சமீபத்திய பதிவுகள்

இலவசமாகப் பயன்படுத்துங்கள்

>> Wednesday, August 11, 2010


ஒரு குறிப்பிட்ட வகை வேலையை, கம்ப்யூட்டரில் மேற்கொள்ள, நாம் ஒரே புரோகிராமினையே பயன்படுத்துகிறோம். அதற்குப் பழகிப் போனதால், மற்ற புரோகிராம்களை, அவை கூடுதல் வசதி,எளிமை மற்றும் வேகம் ஆகிய அம்சங்களைக் கொண்டிருந்தாலும், பயன்படுத்துவதில்லை. சில வேளைகளில், பல புரோகிராம்களை, விலைக்கு வாங்கிப் பயன்படுத்துகிறோம். அதே புரோகிராம் செய்து முடிக்கும் வேலையை, இலவசமாய்க் கிடைக்கும் சில புரோகிராம்கள் செய்கின்றன என்று அறியாமல் இருக்கிறோம். இந்த கட்டுரையில் பரவலாகப் பயன்படுத்தப்படும் புரோகிராம்களுக்கு இணையான, இலவச புரோகிராம்களும், அவற்றின் தன்மைகளும் பட்டியலிடப்படுகின்றன. இந்த புரோகிராம்களை அவற்றின் மூலம் மேற்கொள்ளும் வேலைகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டு தரப்படுகின்றன.
1. ஆபீஸ் சாப்ட்வேர்: இந்த தலைப்பு மிக எளிமையாக இருந்தாலும், ஆபீஸ் சாப்ட்வேர் மூலம் எந்தவிதமான கற்பனைத் திறன் கொண்ட பணியையும், மேற்கொள்ளலாம் என்பது கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் தெரியும். டெக்ஸ்ட் அமைக்கலாம்; நம் கற்பனைக்கேற்ப ஆப்ஜெக்ட்களைப் பதிக்கலாம்; கிராபிக்ஸ் மூலம் நம் கருத்துக்களை வெளிப்படுத்தலாம்; இன்னும் பல சிக்கலான பணிகளை மிக எளிதாக மேற்கொள்ளலாம். மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பு நாம் வாங்கும் பதிப்பின் அடிப்படையில் ரூ.3,000 முதல் ரூ. 12,000 வரையிலான விலையில் உள்ளது. இந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம்தான் முன்னோடி என்பது அனைவரும் அறிந்ததே. இந்த பிரிவில் உள்ள இலவச சாப்ட்வேர்களைப் பார்க்கலாம். 
1.1 ஓப்பன் ஆபீஸ் (Open Office) : மிக அருமையான இலவச அப்ளிகேஷன் புரோகிராம். வேர்ட் ப்ராசசிங், ஸ்ப்ரெட் ஷீட், பிரசன்டேஷன், கிராபிக்ஸ், டேட்டா பேஸ் மற்றும் இன்னும் பல வகையான வேலைகளை இதிலும் மேற்கொள்ளலாம். இது பல மொழிகளில் கிடைக்கிறது. அனைத்து விண்டோஸ் பதிப்புகளிலும் செயல்படுகிறது. லினக்ஸ் இயக்கத்திலும் செயல்படும். சன் சாப்ட்வேர் நிறுவனம் தயாரித்து அளிக்கும் இந்த சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்திப் பார்த்தால், நிச்சயம் இதனைத் தொடர்ந்து பயன்படுத்தும் எண்ணம் வரும். இதில், டேட்டா, இன்டர்நேஷனல் பார்மட்டில் அமைக்கப்படுவதால், அவற்றை அப்படியே மற்ற புரோகிராம்களிலும் பயன்படுத்தலாம். பல ப்ளக் இன் புரோகிராம்களும் இந்த தொகுப்பிற்குக் கிடைக்கின்றன. இவற்றிற்கான தகவல்களுக்கு http://extensions.services. openoffice.org// என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். 
1.2. ஐ.பி.எம். லோட்டஸ் சிம்பனி (IBM Lotus Symphony) : ஓப்பன் ஆபீஸ் தொழில் நுட்பத்தில் உருவான மிகச் சிறப்பான வசதிகளைத் தரும் இன்னொரு ஆபீஸ் சாப்ட்வேர். இதனை உருவாக்கித் தருவது ஐ.பி.எம். நிறுவனம். ஆனால் ஓப்பன் ஆபீஸ் பயன்படுத்தப் படுவது போல இது பயன்படுத்தப்படுவதில்லை. தரும் வசதிகளில் எந்த விதத்திலும் இது குறைந்ததில்லை. அடிப்படையில் இது Lotus Symphony Documents, Lotus Symphony Spreadsheets, Lotus Symphony Presentations ஆகிய மூன்று வசதிகளைத் தருகிறது. மேலும் தகவல்களுக்கு இணையத்தில் http://symphony .lotus.com/software/lotus/symphony/ plugin.nsf// என்ற முகவரிக்குச் செல்லவும். 
1.3. நியோ ஆபீஸ் (Neo Office) : இது மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்து பவர்களுக்கு மட்டுமே. மேக் சிஸ்டத்தில் வேர்ட் ப்ராசசிங், ஸ்ப்ரெட் ஷீட் மற்றும் பிரசன்டேஷன் புரோகிராம்கள் ஆகியவற்றை இந்த தொகுப்பு தருகிறது. இது ஓப்பன் ஆபீஸ் கட்டமைப்பில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
2. போட்டோ எடிட்டிங்: மொபைல் போன் பயன்பாடு வேகமாக அதிகரித்து வரும் இந்நாளில், மொபைல் போன் கேமராக்களினால், போட்டோக்கள் எடுப்பது சிறுவர்களுக்குக் கூட ஒரு கலை ஆர்வம் தரும் விஷயமாகிவிட்டது. இதனால், போட்டோ எடிட்டிங் மற்றும் அவற்றை நிர்வகிப்பது ஓர் அன்றாடத் தேவை ஆகிவிட்டது. போட்டோ எடிட்டிங் என்று வருகையில், கம்ப்யூட்டர் உலகில் அடோப் போட்டோ ஷாப் தன்னிகரில்லாத ஒரு அப்ளிகேஷன் சாப்ட்வேராக இடம் பெற்றுள்ளது. ஆனால் இதற்கான விலை ரூ.7,000 மற்றும் மேலாக உள்ளது. இந்த இடத்தில் பதிலியாக இருக்கக் கூடிய இலவச புரோகிராம்களைப் பார்க்கலாம்.
2.1. பெயிண்ட் டாட் நெட் (Paint.net)மைக்ரோசாப்ட் தரும் பெயிண்ட் புரோகிராமிற்கு இணையான வசதிகளை தரும் புரோகிராம் இது என்று கூறலாம். தொடக்கத்தில் இதனை மைக்ரோசாப்ட் ஆதரித்து, உருவாவதற்கு உதவி அளித்தது. போட்டோ எடிட்டிங் மேற்கொள்ள தேவையான அனைத்து ப்ளக் இன் வசதிகளையும் தருகிறது. பெயிண்ட் டாட் நெட் இயங்க, மைக்ரோசாப்ட் தரும் டாட் நெட் புரோகிராம் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கும், புரோகிராமிற்கும் http://www.getpaint.net/ என்ற முகவரியில் உள்ள தளத்தை நாடவும். 
2.2 ஜிம்ப் (GIMP)இந்த சுருக்குச் சொல் GNU Image Manipulation Program என்பதன் சுருக்கமாகும். போட்டோ டச் செய்வதற்கும், இமேஜ்களை எடிட் செய்வதற்கும் வெளியான முதல் இலவச புரோகிராம் இதுதான். அதிக செலவில் போட்டோ எடிட்டிங் டூல்களை வாங்க முடியாமல், மக்கள் தவித்த போது, இந்த புரோகிராம் வடிவமைக்கப்பட்டு இலவசமாக வழங்கப்பட்டு, பலரால் பயன்படுத்தப்பட்டது. இந்த புரோகிராமில் வழங்கப்பட்ட டூலான "Content Aware Fill" என்பதுதான், பல ஆண்டுகள் கழித்து, இப்போது அடோப் சி.எஸ். 5 சாப்ட்வேர் தொகுப்பில் "Resynth"  ப்ளக் இன் டூலாகத் தரப்பட்டுள்ளது. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்க எண்ணினால்http://www.vizworld.com /2010/05/comparingphotoshopcs5contentawarefillgimpresynth/ என்ற முகவரியில் உள்ள தளத்தைப் படிக்கவும். ஜிம்ப் புரோகிராம் பெற http://www.gimp.org/  என்ற முகவரிக்குச் செல்லவும். 
2.3. பிகாஸா (Picasa):  உங்களுடைய நோக்கம் போட்டோ எடிட்டிங் என்றால், நிச்சயம் இந்த புரோகிராமினை உங்கள் பார்வையில் இருந்து நீங்கள் தவறவிடக்கூடாது.http://www.picasa.com   என்ற முகவரியில் உள்ள தளத்தில் இதனைப் பெறலாம். மிக எளிமையான, அதிகத் திறன் கொண்ட புரோகிராம். இந்த புரோகிராம் கூகுளின் பிகாஸா ஆன்லைன் போட்டோ ஷேரிங் புரோகிராமுடன் இணைக்கப்பட்டுள்ளது. பிகாஸா புரோகிராம் மூலம், எடிட் செய்யப்பட்ட போட்டோக்களை நேரடியாக இணைய தளத்தில் ஏற்றலாம். 
2.4. இர்பான் வியூ (Irfanview): http://www.irfanview.com/ என்ற முகவரியில் கிடைக்கும் இந்த புரோகிராம் மூலமும் போட்டோ எடிட்டிங் பணியை மேற்கொள்ளலாம். பிகாஸா மூலம் மேற்கொள்ள முடியாத சில போட்டோ எடிட்டிங் பணிகளை இதன் மூலம் மேற்கொள்ளலாம்


source:dinamalar
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP