சமீபத்திய பதிவுகள்

பிஜே யுடன் நேரடி விவாதம்-சாக்சி

>> Thursday, August 18, 2011



கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளுக்கு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த இடைபட்ட நாற்களில் நடைப்பெற்ற முக்கிய சம்பவங்களை உங்களுக்கு விவரித்துச்சொல்லுவதற்கு ஆவலாக உள்ளேன். முதலில் SAN பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.( http://sakshitimes.org/ )இது ஒரு அனைத்து கிறிஸ்தவர்களின் கூட்டமைப்பு.இதில் பலர் இணைந்து ஆண்டவரின் நாமத்தை உலக்குக்கு அறிவித்து வருகிறார்கள்.இதில் இஸ்லாமியர்களுடனான விவாதப் பிரிவு ஜெர்ரி தாமஸ் என்பவர் உடபட அநேகரை கொண்டு செயல்படுகிறது.இது கிறிஸ்தவ சபைகளின் கீழ்(அதாவது ஆதரவுடன்) இயங்கும் சுயாதீன அமைப்பு.


இந்த அமைப்பின் மூலம் செய்யப்பட்டது என்ன?


"டாக்டர் ஜாகிர் நாயக் /எம். எம். அக்பர் விவாதம் புரிய மறுக்கிறார்கள்:" 

 கேரளாவிலும் ,ஆந்திராவிலும் கிறிஸ்தவ சபைகளுக்கு சவாலாக விளங்கிய இஸ்லாமிய தாவா பிரச்சாரகர்களின் வாதஙக்ளுக்கு விளக்கம் அளித்தது(http://www.sakshitimes.org/index.php?option=com_content&task=view&id=545&Itemid=62 ) ,பல இடங்களில் விவாதக்கூட்டங்களை நடத்தி நேரடி விவாதங்களில் கலந்துக்கொள்ளுவது (http://www.sakshitimes.org/index.php?option=com_content&task=view&id=554&Itemid=62 )போன்ற செயல்பாடுகளால் அந்த மாநிலங்களில் உள்ள தாவா பிரச்சங்கிகளின்(இதர மார்க்கத்தார்களை இஸ்லாமுக்கு வரும் படி அழைக்கும் இஸ்லாமியர்கள்) கிறிஸ்தவ எதிர் தாக்குதல்களை முறியடித்தது.மேலும் பல இஸ்லாமிய நண்பர்களால் பெருமையுடன் அறிமுகப்படுத்தப்படும் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களை விவாதத்துக்கு அவர்கள் அலுவலகத்துக்கே சென்று அழைப்புக்கடிதம் கொடுத்து அழைத்தார்கள்.ஆனால் செல்லாத பல காரணங்களை சொல்லி டாக்டர் ஜாகிர் நாயக் தட்டிக்கழித்துவிட்டார்.(http://www.sakshitimes.org/index.php?option=com_content&task=view&id=537&Itemid=42) இது போலவே கேரளாவின் தாவா பிரசங்கி எம் எம் அக்பர் விவாதம் செய்ய ஒப்புக்கொண்டுவிட்டு பின்பு விவாதத்திற்கு வரவில்லை(http://www.sakshitimes.org/index.php?option=com_content&task=view&id=308&Itemid=42&limit=1&limitstart=1).இதெல்லாம் பழைய கதைகள்.ஆனால் இது அறியாத பல தமிழ் இஸ்லாமிய நண்பர்கள் நேரடி விவாத்த்திற்கு கிறிஸ்தவர்கள் வரமாட்டார்கள் என்று முடிவு செய்து அதை பிரச்சாரமாக்கிவிட்டார்கள். உமர் அண்ணா போன்ற சில நண்பர்கள் நேரடி விவாத்த்தை தவிர்க்கிறார்கள்.இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்.அவர்களை நிர்பந்திக்க முடியாது.ஆனால் என்னைப்பொருத்தவரை நேரடி விவாதம் சாத்தியமானதே.இதற்காக பல வருடங்கள் ஜெபித்து வருகிறேன். கடந்த சில நாட்கள் முன்பு சாக்சி அமைப்பின் நிர்வாகிகளிடம் சில இஸ்லாமிய நண்பர்கள் விவாத அறைகூவல் விட்டனர்.இதை சாக்சி ஏற்றுக்கொண்டவுடன் உடனடியாக TNTJ விடம் அறிமுகப்படுத்தப்பட்டனர்.முதல் அறிமுகத்துக்காக TNTJ மாநில அலுவலத்துக்கு சென்றனர் சாக்சி நிர்வாகிகள்.ஆனால் அங்கு வீடியோ சகிதம் TNTJ அமைப்பினர் சகோதரர் பி.ஜெய்னூல் ஆபிதீன் அவர்கள் தலைமையில் ஒரு விவாத ஒப்பந்த நிகழ்ச்சியாக அதை மாற்ற முடிவு செய்தனர்.இதை எதிர்பார்காத சாக்சி கொஞ்சம் சுதாரித்து பின்பு பேச ஆரம்பித்தனர்.பல நிபந்தனைகளோடு TNTJ அமைப்பினர் பேச ஆரம்பித்தனர்.ஆனால் அவைகளை ஏற்றுக்க்கொள்ளும் அதிகாரம் அந்த குழுவுக்கு முழுமையாக இல்லை.காரணம் TNTJ எதை சொல்ல வருகிறது என்பதை தெரிந்துகொள்ளவே வந்திருந்ததால் அவர்கள் விவாத ஒப்பந்த அதிகாரம் பெற்றிருக்கவில்லை.இரண்டாவது மொழிப்பிரச்சனை.சாக்சி அமைப்பில் தலைமை ஏற்று வந்திருந்த அஜய் அவர்களுக்கு தமிழ் முழுமையாக புரியாது.அவர் ஆங்கிலத்திலேயே அதிகம் பேசக்கூடியவர்.TNTJ ல் பி.ஜே அவரகள் தமிழில் பேச அதை அஜய் அவரக்ளுடன் வந்தவர்கள் மற்றும் சகோதரர் கலீல் ரசூல் அவர்கள் ஆகியோர் ஆங்கிலத்தில் சொல்லிவந்தனர்.ஆனாலும் அந்த பேச்சு முழுமை அடையவில்லை.மீண்டும் மெயில் மூலம் பேசி ஒப்பந்த தேதி அறிவிக்கலாம் என்ற நிபந்தனைகளோடு சாக்சி குழுவின் சந்திப்பு அன்று முடிவடைந்தது". இந்த வீடியோ தொடுப்பு : http://www.youtube.com/watch?v=69eOnVeh3Q8 இதன் பின் சில மெயில் பரிமாற்றங்கள் நடைபெற்றன.அதில் TNTJ வின் நிபந்தனைகள் சரியானது அல்ல என்று சாக்சியால் சொல்லப்பட்டது.ஆனால் TNTJ அது தங்களின் நிலைபாடு என்றது.இதன் பின் TNTJ அனுப்பிய ஒரு மெயில் சாக்சியால் தவறவிடப்பட்டது.அதில் TNTJ குறிப்பிட்ட தேதியை அறிவித்து அந்த தேதிக்குள் சில நிபந்தனைகள் வைத்து இல்லையென்றால் சாக்சி விவாதத்தில் இருந்து ஓடிவிட்டது என்று வெளியிடுவோம் என்று அறிவித்திருந்தது.ஆனால் இணையத்தில் இந்த செய்தி வெளியானவுடன் சாக்சி தனது தரப்பு நிலையை விளக்கியது.ஓட்டம்பிடித்தார் என்று போடவேண்டிய அவசியம் என்ன?எங்களின் மற்ற உறுப்பினர்களின் மெயில் ஐடி மற்றும் போன் நம்பர் இருந்தும் இந்த விசயத்தில் இவ்வளவு அவசரம் காட்ட வேண்டியதில்லை என்ற கேள்வியுடம்(இடையில் சில வாக்குவாதங்கள் மெயிலில் நடந்தது அவைகளை உஙக்ளுக்கு தொடுப்புக்கொடுக்கிறேன்.அதில் படித்துக்கொள்ளவும். http://www.sakshitimes.org/index.php?option=com_content&task=view&id=555&Itemid=42 )ஒப்பந்த அமர்வுக்கு தேதி கேட்டு மெயில் அனுப்பியது.TNTJ தரப்பில் ஜூன் மாதம் 3 ந்தேதி அளிக்கப்பட்டது.

  "TNTJ மற்றும் SAN(சாக்சி) விவாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது:"

 இதற்கிடையில் நேரடி விவாத ஆர்வத்தில் இருந்த எனக்கு சாக்சியில் தொடர்பு கிடைத்தது.அதினால் விவாத ஒப்பந்தம் செய்ய பொறுப்பெடுத்துக்கொண்டு சகோதரர் அஜய் அவர்கள் தலைமையில் TNTJ அலுவலகத்துக்கு சென்றோம்.மாலை 3 மணிக்கு சென்ற நாஙகள் சகோதர் பி.ஜெய்னூல் ஆபிதீன் அவர்கள் தலைமையில் இருந்த TNTJ அணியினருடன் இரவு 12.30 மணிவரை விவாதத்திற்கான இறுதி ஒப்பந்த வடிவத்தை கொண்டு வந்தோம்.கடைசியில் எல்லாம் முடிந்து விட்டது என்ற நிலையில் பி.ஜே அவர்கள் எங்களிடம் விடைபெற்றார்கள்.நாங்கள் அமர்ந்து ஒப்பந்தத்தை தமிழில் டைப் செய்துவந்த TNTJ சகோதரர்களுடன் பேசிய படியே வாரகடைசி நாட்களான சனி ஞாயிறு ஆகிய கிழமைகளின் நேரத்தை குறிக்கும் பொழுது ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்து எங்களால் முடியாது வேண்டுமானால் வெள்ளி,சனி கிழமை வைக்கலாம் என்று எங்கள் தரப்பில் கேட்கப்பட்டதற்கு TNTJ தரப்பு மறுத்துவிட்டது.உடனே பி.ஜே அவர்களுக்கு போன் செய்து இது தொடர்பாக பேசப்பட்ட பொழுது அவர் ஞாயிறு மதியம் 2 மணியில் இருந்து இரவு 11 மணிவரை விவாதிக்கலாம் என்ற செய்தியை சொன்னார்.ஆனாலும் நேரத்தை தவிர அனைத்து விவரங்களும் முடிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில் இது எங்கள் சபைத்தலைவர்களிடம் கலந்துரையாடிவிட்டு அதை உறுதி செய்கிறோம் அதற்குள் விவாத ஒப்பந்த வரைவை மெயில் செய்ய கேட்டுக்கொண்டு விடைபெற்று அங்கிருந்து கிளம்பினோம்.(இவை அனைத்தும் இரண்டு தரப்பாரும் வீடியோவில் பதிவு செய்துள்ளோம்.கர்த்தருக்கு சித்தமானால் சீக்கிரம் வெளியிடப்படும்).இது நடைபெற்றது ஜூன் 3 தேதி. இதன் பின் பல மெயில் பரிமாற்றத்திற்கு(அவைகள் அனைத்தும் இந்த இணைப்பில் உள்ளதுhttp://www.sakshitimes.org/index.php?option=com_content&task=view&id=555&Itemid=42 ) பிறகு மீண்டும் ஜூன் 3 தேதி உறுதி செய்யப்பட்ட விவாத நிபந்தனைகளை ஒப்பந்தமாக்கி கையெழுத்து இட ஜூலை 29 தேதி TNTJநேரம் ஒதுக்கியது.அன்று மாலை 5 மணிக்கு சென்ற நாங்கள் அடுத்த நாள் அதிகாலை ஏறக்குறைய 4 மணிவரை உட்கார்ந்து விவாத ஒப்பந்தத்தை கையெழுத்திட்டோம்..(இதில் முக்கியமானவை இரண்டு தரப்பாரும் வீடியோவில் பதிவு செய்துள்ளோம்.கர்த்தருக்கு சித்தமானால் சீக்கிரம் வெளியிடப்படும்).அதை பதிவிறக்க இந்த தொடுப்பில் செல்லவும்.படிக்க மட்டும் இந்த தொடுப்பில் செல்லவும்.ஜூன் 3 தேதியில் இருந்து ஜூலை 29 வரை இந்த செய்தி TNTJ வால் தங்கள் இணைய தளத்தில் வெளியிடப்படவில்லை.அதற்கு பல வேலை பளுவால் இதை செய்ய முடியவில்லை என்ற விளக்கம் TNTJவால் தரப்பட்டது. தொடர்ந்து நேரடி விவாதத்தில் ஆர்வமுள்ள கிறிஸ்தவர்கள் எங்களோடு இணைய உங்களை அழைக்கிறோம்.இமெயில் ஐடி:mycoimbatore@gmail.com எல்லோரும் விவாதம் செய்ய வேண்டும் என்பதில்லை.நாம் இணைந்து கர்த்தரின் இராஜ்ஜியத்தைக்கட்டுவோம் வாருங்கள்.ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பராக.தொடர்ந்து ஜெபியுங்கள்.கர்த்தருடைய விலையேறப்பெற்ற நாமம் மகிமைப்படுவதாக.ஆமேன். source:www.tamilchristians.com

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP