சமீபத்திய பதிவுகள்

அதிகம் அறியப்படாத ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள்

>> Wednesday, October 6, 2010

 



வைரஸ்கள் வந்து வந்து போகின்றன. ஒரு சில தொடர்ந்து தொந்தரவு தந்து கொண்டே இருக்கின்றன. புதிதாய் வரும் வைரஸ்கள் எத்தனை நாட்கள் தங்கி இருந்து தொல்லை கொடுக்கும் என்று நம்மால் கணிக்க இயலவில்லை. ஆனால் இவற்றைத் தேடி அழிக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் தொடர்ந்து இயங்குகின்றன. ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் என்று கேள்விப்பட்டவுடன் நம் மனதிற்கு வருவது சைமாண்டெக், மெக் அபி, நார்டன் ஆகியவையே. ஆனால் இன்னும் பல ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் அவ்வளவாகப் புகழ் பெறாமல் உள்ளன. இவை செயல்பாட்டில் பிரபலமான புரோகிராம்களுக்கு இணையாகவே உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
1. பிட் டிபன்டர் (BitDefender) பிட் டிபன்டர் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், விண்டோஸ் மட்டுமின்றி லினக்ஸ் சிஸ்டங்களிலும் இயங்கி செயல்புரிகிறது. அத்துடன் மெயில் சர்வர்கள், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களிலும் வைரஸ் எதிர்ப்பு பணியை மேற்கொள்கிறது.
இந்த இலவச புரோகிராமினை http://www.bitdefender.com/ என்ற தளத்தில் பெறலாம்.
2. அவிரா ஆண்ட்டிவிர் (Avira Antivir): இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், மற்ற புரோகிராம்கள் கண்டுபிடிக்காத சில வைரஸ்களைக் கண்டறிந்து, அவற்றை நீக்கும் வழிகளைத் தருகிறது. அதே போல மற்றவற்றைக் காட்டிலும், கூடுதல் வேகத்தில் இது செயல்படும். இதனைப் பெற http://www.avira.com/en /products/index.php  என்ற தளத்திற்குச் செல்லவும்.
3. கிளாம் ஏவி (Clam AV): இது லினக்ஸ் இயக்கத்தில் செயல்படும் சர்வர்களுக்கென வடிவமைக்கப்பட்டது. அத்தகைய சர்வர்கள் வைத்திருப்போர் கட்டாயம் இதனை இன்ஸ்டால் செய்து வைத்திருக்க வேண்டும். இதனைப் பெற http://www.clamav.net/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
4.அவாஸ்ட் (Avast): : மற்ற ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைப் போல இது பெயர் பெற்றது இல்லை . ஆனால் இந்த புரோகிராம் தருவது போல பல ஆப்ஷன்களை மற்ற புரோகிராம்கள் தருவது இல்லை. இதன் தள முகவரி:http://www.avast.com/


5. ஆர் கே ஹண்டர் (rk hunter) : இதன் சிறப்பு இது ஒரு ரூட்கிட் எதிர்ப்பு டூலாகும். நம்மில் பெரும்பாலானவர்கள் ரூட்கிட் நமக்கு தரக்கூடிய பாதிப்புகளை அறிந்திருப்பது இல்லை. மேக் கம்ப்யூட்டர்களில் பெரும்பாலும் இது சேதத்தை விளைவிக்கும். உங்களிடம் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ரூட்கிட்களுக்கு எதிரான பாதுகாப்பினை வழங்கவில்லை என்றால்,இதனை உடனே நிறுவுவது அவசியம். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு http://rkhunter.sourceforge.net/ என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும்.
6. டாக்டர் வெப் க்யூர்இட்  (Dr.Web CureIt) இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இது ஒரு சிறிய பைனரி பைல். இதன் மீது டபுள் கிளிக் செய்தால், அது நம் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடும். இதில் ஒரே ஒரு பிரச்னை உள்ளது. இதன் அண்மைக் காலத்திய மேம்படுத்தப்பட்ட புரோகிராமினை அப்படியே அப்டேட் செய்திட முடியாது. மீண்டும் புதிதாக டவுண்லோட் செய்து பயன்படுத்த வேண்டும். இதனை போர்ட்டபிள் வைரஸ் ஸ்கேனராகப் பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு http://www.freedrweb. com/cureit/?lng=en என்ற இணைய தளத்தினை அணுகவும்.
7. இ செட் ஸ்மார்ட் செக்யூரிட்டி  (ESET Smart Security): NOD32 என்னும் ஆண்ட்டி வைரஸ் டூலைத் தந்தவர்களே இதனையும் தந்துள்ளனர். இது ஆண்ட்டி வைரஸ் மற்றும் பயர்வால் புரோகிராம்களாகச் செயல்படுகிறது. இதன் பயர்வால் செயல்பாடு சற்று விசித்திரமானது. இது இருக்கும் கம்ப்யூட்டரில் இன்டர்நெட் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை, நம்மிடமிருந்து கற்றுக் கொண்டு, அதற்கேற்ற வகையில் செயல்படுகிறது. டேட்டா திருடு போகாமலும், நம் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களின் செயல்பாட்டை முடக்கும் வைரஸ்களை இயங்கவிடாமலும் இது தடுக்கிறது. மேலும் தகவல்களுக்கு http://www.eset.com/home/smartsecurity என்ற தளம் செல்லவும்.
8. ஐ ஆண்ட்டி வைரஸ் (iAnti Virus): இதன் பெயரில் உள்ள ஐ என்பதைப் பார்த்தவுடன் இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், மேக் கம்ப்யூட்டர்களுக்கானது என்று அறிந்திருப்பீர்கள். மேக் கம்ப்யூட்டர்களில் எல்லாம் வைரஸ் வராது என்று சொல்லிக் கொண்டிருந்ததெல்லாம் அந்தக் காலம். இப்போதெல்லாம், விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் என அனைத்து வகை சிஸ்டங்களிலும் வைரஸ்கள் புகுந்து நாசம் விளைவிக்கின்றன. இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் செயல்படுவதும், மேக் கம்ப்யூட்டர் இன்டர்பேஸ் போல ஒன்றின் வழியாகத்தான். மேக் சிஸ்டத்திற்கு மிகச் சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இது. கூடுதல் தகவல்களுக்கு http://www.iantivirus. com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
9. மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் (Microsoft Security Essentials)  பல்வேறு ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளை மேலே பார்த்தோம். மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள இதனையும் நாம் கவனிக்க வேண்டும். இதில் குறிப்பிடத்தக்க சிறப்பு, மைக்ரோசாப்ட் தரும் இந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு இலவசமாகும். பொதுவாக மைக்ரோசாப்ட் மற்றும் இலவசம் என்ற இரண்டும் இøணையாது. இது ஒரு விதிவிலக்காகும். இதனைப் பெறவும், தகவல்களை அறியவும் http://www.microsoft.c om/security_essentials/ என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் தளம் செல்லவும்.
10. ஸோன் அலார்ம் (Zone Alarm): மற்ற ஆண்ட்டி வைரஸ் தராத ஒரு சிறப்பான உதவியை ஸோன் அலார்ம் செய்கிறது. டேட்டா லாக் என்னும் டூலை ஸோன் அலார்ம் தருகிறது. உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் இருக்கும் டேட்டாவிற்கு என்கிரிப்ஷன் மூலம் பாதுகாப்பு தரும் வேலையையும் இது மேற்கொள்கிறது. எனவே என்கிரிப்ஷன் கீ இல்லாதவர்கள் டேட்டாவினப் படித்து அறிய இயலாது. அதே போல கம்ப்யூட்டரை பூட் செய்வதிலும் இது பாதுகாப்பு தருகிறது. எனவே ஆண்ட்டி வைரஸ், என்கிரிப்ஷன், பூட் அனுமதி என கூடுதல் வசதிகளையும் இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிரம் தருகிறது. மேலும் தகவல்களுக்கு http://www.zonealarm. com/  என்ற தளம் செல்லவும்.


source:dinamalar



--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP