சமீபத்திய பதிவுகள்

பெர்லின்: பன்றிகளிடம் சிக்கிய கார் திருடன்!

>> Friday, May 30, 2008

பெர்லின்: பன்றிகளிடம் சிக்கிய கார் திருடன்!
    

பெர்லின்: காரை திருடிக் கொண்டு காட்டுக்குள் தப்பியவர், காட்டுப் பன்றிகளிடம் சிக்கினார். அவரைப் பிடிக்கத் துரத்திய போலீஸார், பன்றிகளிடமிருந்து அந்தத் திருடனை பத்திரமாக மீட்டனர்.

ஜெர்மனியின் ஷெவரின் என்ற நகரில் இந்த வினோத விரட்டல் நடந்துள்ளது. அந்த நகரில் இரவு ரோந்தில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். அப்போது 18 வயது வாலிபர் ஒருவர், தெருவில் நிறுத்தப்பட்டிருந்த ஓபல் காரை திருடிக் கொண்டு கிளம்பினார்.

இதைப் பார்த்த ரோந்து போலீஸார் அந்த காரை துரத்தினர். ஆனால் நிற்காமல் பறந்த அந்த நபர், அருகில் இருந்த வனப் பகுதிக்குள் வண்டியை விட்டார்.

காட்டுக்குள் வேகமாக சென்ற கார், அங்கு உலவிக் கொண்டிருந்த காட்டுப் பன்றிக் கூட்டத்திற்குள் புகுந்தது. இதனால் மிரண்ட பன்றிகள், தங்களை டிஸ்டர்ப் செய்த காரை சுற்றி வளைத்தன.

காட்டுப் பன்றிகள் மொத்தமாக சூழ்ந்ததால் பயந்து போன திருடன், உடனடியாக காரை நிறுத்தி விட்டு உதவி கோரி குரல் எழுப்பினார். பின் தொடர்ந்து வந்த போலீஸார் பன்றிக் கூட்டத்திற்குள் திருடன் சிக்கியதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவரை மீட்கும் முயற்சியில் இறங்கினர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பன்றிகளை விரட்டிய பின்னர் காருக்குள் நடுங்கிக் கொண்டிருந்த திருடனை வெளியே கொண்டு வந்தனர்.
 

StumbleUpon.com Read more...

சிறுவர்களை மனித குண்டுகளாக மாற்றும் தலிபான்கள்

சிறுவர்களை மனித குண்டுகளாக மாற்றும் தலிபான்கள்
thatsTamil RSS feedthatsTamil  iGoogle gadgetsFree SMS Alerts in Tamil
    

இஸ்லாமாபாத்: சிறுவர்களை வைத்து மனித வெடிகுண்டுகளை உருவாக்குவதாக தலிபான் தீவிரவாதிகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தலிபான்களின் மனித வெடிகுண்டுப் பிரிவிலிருந்து தப்பி வந்த 14 வயது பாகிஸ்தான் சிறுவனான ஷகிருல்லா இந்த பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளான்.

இதுகுறித்து அவன் கூறுகையில், நான் ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு மதரசாவில் பயின்று வந்தேன். அங்கிருந்த மதகுருமார்கள் என்னிடம் தலிபான் அமைப்பின் தற்கொலைப் படையில் சேர்த்து விட்டனர். அங்கு எனக்கு வெடிகுண்டுத் தாக்குதல் குறித்து விளக்கப்பட்டது.

இதனால் நான் பயந்தேன். ஆனால் மதகுருமார்கள் எனக்கு ஆறுதல் கூறி, குண்டு மட்டுமே வெடிக்கும், நீ சாக மாட்டாய் என கூறினர். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் ஆப்கானிஸ்தானின் புத்தாண்டின்போது, வெடிகுண்டுகள் நிரப்பிய காருடன் என்னை அனுப்பி வைத்தனர்.

நான் காரில் போய்க் கொண்டிருந்தபோது வறண்டு கிடந்த ஆற்றுப் படுகையில் எனது கார் சிக்கிக் கொண்டது. அப்போது அங்கு வந்த ஆப்கானிஸ்தான் உளவுப் படையினர் என்னைப் பிடித்து விட்டனர் என்று கூறியுள்ளான் ஷகீருல்லா.

ஷகீருல்லா, தலிபான் மற்றும் அல் கொய்தா தீவிரவாதிகள் அதிகம் நிறைந்த பாகிஸ்தானின், வடக்கு வசிரிஸ்தானில் உள்ள பர்வான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவன் ஆவான்.

நான்கு மாதங்களுக்கு முன்புதான் அங்குள்ள மதரசாவில் சேர்ந்தான் ஷகீருல்லா. அதன் பின்னர் ஆப்கானிஸ்தானுக்கு அவன் அனுப்பப்பட்டான். எதிரிகளுடன் மோத வேண்டும் என்ற உத்தரவின் பேரில் அவன் அனுப்பி வைக்கப்பட்டான்.

அப்போது அவனிடம் மத குருமார்கள், உன்னால் வெளிநாட்டு தீவிரவாதிகள்தான் சாவார்கள். உனக்கு ஒன்றும் நேராது. நீ கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்று கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கிடையே, தலிபான் தீவிரவாதிகள் ஷகீருல்லாவைப் போல ஏராளமான சிறுவர்களை தற்கொலைப் படைத் தீவிரவாதிகளாக மாற்றி வருவதாக ஆப்கன் அதிபர் ஹமீத் கர்ஸாயின் செய்தித் தொடர்பாளர் ஹூமாயூன் ஹமீத்ஸாதா கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், தலிபான் தீவிரவாதிகள் சிறுவர்கள், போதைக்கு அடிமையானவர்கள், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரை தற்கொலைப் படையில் சேர்த்து பல அப்பாவிகளின் உயிர்களைப் பறித்து வருகின்றனர் என்றார்.
 

StumbleUpon.com Read more...

சமஸ்கிருதத்தில் 100 வாங்கிய முஸ்லீம் மாணவர்

சமஸ்கிருதத்தில் 100 வாங்கிய முஸ்லீம் மாணவர்
thatsTamil RSS feedthatsTamil  iGoogle gadgetsFree SMS Alerts in Tamil
    

சென்னை: முஸ்லீம் மாணவரான குல்சார் அகமது, சமஸ்கிருதப் பாடத்தில் 100க்கு நூறு வாங்கி அசத்தியுள்ளார்.

சென்னை முகப்பேரில் உள்ள டிஏவி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பத்தாவது வகுப்பு படித்தவர் குல்சார் அகமது. இவரது பூர்வீகம் கேரளா. குல்சார் அகமது, 10வது வகுப்பில் இரண்டாவது மொழிப் பாடமாக சமஸ்கிருதத்தை தேர்ந்தெடுத்தார். 9ம் வகுப்பிலேயே அவர் சமஸ்கிருதம் படித்தார்.

நேற்று வெளியான பத்தாவது வகுப்பு தேர்வு முடிவுகளில், குல்சாருக்கு சமஸ்கிருதத்தில் 100 மதிப்பெண்கள் கிடைத்துள்ளன. இந்துக்களின் புனித மொழியாக கருதப்படும் சமஸ்கிருதத்தில், முஸ்லீம் மாணவரான குல்சார் சென்டம் போட்டது சக மாணவர்களுக்கு வியப்பைக் கொடுத்துள்ளது.

இதுகுறித்து குல்சார் கூறுகையில், சமஸ்கிருதம் படிக்க எனக்கு சிரமமாக இல்லை. 8ம் வகுப்பு வரை நான் இந்தி படித்துள்ளேன் என்பதால் சமஸ்கிருதத்தை நான் எளிதாக எதிர்கொள்ள முடிந்தது. இதன் மூலம் எனது மொத்த மதிப்பெண் சராசரி உயர்ந்துள்ளது.

எனக்கு ராமாயணம், மகாபாரதம் முழுமையாகத் தெரியும். 11 வயதாகும்போதே நான் ஆங்கிலத்தில் மகாபாரத்தைப் படித்துள்ளேன்.
எனக்கு மகாபாரத்தில் மிகவும் பிடித்த கேரக்டர் அர்ஜூனன்தான் என்றார் குல்சார்.

சமஸ்கிருதத்தில் சென்டம் போட்டுள்ள குல்சார், தனது மத பழக்கங்களிலும் அதிக நம்பிக்கை கொண்டவராம்.

இதுகுறித்து குல்சாரின் தந்தை அப்துல் ஹமீது கூறுகையில், குல்சார் தினசரி தொழுகை நடத்தத் தவற மாட்டார். நான் கூட சில நேரங்களில் செய்ய மாட்டேன். ஆனால் குல்சார் அப்படி இல்லை. தவறாமல் தொழுகை செய்வார் என்றார்.

பலே மருதபாண்டியன்!:

மாநில அளவில் பத்தாவது வகுப்புத் தேர்வில் 2வது ரேங்க் பெற்றுள்ள பெரம்பலூர் மருதபாண்டியன், ஒரு ஏழை விவசாயியின் மகன் ஆவார். 3 பாடங்களில் இவர் சென்டம் போட்டு அசத்தியுள்ளார்.

தந்தையுடன் சேர்ந்து விவசாயத்தையும் பார்த்துக் கொண்டே படித்து சாதனை படைத்துள்ளார் மருதபாண்டியன். வியாழக்கிழமையும் வயலுக்குப் போய் வேலை பார்த்து விட்டு வந்து படுத்தவருக்கு வெள்ளிக்கிழமை இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

காலையிலேயே மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியின் அலுவலகத்திலிருந்து வந்த தொலைபேசி அழைப்பு மருதபாண்டியனுக்கு இனிப்பான செய்தியைத் தந்தது.

பத்தாவது வகுப்பில் மாநில அளவில் 2 வது ரேங்க் பெற்றுள்ள மருதபாண்டியன், மொத்தம் 494 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். தமிழில் 98, ஆங்கிலத்தில் 98, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 100 என பிரமிக்க வைத்துள்ளார்.

விவசாயியின் மகனான இவருக்குள் ஒளிந்திருக்கும் திறமையை மதித்து அவரது பெற்றோரும் தங்களது மகனை ஊக்குவித்து வந்தனர். பெற்றோர்களின் ஆதரவால்தான் தன்னால் இந்த சாதனையைப் படைக்க முடிந்தது என்கிறார் மருதபாண்டியன்.
 

StumbleUpon.com Read more...

நீயும் பொம்மை நானும் பொம்மை...

நீயும் பொம்மை நானும் பொம்மை...

 
 

   அனாஹெய்ம்: டிஸ்னி கதாபாத்திரங்கள் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அலாதிப்பிரியம். இது  உலகம் முழுவதற்கும் பொருந்தும். படத்தில் காண்பது டிஸ்னி மற்றும் பிக்சார் ஆகிய இருவரும் இணைந்து உருவாக்கிய ஹெய்ம்லிச் என்னும் கதாபாத்திரம்தான்.

எ பக்ஸ் லைப் என்னும் கதையில் வரும் கதாபாத்திரங்கள் இப்படி ஊர்வலம் செல்வது கலிபோர்னியாவில் உள்ள கேளிக்கைப் பூங்காவுக்கு. அங்கு நடைபெறும் ஒரு நிகழ்ச்சிக்கான ஒத்திகைக்குத்தான் இப்படிக் கூத்தும் கும்மாளமுமாகச் செல்கிறார்கள்.
 

StumbleUpon.com Read more...

டயனோசர் கண்காட்சி

டயனோசர் கண்காட்சி




மெல்போர்ன்: விலங்குகளைப் பார்த்தாலே குழந்தைகள் மட்டும் அல்ல பெரியவர்களின் மனமும் குதூகலம் அடையும். காரணம் அவை செய்யும் சேட்டைகள்தான். அப்படித்தான் இந்த இரண்டு குழந்தைகளும் குட்டி டயனோசர் பொம்மையுடன் ஓடிப்பிடித்து விளையாடுகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் டயனோசர் முட்டை மற்றும் அதன் குட்டிகள் பற்றிய கண்காட்சி நடைபெற்றது. இதில் 15க்கும் மேற்பட்ட வகையான செயற்கையாக வடிவமைக்கப்பட்ட அசையும் டயனோசர் எலும்புக்கூடுகள், குட்டிகள் மற்றும் சரியான அளவிலான 130 பொம்மை முட்டைகள் இடம் பெற்றன.

மேலும் கோழி குஞ்சுகள், முதலைகள் உள்ளிட்ட இதர உயிரினங்களும் இதில் காட்சிப்படுத்தப்பட்டன.



http://www.dinakaran.com/daily/2008/may/30/high2.asp

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP