சமீபத்திய பதிவுகள்

பவர்பாய்ண்ட்: ஆப்ஜெக்ட், படங்களைச் சுழற்ற

>> Monday, February 7, 2011


பவர்பாய்ண்ட் ஸ்லைட் ஒன்றில் டெக்ஸ்ட்டுடன் ஆப்ஜெக்ட்கள் எனப்படும் கூடுதல் படங்கள், உருவங்களை வைக்கிறோம். இவற்றை நம் விருப்பப்படி சுழற்றி குறிப்பிட்ட கோணத்தில் வைக்க முயற்சிப்போம். ஆப்ஜெக்டைத் தேர்ந்தெடுத்து வலது புறமாகச் சாய்த்து வைக்க முயற்சிக்கையில், நாம் எதிர்பார்க்கும் வழியில் அமையாமல் அது செல்லலாம். இதனைத் தவிர்த்து நம் விருப்பப்படி அவற்றை அமைப்பதற்குத் தேவையான வழிகளை இங்கு காணலாம்.
1. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்ஜெக்டைச் சுழற்ற முயற்சிக்கையில், ஷிப்ட் (Shift) கீயை அழுத்தியவாறு இருந்தால், 15 டிகிரி அளவில் அவற்றைத் துல்லியமாகச் சுழற்ற முடியும். 
2. பார்மட் டேப்பில் Rotate in the Arrange group என்பதில் கிளிக் செய்தால், குறிப்பிட்ட நிலையில் சுழற்ற வழி கிடைகும். பவர்பாய்ண்ட் 2003ல், பிக்சர் டூல்பாரில் Rotate என்பதில் கிளிக் செய்தால், இந்த விளைவினை மேற்கொள்ளலாம்.
3. குறிப்பிட்ட ஆப்ஜெக்டை ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Format என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது பார்மட் டேப் தேர்ந்தெடுத்து, அதில் கிடைக்கும் குடித்ஞு Size group-ல், Dialog launcher என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு இடது புறம் உள்ள பிரிவில், Size மீது கிளிக் செய்திடவும். இதில் உள்ள Rotation control –ல், சுழலுவதற்கான எண் மதிப்பை(value)த் தரவும். இந்த வேல்யூ + ஆக இருந்தால், சுழற்சி கடிகார சுழற்சியில் இருக்கும். அதுவே - மதிப்பாக இருந்தால், சுழற்சி கடிகார சுழற்சியின் எதிர்புறமாக இருக்கும். இதனையே 0 ஆகக் கொள்கையில், ஆப்ஜெக்ட் அதன் பழைய நிலையில் தக்க வைக்கப்படும். (சுழலுவதற்கான ஹேண்டிலுடன் போராடுவதற்கு இதி எளிதல்லவா!). இத்துடன், எந்த அளவில் சுழற்சியை மேற்கொண்டாலும், அதனை நீக்க, [Ctrl]+Z கீகளை எப்போதும் அழுத்தலாம். 
4. மிர்ரர் இமேஜ் வேண்டும் எனில், ஆப்ஜெக்ட் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், Format object என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு குடித்ஞு Size group -ல், Dialog launcher என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு 3D Rotation என்பதனைத் தேர்ந்தெடுத்து, அதில் X மதிப்பை 180 எனத் தரவும். பின்னர் இடூணிண்ஞு என்பதில் கிளிக் செய்தால், உடன் மிர்ரர் இமேஜ் கிடைக்கும். 

 


source:dinamalar


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP