சமீபத்திய பதிவுகள்

சிஸ்டம் டிப்ஸ்...

>> Wednesday, June 2, 2010


* உங்கள் திரையில் பல விண்டோக்களைத் திறந்து வைத்து இயங்கிக் கொண்டிருக்கிறீர்களா? அனைத்தையும் மூடி திரையில் இருக்கும் ஒரு ஐகானைக் கிளிக் செய்திட விரும்புகிறீர்களா? விண்டோஸ்(Windows)  கீயை (கண்ட்ரோல் மற்றும் ஆல்ட் கீகளுக்கு நடுவே விண்டோஸ் படத்துடன் உள்ள கீ) அழுத்திக் கொண்டு அதனுடன்  கீயை அழுத்தவும். அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும். அய்யோ ! மீண்டும் அவை வேண்டுமே என்று எண்ணுகிறீர்களா? மறுபடியும் அதே போல அந்த இரண்டு கீகளையும் அழுத்துங்கள். மீண்டும் அவை கிடைக்கும்.



* உங்களுடைய சி டிரைவில் என்ன என்ன உள்ளன என்று அறிய ஆவலா? விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று சி டிரைவ் மீது கிளிக் செய்து அறிவது ஒரு வழி. டாஸ் கமாண்ட் பிராம்ப்ட் வரவழைத்து அதில் C:\  என டைப் செய்து என்டர் அழுத்தி அறிவது ஒரு வழி. இன்னொரு வழியும் உள்ளது. எக்ஸ்பி தொகுப்பில் விண்டோஸ் கீ அல்லது ஸ்டார்ட் அழுத்தி அதில் வரும் மெனுவில்Run கிளிக் செய்து அதில் கிடைக்கும் விண்டோவில் C என மட்டும் டைப் செய்து என்டர் அழுத்துங்கள். உடனே விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்பட்டு C டிரைவில் உள்ள போல்டர்கள் மற்றும் பைல்கள் காட்டப்படும். அல்லது \   என்ற பேக்ஸ்லாஷ் அமைத்து என்டர் தட்ட சி டிரைவ் பைல்கள் கிடைக்கும்.


* பைல்களை அழிக்கிறீர்கள். அவை எங்கே செல்கின்றன? ரீசைக்கிள் பின்னுக்குத்தான். இப்படியே அழித்துக் கொண்டு போகப் போக அவை அங்கு நிரம்பிக் கொண்டே இருக்கும். ஒரு நிலையில் என்ன பைல்களை எல்லாம் அழித்தோம் என்று தெரிய விரும்புகிறீர்களா? அல்லது நீக்கிய பைல்களை கம்ப்யூட்டரிலிருந்தே அழிக்க விரும்புகிறீர்களா? ரீசைக்கிள் பின் ஐகானில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Open என்பதனைக் கிளிக் செய்திடவும். இப்போது நீங்கள் அழித்த பைல்கள் தெரிய வரும். ஆனால் இவற்றை அங்கேயே கிளிக் செய்வதன் மூலம் படிக்க முடியாது. நீங்கள் மீண்டும் படிக்க விரும்பும் பைல்களை அந்த பைல் இருந்த டிரைவ் மற்றும் போல்டருக்குக் கொண்டு சென்ற பின்னரே படிக்க முடியும். இதற்கு மீண்டும் காண விரும்பும் பைலை செலக்ட் செய்து ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில்Restore என்ற பிரிவைக் கிளிக் செய்திட பைல் அதன் முந்தைய இடத்திற்குச் செல்லும். அங்கு சென்று அந்த பைலைத் திறந்து படித்துக் கொள்ளலாம்.



source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

ஜி போட்டோ ஸ்பேஸ்

 
கூகுள், தன் வாடிக்கையாளர்களுக்கு, போட்டோக்களைப் பதிந்து வைத்திட இடம் தருவதிலும், தனக்கென ஒரு தனி வழியைக் கையாண்டு வருகிறது. ஜி போட்டோ ஸ்பேஸ் எனத் தனியே ஒரு வசதியினை இதற்கெனத் தருகிறது. பயர்பாக்ஸ் பயன்படுத்துபவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்த, ஓர் ஆட் ஆன் தொகுப்பு தரப்பட்டுள்ளது.
போட்டோக்களை இணைய தளத்தில் வைத்து பாதுகாப்பது இன்று பரவலாகப் பலரும் பயன்படுத்தும் ஒரு வசதியாக மாறி வருகிறது. பல இணைய தளங்கள் போட்டி போட்டுக் கொண்டு இதற்கான வசதிகளைச் செய்து வருகின்றன. போட்டோக்களை அனைவரும் காணும் வகையிலோ அல்லது குறிப்பிட்ட சிலர் மட்டும் காணும் வகையிலோ பதிந்து வைக்கலாம். ஒவ்வொருவருக்கும் போட்டோக்களைப் பதிய தரப்படும் டிஸ்க் இடம், தளத்திற்கு தளம் மாறுபடுகிறது. ஜிமெயில் அக்கவுண்ட் உள்ளவர்கள் அனைவரும், கூகுள் தரும் ஜி போட்டோ ஸ்பேஸ் பகுதியினையும் பயன்படுத்தலாம். 
உங்களுக்கு போட்டோக்களை ஆன்லைனில் அனுப்புவதில் சிக்கல்களை எதிர் கொள்கிறீர்களா? அப்லோட் செய்வதில் பெரிய அளவில் பிரச்னைகளைச் சந்திக்கிறீர்களா? சேமிக்கும் இடம் அதிகமாக உங்களுக்கு வேண்டுமா? அதற்காக நீங்கள் பயன்படுத்தும் தளம் கூடுதல் கட்டணம் கேட்கிறதா? உங்கள் தனி நபர் சுதந்திரம் இந்த வகையில் பாதிக்கப்படுகிறதா?
அப்படியானால், நீங்கள் கூகுள் தரும் ஜிபோட்டோ ஸ்பேஸ் பயன்படுத்தத் தொடங்கலாம். கூகுள் தரும் கூடுதல் வசதிகளையும், அதற்கான பயர்பாக்ஸ் ஆட் தொகுப்பு குறித்தும் இங்கு காணலாம். கூகுள் தரும் ஜிபோட்டோ ஸ்பேஸ் வசதிக்கு எந்த நிலையிலும் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.
பயர்பாக்ஸ் எக்ஸ்டன்ஷன் மூலம் 50 போட்டோக்களை ஒரு தொகுப்பாக அப்லோட் செய்திடலாம். மற்ற எந்த இணைய அப்லோடிங் வசதியைக் காட்டிலும், இது ஐந்து மடங்கு வேகத்தில் அப்லோட் செய்கிறது.
பல தளங்கள், குறைந்த அளவே போட்டோக்களை சேமிக்க இடம் தருகின்றன. ஜிபோட்டோ ஸ்பேஸ் இதற்கென வரையறையை விதிக்கவில்லை. ஜிமெயிலுக்கு ஒதுக்கப்படும் 7 ஜிபி மற்றும் கூடுதல் இடம் தரத் தயாராய் உள்ளது. இணைய தளத்தில் பதிக்கப்படும் போட்டோக்களை மற்றவர்கள் பகிர்ந்து பார்ப்பதன் மூலம், உலகம் முழுவதும் உள்ள மக்கள் பார்த்துவிடுவார்களோ என்ற அச்சம் இருந்தால், ஜிபோட்டோ ஸ்பேஸ் அதனைத் தீர்க்கிறது. நீங்கள் உங்கள் தனிநபர் உரிமையை 100% பாதுகாத்துக் கொள்ளலாம். 
மேலும் விபரங்களுக்கும் தகவல்களுக்கும் http://www.gphotospace.com/features.html என்ற முகவரியில் உள்ள தளத்தினைப் பார்க்கவும்.


source:dinamalar
--
http://thamilislam.tk
 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP