ஆமதாபாத், ஏப்.3-
குஜராத் மாநிலம் ஆம தாபாத்தில் உள்ள மித கல்லி பகுதியில் வசித்தவர் பதலால் ஜவேரி. இவர் குஜராத் மாநிலத்தின் பாரம்பரியம் மிக்க பணக்கார வைர வியாபாரக் குடும்பத்தில் பிறந்தவர்.
ஜவேரிக்கு சொந்தமாக ஆமதாபாத்தில் வைரநகை கடைகள், வைரம் பட்டை தீட்டும் தொழிற்சாலைகள் ஏராளமாக உள்ளன. இந்தியாவில் உள்ள ராஜவம்சத்தினர் வெளிநாட்டு பிரபலங்களுக்கு இவர் பிரத்யேகமாக வைர நகைகள் செய்து கொடுப்பது வழக்கம். இதன் மூலம் இவருக்கு கோடிக்கணக்கில் பணம் புரண்டது.
ஆமதாபாத் நகரில் பெரும்பாலான இடங்களில் இவருக்கு சொத்துக்கள் உள்ளது. ஆனால் அவற்றை அனுபவிக்க இவருக்கு ஒரு குழந்தை உள்ளது. இவரிடம் நாராயண்பாய் தன்தனி என்பவர் வேலைக்கு சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 8. ஜவேரி வீட்டில் உள்ள செல்ல நாய்களை கவனிக்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்திருந்தனர்.
நாராயண் வளரவளர ஜவேரியின் செல்ல மகன் போல மாறினார். ஜவேரி வீட்டின் அனைத்து வேலைகள் மற்றும் நகை கடைகளின் நிர்வாகத்தை கவனிக்கும் அளவுக்கு முன்னேறினார். அவரது விசுவாசத்தை கண்ட ஜவேரி, அவருக்கு திருமணம் செய்து வைத்தார்.
நாராயணுக்கு 3 மகள்கள் பிறந்தனர். அவர்களுடன் ஜவேரி பங்களாவின் அவுட் ஹவுசில் நாராயண் வசித்து வந்தார். இந்த நிலையில் ஜவேரியின் கோடிக்கணக்கான சொத்துக்கள் மீது அவரது உறவினர்கள் குறி வைத்தனர். சொத்துக்களை எழுதி தருமாறு கேட்டனர்.
உறவினர்கள் யாருக்கும் சொத்துக்களை கொடுக்க மறுத்த ஜவேரி சொத்துக்கள் பற்றி யாரிடமும் எந்த தகவலும் சொல்லவில்லை. இதற்கிடையே திடீரென ஒரு நாள் நாராயணை அழைத்த ஜவேரியும் அவரது மனைவியும் நிறைய பேப்பர் கட்டுக்களை கொடுத்து "இதை பத்திரமாக வைத்துக்கொள்'' என்று கூறி கொடுத்தனர்.
அப்போது கூட அவர்கள் கோடிக்கணக்கான சொத்துக்களை எழுதி வைத்து இருப்பதாக சொல்லவில்லை. அதன்பிறகு திடீரென ஒரு நாள் ஜவேரி மனைவி இறந்து போனார். ஜவேரி நோய் வாய்ப்பாட்டு படுத்த படுக்கையானார்.
இந்த நிலையில் நாராயண் தன் மகள்கள் நீருவர்ஷா, அருணா ஆகிய மூவருக்கும் மிக எளியமுறையில் திருமணம் நடத்தி முடித்தார். மகள்கள் தங்கள் கணவர் வீட்டுக்கு சென்ற பிறகு ஜவேரியை பக்கத்தில் இருந்து அவர் கவனித்து வந்தார். 1987-ம் ஆண்டு ஜவேரி மரணம் அடைந்தார்.
அதன்பிறகு நாராயண் தன் அவுட்ஹவுசில் தொடர்ந்து வசித்து வந்தார். 2 மாதங்களுக்கு முன்பு அவர் மரணம் அடைந்தார். அப்போது வீட்டுக்குள் இருந்த பொருட்களை 3 மகள்களும் சுத்தம் செய்தனர்.
அந்த சமயத்தில் நாராயண் ஒரு பெட்டிக்குள் பூட்டி வைத்திருந்த பேப்பர்கட்டுக்களை எடுத்து பிரித்து பார்த்தனர். அங்குதான் 3 சகோதரிகளுக்கும் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. வைர வியாபாரி ஜவேரி தன் எல்லா சொத்துக்களையும் நாராயணுக்கும் அவரது வாரிசுகளுக்கும் எழுதி வைத்திருந்தார்.
ஜவேரி இந்த உயிலை எழுதியபோது அவரது சொத்துக்களின் மதிப்பு ரூ.364கோடி, தற்போது இதன் மதிப்பு 1100 கோடி ரூபாய். இதை அறிந்த 3 சகோதரிகளும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் உறைந்து போனார்கள்.
ஜவேரியின் கோடிக்கணக்கான சொத்துக்களை அவரது உறவினர் ஒருவர் மேற்பார்வை பார்த்து வருகிறார். அவரிடம் இருந்து சொத்துக்கள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர 3 சகோதரிகளும் கோர்ட்டு உதவியை நாட தீர்மானித்துள்ளனர்.
கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்ச்சிக்கிட்டு கொடுக்குங்றது சரியாத்தான் இருக்கு!
Read more...