சமீபத்திய பதிவுகள்

எக்ஸெல் : ஷார்ட் கட் கீகள்

>> Friday, February 5, 2010

 

எப் 1: ஹெல்ப் டாஸ்க் பேன் என்னும் உதவிக் குறிப்புகள் அடங்கிய தொகுப்பைத் திறக்கும்
எப்1 + கண்ட்ரோல்: ஹெல்ப் கட்டத்தைத் திறக்கவும் மூடவும் செய்திடும். 
எப்2 : ஆக்டிவாக இருக்கிற செல்லினுள் உள்ள டெக்ஸ்ட்டை எடிட் செய்திட உதவுகிறது. 
எப்2 + ஷிப்ட் : எடிட் செய்திடும் செல்லுக்கான கமெண்ட் பாக்ஸ் எழுத உதவுகிறது.
எப்2 + ஆல்ட்: சேவ் அஸ் டயலாக் பாக்ஸைத் திறக்க உதவுகிறது.
எப்3+ஷிப்ட்: இன்ஸெர்ட் பங்சன் டயலாக் பாக்ஸைத் திறக்கும்
எப்3 + கண்ட்ரோல்: டிபைன் நேம் டயலாக் பாக்ஸைத் திறக்கும்
எப்3+கண்ட்ரோல்+ஷிப்ட்: கிரியேட் நேம் டயலாக் பாக்ஸைத் திறக்கும்
எப்4: கடைசியாகக் கொடுத்த கட்டளையைத் திரும்ப இயக்கும்.
எப்4 +கண்ட்ரோல்: ஒர்க்புக் விண்டோவை மூடும்
எப்4 + ஆல்ட் : எக்ஸெல் தொகுப்பை மூடும்
எப்5 : கோ டு டயலாக் பாக்ஸினைத் திறக்கும்
எப்5 + கண்ட்ரோல் : ஒர்க்புக் விண்டோவின் முதல் அளவில் திரும்பக் கொண்டு வரும்
எப்6 : ஹெல்ப் டாஸ்க் கட்டத்திற்கும் அப்ளிகேஷன் விண்டோவிற்குமாகத் தாவுவதற்கு இந்த கீ.
எப்6+ஷிப்ட்: பிரிக்கப்பட்ட ஒர்க் ஷீட்டில் முந்தைய கட்டத்திற்குச் செல்லலாம்
எப்6+கண்ட்ரோல்: ஒன்றிற்கும் மேலான ஒர்க் புக் திறந்திருக்கும் வேளையில் அடுத்த ஒர்க் புக்கிற்குத் தாவும்.
எப்7: ஸ்பெல்லிங் திருத்தும் கட்டம் கிடைக்கும்
எப்7 + கண்ட்ரோல்: ஒர்க் புக் விண்டோ மேக்ஸிமைஸ் ஆகாத போது அதனை நகர்த்தும்
எப்8: எக்ஸ்டென்டட் மோடினை இயக்கும், நிறுத்தும்.
எப்9: திறந்திருக்கும் அனைத்து ஒர்க் புக்குகளிலும் உள்ள ஒர்க் ஷீட்டுகளைக் கணக்கிடும்.
எப்9+ஷிப்ட்: திறந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒர்க் ஷீட்டினைக் கணக்கிடும்
எப்9+கண்ட்ரோல் : ஒர்க்புக் விண்டோவினை மினிமைஸ் செய்திடும்.
எப்10: மெனுபாரினைத் தேர்ந்தெடுக்கும். ஓப்பன் மெனு மற்றும் அதன் சப் மெனுவினை ஒரே நேரத்தில் தேர்ந்தெடுக்கும்.
எப்10 + கண்ட்ரோல்: மினிமைஸ் செய்யப்பட்ட விண்டோவினைத் திறக்கும்
எப்11: அப்போது ரேஞ்சில் உள்ள டேட்டாவிற்கான சார்ட்டை உருவாக்கும். 
எப்11+ ஷிப்ட்: புதிய ஒர்க்ஷீட்டைத் தேர்ந்தெடுக்கும்.
எப்11+ ஆல்ட்: விசுவல் பேசிக் எடிட்டர் மற்றும் அதற்கு முன்பு இருந்த ஒர்க்ஷீட்டிற்கு இடையே தாவும்.
எப்11+ஆல்ட்+ஷிப்ட்: மைக்ரோசாப்ட் ஸ்கிரிப்ட் எடிட்டரைத் திறக்கும்.
எப்12: சேவ் அஸ் டயலாக் பாக்ஸினைத் திறக்கும்
எப்12+ஷிப்ட்: செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக்கினை சேவ் செய்திடும்
எப்12+கண்ட்ரோல்: ஓப்பன் டயலாக் பாக்ஸினைத் திறந்திடும்.
எப்12+கண்ட்ரோல்+ஷிப்ட்: பிரிண்ட் டயலாக் பாக்ஸினைத் திறந்திடும்.


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

கற்பழிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு கசையடி : கற்பழித்தவனுக்கு தண்டனை இல்லை

 
 

Front page news and headlines today  


தாகா : வங்க தேசத்தில் பெண் ஒருவரை கற்பழித்தவனுக்கு எவ்வித தண்டனையும் வழங்காமல், அதனால் பாதிக்கப்பட்டு, கர்ப்பமடைந்த பெண்ணுக்கு 101 கசையடி வழங்க தண்டனை வழங்கப்பட்டதாக, அந்நாட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.



இதுகுறித்து, வங்க தேச பத்திரிகையான "டெய்லி ஸ்டார்' வெளியிட்டுள்ள செய்தி:வங்க தேசத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் எனாமுல் மியா(20). இவர், அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது பெண் ஒருவரை, அடிக்கடி கிண்டல் செய்து வந்தார். இந்நிலையில், கடந்தாண்டு ஏப்ரல், மாதம், அந்த பெண்ணை எனாமுல் மியா கற்பழித்தார். இதை வெளியில் கூறினால், தனக்கு அவமானம் என்று கருதிய அந்த பெண், இச்சம்பவத்தை யாரிடமும் தெரிவிக்கவில்லை.



இச்சம்பவம் நடந்த சில மாதங்களில், அப்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. அதன் பின், அந்த பெண், கர்ப்பமாக இருப்பது மருத்துவ பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது. இதனால், அப்பெண்ணை திருமணம் செய்தவர், திருமணமான சில வாரங்களிலேயே விவாகரத்து செய்துவிட்டார்.இதையடுத்து, அந்த பெண்ணுக்கு கிராமத்தினர், 101 கசையடிகள் வழங்க தீர்ப்பு வழங்கினர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, கிராமத்தினர் நிர்ணயித்த அபராத தொகையை செலுத்த வேண்டும், இல்லையென்றால், அவர்கள் குடும்பம் கிராமத்தை விட்டு ஒதுக்கி வைக்கப்படும் என தண்டனை வழங்கினர். ஆனால், அந்த பெண்ணை கற்பழித்த எனாமுல் மியாவிற்கு, எவ்வித தண்டனையும் வழங்கவில்லை.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.



source:dinamalar


StumbleUpon.com Read more...

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுக்கும் ஊடக அறிக்கை

 

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எவ்வாறு அமைக்கப்படவேண்டும் என்பது தொடர்பான மதியுரைக்குழுவின் ஆய்வின் அடிப்படையில் உருவான அறிக்கையை மேலும் செழுமைப்படுத்த கூடுதல் பங்களிப்பை வழங்கும் நோக்கில் கருத்துப் பரிமாற்றக்காலத்தை 15.02.2010 வரை நீடிப்பதென முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பாக இணைப்பாளர் வி. ருத்ரகுமாரன் விடுத்துள்ள ஊடக அறிக்கை:-

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எவ்வாறு அமைக்கப்படவேண்டும் என்பது தொடர்பான மதியுரைக்குழுவின் ஆய்வின் அடிப்படையில் உருவான அறிக்கையை தைத்திருநாளன்று
(14.01.2010) மக்கள் கருத்துப் பரிமாற்றத்திற்காக வெளியிட்டிருந்தோம். இக் கருத்துப்பரிமாற்றம்5.02.2010 வரை இடம் பெற்றபின் மக்கள் கருத்துக்களை உள்வாங்கி பெப்ரவரி 10ம்
திகதியளவில் அறிக்கை முழுமைப்படுத்தப்படும் எனவும் அறிவித்திருந்தோம். அதன்தொடர்சசியாக இவ் அறிக்கை குறித்த மக்கள் கருத்துப் பரிமாற்றங்களையும், அதற்குரிய
கலந்துரையாடல்களையும் நாம் இப்போது நடத்தி வருகிறோம்.

இதுவரை கிடைத்துள்ள கருத்துக்கள் இவ் அறிக்கையினை மேலும் செழுமைப்படுத்தத் துணைபுரிபவையாக உள்ளன. மேலும் கூடுதல் பங்களிப்பை வழங்குவதற்காக கருத்துப் பரிமாற்றக் காலத்தைச் சற்று நீடிக்குமாறும் எமக்கு வேண்டுகோள்கள் விடப்பட்டுள்ளன.அதற்கமைய கருத்துப் பரிமாற்றக்காலத்தை 15.02.2010 வரை நீடிப்பதென முடிவு செய்துள்ளோம்.மக்களிடமிருந்து வரும் கருத்துக்களை ஆராய்நது அறிக்கையினை முழுமை செய்யவென எமது மதியுரைஞர்குழு பெப்ரவரி மாதம் 20௨2 திகதிகளில் கூடவுள்ளது. இம் மாதம் இறுதிப்பகுதிக்குள்அறிக்கை முழுமைப்படுத்தப்படும்.

இச் சந்தர்பபத்தில் சகல தமிழர் அமைப்புக்களுக்கும் ஒரு வேண்டுகோளையும்முன்வைக்கின்றோம். உங்கள் அமைப்புக்களின் நிகழ்சசிநிரலில் இவ் அறிக்கையினை எடுத்து,
அதனை ஆராய்நது இவ் அறிக்கையினை மேலும் செழுமைப்படுத்த உதவக்கூடிய வகையிலான தங்கள்; கருத்துக்களை எமக்கு அனுப்பி வைக்குமாறும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்அமைக்கும் எமது செயற்திட்டத்திற்குத் தங்கள் ஆதரவினை வழங்க முன்வருமாறும் அன்புடன் கோருகிறோம்.

நாம் 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திலிருந்து தெரிவித்து வருவது போல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்களை இவ் வருடம் ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளோம். சிறிலங்காவின் பாராளுமன்றத்திற்கான பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதற்குத் தேர்தல் நடைபெறவுள்ள அதே மாதத்தில் நாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்வு செய்யத் தேர்தல்களை நடத்துவதே உலகுக்குத் தெளிவான ஒரு அரசியல் செய்தியைக் கூறும்.

மேலும் இத் தேர்தல்கள் திட்டமிட்டவாறு நடந்தேறும்பட்சத்தில் மே மாதம் 17௧9ம் திகதிகட்கு இடைப்பட்ட காலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வைக் கூட்டலாம் என எண்ணியுள்ளோம். இது முள்ளிவாய்ககாலுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முறியடித்து விட்டதாகக் கூறி மார் தட்டும் சிறிலங்கா அரசுக்கு ஈழத்தமிழர் தேசம் கொடுக்கும் குறியீடடு வடிவிலான பதிலடியாக அமையும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் பணியில் தம்மைத் தொண்டர்களாக பலர் இணைத்து வருகிறார்கள். இவர்களை நாம் எமது தொண்டர் விபரப்பட்டியலில் சேர்தது
வருகிறோம். எமது நாடுவாரியான செயற்பாட்டுக்குழுக்கள் இவர்களோடு தொடர்பினை ஏற்படுத்தித் தமது பணிகளில் இணைத்துக் கொள்ளும். நாம் திட்டமிட்டுள்ளவாறு தேர்தல்களை ஏப்ரல் மாதத்தில் நடத்தி முடிப்பதற்கு மேலும் பெரும் தொகையான தொண்டர்கள் எமக்குத் தேவைப்படுகின்றனர். இதனால் ஆர்வமுள்ள அனைவரையும் எமது இணையத்தளத்தினூடாகவோ நாடுவாரியான செயற்பாட்டுக் குழுக்களுக்கூடாகவோ தம்மைத் தொண்டர்களாகப் பதிவு செய்துகொள்ளுமாறும் அன்புடன் வேண்டுகிறோம்.

இவ்விடத்தில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வியொன்று தொடர்பாகவும் எமது கருத்தினைப் பதிவு செய்ய விரும்புகிறோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கும் தற்போது புதிதாக உருவாக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் மக்கள் அவைகளுக்குமான தேர்தல்கள் பற்றியதே இக்கேள்வி.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் மக்கள் அவைகளும் தனித்தனி இரு அரசியல் அமைப்புக்கள். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நாடு கடந்தரீதியில் தமிழீழ விடுதலையினை
வென்றெடுப்பதற்கான முன்னெடுப்பாக, மக்களால் நேரடியாகத் தேர்நதெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு அமைக்கப்படுகிறது. நாமறிந்த வரையில் மக்கள் அவைகள், இதே இலக்கினைக் கொண்டவையாக, சில நாடுகளில்; நாடு சார்நத வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக, இவற்றுக்கான பிரதிநிதிகளை அந்தந்த நாட்டு மக்கள் நேரடியாகத்
தேர்நதெடுப்பதன் மூலம் உருவாக்கப்படுகின்றன.

இதனால் இவ்விரு அமைப்புக்களை உருவாக்குவதற்கு சில நாடுகளில் இரு நேரடித் தேர்தல்களை நடத்தும் சூழல் உருவாகியுள்ளது. இது பற்றி ஆரம்பம் முதல் எமது நிலைப்பாடு
என்னவெனில் இவ் இரு தேர்தல்களையும் நடத்த வேண்டியுள்ள நாடுகளில் இவற்றை ஒரேநாளில் ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் நடத்துவது நன்மையானது என்பதே. இது நடைமுறைச் சாத்தியமானதும்கூட.

தேர்தல்கள் இவ்வாறு ஒழுங்கு செய்யப்படுமாயின் மக்கள் தங்கள் நாடுகளில் நடைபெறும் இரு தேர்தல்களிலும் ஒரே நாளில், ஒரே வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பதன் மூலம் இரு
அமைப்புக்களுக்குமான பிரதிநிதிகளை தேர்நதெடுக்க முடியும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கென ஒரு வாக்குச்சடடும் மக்கள் அவைக்கென இன்னுமொரு வாக்குச்சடடுமா இரு வேறுபட்ட வாக்குச்சீடடுகளில் மக்கள் வாக்களித்து, இரு வேறுபட்ட வாக்குப்பெட்டிகளில் அவற்றை இடக்கூடிய வகையில் இதனை ஒழுங்கு செய்யலாம். இவ்வாறு தேர்தல்களை ஒரே சமயத்தில் நடத்துவோமாயின் கூடுதலான மக்கள் இதில் பங்கேற்கும் வாய்பபு ஏற்படும். மக்களிடையேயும் குழப்பங்கள் ஏற்படாது. தேர்தல்களில் செலவிடப்படும் மக்கள் பணத்தையும் குறைத்துக் கொள்ளலாம்.

இரு தேர்தல்களையும் ஒரேநாளில் நடத்தும் திட்டத்தினை நாம் தொடர்சசியாக முன்வைத்து வருகிறோம். ஏப்ரல் மாதத்தில் நாடு கடந்த அரசாங்கத்திற்கான தேர்தலை கனடாவில்
நடத்துவதற்கான ஏற்பாடுகளை நாம் மேற்கொண்டு வந்த வேளையில் மக்கள் அவைக்கான தேர்தல் மார்ச் 27 இல் நடைபெறும் என அங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு வேறுபட்ட நாட்களில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கும் மக்கள் அவைக்கும் தேர்தல் நடைபெறும் சூழல் கனடாவில் உருவாகிறது. தற்போதும் காலம் கடந்துவிடவில்லை. இவ்விரு தேர்தல்களையும் ஒரேநாளில் வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு வாய்பபுக்கள் இன்னும் உண்டெனவே நாம் நம்புகிறோம்.

இதேவேளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் மக்கள் அவைகளும் தமிழீழ விடுதலை இலட்சியத்தினை வென்றடையும் நோக்குடன் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியவை. மக்கள் அவைகளோடு மட்டுமன்றி தமிழர்கள் மத்தியிலுள்ள அனைத்து அரசியல், சமூக, பண்பாட்டு, பொருளாதார அமைப்புக்களோடும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இ;ணைந்து தான் செயற்படவேண்டும். நாம் அனைவரும் ஒன்றுபட்ட தேசமாக இணைந்து நிற்போமாயின் தமிழீழ தேசத்தின் விடுதலையை எந்த சக்திகளாலும் தடுக்க முடியாது.

நாம் திட்டமிட்டுள்ளவாறு ஏப்ரல் மாதத்தில் தேர்தல்களை நடத்தி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வை மே மாதம் 17௧9 காலப்பகுதியில்; கூட்டுவதற்கு
உறுதுணையாகச் செயலாற்றுமாறு அனைத்துத் தேசிய சக்திகளையும் உரிமையுடன் கோருவதோடு இம் முயற்சியின் வெற்றிக்குத் தோளாடு தோள் நிற்குமாறு தமிழ் பேசும்
மக்களையும் ஊடகங்களையும் வேண்டுகிறோம்.

நன்றி
இவண்,
விசுவநாதன் ருத்ரகுமாரன்
இணைப்பாளர்.


source:athirvu


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஈழம் :இதுவரை வெளிவராத சில மூகமூடி+புகைப்படங்கள்!

புதினப்பலகை பொங்குதமிழ் இணையங்கள் எழுதும் வஞ்சகப் புகழ்ச்சி!

 

அதிர்வு இணையம் சக தமிழ் இணையங்கள் குறித்து மீண்டும் விமர்சிக்கிறது என்று எண்ணவேண்டாம். இது காலத்தின் கட்டாயம். பல நாட்கள் பொறுமைகாத்த பின்னர் இதனை நாம் வெளியிடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இனியும் நாம் தாமதித்தால் இது போன்ற இணையங்கள் தமிழர் மனதில் நஞ்சைக் கலக்க முயல்வதை தடுக்க முடியாது. அத்துடன் அவர்கள் தம்மை திருத்தவும் ஒரு சந்தர்ப்பத்தை இக் கட்டுரை நிச்சயம் ஏற்படுத்திக் கொடுக்கும் என நாம் நம்புகிறோம்! 

சர்ச்சைக்குள்ளான புதினம் இணையம் செயலிழந்த பின்னர் உருவானது புதினப்பலகை, மற்றும் பொங்குதமிழ் இணையங்கள். தமிழ்த்தேசியம் பேசி மக்களிடம் ஒரு நம்பகத்தன்மையை முதலில் உண்டாக்கி பின்னர் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல தமிழர்களின் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சைக் கலக்க முயல்கின்றன இந்த 2 இணையங்களும். சுருக்கமாகச் சொல்லப்போனால் கடந்த சில நாட்களாக வெளிவரும் செய்திகளும், கட்டுரைகளும் பல தமிழ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி, குழப்பிவிடும் ஒரு நகர்வாகக் காணப்படுகிறது. 

புகழ்வது போல புகழ்ந்து அதில் வஞ்சத்தையும் கலந்து ஒரு வஞ்சகப் புகழ்ச்சியில் ஈடுபடும் இந்த இணையங்களை தமிழர்கள் இனங்காணவேண்டும். புதினப்பலகை இணையத்தை நடத்துபவர் கி.பி அரவிந்தன் ஆவார். அவர் தொடக்க காலத்தில் ஈரோஸ் அமைப்பில் இருந்து பின்னர் விலகி பிரான்ஸ் சென்று வாழ்ந்துவருகிறார். பிரான்சில் இருந்து வெளியாகும் ஈழமுரசு பத்திரிகையிலும் சில காலம் பணியாற்றிய அரவிந்தன், அதில் இருந்தும் விலத்தப்பட்டார். (காரணங்களைக் கூறி ஒரு தனி மனிதரை நாம் கொச்சைப்படுத்த விரும்பவில்லை.) 

கி.பி அரவிந்தன் அவர்கள் 2009ம் ஆண்டு மே மாதம் நோர்வே சென்று அங்கு வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான மீள் வாக்கெடுப்பு எவ்வளவு அவசியம் என மேடைகள் பலவற்றில் ஏறி சொற்பொழிவாற்றியுள்ளார். அதற்கான ஆதாரங்களும் புகைப்படங்களும் இருக்கின்றன. ஆனால் தற்போது வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீது மீள் வாக்கெடுப்பு ஒரு அவசியமற்ற செயல் என அவர் தனது இணையத்தில் வலியுறுத்தி வருகின்றார். இவர் யார் கொடுத்த அழுத்தத்தின்பேரில் இவ்வாறு செயல்படுகிறார் அல்லது யாருடன் சேர்ந்து செயல்படுகின்றார் என நாம் கூறுவதற்கு முன்னர், இவர் தனது கொள்கையை அடிக்கடி மாற்றுபவர் என்பதையே நாம் முதலில் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. 

இவ்வாறு தனது கொள்கையில் இருந்து அடிக்கடி மாறும் ஒருவர் தனது இணையத்தினூடாக எவ்வாறு தமிழ் மக்களை வழிநடத்தப் போகிறார் என்பது பெரும் கேள்விக்குறியாக அல்லவா இங்கு இருக்கிறது. எமது தேசிய தலைமை எப்போதாவது தமது கொள்கைகளை அடிக்கடி மாற்றியது உண்டா? இன்று தமிழீழம், நாளை மாநில சுயாட்சி, மறு நாள் மாவட்ட சுயாட்சி போதும் என்று நாம் தடம் மாற முடியுமா? அதற்காகவா 33,000 மாவீரச் செல்வங்களையும் எண்ணற்ற தமிழ் உறவுகளையும் நாம் பறிகொடுத்தோம்? 

தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களைக் கொன்ற பெருமை விஜயபாகு காலாட் படையணிக்கே சாரும் எனச் செய்தியொன்றை எந்தத் தமிழ் இணையமும் செய்தியாகப் போடவிரும்பாத விடயம் ஒன்றை புதினப்பலகை செய்தியாகப் பிரசுரித்துள்ளது. இதில் இருந்து இவர் கூறமுற்படும் செய்தி என்ன? என்பதை ஈழத் தமிழர்கள் நன்கு ஆராய்வது நல்லது. தேசிய தலைமை அழிக்கப்பட்டுள்ளது எனக் கூறுவதில் புதினப்பலகைக்கு ஏன் அவ்வளவு நாட்டம், இவை எல்லாம் பெரும் சந்தேகமாகவே உள்ளன. 

கடந்த வருடம் கி.பி அரவிந்தன் அவர்கள் வட்டுக்கோட்டைத் தீர்மான மீள் வாக்கெடுப்பை ஆதரித்ததும் பின்னர் பல்டி அடித்ததும் அவர் கே.பி பத்மநாதனைச் சந்தித்த பின்னரே நடந்ததாக சில விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில மாதங்களுக்கு முன்னர் இவர் இலங்கை சென்று அங்கு தடுத்துவைத்திருப்பதாகக் கூறப்படும் கே.பி என்றழைக்கப்படும் பத்மநாதனைச் சந்தித்துத் திரும்பியதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னரே இவர் ஒரு தமிழ்த்தேசிய விரோதப் போக்கைக் கடைப்பிடிப்பதாக பலர் நம்புகின்றனர். 

மற்றும் பொங்குதமிழ் இணையத்தில் "வலிமை கொண்ட தோளினாய் போ போ போ" என்ற கட்டுரையும் ஒரு வஞ்சப் புகழ்ச்சியே! இதில் வெளியிடப்பட்ட ஆக்கங்களில் சந்திரவதனா என்பவர் எழுதிய ஆக்கங்களும் புலிகள் மீது சேறு பூசும் ஒரு நடவடிக்கையாகவே அமைகிறது. அப்துல் ஜபார் போன்ற கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்கும் எழுத்தாளர்களின் கட்டுரைகளும் இங்கு பிரசுரிக்கப்பட்டு தமிழ் மக்கள் தவறான பாதையில் வழிநடத்தப்படும் அச்சம் மேலோங்கியுள்ளது. 

இவ்வாறு தமிழ்த்தேசியம் பேசி தமிழரை பிழையான பாதையில் வழிநடத்தும் இணையங்கள் தமது தார்மீகக் கடமைகள் குறித்து கவனம் செலுத்துவது நல்லது. உலகில் எங்குவேண்டும் என்றாலும் நடுநிலை காணப்படலாம் ஆனால் தமிழர் பிரச்சனையில் நடுநிலை என்று ஒன்று இல்லை என்பதே உண்மை. பல்லாயிரக்கணக்கான தமிழர் அழிவுற்ற நிலையில், நான் நடுநிலைவாதி என்று எவரும் கூற முடியாது. ஒன்று தமிழரின் பக்கம் அல்லது சிங்களவர் பக்கம் என்பதே யதார்த்தம். முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்து இன்னும் ஒரு வருடம் கூடப் பூர்த்தியாகாத நிலையில் நாம் நடந்தவற்றை மறந்து இலங்கை அரசுடன் கைகோர்க்க நினைத்தால் எம்மைப் போன்ற கேவலமான ஒரு இனம் இந்த உலகில் இருக்க முடியாது என்று கூறலாம். 

அப்படி நீங்கள் மறந்திருந்தால் மீண்டும் நினைவுபடுத்த இன்னும் வெளிவராத சில புகைப்படங்களை இணைக்கிறோம் பாருங்கள். எமது இனம் பட்ட துன்பத்தைப் பாருங்கள்! கொடுமையைப் பாருங்கள்! நாதியற்றுத் தவித்ததைப் பாருங்கள்! இனியாவது இதனை மனதில் நிறுத்தி உங்கள் வழிகளை மாற்றிக்கொள்ளுங்கள். திருந்த இது ஒரு சந்தர்ப்பமாக அமையட்டும்! 



source:athirvu




































சொஉர்செ:அதிர்வு
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பந்தை சேதப்படுத்திய இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்

பந்தை சேதப்படுத்துவது தவறா?

  

கிரிக்கெட் அரங்கில் பந்தை சேதப்படுத்துவது தொடர்கிறது. கிரிக்கெட் வீரர்கள் பலர் அடிக்கடி இப்பிரச்னையில் மாட்டிக் கொள்கின்றனர். 
எதிரணி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை கைப்பற்ற, பந்து வீசும் அணியின் வீரர்கள் பந்தை சேதப்படுத்துகின்றனர். தலை முடிக்கு பயன்படுத்தும் ஜெல், ஜெல்லி வகை மிட்டாய்கள் உள்ளிட்டவற்றை, பந்தின் மீது தடவுதல், பிளேட் மற்றும் கூரிய கருவிகளால் பந்தை சுரண்டுதல், பந்தை வாயினால் கடித்தல் போன்ற செயல்கள் சேதப்படுத்துதல் குற்றமாக கருதப்படுகிறது.
பெரும் தவறு
இவ்வாறு பந்தை சேதப்படுத்துதல் குற்றமாகும். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வகுத்துள்ள கிரிக்கெட் விதிகளின் படி (விதி 42, பிரிவு 3) இதற்கு பல வகை தண்டனைகள் உள்ளன. பந்து சேதப்படுத்தப்பட்ட அளவின் படி, மைதானத்தில் உள்ள அம்பயர்கள் உடனடி தீர்ப்பு வழங்குவர். ஒரு வீரர் பந்தை சேதப்படுத்திவிட்டால், எதிரணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும். இச்சம்பவம் கடந்த 2006 ம் ஆண்டு இங்கிலாந்து-பாகிஸ்தான் மோதிய போட்டியில் அரங்கேறியது. அம்பயர்களின் முடிவை ஏற்க மறுத்த பாகிஸ்தான் வீரர்கள் போட்டியை தொடர மறுத்து விட்டனர். இதனால் இப்போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 
அபராதம்
 ஒரு போட்டியில் அடிக்கடி ஒரு வீரர் பந்தை சேதப்படுத்திக் கொண்டிருந்தால், பவுலிங் செய்வதற்கு அவருக்கு தடை விதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. அதற்குப் பின் இவ்வகை குற்றத்துக்கான தண்டனை அதிகப்படுத்தப்பட்டது. அதிக அளவில் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த 1994 ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக லார்ட்சில் நடந்த போட்டியில், இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் ஆதர்டன் பந்தை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு ரூ. ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது "டிவி', கேமரா உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் கிரிக்கெட்டில் அதிக பயன்பாட்டில் உள்ளன. இதனால் பந்தை சேதப்படுத்துவோர் எளிதில் கண்டுபிடிக்கப்பட்டு விடுகின்றனர். 
போட்டி தடை
பெரும்பாலும் அனைத்து அணிகளைச் சேர்ந்த வீரர்களும் பந்தை சேதப்படுத்திய குற்றத்துக்கு உள்ளாகி உள்ளனர். கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினும், பந்தை சேதப்படுத்தி உள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? கடந்த 2001 ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், சச்சின் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டு ஒரு போட்டி தடை விதிக்கப்பட்டது. 2004 ம் ஆண்டு இவ்வகை குற்றத்துக்காக மற்றொரு இந்திய வீரர் ராகுல் டிராவிட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 
பாக்., ஆதிக்கம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் தான், அதிக அளவில் பந்தை சேதப்படுத்திய குற்றத்துக்கு உள்ளாகி உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கிரிக்கெட் அரங்கில் இதற்காக முதன் முதலில் தடையை எதிர்கொண்ட வீரர், பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ் தான். கடந்த 2000 ல் ஒரு போட்டியில் பங்கேற்க இவருக்கு தடை விதிக்கப்பட்டது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில், பாகிஸ்தான் வீரர் அப்ரிதி பந்தை கடித்து சேதப்படுத்தினார். இவர் மீதுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டு 2 சர்வதேச போட்டிகள் தடையை எதிர்கொண்டுள்ளார். 
"ரிவர்ஸ் ஸ்விங்' காரணம்:
பல்வேறு தண்டனைகள், வழங்கப்பட்டு வரும் நிøலியிலும், கிரிக்கெட் அரங்கில் பந்தை சேதப்படுத்துதல் தொடர்கிறது. இதற்கு பந்தை "ரிவர்ஸ் ஸ்விங்' செய்ய வேண்டும் என்பதே முக்கிய நோக்கம். இது பாரம்பரியமிக்க கிரிக்கெட் போட்டிகளுக்கு ஒரு களங்கமாக அமைந்து உள்ளன. தடை மற்றும் அபராதத்தை அதிகப்படுத்தும் பட்சத்தில், இச்சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் கட்டுப்படுத்த முடியும். 


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP