சமீபத்திய பதிவுகள்

40 மொழிகளிலான இணையத்தள உலாவி கூகுளால் ஆரம்பித்து வைப்பு

>> Monday, September 8, 2008

 
lankasri.comஇணையத்தள தேடல் தொடர்பில் தலைமைத்துவம் வகிக்கும் "கூகுள்' ஆனது தனது சொந்த இணையத்தள உலாவியை ஆரம்பித்து வைத்துள்ளது.

மைக்ரோசொப்ட் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் என்பவற்றிடமிருந்தான சவால்களை எதிர்கொள்ளும் வகையிலேயே மேற்படி உலாவியை "கூகுள்' ஆரம்பித்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

40 மொழிகளிலான இந்த வெப்தள உலாவியை சுமார் 100க்கு மேற்பட்ட நாடுகளில் இலவசமாக பதிவிறக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த உலாவியானது இணையத்தளத்தை விரைவுபடுத்துவதுடன் அடுத்த தலைமுறைக்கான வரைபட மற்றும் பல்லூடக செயற்பாடுகளுக்கு களம் அமைத்துத் தருவதாக கூறப்படுகிறது.

 

 

StumbleUpon.com Read more...

ஆஸி., "ஹாட்ரிக்" வெற்றி

lankasri.comவங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள வங்கதேச அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளில் வென்ற ஆஸ்திரேலியா, தொடரை கைப்பற்றியது. நேற்று முக்கியத்துவம் இல்லாத மூன்றாவது போட்டி நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

சூப்பர் பீல்டிங்: ஆஸ்திரேலிய துவக்க வீரர்கள் மார்ஷ்(30), வாட்சன்(27) சிறப்பான துவக்கம் தந்தனர். கேப்டன் மைக்கேல் கிளார்க்(25), டேவிட் ஹசி(11) சோபிக்க தவறினர். ஹடின்(16) ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

வங்கதேச வீரர்கள் துடிப்பாக பீல்டிங் செய்ய, ஆஸ்திரேலிய அணியால் ரன் குவிக்க முடியவில்லை. மைக்கேல் ஹசி(57) ரன்களுடனும், ஒயிட் 22 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருக்க, ஆஸ்திரேலியா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் மட்டும் எடுத்தது.

விக்கெட் மடமட: சுலப இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் அரைசதம் கடந்து (63) நம்பிக்கை அளித்தார்.ஆனாலும் மற்றவர்கள் ஆஸ்திரேலிய வேகங்களிடம் சரண் அடைந்து ஏமாற்றினர்.

சித்திக்(0), கேப்டன் அஷ்ரபுல்(3), அலோக் கபாலி(0), ஹசன்(27), அப்துர்ரசாக்(14) விரைவாக அவுட்டாயினர். வங்கதேச அணி 29.5 ஓவரில் 125 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் அசத்திய ஆஸ்திரேலியா "ஹாட்ரிக்' வெற்றி பெற்றது.
http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1220728543&archive=&start_from=&ucat=4&

StumbleUpon.com Read more...

ஆப்பிரிக்காவில் உயிரிழக்கும் அபாயத்தில் 30 லட்சம் சிறார்கள்

 
 
lankasri.comவறட்சி, வறுமை, ஊட்டச்சத்து குறைபாடு, நோய் உள்ளிட்ட காரணங்களால் ஆப்பிரிக்க நாடுகளில் சுமார் 30 லட்சம் சிறார்கள் உயிரிழக்கும் அபாயத்தில் இருப்பதாக யூனிசெப் தெரிவித்துள்ளது.

இவர்களில் 14 லட்சம் பேர் எத்தியோப்பியா, சோமாலியா, உகாண்டா, கென்யா, ஜிபூடி நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த நாடுகளில் சிறார்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. அங்கு வசிக்கும் மக்களில் பெரும்பாலோனோர் போதிய உணவு இன்றி வாடிவருகின்றனர்.

இது குறித்து அண்மையில் ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்று வந்த ஐ.நா. அதிகாரி ஜான் ஹால்ம்ஸ் கூறியது:

எத்தியோப்பியாவில் வறுமையின் பிடியில் சிக்கி போதிய உணவின்றி வாடுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் எத்தியோப்பியாவில் 325 மில்லியன் டாலர் செலவில் உதவிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அங்கு கூடுதல் உதவி தேவைப்படுகிறது. சோமாலியாவிலும் வறுமை, நோயினால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அங்குள்ள அரசுகளின் நிர்வாகக் குறைபாடுகள், தீவிரவாதக் குழுக்களின் அச்சுறுத்தல்கள் போன்ற காரணங்களால் ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகளில் பணியாளர்கள் அங்கு சென்று பணியாற்றுவதில் பிரச்னை உள்ளது என்றார்.

எனினும் ஆப்பிரிக்க நாடுகளில் அக்டோபர் மாதம் சிறுவர்களுக்கான உடல்நல முகாம்களை நடத்த யூனிசெப் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 5 வயதுக்கு உள்பட்ட சுமார் 15 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி, ஊட்டசத்துப் பொருள்கள் வழங்கப்படவுள்ளன.

வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சில ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த 8 மாதத்தில் உணவுப்பொருள்களில் விலை 200 சதவீதம் அதிகரித்துள்ளது. அங்குள்ள பல குடும்பங்கள் தேவையான அளவு உணவுப் பொருள்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றன.

 

 

StumbleUpon.com Read more...

ஒரிசாவில் ‌வ‌ன்முறை: வரதராஜ‌ன் கண்டனம்!

ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதற்கு, தமிழக மார்க்சிஸ்ட் க‌‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் எ‌ன்.வரதராஜ‌ன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளிய‌ி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''ஒரிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக விஸ்வந்து பரிஷத் மற்றும் சங்பரிவார் அமைப்பினர் கடந்த ஒருவார காலமாக தாக்குதல் நடத்துகின்றனர்.

மத்திய அரசும், ஒரிசா மாநில அரசும் உடனடியாக செயலில் இறங்கி கிறிஸ்தவ மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். கிறிஸ்தவ மக்கள் மீதான தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வன்மையாக கண்டிக்கிறது.

இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் மேற்கொண்ட ஜனநாயக நடவடிக்கைகளுக்கு எதிராக பா.ஜ. கட்சியினர் போராட்டம் நடத்துவது, தமிழ்நாட்டிலும் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான கலவரங்களை ஏற்படுத்திவிடும்'' எ‌ன்று வரதராஜன் கூறியுள்ளார்.
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0808/31/1080831005_1.htm

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP