சமீபத்திய பதிவுகள்

போர்க்குற்ற நீதிமன்றின் முன் இலங்கையை இழுத்துச் செல்ல ஐ.நா. "சிலுவை யுத்தம்" அரசாங்கம் கடும் விசனம்

>> Saturday, January 9, 2010

 

altபோர்க்குற்ற நீதிமன்றத்தின் முன்னால் இலங்கையை இழுத்துச் செல்வதற்கான சிலுவைப் போரில் ஐ.நா. ஈடுபட்டிருப்பதாக அரசாங்கம் நேற்று வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டியுள்ளது.

கைதிகளுக்கு மரண தண்டனையை படையினர் நிறைவேற்றுவதாக குற்றம் சாட்டப்படும் ஒளிநாடா தொடர்பான புதிய அழுத்தம் ஏற்பட்டிருக்கும் நிலையில் அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டை ஐ.நா. மீது தெரிவித்திருக்கிறது.


ஆயுதமற்ற தமிழ்ப் புலி கிளர்ச்சியாளருக்கு மரண தண்டனையை படையினர் நிறைவேற்றுவதாக குற்றம் சாட்டப்பட்ட ஒளிநாடா பிரதிமையானது உண்மையானது என்றும் பக்கச் சார்பற்ற விசாரணையை கொழும்பு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் நீதி விசாரணைக்குப் புறம்பானதும் தன்னிச்சையானதுமான மரணதண்டனை விவகாரங்களைக் கையாளும் ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் பிலிப் அல்ஸ்ரன் வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.


சர்ச்சைக்குரிய ஒளிநாடாவானது நம்பகத்தன்மையானது என்று அறிவிப்பை விடுக்கும் விடயத்தில் உரிய நடைமுறைகளை பின்பற்ற பிலிப் அல்ஸ்ரன் தவறிவிட்டதாக மனித உரிமைகள், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்ததாக ஏ.எவ்.பி.செய்திச் சேவை குறிப்பிட்டது.


இலங்கைக்கு எதிராக சர்வதேச (போர்க்குற்ற) விசாரணையை கட்டாயப்படுத்துவதற்கான தனது சிலுவை யுத்தத்தில் பிலிப் அல்ஸ்ரன் ஈடுபட்டுள்ளார். 


அவர் பின்பற்றிய நடைமுறையை நாம் ஆட்சேபிக்கிறோம். முதலில் தனது தகவலை அவர் எங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க ஏ.எவ்.பி.க்குக் கூறியுள்ளார்.


ஒளிநாடா மாற்றம் செய்யப்பட்டதொன்று என்பதில் கொழும்பு நம்பிக்கையுடன் இருப்பதாக சமரசிங்க வலியுறுத்திக் கூறியுள்ளார்.எம்மைப் பொறுத்தவரை ஒளிநாடா உண்மையானது அல்ல. அது பிழையானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

source:swissmurasam

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

திருந்தாத வாகன ஓட்டிகளால் விபத்து அதிகரிப்பு

  





விபத்தில்லாமல் வாகனங் களை ஓட்ட எத்தனை "சாலை பாதுகாப்பு வார விழா' நடத்தினாலும் நம்மவர்கள் திருந்துவதாக இல்லை. போக்குவரத்து விதியை மீறி மொபைல் போனில் ஜாலியாக பேசிக் கொண்டே, வாகனங் களை ஓட்டிச் சென்று, விபத் துக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கும் செயல் குறைவதாக இல்லை.
 

சென்னையில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல் கின்றன. பெருகி வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசலும், கூடவே, விபத்துக்களின் எண் ணிக்கையும் அதிகரித்து விட்டது. விபத்தில்லாமல் பயணிக்க போக்குவரத்து போலீசார் பல விதிமுறைகளை விதித்துள்ளனர். "மது அருந்தி விட்டு வாகனங் களை ஓட்டக்கூடாது; மொபைல் போனில் பேசியபடி செல்லக் கூடாது; ஹெல்மெட் அணிய வேண்டும்' என, வாகன ஓட்டிகளின் நன்மைக்காக விதிமுறைகளை கொண்டு வந்துள்ளனர். என்னதான் விதிமுறைகளை கொண்டு வந்தாலும், நம்மவர்கள் அதை மதிப்பதில்லை. அதை "ஓவர்லுக்' செய்வதையே குறிக்கோளாக வைத்துள்ளனர். ஹெல்மெட் அணிவதில்லை. ஹெல்மெட் இருந்தாலும் பெட் ரோல் டேங்க் மீது வைத்துக் கொள்கின்றனர்.


போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகளில், ஜாலியாக மொபைல் போனில் பேசியபடியே செல்கின்றனர். சிலர் மனைவி, குழந்தைகளுடன் செல்லும் போதே மொபைல் போனில் பேசிக் கொண்டே வாகனங்களை ஓட்டுகின்றனர். ஒரு கையில் மொபைல் போனும், மறு கையில் பைக்குமாக "ஸ்டை லாக' ஓட்டிச் செல் கின்றனர். இன்னும் சிலர் கழுத்திற்கும், தோள்பட்டைக்கும் இடையில் மொபைல் போனை வைத்து பேசியபடியே பைக்கை ஓட்டுகின்றனர். பேச்சு சுவாரஸ்யத்தில் எதிரில் வருபவர்கள் மீதோ, பக்கவாட்டிலோ மோதி விபத் துக்குள்ளாகின்றனர். பின்னால் வரும் கனரக வாகனங்களில் கூட சிலர் சிக்கி உயிரிழக்கின்றனர். சமீபத்தில் கூட, வேதாரண் யம் அருகே மொபைல் போனில் பேசியபடி வேனை ஓட்டிய டிரைவரால் 10 பிஞ்சுக் குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும், மொபைல் போனில் பேசியபடி பைக் ஓட்டிச் சென்ற பலரும் உயிரிழந்துள்ளனர்; ஏராளமானோர் காயமடைந்துள் ளனர்.



உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்தாலும், வாகன ஓட்டிகள் மொபைல் போனில் பேசியபடியே செல்வதை நிறுத்தவில் லை. மாறாக, அதிகரித்துக் கொண்டே செல்கிறது. போக்குவரத்து போலீசார் எத்தனையெத்தனை விதிமுறைகள் விதித்தாலும், சாலை பாதுகாப்பு வார விழா நடத்தி விழிப் புணர்வு ஏற்படுத்தினாலும், வாகன ஓட்டிகளாகிய நாம் அவற் றை கடைப்பிடிக்காத வரையில் விபத்துக்கள் குறையப்போவதில்லை. உயிரிழப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியாது.


Front page news and headlines today


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

படம் ஒன்று பாடம் ஒன்று



ஆஹ்ஹா... நானோ டெக்னாலஜி இங்க கூட வந்திருச்சா...? ஒலகம் எங்கேயோ போயிட்டிருக்கு சாமியோவ்...!!




ஐயா, சிதம்பரம் ஐயா... இவங்க, செல்போனுக்கு விளம்பரம் பண்றாங்களா, இல்லை, உங்களுக்குப் புத்திமதி சொல்றாங்களான்னு புரிஞ்சுக்க முடியலீங்களே...! உங்களுக்குப் புரியுதுங்களா...?





வாஹே குரு...! என் பதவிக்காலம் முடியற வரைக்கும் ராஜ்பவன் பத்தி எந்தச் சர்ச்சையும் வராம காப்பாத்து சாமி...!!





அடுத்த புத்தாண்டுக்கு நீங்க ஊட்டி விட்டு நான் சாப்பிடற சூழ்நிலை வந்தாலும் வரலாம்... யார் கண்டது...? இப்ப சந்தோஷமா சாப்பிடுங்க சார்...



 



தீவிரவாதத்தைப் பத்தி உங்க நிலைப்பாடு என்னன்னு கேக்கறாங்க சார்...? தீவிரவாதத்தை அழிக்கலாம் ஆனால் ஒழிக்க முடியாது... தீவிரவாதிகளை ஒழிக்கலாம், ஆனால் அழிக்க முடியாது... இதில் எதை எப்படிச் செய்வது என்பது பற்றி அடுத்த G-60 மாநாட்டில் எடுக்கப்படும் முடிவின்படி செயல்பட ஆலோசித்து வருகிறோம்னு சொல்லிடுங்க...






அமைச்சரா இருக்கறதை விட இந்த மாதிரி சாயா ஆத்துறது கூடக் கலர்ஃபுல்லான வேலைன்னு சொல்லத் தோணுது. ஆனா, அதை வெச்சு ஏதாவது வில்லங்கம் புதுசாக் கிளம்பிடுமே...! எண்ட குருவாயூரப்பா... வர வர எதையும் மனசு விட்டு ஃப்ரீயா பேசக்கூட முடியலயே...!


source:dinamani
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

தமிழகத்தின் முதல் பெண் டிஜிபியாக லத்திகா நியமனம்

 
 

Swine Flu 

சென்னை: தமிழகத்தின் முதல் பெண் டிஜிபியாக லத்திகா (58) நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 13&ம் தேதி அவர் பதவி ஏற்கிறார்.
தமிழக போலீஸ் டிஜிபியாக இருந்தவர் கே.பி.ஜெயின். இவர் வரும் 13ம் தேதி முதல் விடுமுறையில் செல்கிறார். ஏப்ரல் மாதத்துடன் ஓய்வு பெறுகிறார். அதனால் புதிய டிஜிபியாக போலீஸ் பயிற்சிக் கல்லூரி தலைவராக உள்ள லத்திகா சரண் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு நேற்று இரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழகத்தில் முதல் பெண் போலீஸ் கமிஷனராக 2006ம் ஆண்டு மே மாதம் லத்திகா நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் கமிஷனராக பணியாற்றினார். பின், நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டார். பதவி உயர்வு பெற்று போலீஸ் பயிற்சிக் கல்லூரி டிஜிபியாக பொறுப்பேற்றார். இப்போது தமிழகத்தின் முதல் பெண் டிஜிபியாக லத்திகா நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை பெண் போலீஸ் அதிகாரிகளில் யாரும் டிஜிபி அந்தஸ்தை பெற்றதில்லை.
ஆனால் ஏற்கனவே உத்ராஞ்சல் உள்பட 2 மாநிலங்களில் பெண் டிஜிபிக்கள் இருந்துள்ளனர். இப்போது 3வது பெண் டிஜிபியாக லத்திகா நியமிக்கப்பட்டுள்ளார்.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் லத்திகா. 1976ம் ஆண்டு ஐபிஎஸ் பணியில் சேர்ந்தார். தமிழகத்தில் கோவை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட எஸ்பியாக பணியாற்றினார். சிபிசிஐடி, லஞ்ச ஒழிப்புத்துறை உள்பட பல்வேறு முக்கியத் துறைகளில் பணியாற்றியுள்ளார். சென்னையில் அவர் இருந்தபோதுதான் ரவுடிகள் நாகூர் மீரான், வெள்ளை ரவி, பங்க்குமார் போன்ற பெரிய ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். லத்திகாவின் கணவர் சரண். ஒரே பெண் உத்ரா. ஆஸ்திரேலியாவில் பிஎச்டி படித்து வருகிறார். டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள லத்திகா, இன்று காலை முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.


source:dinakaran


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

திருப்பதி போலீஸ் நிலையத்தை பத்திரிகையாளர்கள் முற்றுகை

 

 

Swine Flu  

திருமலை: ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம் குறித்து வதந்தி பரப்பியதாக கூறி தெலுங்கு டிவி சேனலை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து திருப்பதி போலீஸ் நிலையத்தை பத்திரிகையாளர் சங்கத்தினர் நேற்றிரவு முற்றுகையிட்டனர்.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி விபத்தில் இறந்ததற்கு காரணம், அம்பானி சகோதரர்களின் திட்டமிட்ட சதியே என ரஷ்ய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதனை ஆந்திர தனியார் செய்தி சேனல்கள் நேற்று முன்தினம் இரவு ஒளிபரப்பின. இதையறிந்த காங்கிரஸ் கட்சித்தொண்டர்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள ரிலையன்ஸ் வர்த்தக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் பல கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது. 
இதேபோல் திருப்பதியில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான வர்த்தக நிறுவனத்தை தாக்கியதாக திருப்பதி நகராட்சி தலைவரும், தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான சிவிரெட்டிபாஸ்கர ரெட்டி உள்ளிட்ட 9 பேரை ஏ.எஸ்.பி. அம்மிரெட்டி கைது செய்தார். இவர்களை 7 நாள் காவலில் வைக்க திருப்பதி கோர்ட் உத்தரவிட்டது.   

இந்நிலையில் ராஜசேகர ரெட்டியின் மரணம் குறித்து தவறான செய்தி வெளியிட்டு மாநிலத்தில் கலவரத்தை தூண்டியதாக தெலுங்கு டிவி சேனலை சேர்ந்த 2 பேரை சிஐடி போலீசார் நேற்று மாலை கைது செய்தனர். இதற்கு திருப்பதி பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட டிவி சேனலை சேர்ந்த இருவரையும் உடனடியாக விடுவிக்கவேண்டும் எனக்கூறி திருப்பதி கிழக்கு போலீஸ் நிலையம் நிலையத்தை பத்திரிகையாளர் சங்கத்தினர் நேற்றிரவு முற்றுகையிட்டனர். உடனடியாக விடுவிக்காவிட்டால், மாநிலம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்த உள்ளதாகவும் போலீசாரிடம் பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ரிலையன்ஸ் கண்டனம்
இதற்கிடையில் ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணத்தில் தங்களுக்கு தொடர்பு இல்லை என அம்பானி சகோதரர்கள்  மறுப்பு தெரிவித்துள்ளனர். 
இது தொடர்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெளியிட்ட அறிக்கை: 
ஹெலிகாப்டர் விபத்தில் எங்கள் நிறுவனத்துக்கு தொடர்பு இருப்பதாக டிவி 5 ஒளிபரப்பிய செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். தவறான நோக்கத்துடன், எங்கள் நிறுவனத்தின் புகழை கெடுக்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.  இந்த குற்றச்சாட்டை மறுப்பதுடன் வன்மையாக கண்டிக்கிறோம். தவறான செய்தியால் எங்கள் நிறுவனத்தின் புகழுக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளதால் தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அனில் அம்பானியும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


source:dinakaran


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இந்த வார டவுண்லோட்

 
 

குவிந்த புரோகிராம்களை நீக்க...
இணையத்தில் பல்வேறு வசதிகளைத் தரும் எக்கச்சக்கமான புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. இவை இலவசமாகக் கிடைப்பதால், நாம் உடனே டவுண்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்கிறோம். ஆனால் சில நாட்களில் அதனை மறந்துவிடுகிறோம்; தொடர்ந்து பயன்படுத்துவதில்லை. இப்படி பல புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரில் தங்கிவிடுகின்றன. இவற்றை எப்போதாவது, கண்ட்ரோல் பேனல் சென்று, ஆட்/ரிமூவ் பிரிவின் மூலம் ஒரு சிலவற்றை நீக்குகிறோம். அப்படி நீக்கும் போதும், அந்த புரோகிராம் சார்ந்த சில ரெஜிஸ்ட்ரி வரிகள் தங்கிவிடுகின்றன. சில பைல்களும் அவ்வாறே கம்ப்யூட்டரில் வைக்கப்படுகின்றன. இதனால் கம்ப்யூட்டரின் செயல்வேகம் மெதுவாகிறது. சில மோசமான வேளைகளில், புரோகிராம்கள் முடங்கியும் போகின்றன. 
இது போன்ற குறைகளை நீக்கித் தேவையற்ற புரோகிராம்களை முழுமையாக நீக்க இணையத்தில்Absolute Uninstaller என்ற புரோகிராம் கிடைக்கிறது. இது ஆட்/ரிமூவ் மூலம் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை மேற்கொண்டாலும், அதனைக் காட்டிலும் கூடுதல் திறனுடன் செயல்படுகிறது. தேவையற்ற ரெஜிஸ்ட்ரி கீகள், சார்ந்த டெஸ்க்டாப் ஐகான்கள், ஸ்டார்ட் மெனுவில் எழுதப்பட்ட என்ட்ரிகள் ஆகியவற்றைக் கண்டறிந்து நீக்குகிறது. 
இந்த புரோகிராம், சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்றை நீக்கும்போது, அழிக்காமல் விடப்படும் பைல்களைக் கண்டறிந்து முழுமையாக அழிக்கிறது. தானாகவே தேவையற்ற பைல் எண்ட்ரிகளின் இடமறிந்து காட்டுகிறது. 
இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்களை, அவற்றிற்கான ஐகான்களுடன் தெரிவிக்கிறது. இதன் மூலம் நாம் நீக்கப்பட வேண்டிய புரோகிராம்களை எளிதாகத் தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுக்கும் வகையில் அவற்றின் முன் டிக் அடையாளம் ஏற்படுத்தி, பின் நீக்குவதற்கான கட்டளை கொடுத்தால், மொத்தமாக, அவற்றின் சுவடே இல்லாமல் நீக்குகிறது. 
பொதுவாக ஆட்/ரிமூவ் புரோகிராம் செயல்பட சற்று நேரம், பிடிக்கும். அப்ஸல்யூட் அன் இன்ஸ்டாலர் மிக வேகமாகச் செயல்படத் தொடங்குகிறது. அத்துடன் இதன் இன்டர்பேஸ் மிக எளிதாக இதனை இயக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை http://www.glarysoft.com /absoluteuninstaller/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் சென்று டவுண்லோட் செய்து கொள்ளுங்கள். அண்மையில் இதன் புதிய பதிப்பு Absolute Uninstaller 2.8.0.636  2.8.0.636 வெளியாகியுள்ளது.



source:dinamalar

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP