சமீபத்திய பதிவுகள்

மோடிக்கு தொப்பி போடும் முடற்சி தோல்வி:இமாம்கள் ஏமாற்றம்

>> Thursday, September 22, 2011மும்பை : குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நாட்டில் அமைதி, ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கதிற்காக மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். விழா மேடையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் முஸ்லீம்களும் குழுமியிருந்தனர். அவ்விழாவில் ஒரு பள்ளிவாசலின் இமாம் மோடிக்கு தலையில் முஸ்லீம் மதகுருக்கள் அணியும் தொப்பியை அணிவிக்க முயன்ற போது மோடி அதை மறுத்தது சர்ச்சைக்குள்ளானது.

 

இது குறித்து சிவசேனாவின் பத்திரிகை சாம்னா தன் தலையங்கத்தில் முஸ்லீம்களை திருப்திபடுத்துவதற்காக காங்கிரஸ் தலைவர்கள் தொப்பி அணிவதாகவும் மோடியோ அதை மறுத்ததன் மூலம் தொப்பி கலாச்சாரத்தில் விழவில்லை என்றும் பாராட்டி உள்ளது. மேலும் இப்தார் விருந்துகளில் தொப்பி அணிந்து கொண்டு காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்வதையும் கண்டித்துள்ளது.

அத்தலையங்கத்தில் மேலும் மோடி இதே போக்கை கடைபிடித்தால் டெல்லியை நோக்கி செல்லும் மோடியின் குதிரை விரைவில் இலக்கை அடையும் என்றும் எழுதியுள்ளது. ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் தான் மதசார்பற்றவராக மோடி நடத்தும் நாடகமே உண்ணாவிரதம் என்றும் இந்துக்களின் வாக்கு வங்கி மூலம் ஆட்சிக்கு வந்த மோடி மதசார்பின்மை விஷத்தை இந்துக்களுக்கு கொடுக்க கூடாது என்றும் கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மஹாராஷ்டிராவுக்கு அடுத்து குஜராத் தான் இந்துத்துவாவின் சோதனை சாலை என்றும் கூறப்பட்டுள்ளது.


sourcr:dinamalar


--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP