சமீபத்திய பதிவுகள்

இணையம் தரும் இலவச டூல்கள்

>> Sunday, July 18, 2010

 


இணையத்தில் நம் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்பாட்டிற்குப் பல்லாயிரக் கணக்கில் இலவச புரோகிராம்கள் கிடைக்கின்றன. தொடர்ந்து பல தர்ட் பார்ட்டி டூல்கள் பதிக்கப்பட்டு கிடைக்கின்றன. அண்மையில் பார்த்த சில டூல்கள் குறித்து இங்கே தகவல்கள் தரப்படுகின்றன.
1. ஐகோ எப்.எக்ஸ்: ஐகான்களை உருவாக்கவும், இருப்பவற்றை எடிட் செய்திடவும் உதவும் ஒரு புரோகிராம். எளிதில் எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். விண்டோஸ் மற்றும் மேக் சிஸ்டங்களின் ஐகான்களை எடிட் செய்திடலாம். இதனுடைய இமேஜ் எடிட்டிங் டூல்ஸ், விண்டோஸ் பெயிண்ட் புரோகிராமில் உள்ளதைப் போல் தரப்பட்டுள்ளன. இதன் எடிட்டரில் ஒரு இமேஜை பேஸ்ட் செய்தால், அதனை ஐகானாக மாற்றும் வழிகளை இந்த புரோகிராம் நமக்குக் காட்டும். இதனுடைய டூல்ஸ் மெனு சென்றால், இந்த புரோகிராம் மூலம் நாம் எதனையெல்லாம் மேற்கொள்ளலாம் என்பதற்கு ஒரு பட்டியல் இடும். 1) விண்டோஸ் ஐகான்களை மேக் சிஸ்டத்திற்கான ஐகான்களாக மாற்றுவது, 2) மேக் ஐகான்களை விண்டோஸ் ஐகான்களாக மாற்றுவது, 3) இ.எக்ஸ்.இ. மற்றும் டி.எல்.எல். பைல்களிலிருந்து ஐகான்களைக் கண்டு இறக்குவது, 4) ஐ.சி.எல். ஐகான் லைப்ரேரிகளை உருவாக்கி நிர்வகிப்பது, 5) விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆகியவற்றிற்கு சுருக்கபட்ட பி.என்.ஜி. ஐகான்களை உருவாக்குவது மற்றும் 6) ஐகான்களை இ.எக்ஸ்.இ. பைல்களாக மாற்றுவது ஆகிய செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.
உங்கள் யு.எஸ்.பி. டிரைவ் அல்லது எச்.டி.டி.யிலிருந்து இதனை இயக்க வேண்டும் என்றால், கீழ்க்காணும் தளத்தில் உள்ள இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்திடவும்:http://icofx.ro/files/icofxpe.zip   அல்லது http://portableapps. com/apps/graphics_ pictures/icofx_portable என்ற முகவரி யிலும் போர்ட்டபிள் அப்ளிகேஷனைப் பெறலாம்.
2. டெக்ஸ்ட்டர் (Texter): டெக்ஸ்ட்டர் என அழைக்கப்படும் இந்த புரோகிராம், நாம் ஏற்படுத்தும் ஸ்பெல்லிங் தவறுகளைத் தானாக திருத்துகிறது. மேலும் சில வசதிகளையும் கொண்டுள்ளது. இதுவும் ஒரு போர்ட்டபிள் புரோகிராம். இந்த புரோகிராமில் சிறிய லைப்ரேரி ஒன்று தரப்பட்டுள்ளது. நாம் டைப் செய்திடும் ஒவ்வொரு சொல்லையும் தொடர்ந்து கண்காணிக்கிறது. நாம் எழுத்துப் பிழையுடன் ஒரு சொல்லை அமைக்கும் போது கண்டறிந்து திருத்துகிறது. இதைக் காட்டிலும் நாமே சில எழுத்துக்களின் சுருக்கத்தினைக் கொடுத்து அதற்கான விரிவாக்கத்தினை இந்த லைப்ரேரியில் அமைக்கலாம். அவை நாம் செட் செய்தபடி விரிவாகச் சொற்களைத் தரும். எடுத்துக்காட்டாக YF = Yours faithfully என அமைக்கலாம்.YF என டைப் செய்தால் இந்த புரோகிராம் அதனை Yours faithfully  என மாற்றும். இதனை டெக்ஸ்ட் ரிபிளேஸ்மென்ட் டூல் என அழைக்கின்றனர். இதுவரை நீங்கள் இது போன்ற டெக்ஸ்ட் எடிட்டர்களைப் பயன்படுத்தவில்லை என்றால், இதனை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். பெர்சனல் கம்ப்யூட்டரிலும், யு.எஸ்.பி. டிரைவிலும் வைத்து இயக்கலாம். இந்த புரோகிராம் எப்படி இயங்குகிறது என்ற விளக்கக் குறிப்பு எதுவும் இல்லை என்பது இதன் மைனஸ் பாய்ண்ட். இந்த டெக்ஸ்ட்டர், சிஸ்டம் ட்ரேயில் இருந்து செயல்படுகிறது. இதனால் எந்த அப்ளிகேஷன் புரோகிராமுடனும் இணைந்து செயல்படும்.
இதன் டெக்ஸ்ட் சப்ஸ்டிட்யூட் (Text Substitute) அப்ளிகேஷன், பல கீ ஸ்ட்ரோக்குகளையும் அதற்கான விரிவாக்கச் சொற்களையும் நினைவில் வைத்துக் கொள்கிறது.
Ctrl+Shft+H  அழுத்தினால் ஹாட் ஸ்ட்ரிங் சுருக்கம் மற்றும் விரிவாக்கத்தினை அமைக்கலாம். இவற்றை எப்போதும் எடிட் செய்து கொள்ளலாம்.
இதனை டவுண்லோட் செய்திட http://lifehacker.com/ software/texter/lifehackercodetexterwindows238306. php  என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
3. Everything: 'எவ்ரிதிங்' என்ற பெயருடன் உள்ள இந்த புரோகிராம், ஒரு அதிவேக பைல் தேடும் புரோகிராம். இது ஒரு போர்ட்டபிள் இலவச புரோகிராம். இந்த புரோகிராமின் சர்ச் விண்டோவில் இருந்தபடி, ஒரு பைலை அல்லது போல்டரைத் திறக்கலாம், காப்பி செய்திடலாம், நகர்த்தலாம்,வேறு பெயர் வைக்கலாம். இந்த புரோகிராமினை இன்னொரு பெர்சனல் கம்ப்யூட்டருக்கு மாற்றுகையில், இதனுடைய everything.exe என்ற பைலை மட்டும் காப்பி செய்தால் போதும். அடுத்த கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடுகையில், அதற்கான செட்டிங்ஸ் மற்றும் டேட்டா பேஸ் பைல்களைத் தானே உருவாக்கிக் கொள்ளும்.
இதன் ஒரு சிறப்பம்சம் என்னவெனில், உங்கள் கம்ப்யூட்டரின் டிரைவ் முழுவதையும் ஒரு சில விநாடிகளில் ஸ்கேன் செய்து தேடல் முடிவுகளைக் காட்டுகிறது. அப்போது முடிவுகளைக் காட்டும் திரை காலியாகவே இருக்கும்.
இதன் வேகத்திற்குக் காரணம், நாம் தேடலுக்கான சொற்களை அமைக்கையில், முதல் எழுத்து டைப் செய்திடுகையிலேயே தேடல் தொடங்கி, அடுத்த எழுத்துகளுக்கு தேடல் வேகமாகி, விரைவில் முடிவுகள் தரப்படுகின்றன. இதனை டவுண்லோட் செய்திட http://www.voidtools.com என்ற முகவரியுள்ள தளத்திற்குச் செல்லவும்.
4. பேப்பர்பஸ் (Paperbus) : இன்டர்நெட் தடைவிதிக்கப் பயன்படுத்தும் சென்சார்களையும், பார்க்க முடியாதபடி தடை செய்யப்பட்ட தளங்களையும் பார்ப்பதற்கு இந்த சிறிய புரோகிராம் உதவுகிறது. இன்டர்நெட்டில் நிறுவனத் தளங்களைப் பார்க்கையில், அரசு தளங்களில் உலா வருகையில், சில எல்லைகளைத் தாண்டி அந்த சர்வர்களில் உள்ள பெரும்பாலான தளங்களைப் பார்க்க முடியாது. இந்த தளத்தில் உள்ளதைக் காண உங்களுக்கு உரிமை இல்லை என்ற தகவல் காட்டப்படும். இந்த தடைகளைக் கடந்து, தளங்களைக் காண, 'பேப்பர் பஸ்' என்ற புரோகிராம் உதவுகிறது. இது ஒரு சிறிய, எளிய, வேகமாக இயங்கும் புரோகிராம். இதன் இன்னொரு சிறப்பு, இதனை இயக்கும் உங்களின் இணைய அடையாளம் எதனையும், இந்த புரோகிராம் மற்றவர்களுக்குக் காட்டாது. இதனைப் பெற http://paperb.us/ / என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.


source:dinamalar



--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

அர்த்தமுள்ள இந்துமதம் கொடுத்த கண்ணதாசன் மகள் விசாலி கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்

 Visali Kannadasan

மதுரை: மறைந்த கவியரசு கண்ணதாசனின் மகளான விசாலி கண்ணதாசன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார்.

கவியரசு கண்ணதாசனின் மகள் விசாலி. தந்தை வழியில் கவிதை எழுதுபவர், நல்ல பேச்சாளர். திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு டிவியில் நிகழ்ச்சி ஒன்றையும் வழங்கினார்.

இந்த நிலையில் விசாலி திடீரென கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார். சென்னை மயிலாப்பூரில் உள்ள குட் ஷெப்பர்டு ஆலயத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒயின், அப்பம் பெற்று கிறிஸ்துவ மதத்திற்கு மாறியுள்ளாராம் விசாலி. மேலும், தனது பெயரையும் ஜெனீபர் என மாற்றிக் கொண்டுள்ளார்.

அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலை எழுதியவர் கண்ணதாசன். இந்த நிலையில் அவரது மகள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
source:http://thatstamil.oneindia.in/news/2010/07/11/poet-kannadasan-conversion-christianity.html

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP