சமீபத்திய பதிவுகள்

காளி கோவில்களில் குவியும் இலங்கை அரசியல்வாதிகள்

>> Thursday, August 26, 2010

 கொழும்பு; இலங்கையில் உள்ள காளி கோவில்களில் திருவிழாக்கள் விமரிசையாக நடக்கின்றன. சிறுபான்மை தமிழர்களை கவருவதற்காகவும், துன்பத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், காளி கோவில்களில் மனம் உருக வழிபாடு நடத்தி வருகின்றனர், இலங்கை அரசியல்வாதிகள்.

ஆடி மாதம் என்றாலே நம்ம ஊரில் அம்மன் கோவில்கள் களை கட்டும். இங்கு மட்டுமல்ல, இலங்கையிலும் இந்த நடைமுறை உண்டு என்பது தான் ஆச்சர்யமான விஷயம். நம்ம ஊரில் ஆடி முடிந்ததும், அம்மன் கோவில்களில் விசேஷம் முடிந்து விடும். இலங்கையில் ஆடியைத் தாண்டி, ஆவணியிலும் காளி கோவில்களில் ஒரே திருவிழா மயம் தான். காளி கோவில்களில் மிருகங்கள் பலியிடுவதற்கு கடந்த மூன்று ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு அதைப் பொருட்படுத்தாமல், கொழும்பு, சின்லா பகுதியில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் மிருகங்களை பலிகொடுக்கப்போவதாக அறிவித்துள்ளனர். அங்குள்ள தமிழர்களால், இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் இலங்கையில் சிறுபான்மையினர். மேலும், அங்கு நீண்ட காலமாக நடந்து வந்த உள்நாட்டு போர் நடந்து முடிந்த நிலையில், சர்வதேச நாடுகளின் கவனம் இலங்கை பக்கம் திரும்பியுள்ளது. தமிழர்களுக்கான நிவாரணப் பணிகள் முறையாக நடக்கின்றனவா என, கேள்வி எழுப்பப்படுகிறது.


எனவே, காளி கோவில் திருவிழாக்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த துவங்கி விட்டனர், இலங்கை அரசியல்வாதிகள். துன்பத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கும் காளி கோவில்களில் மனம் உருக வழிபாடு நடத்துகின்றனர். தமிழர்களுக்காக எதையும் செய்யவில்லை என, புகார் கூறும் அரசியல் எதிரிகளின் வாயை அடக்குவதற்காக, காளி கோவில்களுக்கு படை எடுக்க துவங்கி விட்டனர். இதில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதம் இல்லை. இதற்கு அதிபர் ராஜபக்ஷேவும் விதி விலக்கு அல்ல. சமீபத்தில் கொழும்பில் உள்ள மயூர்பதி பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு வந்தார், ராஜபக்ஷே.


கண்களை மூடிய நிலையில், கைகளை கூப்பிக் கொண்டு காளி அம்மன் சிலை முன், பக்தி பரவசத்துடன் மனம் உருக வேண்டினார். தனது நெற்றியில் வைக்கப்பட்ட குங்குமத்தையும் தலையை குணிந்து, அடக்கத்துடன் ஏற்றுக் கொண்டார். ராஜபக்ஷேவின் அரசியல் எதிரியான, இலங்கை ராணுவ முன்னாள் தளபதி பொன்சேகாவின் மனைவி அனோமாவும், அடுத்த சில நாட்களில் மாதேரோவில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் ஆஜராகி விட்டார். தேங்காய் உடைத்து, பக்தி பரவசத்துடன் காளி அம்மனை வேண்டிக் கொண்டார். தொடர்ந்து காளி அம்மன் கோவில்களை நோக்கி, இலங்கை அரசியல்வாதிகள் படையெடுத்து வருகின்றனர்.


source:dinamalar
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

செட்டிநாட்டு இறால் வறுவல்-செட்டிநாட்டுச் சமையல்



தேவையானப் பொருட்கள்:


இறால் - 1/4 கிலோ கிராம்
வெங்காயம் - 2 பெரியது ( நறுக்கிக்கொள்ளவும் )
பூண்டு - 10 பெரிய பல்
சோம்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
தக்காளி - 2 பழம்
தேங்காய் - கால் மூடி ( துருவியது)
உப்பு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி - ஒரு விரலளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கையளவு
வத்தல் மிளகாய் - 20 பெருசு




செய்முறை:



பூண்டையும் இஞ்சியையும் நன்கு அரைத்துக் கொள்ளவும் , வெங்காயம் நீளவாக்கில் வெட்டிக் கொளவும்.தோல்,ஓடு நீக்கிய இறாலை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். ( தூயா அளவுக்கு ரொம்ப கழுவினால் இறால் காணாமல் போய்விடும் வாய்ப்புள்ளது  )

தேங்காய் துருவலையும் 15 வத்தல் மிளகாயையும் சோம்பு,சீரகத்துடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்
வாணலியில் கொஞ்சம் எண்ணை விட்டு வெங்காயம் கொஞ்சம் கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறத்துக்கு வந்தபின் தங்காளியை துண்டங்களாக்கி போட்டு வதக்கவும்.

இறாலையும் மஞ்சள்தூளையும் சேர்த்து பிசறி வாணலியில் போட்டு 5 நிமிடம் வதக்கவும். அப்படியே மறக்காமல் கொஞ்சமா தண்ணிவிட்டு அரைத்து வைத்துள்ள பூண்டு இஞ்சி விழுதையும் தேங்காய், வத்தல் கூட்டணியையும் சேர்த்து நீர் வற்றும் வரை கிளறவும்.

இறாலில் மசால் பிடித்தவுடன் தாளிக்கிற கரண்டியில் சிறிது எண்ணைவிட்டு 5 வத்தல் மிளகாயை வெட்டிபோட்டு கொஞ்சம் கறிவேப்பிலை தூவி தாளிக்கவும், தாளித்தபின் அதனை இறக்கி வைத்துள்ள இறால் வறுவலின் மேல் .ஊற்றி சிறிது நேரம் கழித்து பறிமாறவும்

source:dinakaran

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP