சமீபத்திய பதிவுகள்

மு.க., ஸ்டாலின் கைது- பஸ்கள் ‌கண்ணாடி நொறுக்கப்பட்டன.

>> Friday, July 29, 2011


திருவாரூர்: தி.மு.க., மாவட்ட செயலர் பூண்டி கலைவாணனை கைது செய்ய வந்த போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்த மாஜி துணை முதல்வர் மு.க., ஸ்டாலின், மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் மற்றும் தி.மு.க,வினரை போலீசார் கைது செய்தனர். இதனால் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பதட்டம் நிலவுவதால் போலீசார் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளனர். 
சேலம் மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில், இன்று 3 வது நாளாக கையெழுத்து போட வந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தைப் போலீசார் மீண்டும் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்ட வீரபாண்டியை கோவை மத்திய சிறையில் அடைக்க போலீசார் கொண்டு செல்கின்றனர். சுபம் மெட்ரிகுலேஷன் பள்ளிக்குச் சொந்தமான நிலத்தை வாங்கியது தொடர்பான வழக்கில் இவர் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. போலீஸ் நிலையம் முன் கூடியிருந்த தி.மு.க.,வினர் இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். போலீசாருடன் தி.மு.க.,வினர் மோதலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட வீரபாண்டி ஆறுமுகம், உடனடியாக நீதி மன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சேலம், அங்கம்மாள் காலனி நிலம் மற்றும் பிரீமியர் மில் நில அபகரிப்பு வழக்கில், முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திடம், ஐகோர்ட் உத்தரவுப்படி, மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில், 3 நாள் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பின், சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, "மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீஸில், தினமும் காலை 8 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டார். அந்த உத்தரவில், எத்தனை நாள் ஆஜராகி, கையெழுத்துப் போட வேண்டும் என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை.


அதன்படி, முதல் நாளான 28ம் தேதி காலை 8 மணிக்கு ஆஜராக வேண்டிய வீரபாண்டி ஆறுமுகம், 10 நிமிடம் காலதாமதமாக, காலை 8.10 மணிக்கு ஆஜரானார். இந்த காலதாமத்துக்கு எழுத்துப்பூர்வமாக விளக்கம் தரும்படி போலீசார் வலியுறுத்தினர். அதனால், வீரபாண்டி ஆறுமுகம் டென்ஷனானார். 2வது நாளான நேற்று, வீரபாண்டி ஆறுமுகம், 10 நிமிடத்துக்கு முன்னதாகவே, காலை 7.50 மணிக்கு, காரில் ஸ்டேஷனுக்கு வந்து இறங்கினார். 100 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஸ்டேஷனுக்குள், 7.51 மணிக்கு நுழைந்த வீரபாண்டி ஆறுமுகம், 9 நிமிடம் நாற்காலியில் அமர்ந்தபடி காத்திருந்தார். சரியாக 8 மணி ஆனதும், வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டு, 8.01 மணிக்கு வெளியே வந்தார். திரண்டிருந்த தி.மு.க.,வினர், வீரபாண்டி ஆறுமுகத்தை வாழ்த்தியும், அரசுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். அப்போது, சிரித்த முகத்தோடு போலீசார், 8.05 மணிக்கு வீரபாண்டி ஆறுமுகத்தை வழியனுப்பி வைத்தனர்.


3வது நாளாக அவர் கையெழுத்திட வந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர். இந்நேரத்தில் போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


2பஸ்கள் உடைப்பு : இவரது கைதுக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க., தொண்டர்கள் சில இடங்களில் பஸ்கள் மீது கல்வீசி தாக்கினர். கலெக்டர் ஆபீஸ் மற்றும் அரசு ஆஸ்பத்திரி அருகே 2 பஸ்கள் ‌கண்ணாடி நொறுக்கப்பட்டன. இதனையடுத்து நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.



தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கைது : சென்னை திரு‌வல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் திடீரென கைது‌ செய்யப்பட்டார். கைதான அன்பழகன் தென்சென்னை மாவட்ட தி.மு.க.செயலாளர் ஆவார். இவர் தியாகராயநகரில் உள்ள அவரது வீட்டில் இரு்ந்த போது போலீசார் வரை அதிகாலையில் கைது செய்தனர். நிலவிவகாரம் தொடர்பாக உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த மில் அதிபர் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதற்காக அவர் திருப்பூர் அழைத்து செல்லப்படுகிறார்.


source:dinamalar


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP