சமீபத்திய பதிவுகள்

மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்

>> Monday, May 31, 2010


அவினாசி : மழை பொழிய வேண்டி, அவினாசி அருகே குமாரபாளையத்தில் தவளைகளுக்கு திருமணம் செய்யப்பட்டது. குமாரபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் இந்த வினோத திருமணத்தில், தண்டுக்காரன்பாளையம், அவிநாயிபுதூர், தாளக்கரை, தொட்டியனூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். திருமணத்துக்காக இரு தவளைகள் தயாராக பிடித்து வைக்கப்பட்டிருந்தன.



நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு நிகழ்ச்சிகள் துவங்கின. கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, ஆண் மற்றும் பெண் தவளைக்கு தனியாக பச்சைத் தென்னை ஓலைகளால் குடிசை கட்டப்பட்டது. குமாரபாளையம் புதுக்காலனியினர் மணமகள் வீட்டாராகவும், பழைய காலனியினர் மணமகன் வீட்டாராகவும் இருந்தனர். திருமண நிகழ்ச்சியில் செய்யப்படுவதைப் போலவே நிச்சயதார்த்தம், முகூர்த்த கால் நடுதல் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் நடந்தன. நேற்று காலை 6 மணி முதல் மீண்டும் பூஜைகள் செய்யப்பட்டு, நாதஸ்வர மேளம் முழங்க 6.30 மணிக்கு பெண் தவளைக்கு, ஆண் தவளையை வைத்திருந்தவர் தாலி கட்டினார். மணமகள் தவளைக்கு சீதனமாக சிறிய மாலையும், துண்டு துணியும் அணிவிக்கப்பட்டது. திருமணத்தையடுத்து, இரு வீட்டாரும் மணமக்களுடன் ஊர்வலமாக தண்டுக்காரன்பாளையம் குளத்துக்குச் சென்றனர். முற்றிலும் வற்றிப் போய், செடி, கொடி, முட்புதர்களுடன் மண்டிக் கிடந்த குளத்திற்கு நடுவில், சிறிய குழி வெட்டி தண்ணீர் நிரப்பினர். மணமக்களுக்கு பூஜை செய்யப்பட்டு, தேங்காய், பழம் உடைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. கூடியிருந்த இரு வீட்டாரும் ஒரே குரலில், "மழை பெய்ய வேண்டும்' என்று கூறி, தவளைகளை அக்குழியில் விட்டனர். ஒரே "ஜம்ப்' அடித்த இரு தவளைகளும் அங்கிருந்து "எஸ்கேப்' ஆகிவிட்டன. மணமக்கள் வீட்டார் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கலைந்து சென்றனர்.



தவளைகளுக்கு திருமணம் நடத்தி வைத்த மணியாட்டி ரங்கசாமி கூறுகையில், ""கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், இதேபோல் மழை பெய்யவில்லை. உடனே தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தோம்; நன்றாக மழை பெய்து குளம் நிரம்பியது. அதே போல் இப்போதும் செய்தோம். எங்களது பிரார்த்தனையால், கண்டிப்பாக மழை பெய்யும் என்று நம்புகிறோம்,'' என்றார்.


source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

உணர்ச்சிப்பூர்வமான செம்மொழி மாநாட்டுப்பாடல் காணொளி


StumbleUpon.com Read more...

வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பினார்


பெங்களூரு: வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பினார். கொலை செய்ய வந்தவன் யார், இதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறது. "இச்சம்பவத்தில் தீய சக்திகளுக்கு தொடர்புள்ளது' என்று ரவிசங்கர் தெரிவித்தார்.பெங்களூரு கனகபுரா ரோட்டில், வாழும் கலையின் ஆசிரமம் உள்ளது. இங்கு ஒன்பது நாட்களாக ஆன்மிக நிகழ்ச்சி ஒன்று நடந்தது.


அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் : இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஒன்பதாவது நாளான நேற்று நிகழ்ச்சி முடிந்த பின், ரவிசங்கர் காரில் ஏறுவதற்காக வெளியில் வந்தார். அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ரவிசங்கரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இச்சம்பவத்தில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. தொடர்ந்து வந்த வினய் என்ற பக்தரின் கையில் துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டது.இதனால், ஆசிரமத்தில் பெரும் பரபரப்பும், பதட்டமும் காணப்பட்டது. பக்தர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டிலிருந்து ரவிசங்கர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.


உடனடியாக, அவர் பாதுகாப்பாக காரில் அழைத்துச் செல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பக்தர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.ரவிசங்கர் மிக அருகில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது, பக்தர்களை பாதித்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். சம்பவ இடத்திலிருந்து துப்பாக்கி குண்டை சுற்றியிருந்த கவர் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தையடுத்து, ஆசிரமத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.


"நான் நன்றாக உள்ளேன்; பக்தர்கள் கவலைப்பட வேண்டாம் : கர்நாடகா உள்துறை அமைச்சர் ஆச்சார்யா கூறுகையில், ""ரவிசங்கர் பத்திரமாக உள்ளார். ஆசிரமத்திற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. கர்நாடகா டி.ஜி.பி., அஜய்குமார் சிங் விரைந்துள்ளார்,'' என்றார்.இச்சம்பவத்திற்கு பின்னர் ரவிசங்கர் கூறுகையில், ""நான் நன்றாக உள்ளேன்; பக்தர்கள் கவலைப்பட வேண்டாம். ஆசிரமத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தீய சக்திகளுக்கு தொடர்புள்ளது. மீடியாவையும், பத்திரிகையாளர்களையும் இன்று சந்தித்து விளக்கமாகக் கூறுகிறேன்,'' என்றார்.


இது குறித்து ரவிசங்கரின் தனிச் செயலர் கிரிகோவிந்த் கூறுகையில், ""ரவிசங்கர் பத்திரமாக உள்ளார். துப்பாக்கிச் சூடு சம்பவத்தால், பக்தர்கள் அதிர்ச்சியடைய வேண்டாம். இந்த சம்பவத்தில் மர்ம நபர், 0.22 ரைபிளை பயன்படுத்தியுள்ளார்,'' என்றார்.


ஏற்கனவே பாதுகாப்பில் உள்ளார் : சம்பவம் குறித்து ராமநகரம் டி.எஸ்.பி., தேவராஜ் கூறுகையில் ; இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம் முதலில் எதுவும் கூற முடியாது . சம்பவ இடத்தில் போலீஸ் மோப்ப நாயுடன் , தடயவியல் நிபுணர்கள் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரமத்திற்குள் அனுமதி இல்லாமல் யாரும் நுழைய முடியாது. சுவாமிக்கு எவ்வதி அச்சுறுத்தலும் இல்லை அதே நேரத்தில் ஏற்கனவே பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. யார் வந்தது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


துப்பாக்கியால் சுட்டவன் யார் ? : ஆசிரமத்தில் நடந்து கொண்டிருந்த சஸ்தாங் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்பர். இந்த வளாகம் காம்பவுண்ட் சுவர் இல்லாதது. நிகழ்ச்சி முடிந்து வந்ததும் மர்ம மனிதன் சுட்டுள்ளான். துப்பாக்கியால் சுட்டவனை ஆசிரம பாதுகாவலர் மற்றும் பக்தர்கள் சேர்ந்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்தாகவும் ஆசிரம வட்டாரம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த மர்ம மனிதன் குறித்து எவ்வித தகவலையும் போலீசார் வெளியிடவில்லை.


அமைதியை பரப்புவதே என் லட்சியம் : தாக்குதலை கண்டு பயப்பட மாட்டேன் ; ரவிசங்கர் சிறப்பு பேட்டி : துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் ரவிசங்கர் நிருபர்களிடம் பேசினார். அவர் இன்று ( திங்கட்கிழமை ) பேட்டியின் போது கூறியதாவது ; நான் அமைதியையும், ஆன்மிகத்தையும் பரப்பி வருகிறேன் . இது தான் எனது இலட்சியம்.  எனக்கென எதிரிகள் யாரும் இல்லை. எனது ஆசிரமத்தில் நடந்த சஸ்தாங் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் தான் என் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் என நினைக்கிறேன். இந்த தாக்குதலுக்கான காரணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை. மற்ற மத ரீதியிலான அமைப்பினர் யாரும் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கவில்லை .


நான் என் மீது தாக்குதல் நடத்த வந்தவனை ஏற்கனவே மன்னித்து விட்டேன். தாக்குதல் நடத்த வந்தவனை என் ஆசிரமத்தில் சேர அழைக்கின்றேன். அஹிம்சையே எப்போதும் வெற்றி பெறும். இந்த நேரத்தில் பக்தர்கள் அமைதி காக்க வேண்டும். சில மக்கள் என் மீது தாக்குதல் நடத்த நினைக்கின்றனர். பொது நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். மிரட்டல் மூலம் எனது ஆன்மிக பணியை நிறுத்தி விட முடியாது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து பஜனை பாடல் பாடப்பட்டது. பின்னர் கையை அசைத்தபடி ஆசிரமத்திற்குள் புறப்பட்டு சென்றார்.


source:dinamaalr


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP