சமீபத்திய பதிவுகள்

எக்ஸெல் 2010:

>> Wednesday, June 30, 2010

 


புதிய வசதிகள்சென்ற வாரம் ஆபீஸ் 2010 தொகுப்பில் உள்ள வேர்ட் தொகுப்பில் தரப்பட்டுள்ள புதிய வசதிகள் குறித்துப் பார்த்தோம். எக்ஸெல் தொகுப்பில் உள்ள புதிய வசதிகளில் குறிப்பிடத்தக்க சிலவற்றை இங்கு காணலாம். வேர்ட் தொகுப்பில் போலவே, எக்ஸெல் தொகுப்பிலும் சில வசதிகள் புதியதாகத் தரப்பட்டுள்ளன. 
இவற்றில் அனைவரையும் கவர்வது "Sparklines"  என்ற அம்சமாகும். இவை செல் அளவிலான சிறிய சார்ட்களாகும். இவற்றை ஒர்க்ஷீட்களில் பதிந்து, டேட்டா குறித்து அப்படியே காட்சிகளாக அமைக்கலாம். எடுத்துக் காட்டாக, கடை ஒன்றில் உள்ள சில பொருட்களின் ஸ்டாக் நிலைமை அறிய, அவை குறித்த சார்ட் ஒன்றை, ஒவ்வொரு பொருளுக்கும் தயார் செய்து அமைக்கலாம். இதனால், ஒர்க் ஷீட்டின் உள்ளே செல்லாமல், திறந்தவுடனேயே அவற்றை காட்சியின் மூலம் அறியலாம். 
அடுத்ததாக நாம் அறிய வேண்டியது "slicers" என்ற டூல் வசதி. இவை ஒர்க்ஷீட்டிலேயே பதியப்பட்ட ஆப்லெட்களாகும். இவற்றின் மூலம் டேட்டாவினை அலசிப் பார்த்து, வகைப்படுத்தி, குறிப்பிட்ட டேட்டாவிற்கு டேஷ் போர்டுகளை அமைக்கலாம். இந்த வசதியின் மூலமும் டேட்டாக்களை விசுவலாக ஒரு காட்சியாகக் காட்ட முடியும். 
அடுத்து தரப்படும் ப்ராஜக்ட் ஜெமினி ("Project Gemini")  என்பது, லட்சக்கணக்கில் நீங்கள் படுக்கை வரிசைகளை அமைத்து, அவற்றில் டேட்டாவினை செலுத்த இருப்பவர் களுக்கான டூல். இதனைத் தனியே டவுண்லோட் செய்து கொள்ள வேண்டும். இந்த ஆட் ஆன் புரோகிராம் இல்லாமல், லட்சக் கணக்கில் செல்களில் டேட்டாவினைக் கொண்டு சென்றால், ஒர்க்ஷீட் திணறிப் போகும்.
அடுத்ததாக நமக்கு எக்ஸெல் 2010ல் கிடைத்திருக்கும் வசதி கண்டிஷனல் பார்மட்டிங் டூலில் புதிய திருப்பு முனை. பார்முலா அல்லது செல் வேல்யூவிற்கு ஏற்ற வகையில் செல்லில் பார்மட்டிங் மேற்கொள்ளும்படி அமைத்திடலாம்.
ஜிமெயில் வழியே திருட்டு
இந்தியாவில் பிராட்பேண்ட் பயன்படுத்தும் அனைவருக்கும் ஏதேனும் ஒருவகையில் பிஷ்ஷிங் அட்டாக் எனச் சொல்லப்படும், திருட்டு மெயில்கள் நிறைய வந்து கொண்டிருக்கின்றன. சென்ற வாரம் புதன்கிழமை, ஜிமெயில் பயன்படுத்துவோர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு அதிகார பூர்வ கடிதம் கூகுள் நிறுவனத்திலிருந்து வருவது போல அனுப்பப்பட்டது. அதில் ஜிமெயில் சேவையை முழுமையான பாதுகாப்பு நிறைந்தததாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அதனால் ஜிமெயில் அக்கவுண்ட் உள்ளவர்கள் அனைவரும், வரும் ஏழு நாட்களுக்குள் தங்களுடைய யூசர் அக்கவுண்ட் மற்றும் பாஸ்வேர்டினை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இல்லை எனில் ஜிமெயில் அக்கவுண்ட்டினை இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடப்பட்டது. 
இது குறித்து கூகுள் நிறுவன அதிகாரியை விசாரித்த போது, கூகுள் எந்த நிலையிலும் இது போன்ற ஒரு கடிதத்தை அனுப்பாது என்றும், ஜிமெயில் வாடிக்கையாளர்கள் கவனத்துடன் இது போன்ற மெயில்களை ஒதுக்க வேண்டும் எனவும் கூறினார். இது குறித்த செய்தி ஒன்று http://mail.google.com/support/bin /answer.py?hl=en&answer=8253  என்ற முகவரியில் உள்ள தளத்தில் வெளியிட்டிருப்பதாகவும் கூறினார். இந்த வகை திருட்டு செய்திக்குப் பலியான மும்பை பள்ளி ஆசிரியை ஒருவர் தன் நெட் பேங்கிங் அக்கவுண்ட்டில் இருந்த ரூ.10 லட்சத்தை இழந்திருக்கிறார். எனவே இது போன்ற செய்திகள் எங்கிருந்து வந்தாலும், சற்று யோசித்து செயல்படுமாறு இன்டர்நெட் அண்ட் மொபைல் அசோசியேஷன் ஆப் இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.


 source:dinamalar


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP