சமீபத்திய பதிவுகள்

இளசுகளின் இன்னொரு கிக் முகம்!

>> Friday, August 5, 2011


   




         சென்னை மெரினா பீச். ஜொள்ளென்ற காற்று ஸாரி...  ஜில்லென்ற காற்று மனசை வருடிக் கொண்டிருந்தது. கடல் அலைகள் சலசலக்கும் சத்தத்தையும் மீறி அந்த பையனும் பொண்ணும் ஏதோ பேசிக்கொண்டிருப்பது நம் காதில் வந்து விழுந்தது. """ச்சே... நாம அங்கப் போயிருந்தா எவ்ளோ ஜாலியா இருந்துருக்குமில்ல?'''என்றான் அந்த பதினெட்டு வயது  கல்லூரி ஹைடெக் மாணவன்.  ஜீன்ஸ், டி-ஷர்ட், ஹை-ஹீல்ஸ் செப்பல் என  மாடர்ன் கேர்ளாக இருந்த அந்த கல்லூரி மாணவியோ, ""ச்சீய்... போடா... ஆசையை தூண்டி விட்டுட்டு... இப்போ இங்க கூட்டிட்டு வந்துட்ட.  எவ்ளோ போர் அடிக்குது தெரியுமா?'' என்றாள் கொஞ்சம் சலித்தபடி ஸ்டைலாக.  "


""டோண்ட் வொர்ரியா... உனக்கு பிடிச்ச ஆப்பிள் ஃப்ளேவர் எப்படி யாவது வாங்கித்தறேன்...'''என்று அவளை கூல் பண்ணினான். """ஏண்டா... இதுக்கு நாம அங்கதான் போகணுமா?  நம்ம கன்ட்ரி இன்னும் டெவலப் ஆகமாட்டேங்குது  ச்சே'''என்று கொஞ் சம் டென்ஷன் ஆனபடி  மறுபடியும் சலித்துக் கொண்டாள் அவள். என்ன அவளுக்கு பிடிச்ச ஆப்பிள் ஃப்ளே வர்ங்குறான்? ஒரு வேளை ஐஸ்க்ரீமா இருக்குமோ? அதுதான் இங்கேயே கிடைக்குதே... என்று யோசித்த நாம், அதற்குப் பிறகு என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று நமது காதை யு டர்ன் பண்ணினோம். '


""ஹேய்.. ச்சீய்''' என்ற சிணுங்கல் கேட்க ஆரம்பிக்க... பட்டென்று திரும்பிப் பார்த்தபோது அவர்கள் இருவரும் கண்ட்ரோல் இல்லாமல் எல்லைதாண்டிய சில்மிஷ வாதத்துக்குள் போய்விட்டார்கள். அச்சச்சோ இதுக்குமேல இங்க உட்கார்ந்திருந்தா நமக்கு மண்டை சூடேறிடும் என்று சாலையை ஒட்டி இருக்கும் இடத்துக்கு ஷிஃப்ட் ஆனோம். அங்கே... ஹைடெக் காலேஜ் கேர்ள்ஸ் உட்கார்ந்து ஜாலியாக ஒருவருக்கொருவர் கலாய்த்துக்கொண்டு இருந்தார்கள். "


""புதுசா ஒரு ஃப்ளேவர் வந்துருக்கு மச்சி... செம கிக்குடி. நம்ம இண்டியன்ஸ் ரொம்பவே என்ஜாய் பண்ணியிருக்காங்கடி இல்ல?'''-என்றாள் ஒருத்தி.  என்னது புதுசா ஒரு ஃப்ளேவரா? அங்க என்னடான்னா ஒருத்தன் ஃப்ளேவர்ன்னான்.  இங்கேயும் ஃப்ளேவர்ன்னு சொல்லுதுங்க.... என்னதான் அது? மண்டையை பிய்த்துக்கொண்டு காதில் வாங்க ஆரம்பித்தோம். செல்ஃபோனில் பேச ஆரம்பித்தவள் ""டேய்... விக்கேஷ் எவ்ளோ நேரம்டா உனக்காக வெய்ட் பண்றது? நீ வர்றியா இல்ல... சார்லஸ்கூட போகட்டுமா?'''என்று கேட்டுவிட்டு """ஓகே... ஓகே சீக்கிரம் வாடா'' என்று பதைபதைத்தாள். அடுத்த சில நிமிடங்களிலேயே பி.எம்.டபுள்யூ கார்  பீச் ரோட்டில் சீறிப்பாய்ந்து வந்தது. கார் டோரை அந்த இளைஞன் திறந்தபோது ஆங்கில ராப் சாங் காதை பிளந்தது.  ""ஹேய்ய்ய்ய் விகேஷ்...'' என்று கூச்சலிட்டபடி போய் ஏறினார்கள் அந்த இளம்மாணவிகள். பல் இளித்தபடி வரவேற்றான் அவனும். 




அப்படியென்ன ஃப்ளேவர்? இவ்ளோ ஆர்வமா போறாங்க இந்த பசங்க?  புதுசா வந்த பீஸ்ஸாவா இருக்குமோ? என்கிற ஆர்வமும்  ஆசையும் நமக்கும் தொற்றிக் கொள்ள... நாமும் அந்த காரை பின் தொடர்ந்தோம். கார்... அடையாறு இந்திராநகர் பகுதியிலுள்ள பிரபல காஃபி ஷாப் வாசலில்       சரக்கென்று பிரேக் போட்டு நின்றது. இறங்கியவர்கள் உள்ளே போக... அங்கே திருப்பதியில் லட்டு வாங்க நிற்பதுபோல் கூட்டம் கூட்டமாக நின்ற இளசுகள்.... ரவுசு பண்ணிக் கொண்டிருந்தது.  நாமும் நம் தலை முடியை கலைத்துவிட்டு.... சட்டையை அவுட்ஷர்ட் பண்ணிக் கொண்டு (சட்டையை வெளியில் எடுத்துவிட்டுக் கொண் டால் இப்படித்தானே சொல்லமுடியும்!)  உள்ளே செல்லத் தயாரானோம். அப்போது அங்கு வந்த இளசுகள் உள்ளே செல்லாமல் ஏதோ ஒன்று கிடைக்காத விரக்தியுடன் திரும்பியது.  நாம் ஃபாலோ-அப் பண்ணியபடி வந்த அந்த இளசுகள் டீமும் "ஷிட்... ச்சே...' என்றெல்லாம் டென்ஷனாகி  ஆங்கிலத்தில் திட்டியபடி நின்று கொண்டிருந்தது. என்ன காரணம் என்று யோசித்துக் கொண்டே நாம் அந்த ரெஸ்டாரண்டுக்குள்ளே செல்ல முயன்றபோது, வெளியில் நின்ற செக்யூரிட்டி நம்மைப் பார்த்து ""காஃபியா? இல்ல ஹூக்காவா?'''என்று கேட்டார்.  நாம் கொஞ்சம் தயங்கிய படி நிற்க..  அவரே, """அதில்ல சார்... ஹூக்கா கிடையாது. காஃபிதான் இருக்கு. உங்களை மாதிரி நிறையப்  பசங்க வந்து ஏமாந்து நிக்குறாங்க பாருங்க வெளியில'''' என்று "உச்' கொட்டினார். அப்போதுதான் நமக்கு லைட்டாக புரிந்தது...      


இவ்வளவு நேரம் இந்த கல்லூரி ஹைடெக் இளசுகள் எதற்காக  வெறிபிடித்து வந்திருக்கிறார்கள் என்பது. "அதென்ன... ஹூக்கா?' என்பதை அறிந்துகொள்ள  நாம், உடனே அந்த இளசுகளிடமே நைஸாக பேச்சுக் கொடுத் தோம். நம்மை கொஞ்சம் ஏற இறங்கப் பார்த்துவிட்டு ""என்ன பாஸூ... இதுகூட தெரியாதா?''''என்று சிரித்தபடி சொல்லத் தொடங்கினார்கள்.


அப்போதுதான் சென்னையின் ஹைடெக் இளசுகளின் இன்னொரு கிக் முகம் நமக்குத் ஆச்சரியத்தை உண்டாக்கியது. ""சிகரெட் லாம் ஓல்டு ஸ்டைல்யா. ஹூக்காதான்  இப்போ நியூ ஸ்டைல். அதெல்லாம் சொன்னா புரியாது... அனுபவிச்சாதான் தெரியும். முதல் முதல்ல ஒரு சினிமா புரடியூஸரோட பையன்கூடத்தான் போனோம். மச்சான் சிகரெட்டைவிட செம கிக்கான  ஒண்ணு இருக்குன்னு சொல்லி ஆர்டர் பண்ணினான். சரித்திர சினிமா படத்தில் வர்ற ராஜாக்கள்  பைப் மாதிரி வெச்சு ஸ்மோக் பண்ணு வாங்களே அப்படி இருந்துச்சு. அப்படியே அந்த புகையை இழுத்து ஸ்மோக்  பண்ணும்போது...  ஹப்பா... அவ்ளோ டேஸ்டியா இருக்கும். அப்போ சிகரெட்டை விட்டதுதான். அதி லிருந்து ஹூக்காதான் யூஸ் பண்றேன்.  சிகரெட் ஸ்மோக் பண்ணினா அந்த ஸ்மெல்லே காம்ச்சிக் கொடுத்துடும். ஆனா, இதுல ஆப்பிள், பான்மசாலா, ரெட் வைன், ஸ்டாபெர்ரின்னு ஏகப்பட்ட நமக்கு பிடிச்ச ஃப்ளேவர்ஸ்         கலந்து கொடுக்குறதால... எங்க ளோட கேர்ள் ஃப்ரண்ட்ஸ் களையும் பிக்கப் பண்ணிட்டு வந்து ஒரே ஹூக்காவை ரெண்டுபேரும் ஸ்மோக் பண்ணுவோம். 


எங்களை மாதிரி பசங்க பெரிய பெரிய ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களுக்கு போறதை விட தி.நகர், அண்ணாநகர், அடையாறுன்னு அமைதியான சின்ன சின்ன ரூம்ஸ் இருக்குற இந்தமாதிரி ரெஸ்டாரண்டுகளுக்கு வந்து ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு போறதுதான் பிடிச்சிருக்கு'''என்று சொல்லிக்கொண்டிருந்தவர்கள் """என்னன்னே தெரியல டெய்லி வந்து அடிப்போம். ஆனா, இப்போ கிடையாது. 'கார்ப்பரேஷன்காரங்க பிராப்ளம் பன்றாங்க. அதனால இன்னும் டுவெண்டி டேஸ் கழிச்சு வாங்க கண்டிப்பா ஹூக்கா கிடைக்கும்கிறாங்க ரெஸ்டாரண்டுகளில். எதுக்கு இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் ப்ராப்ளம் பண்றாங்க இந்த கார்ப்பரேஷன்காரங்க?'''' என்று டென்ஷன் ஆகிறார்கள் அந்த இளசுகள். 


ஹூக்காவை பற்றிக் கேட்டுக்கொண்டிருந்த நமக்கே கிக்கு ஏறியதுபோல இருந்தது. பெயர் வேண்டாம் என்ற சில ஹூக்கா ரெஸ்டாரண்ட் ஓனர்கள் நம்மிடம் ""ஹூக்கா அக்பர் காலத்திலேயே இருந்துச்சு. ஜஸ்ட் சிகெரெட் மாதிரிதான் இதுவும். ஆனா, ஆரம்பத்துல ஹூக்கா அடிக்கிற இளைஞர்களுக்கு இன்னும் கிக்கு தேவைப் படுறதாலதான் கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்களையும் கொஞ்சம் மிக்ஸ்பண்ண வேண்டியிருக்கு. இல்லைன்னா வேற இடத்துக்குப் போயிடுவாங்க.


குறிப்பா, ஐ.டி. ஃபீல்டுல உள்ள இளைஞர்கள், காலேஜ்ல படிக்குற பதினெட்டு வயசிலேர்ந்து 25 வயசுவரை உள்ள இளைஞர்கள்தான் எங்களோட ரெகுலர் கஸ்டமர்ஸ். அதுவும் வாசனை வராம இருக்குறதால  காலேஜ் பொண்ணுங்களும் ரொம்ப லைக்பண்ணி வர்றாங்க.  சனிக்கிழமைகள்னா திருவிழா மாதிரிதான் இருக்கும் ஹூக்கா பார்களில்'' என்கிறார்கள் உற்சாகமாக.


ஆனால், பெற்றோர்கள் தரப்போ ""ஹூக்காவை தடுக்க ஆக்ஷன் எடுத்தது வரவேற்க வேண்டிய விஷயம்தாங்க. ஜாலியா ஆரம்பிக்குற இந்த ஹூக்கா பழக்கம் நிச்சயமா கஞ்சா, அபின்னு போதை பழக்கங்களுக்கு எங்க பிள்ளைகளை அடிமை ஆக்கிடும்''' என்கிறார் கள் மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக.!


ஹைடெக் இளசு களின் இந்த கிக் சமாச்சாரங்கள் எங்கு போய் முடியப் போகி றதோ...?


-ம.மனோசௌந்தர்




 ஆபத்து!

""இந்தியாவுலதான் இந்த ஹூக்கா கலாச்சாரம் மன்னர்கள் காலத்திலே       யே தோன்றியிருக்கு.  ஆனா,  இப்போ இளசுகள் மத்தியில  இது ஒரு புது ஃபேஷனாகியிருக்கு. காரணம்... சிகரெட் பிடிச்சு பிடிச்சு போர் அடிச்சுப்போன பசங்களுக்கு இது புதுசா தெரியுது. சிகரெட்ல டொபோக்கோவை எரிச்சு அதன் மூலமா வர்ற புகையை இழுக்குறாங்க.  ஹூக்காவுலடொ போக்கோவை ஹீட் பண்ணி அதிலிருந்து வரும் புகையை இழுக்குறாங்க. அதுமட்டுமில்லாம அந்த ட்யூப்ல இருக்குற வாட்டர் மூலமா பாஸ் ஆகி நறுமணத்தோட வருவதால் இழுக்கும்போது ரொம்ப ஸ்வீட்டா இருக்குமாம். ஆனா, சிகரெட்டுல இல்லாத விஷ வாயுவான கார்பன்மோனாக்ஸைடு, ஹெவிமெட்டல்ஸ், ரோடு போடுற தார், கேன்சரை உண்டாக்கக் கூடிய கெமிக்கல்ஸ் இதுல அதிகமா       இருக்கு.  

ஒரு சிகரெட் அஞ்சு நிமிஷம்தான். ஆனா, ஹூக்கா அப்படியில்ல கிட்டத்தட்ட 40 நிமிஷத்திலேர்ந்து ஒன் ஹவர்வரை ஸ்மோக் பண்றாங்க.  ஒரு சிகரெட்டுல இருக்குற நிக்கோடின் அளவைவிட ஹூக்காவுல 1.7 மடங்கு நிக்கோடின் அளவு அதிகமா இருக்கு. 8.3 மடங்கு கார்பன் மோனாக்ஸைடு அதிகம்.  ஒரு சிகரெட்டை ஸ்மோக் பண்ணும்போது அரை லிட்டர் புகைதான் வெளியேறுதுன்னா ஹூக்காவுல கிட்டத்தட்ட 50 லிட்டர் புகை வெளியேறுது. இதனால ஈஸியா  லங்க் டிஸீஸ்லாம் வர்றதோடு லங்க் கேன்சர், கேஸ்டிக் பிராப்ளம், மூச்சுத் திணறல், இன்ஃபெர்ட்டிலிட்டின்னு ஏகப்பட்ட பிரச்சனைகள் வரும். மன டென்ஷனுக்காக இதை ஸ்மோக்பண்ணி சிலருக்கு மைண்ட் டிப்ரஷனையும் உண்டாக்கிடும். எதிலுமே அளவோட இல்லாம அடிக்ஷன் ஆனா ஆபத்துதான்'''என்கிறார் பிரபல உளவியல் மருத்துவர் அபிலாஷா.


source:nakkheeran

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP