சமீபத்திய பதிவுகள்

குழப்பமான அறிக்கைகளால் குழம்ப வேண்டாம்: புலிகள் அறிக்கை

>> Tuesday, April 13, 2010

 

தவறான முறையில், தவறான சக்திகளால் பொட்டு அம்மானின் பெயரில் வெளியிடப்பட்டதாக உங்களுக்கு வரும் எந்தவொரு அறிக்கையையும் நம்ப வேண்டாம். ஏற்கனவே ல்ட்டெப்ரெச்ச் என்ற பெயரில் குழப்பத்தை ஏற்படுத்த நினைத்தவர்கள் தோல்வியடைந்த நிலையில் புதிதாக ஒரு தளத்தைத் தொடங்கி பொட்டு அம்மானின் பெயரில் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதை சற்றும் பொருட்படுத்தாது இருக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இதுதான் எமது அதிகாரபூர்வ ஏடுகள் தரவேற்றம் செய்யப்பட்டுள்ள வலைத்தளம். இதையொத்த பெயர்களில் வரும் ஏனைய தளங்களைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம். http://viduthalaipulikal.net



source:athirvu

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

விக்கிபீடியாவிற்கு கூகுள் நன்கொடை


  

 இணையத்தில் இயங்கி வரும் கலைக் களஞ்சியமான விக்கிபீடியா வளர்ச்சிக்கு கூகுள் நிறுவனம் அண்மையில் 20 லட்சம் டாலர் நன்கொடை வழங்கியுள்ளது. விக்கிபீடியாவை அமைத்து இயக்கி வரும் விக்கிமீடியா பவுண்டேஷன் அமைப்பிடம் இது வழங்கப்பட்டது. இந்த நிதி, விக்கிபீடியாவின் தொழில் நுட்ப கட்டமைப்பிற்குப் பயன்படுத்தப்படும். பயன்படுத்து வதற்கு எளிமையான தாகவும், ஒரே நேரத்தில் பலருக்கு விரைவில் கிடைப்பதாகவும் விக்கிபீடியா வினை மாற்ற இந்த நிதி உதவும் என்று இந்த அமைப்பின் செயல் குழு உறுப்பினர் ஜிம்மி வேல்ஸ் தெரிவித்தார். 
இன்டர்நெட்டின் மிகப் பெரிய வெற்றி என்று ஒன்றைச் சுட்டிக் காட்ட வேண்டும் என்றால் நம் கண்களின் முன் தெரிவது விக்கிபீடியா கலைக் களஞ்சியம் தான். மக்களால் உருவாக்கப்பட்டு இதில் கிடைக்கும் தகவல்கள் இந்த உலகில் நமக்கும் நம் சந்ததியினருக்கும் ஒரு பெரிய வரப்பிரசாதம் ஆகும் என கூகுள் நிறுவனர்களில் ஒருவரான செர்ஜி பிரையன் அறிவித்தார். 
விக்கிமீடியா பெரும்பாலும் தனி நபர்களால் வழங்கப்படும் நன்கொடை களைக் கொண்டே செயல்படுத்தப்படுகிறது. சென்ற 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் இதுவரை 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் 80 லட்சம் டாலருக்கு மேல் நிதி அளித்துள்ளனர். இது விக்கிமீடியாவின் பட்ஜெட்டில் நான்கில் மூன்று பங்காகும். 
விக்கிமீடியா பிற திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.விக்கிபுக்ஸ்(http://www.wikibooks.org/) விக்ஷனரி (http://www.wiktionary.org/விக்கிமீடியா காமன்ஸ்(http://commons.wikimedia.org/ ஆகிய தளங்களும் இந்த அமைப்பினால் நடத்தப்பட்டு வருகின்றன


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பாம்புக்காக 65 லட்ச ரூபாய் செலவு
























































































































பெர்லின் :   பயங்கர விஷம் உள்ள பாம்பு ஒன்றைக் கண்டுபிடிப்பதற்காக, ஜெர்மனி நாட்டின் ஒரு நகர அதிகாரிகள் 65 லட்ச ரூபாய் செலவழித்துள்ளது. சென்ற மாதம் மியூல்ஹெய்ம் என்ற ஜெர்மனி நகரத்தில், ஒரு வீட்டில் ஓர் அடி நீளம் கொண்ட பயங்கர விஷம் உள்ள பாம்பு ஒன்று அதற்கான பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டை தீயணைப்பு வீரர்கள் சுத்தப்படுத்தியபோது, பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பாம்பு காணாமல் போனது.
அப்பாம்பால் நகர மக்களுக்கு ஆபத்து  என்பதால், நகர அதிகாரிகள் பாம்பைத் தேடி அலைய ஆரம்பித்தனர். அதைப் பிடிப்பதற்குப் பல புதிய கருவிகளைப் பயன்படுத்தினர். அவ்வகையில் அதற்காக 65 லட்ச ரூபாய் வரை செலவழித்தனர். இறுதியில், அந்த வீட்டின் மேற்கூரையில் அந்தப் பாம்பு இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


source:dinamalar



--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP