இலங்கையில் பொதுமக்களின் நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமகி வருவதாக கிறிஸ்வ உதவி அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் போர் நடைபெறும் பகுதிகளில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் மக்கள் சிக்கியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் சிக்கியுள்ள மக்களுக்கு போதுமான உணவு, மருந்து குடிநீர் இல்லை எனவும் போர் பகுதியில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவது ஆபத்தானது எனவும் கிறிஸ்தவ உதவி அமைப்பு கூறியுள்ளது.
போர் காரணமாக சாதாரண பெண்கள், ஆண்கள் மற்றும் சிறுவர்கள் பெரும் துயரங்களை அனுபவித்து வருவதாக கிறிஸ்தவ உதவி அமைப்பின் ஆசிய மற்றும் மத்திய கிழக்கு தலைவர் றொபின் கரீன்வூட் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இலங்கையின் வடக்கில் இடம்பெறும் மோதலில் இருந்து தப்பிப்பதற்காக பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்து;ளளனர். அத்துடன் இரண்டு வாரங்களில் 7 ஆயிரம் பொதுமக்கள் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.
கடந்த டிசம்பரில் இருந்து இதுவரை 50 ஆயிரம் மக்கள் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பிரதேசங்களில் உள்ள நலன்புரி நிலையங்களில தங்கியுள்ளதாக உத்தியோபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கிறிஸ்தவ உதவி பங்காளர்கள் போர் பகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உணவு மற்றும் உடனடி தேவைகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் குறைந்தளவான உதவி பணியாளர்களே பணிகளில் ஈடுபட்டு;ளளனர்.
இடம்பெயர்ந்து வரும் மக்கள் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள இடைதங்கல் முகாம்களில் கவனிக்கப்படுவது குறித்து தாம் கூடிய கவனம் செலுத்தியுள்ளதாக றொபின் கிரீன்வூட் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தற்போதைய திட்டங்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கு பாதுகாப்பானதும் உதவியளிக்க கூடியதுமாக இல்லை.
பொதுமக்களை பாதுகாப்பது அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகளின் கடமை, அத்துடன் உடனடி மனிதாபிமான உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்காக உதவி பணியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் கிறிஸ்தவ உதவி அமைப்பின் ஆசிய மற்றும் மத்திய கிழக்கு தலைவர் றொபின் கிரீன்வூட் கோரியுள்ளார்.
இலங்கையில் இருந்து உண்மையான தகவல்கள் வெளியாவது மிகவும் ஆபத்து நிறைந்தது. ஊடகவியலாளர்களும், தொண்டு பணியாளர்களுக்கும் குறைந்தளவான வழிகளே உள்ளன.
ஜெனிவாக் கோட்பாடுகளுக்கு அமைய இலங்கையில் சிக்கியுள்ள பொதுமக்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான உணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.
பொதுமக்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்கவும், அனைத்து மக்களுக்கும் சுதந்திரமாக வெளியேறவும் உடனடியாக தற்காலிக மோதல் தவிர்ப்பை ஏற்படுத்த வேண்டும். |