக்கிறான் ஜஸ்டின்.

இந்தப் பூமியில் இன்னும் மீட்பர்கள் இருக்கிறார்கள்!

source:askubisku.blogspot


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

கண்ணீர் கேள்வியால் தடுமாறிய தமிழக எம்.பி.-க்கள்:'இன்னும் எத்தனை பேரை கொல்லப் போறீங்க?'

 

''இது அரசு சார்பாகச் செல்லும் குழுவல்ல... தி.மு.க. கூட்டணியின் சார்பாக சென் றிருக்கும் குழு. அக்கறையிருந்தால் எதிர்க்கட்சி எம்.பி-க்களும் செல்லலாம்!'' என்ற விளக்கங்களுக்கு இடையே ஐந்து நாள் பயணமாக இலங்கையில் இருக்கிறார்கள் நம்மூர் எம்.பி-க்கள்! 'வருவது யார் சார் பாக இருந்தாலும் சரி... வேதனைகளைக் கொட்டித் தீர்ப்போம்' என்று முகாம்களில் முடக்கப்பட்டிருக்கும் மூன்று லட்சம் தமிழர்கள் இவர்களுக்காகவேஆவலோடு காத்திருந்தார்கள். இலங்கையின் தமிழ் எம்.பி-க்களும் சிங்கள அரசின் திட்டமிட்ட இனவெறித் தாண்டவங் களைப் பட்டியலிடக் காத்திருந்தார்கள்.

திங்கள் கிழமையன்று மாலை இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சந்திக்க இந்த எம்.பி-க்கள் குழு நேரமும் குறித்துவிட்ட நிலையில்... கோபாவேசத்தில் பொங்கத் தொடங்கிவிட்டார்கள் ஈழத் தமிழர்கள்.

 கொழும்பில் இருக்கும் தமிழ் உணர்வாளர்கள், ''முகாம்களில் வதைபடும் தமிழ்மக்களின் வேதனைகளை அறியத்தான் தமிழக எம்.பி-க்கள் இங்கே வருகிறார்கள் என நினைத்தோம். ஈழ விவகாரத்தில் அக்கறை கொண்ட கனிமொழியும், திருமாவளவனும் அந்தக் குழுவில் இருந்ததால், மத்திய அரசின் பார்வைக்கு மக்கள் வேதனைகள் கொண்டு போகப்படும் என நம்பினோம். ஆனால், மேளதாள வரவேற்பு, மாலை மரியாதைகள் என திருமண விழாவுக்கு வருப வர்களைப் போல தமிழக எம்.பி-க்களுக்கு ராஜ மரியாதை கொடுத்து அழைத்தது சிங்கள அரசு. 'எங்கள் மக்கள் துக்கத்தில் தவிக்கும் நிலையில் ஏன் இத்தனை ஆடம்பர வரவேற்பு?' எனக் கேட்டு தமிழக எம்.பி-க்கள் அதனைத் தவிர்த்திருக்கலாம். அவர்களோ புன்முறுவல் பூத்தபடி... சிங்கள அதிகாரிகளின் விரல் பிடித்து நடந் தார்கள்!

இலங்கையின் தமிழ் எம்.பி-க்களை ஒன்றரை மணி நேரம் சந்தித்துப் பேசிய தமிழக குழு, முகாம்களில் தமிழ் மக்களுக்கு எதிராக நடக்கும் அனைத்து விதமான கொடுமை களையும் குறித்துக் கொண்டது. முகாம்களில் இருக்கும் இளைஞர்கள் சித்ரவதை செய்யப் பட்டும், இளம்பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டும் கொல்லப்படுகிற விஷயங்களைக் கேட்ட தமிழக எம்.பி-க்கள் ஒரு கட்டத்தில் கண்கலங்கினார்கள். ஆனால், 'அப்படியெல்லாம் நடக்கிறதா?' என பெயரளவுக்குக்கூட முகாம் மக்களிடம் ஆறுதலாக அவர்கள் விசாரிக்கவில்லை. சித்ரவதை நிகழ்த்தப்படும் முகாம்களை நேரடி ஆய்வு செய்வதற்கு பதிலாக, சிங்கள அரசு சுட்டிக் காட்டிய முகாம்களுக்கே அந்த குழு சென்றது. அங்கிருந்த மக்களிடம்கூட பெரிதாக ஏதும் விசாரிக்கவில்லை.

வவுனியாவில் உள்ள எட்டு முகாம்களுக்குச் சென்ற எம்.பி-க்கள் குழு, 'சிங்கள அரசு எங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை. பூரண சுதந்திரத்தோடு நாங்கள் சுற்றிப் பார்த்தோம்' என மீடியாக்களிடம் முழங்கியது. தண்ணீரைக்கூட அளந்து கொடுக்கும் சிங்கள அரசின் சித்ரவதைகள் பற்றி எலும்பும் தோலுமாகச் சிதைந்து கிடக்கும் எங்கள் மக்களைக் கண்ணால் காணும்போதே தெரியும். அப்படியிருந்தும் சிங்கள அரசால் பயிற்று விக்கப்பட்ட சிலர் ஒப்பித்த விஷயங்களை மட்டுமே கேட்டு, தமிழக எம்.பி-க்கள் ஏமாறலாமா?

இதோடு கிழக்கு மாகாணத்தின் முதல்வரான பிள்ளையான், இலங்கை மந்திரியான டக்ளஸ் தேவானந்தா போன்றோரையும் சந்திக்க வைத்த சிங்கள அரசு, தமிழக எம்.பி-க்களிடத்தில்தவறான தகவல்களை அவர்கள் மூலம் பரப்பியுள்ளது.இதையெல்லாம் பார்க்கும்போது தமிழகக் குழுவால் எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்பது எங்களுக்கு விளங்கிவிட்டது!'' என்று வேதனையைக் கொட்டித் தீர்த்தனர் இந்ததமிழ்உணர்வாளர்கள்.

இதற்கிடையில் யாழ் பல்கலைக்கழகத்துக்குச் சென்ற தமிழக எம்.பி-க்கள் குழுவை, அங்கிருந்த மாணவர்கள் சூழ்ந்து கொண்டு ஆவேசப்பட்டிருக்கிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ் பத்திரிகையாளர்கள் சிலர், ''ஆறுமுகம் தொண்டமானுடன் யாழ்ப்பாணம் கோட்டையில் ஹெலி காப்டரில் வந்திறங்கியது எம்.பி-க்கள் குழு. தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவித்த அவர்கள், யாழ் பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்துப் பேசினார்கள். 'போர் நடந்த நேரத்திலெல்லாம் வேடிக்கை பார்த்து விட்டு இப்போது ஏன் வந்தீர்கள்?' என ஒரு மாணவன் கண்ணீரோடு கேள்வி எழுப்ப, அடுத்த கணமே மற்ற மாணவர்களும் ஆவேசப்பட ஆரம்பித்து விட்டார்கள். 'இந்தியாதான் போரை நடத்தியது. அதனைத் தமிழகம் தட்டிக் கேட்கவில்லை' என கோஷங்கள் கிளம்ப... சில மாணவர்கள் தி.மு.க-வின் இரண்டு முக்கிய எம்.பி-க்களை முற்றுகையிட்டு, 'ராஜீவ் காந்தி கொலையை மனதில் வைத்து இன்னும் எத்தனை ஆயிரம் தமிழ் உயிர்கள் பறிபோகக் காரணமாக இருக்கப் போகிறீர்கள்?' என கோபத்துடன் கேள்வி எழுப்பினார்கள். கனிமொழி, 'உங்களின் உணர்வுகளை அவசியம் மத்திய அரசுக்குத் தெரியப் படுத்துகிறேன்' என்றார்.

இதற்கிடையில், 'உங்களிடம் எதையும் வெளிப்படையாகச் சொல்ல முடியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம். எங்கள் மக்களின் நிலையை இந்தக் கடிதத்தில் சொல்லி இருக்கிறோம். இதை இந்திய பிரதமரிடம் எப்படியாவது சேர்த்து விடுங்கள்' எனச் சொல்லி அகதி முகாம்களின் நிலையை அவசரகதியில் எழுதி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள், தமிழக குழுவிடம் கடிதம் ஒன்றைக் கொடுத் தார்கள். அதில், 'முகாம்களில் தவிக்கும் ஈழத்தமிழ் மக்களை தயவுசெய்து நேரில் போய்ப் பாருங்கள். அவர்களின் நிஜமான வலியை உணருங்கள். அலைந்து திரியும் எம்மக்களுக்கு வாழ்வுரிமை பெற்றுக் கொடுங்கள்' என உருக்கமாக வேண்டி இருந்தார்கள். இதற்கெல்லாம் தமிழக எம்.பி-க்கள் எந்தள வுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போகிறார்கள் என்று அவர்கள் இந்தியா திரும்பியதும் பார்க்கத்தானே போகிறோம்!'' என்றார்கள் பத்திரிகையாளர்கள்.

 

 

தமிழக எம்.பி-க்கள் குழுவின் நடவடிக்கைகள் குறித்து இலங்கை தமிழ் எம்.பி-க்கள் சிலரிடம் பேசினோம். ''தமிழக குழுவுக்கு போகிற இடமெங்கும் எதிர்ப்பு நிலவியது. ஈழப் போருக்கு பிரதான காரண மாக காங்கிரஸையும் தி.மு.க-வையும்தான் எங்கள் மக்கள் நினைக்கிறார்கள். அவர்களின் கோபம் இன்னும் ஆறவில்லை. வவுனியா முகாமுக்கு தமிழக எம்.பி-க்கள் சென்றபோது, அங்கிருந்த மக்கள் பலரும் பேசவே தயங்கினார்கள். ஒரு சிலர் மட்டும், 'சீக்கிரமே மழை சீஸன் வரப் போகிறது. அதற்குள் எங்களை இங்கிருந்து சொந்த இடத்துக்கு அனுப்பி வையுங்கள். இல்லையேல் மழையே எங்களின் உயிரைக் குடித்துவிடும்!' எனக் கெஞ்சினார்கள். முகாமில் இருந்த குழந்தைகளின் நிலையைக் கண்டு எம்.பி-க்கள் கண் கலங்கிப் போனார்கள். ஒரு எம்.பி. அடக்க முடியாமல் கதறி அழுதார். உலக நாடுகளின் உதவிகளை இழந்து தவிக்கும் இலங்கை அரசோ, தமிழக எம்.பி-க்கள் கொடுக்கும் அறிக்கை மூலமாகத் தங்களின் கறையைத் துடைத்து வீசிவிட முடியும் என நம்புகிறது. பொறுத்திருந்து பார்ப்போம், என்ன நடக்குமென்று!'' என்றார்கள். 10 பேர் குழுவில் இடம்பெற்ற ஒரு எம்.பி-யிடம் பேசினோம். ''எக்காரணம் கொண்டும், தனிப்பட்ட முறையில் மீடியாக்களிடம் பேசக் கூடாது என எங்களுக்கு வலியுறுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது. அதையும் மீறிச் சொல்வதானால், முகாம்களில் அடைபட்டிருக்கும் தமிழர்களின் நிலையைக் கண்டு நெஞ்சே கலங்கிப் போனது. போதுமான உணவோ, மருத்துவ வசதியோ இல்லாமல் அங்கே தவிக்கிற மக்களின் நிலையைக் கண்டிப்பாக தமிழக முதல்வரிடம் எடுத்து வைப்போம்!'' என்றார் அவர்.

இந்த இதழ் முடியும் தறுவாயில் மூன்றுநாள் பயணம்தான் முடிந் திருக்கிறது. அடுத்த இரண்டு நாட் களில் ஏதும் அற்புதம் நடக்குமா என்று காத்திருப்போம்!

-- இரா.சரவணன்   
 
source:vikatan

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP