|
சமீபத்திய பதிவுகள்
இந்தியாவில் அலட்சியம் செய்யப்பட்டவர் ஆஸி. அணியில் இடம் பிடித்தார்
மெல்போர்ன், ஜூன் 6: ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில், இந்தியாவில் பிறந்த சந்தீப் குமார் (25) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் காவல் துறையில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றி வந்த சந்தீப், மல்யுத்த விளையாட்டில் மிகவும் திறமையான வீரர். எனினும், இவரது திறமைக்கு இந்தியாவில் தகுந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த சந்தீப், தனது நண்பரும் மெல்போர்ன் நகரில் இயங்கி வரும் 'யுனைட்டட் ரெஸ்லிங் கிளப்' நிறுவனருமான குல்தீப் பாஸியின் அழைப்பின் பேரில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவில் குடியேறினார்.
சந்தீப் குமாரின் திறமையைக் கண்டு வியந்த ஆஸி. தேர்வுக் குழுவினர், ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை வழங்கியுள்ளனர். ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக களமிறங்கும் முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமை சந்தீப் குமாருக்கு கிடைத்துள்ளது.
இது குறித்து சந்தீப் கூறியதாவது: ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலிய அணிக்காக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. இது எனக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம். ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், இன்னும் சரியான ஸ்பான்சர் கிடைக்கவில்லை.
டாக்சி டிரைவராக வேலை செய்துதான் செலவை சமாளித்து வருகிறேன். பயிற்சி செய்வதற்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை. ஓய்வு, தூக்கம் இல்லாததால் உடலும் சோர்வடைந்து விடுகிறது. மல்யுத்தப் போட்டி மிகவும் சிரமமானது.
கைகள், கால்கள், மார்பு, வயிற்றுப் பகுதி வலுவாக இருந்தால் மட்டுமே இதில் சாதிக்க முடியும். இவ்வாறு சந்தீப் குமார் கூறியுள்ளார்.
http://www.dinakaran.com/daily/2008/june/06/sports.asp
Read more...விண்வெளியில் மிதக்கும் ஆய்வுக்கூடத்துடன் டிஸ்கவரி ராக்கெட் இணைந்தது: ஜப்பான் சோதனை கூடத்தை பொருத்தி நிபுணர்கள் சாதனை
விண்வெளியில் மிதக்கும் ஆய்வுக்கூடத்துடன் டிஸ்கவரி ராக்கெட் இணைந்தது: ஜப்பான் சோதனை கூடத்தை பொருத்தி நிபுணர்கள் சாதனை
கேட்கனவரால், ஜுன். 4-
அமெரிக்க ராக்கெட் டிஸ்கவரி மிதக்கும் ஆய்வுக்கூடத்துடன் இணைந்தது. ராக்கெட்டில் கொண்டு சென்ற சோதனை கூடத்தை மிதக் கும் ஆய்வுக்கூடத்தில் நிபுணர்கள் பொருத்தி யுள்ளார்.
விண்வெளியில் அமைக் கப்பட்டு வரும் சர்வதேச மிதக்கும் ஆய்வுக் கூடத்துக்கு டிஸ்கவரி ராக்கெட்டை அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கடந்த சில நாட்களுக்கு முன் அனுப்பியது. 7 வீரர்களுடனும் ஜப்பான் நாட்டு கிபோ என்ற சோதனை கூடத்தையும். சுமந்து சென்ற டிஸ்கவரி ராக்கெட் கடந்த திங்கட்கிழமை மிதக்கும் ஆய்வுக்கூடத்துடன் வெற் றிகரமாக இணைந்தது.
டிஸ்கவரி ராக்கெட்டில் இருந்து கிபோ சோதனை கூடத்தை நிபுணர்கள் வெற்றிகரமாக ஆய்வுக் கூடத்தில் பொருத்தினார்கள். இந்த சோதனை கூடம் 16 டன் எடை உள்ளது. விண் வெளியில் நிபுணர்கள் 6 மணி நேரம் இறங்கி நடந்து இதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.
ராட்சத ரோபர்ட் கைஉத வியுடன் இந்த பணியை வெற்றிகரமாக முடித்தனர். ஆய்வுக்கூடத்தில் பழுதடைந்த கழிப்பிடத்தையும் நிபு ணர்கள் சரி செய்தனர். ஆய்வுக்கூட பணிகளை முடித்தக்கொண்டு டிஸ்கவரி ராக்கெட் 14-ந்தேதி பூமிக்கு திரும்புகிறது.
ஐதராபாத்தில் குண்டு வைத்த தீவிரவாதிகள் தலைவன் பிலால் சுட்டுக்கொலை
புதுடெல்லி, ஜுன். 3-
ஐதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் கடந்த ஆண்டு மே மாதம் குண்டு வெடித்தது. அதன்பிறகு ஆகஸ்டு மாதம் தியேட்டர், ஓட்டல் ஆகியவற்றில் குண்டு வெடித்தது. 2 குண்டு வெடிப்பு சம்பவத்திலும் பலர் பலியானார்கள்.
இந்த குண்டு வெடிப்பை நடத்தியது வங்காளதேசத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் `ஹுஜி' இயக்கம் என்று தெரியவந்தது. இதன் இந்திய தலைவராக ஷாகித் பிலால் என்பவன் செயல்பட்டு வந்தான். இவன் ஐதராபாத்தை சேர்ந்தவன். சிறுவயதிலேயே தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து சில சதி வேலைகளில் ஈடுபட்டு வந்தான்.
போலீசார் பிலாலின் கூட்டாளிகள் சிலரை கைது செய்தனர். பிலாலை மட்டும் பிடிக்க முடியவில்லை.
ஆனால் பிலால் வேறு ஒரு சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டான் என்று இப்போது தகவல் வெளியாகி உள்ளது.
ஐதராபாத் தியேட்டர் குண்டு வெடிப்பு நடந்து 5 நாள் கழித்து ஆகஸ்டு 30-ந்தேதி அவன் கொல்லப்பட்டு விட்டதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.
அப்போது அவன் பாகிஸ் தானில் உள்ள கராச்சி நகரில் தங்கி இருந்தான். அங்கு முகமூடி அணிந்து வந்த மர்ம மனிதன் ஒருவன் பிலாலை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றான். அவ னது அண்ணன் சமாத் என் பவனையும் அந்த மர்ம மனி தன் சுட்டு வீழ்த்தினான்.
இந்த தகவல் இந்திய உளவுத்துறையான `ரா' மற்றும் `ஐ.பி.' ஆகியவற்றுக்கு கிடைத்துள்ளது.
இந்திய உளவுத்துறையினர் `ஹுஜி' தீவிரவாதிகளின் டெலிபோன், இண்டர்நெட் பேச்சுக்களை கண்காணித்தபோது இந்த தகவல் கிடைத்ததாக கூறியுள்ளது. இண்டர்நெட் மூலம் அனுப்பப்பட்ட பிலால் உடலின் படமும் கிடைத்து உள்ளது. அதில் அவனது தலையில் பல இடங்களில் குண்டு பாய்ந்து இருந்தன.
நுங்கம்பாக்கத்துக்கு தபாலில் வந்த கிரெடிட் கார்டை திருடி ரூ.42 ஆயிரம் மோசடி: கூரியர் நிறுவன ஊழியர்கள் கைது
சென்னை, ஜுன். 4-
சென்னையில் உள்ள தனியார் வங்கி ஒன்று தனது வாடிக்கையாளருக்கு புளூ டார்ட் கொரியர் என்ற நிறுவனத்தின் மூலம் கிரெடிட் கார்டு ஒன்றை தபாலில் அனுப்பியது.
அந்த கிரெடிட் கார்டு குறிப்பிட்ட நாட்கள் ஆகியும் வாடிக்கையாளர் கையில் கிடைக்கவில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் வங்கியில் புகார் செய்தார். வங்கி நிர்வாகம் கொரியர் நிறு வனத்திடம் விசாரித்தனர். அதில் சம்பந்தப்பட்ட நபருக்கு தபால் அனுப்பி வைக் கப்பட்டது தெரிய வந்தது. ஆனால் இடையில் யாரோ மர்ம நபர்கள் தபாலை பிரித்து கிரெடிட் கார்டை அபேஸ் செய்திருக்கலாம் என சந்தேகித்தனர்.
இதற்கிடையே சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் பெயருக்கு அனுப்பப்பட்ட கிரெடிட் கார்டை பயன் படுத்தி ரூ. 42 ஆயிரத்திற்கு பொருட்கள் வாங்கி மர்ம நபர்கள் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து கொரியர் நிறுவன மேலாளர் சத்ய மூர்த்தி துணை போலீஸ் கமிஷனர் ராமசுப்பிர மணியிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் உதவி போலீஸ் கமிஷனர் முரளி, இன்ஸ் பெக்டர் ராஜேந்திரன், சப்- இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் மற்றும் போலீ சார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் கொரியர் நிறுவன ஊழியர் ஆல்பர்ட் (வயது19), டிரைவர் வள்ளிமுத்து (20) ஆகிய 2 பேரும் சேர்ந்து கிரெடிட் கார்டை திருடி ரூ. 24 ஆயிரம் மற்றும் ரூ. 18 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களை வாங்கியது தெரிய வந்தது.
பாக்தாத்தில் தற்கொலை படை தாக்குதல்: குண்டு வெடித்து 18 பேர் பலி
ஈராக்கில் போலீசார் மீதும், அமெரிக்க ராணுவத்தினர் மீதும் தீவிரவாதிகள் தொடர்ந்து தற்கொலை படை தாக்குதல் நடத்தி வருகிறார்கள். தீவிரவாதிகளின் கார் குண்டு தாக்குதலில் இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் பலியாகி விட்டனர்.
இந்த நிலையில் பாக்தாத் நகரில் நேற்று மாலை தற்கொலை படை தாக்குதல் நடந்தது. அங்குள்ள உயர் போலீஸ் அதிகாரி ஒருவரின் வீடு அருகே இந்த தாக்குதல் நடந்தது.
அந்த அதிகாரியின் வீடு அருகே மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்ததில் 15 பேர் உடல் சிதறி பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
விலங்குகளின் கடவுள்
பாங்காக்: நூற்றுக்கணக்கான வரிக்குதிரை சிலைகளுக்கு நடுவே நடந்து செல்கிறார் இந்தப் பெண். தாய்லாந்தின் பாங்காக் நகரில் உள்ள புனிதத் தலம் ஒன்றில்தான் அணி வகுத்து நிற்கின்றன இந்த வரிக்குதிரைகள்.
முஸ்லிம்களின் முதலைக்கண்ணீர்
முஸ்லிம்களின் முதலைக்கண்ணீர்
ஒரு மாமியார் மருமகளின் கொடுமை தாங்காமல் கிணற்றில் விழப்போனாளாம். அதைக்கண்ட மருமகள் ஓடி வந்து "அத்தை, அப்படியே விழுந்துடாதீங்க. உங்க புடவையை கழட்டி வெச்சிட்டு குதிங்க. உங்க நினைவா அந்த பட்டுப்புடவை இருக்கட்டும். இல்ல, அதை புடவை வீணாயிடும்!" என்று சொன்னாளாம்.
இந்த பழைய ஜோக் இந்த நேரத்தில் நினைவு வருகிறது.
துயர நேரத்தில் இந்த ஜோக்கா! மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கு பல ஆண்டுகளுக்குப் பின்னால் இந்தியாவில் இப்படி ஒரு பேரிழப்புடன் ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு. அதில் சிதறிய மனித உடல் காட்சிகளும், எழுந்த ஓலங்களும் நம் நெஞ்சத்தில் நெருப்பாய் சுடுகின்றன.
இந்த அவலம் ஏன் தொடர்கிறது? இந்த அராஜகம் ஏன் நடக்கிறது? இதற்கு தீர்வுதான் என்ன என்று ஒவ்வொரு இந்தியனும் கேள்வி எழுப்புகிறான். ஒவ்வொரு இந்தியனும் தன்னையும் எல்லோரையும் கேட்கும் கேள்வி இதுதான்.
ஆனால், இந்த குண்டுவெடிப்பிற்கான நம் சகோதர முஸ்லிம்களின் எதிர்வினையைப் பார்க்கும்போது ஆத்திரமாய் இருக்கிறது. இவர்களின் பசப்பலிலும், பாசாங்கிலும் இவர்களின் உண்மை மனநிலை வெளிப்படுகிறது.
இவர்கள் என்ன செய்ய வேண்டும்? தொடரும் இந்த குண்டுவெடிப்புகள், இஸ்லாத்தின் பேரால் நடக்கும் தீவிரவாத செயல்கள், மானாவாரியாக மடியும் மனித உயிர்கள் இவற்றின் அடிப்படை காரணிகளை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை பரிந்துரைந்திருக்க வேண்டாமா? ஆனால், இதை எதிர்பார்த்தால் நமக்கு பெருத்த ஏமாற்றமே கிடைக்கிறது.
இஸ்லாமிய சமுதாயத்தின் மிகப்பெரும் இழுக்காக மாறிக்கொண்டிருக்கும் இந்த ஜிகாதி சக்திகளை முறியடிக்கும் ஒரு சமுதாய ஆர்வமும், அறைகூவலும், சுய-பரிசோதனையும் நான் இஸ்லாமிய சமுதாயத்திடம் அறவே காணவில்லை.
மாறாக, இந்திய இஸ்லாமியர்கள் இந்த ஈன நிலையை இல்லை என்று மறுக்கப் பார்க்கிறார்கள்.
இந்தியர்கள் எக்கேடு கெட்டாலும் போதும், நாம் இதில் மாட்டாமல் இருக்க வேண்டும் என்பதே இவர்களின் தலையாய கவலையாய் தெரிகிறது. இஸ்லாமியர்கள் என்ற பேருக்கு களங்கம் வரக்கூடாதே என்றுதான் இவர்களின் முழு முயற்சியாகவும் இருக்கிறது.
அதனால், தொடரும் குண்டு வெடிப்புகள் அனைத்திலும் தவராமல் தென்படும் இஸ்லாமிய ஜிகாதி அமைப்புகளின் தொடர்புகள் என்னும் முழு பூசணியை கவளம் சோத்தில் மறைக்க பெரும்பாடு படுகிறார்கள்.
இந்த முயற்சிகள் குண்டுவெடிப்புக்கு உடனேயே ஆரம்பித்தன. குண்டுவெடிப்பு துயர சம்பவம் நிகழ்ந்ததும் ராஜஸ்தான் இஸ்லாமிய போரம் "இறந்தவர்களில் முஸ்லிம்களும் உண்டு" என்று அறிக்கை வெளியிட்டு சதவீத கணக்கு போட்டார்கள்.
எதில்தான் இட ஒதுக்கீடு கணக்கு போடுவது என்று ஒரு மனசாட்சி வேண்டாமா?
பொது இடங்களில் நடக்கும் தீவிரவாத செயல்களில் எல்லா இனங்களும் பாகுபாடின்றி இந்தியர்கள் என்ற முறையில் பாதிக்கப்படுகிறார்கள். இதில் இஸ்லாமிய சதவீதத்தை தலைப்பு செய்தியாக இவர்கள் பிரகடன படுத்துவதன் உள்நோக்கம் இந்த தீவிரவாத சக்திகள் இஸ்லாமியர்களுக்கு கூட எதிரானவை என்று சாதிக்க முயலுவதுதான்.
ஆனால், உண்மையில் இந்த ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு திட்டத்தில் முஸ்லிம்கள் பெருவாரியாக பழகும் இடங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவே துப்பறியும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாறாக பொது இடங்களில் கணிசமான வியாபார அமைப்புகள் இஸ்லாமியர்கள் கையில் இருக்கின்றன. புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஹவா மகல் இடத்தில் 50% கடைகள் இஸ்லாமியர்களுடையவை. ஜொகான் பஜாரில் 35% வியாபார தளங்கள் இஸ்லாமியர்களுடையவை. இப்படி இருக்கும்போது இஸ்லாமியர்களும் இந்த குண்டுவெடிப்பில் மடிவதில் என்ன வியப்பு இருக்க முடியும்? இப்படி இஸ்லாமியர்களை பாதிக்கப்பட்டவர்களாக சித்தரிக்கப்படுவதன் முக்கிய நோக்கம் இந்த குண்டுவெடிப்புக்கு அந்த சமுதாயத்தின் பொறுப்பை கை கழுவுவதைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?
இந்த குண்டுவெடிப்பின் நோக்கமாக இந்திய முஜாஹிதின் அமைப்பு விடுத்திருக்கும் செய்திகள் இந்த குண்டுவெடிப்பின் நோக்கமே ஒரு இஸ்லாமிய ஜிகாத் என்பது தெளிவாகிறது.
இந்த குண்டுவெடிப்பின் நோக்கம் "இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் இந்தியாவில் காப்பது" என்று அந்த ஜிகாதி அமைப்பு பிரகணப்படுத்தி உள்ளது. அந்த அமைப்பு குறிப்பிடும் பிரச்சனைகளும் (குஜராத் முதலியன) இந்திய சார்புள்ளவை. இதனால், இந்த குண்டு வெடிப்பில் இந்திய இஸ்லாமிய சமுதாயத்தினர் சிலர் பங்கு இருக்கலாம் என்று விசாரிக்கப்படும் என்பது எல்லோருக்கும் தெரிகிறது.
இதனால் இஸ்லாமியர்கள் அவமானப்படுகிறார்கள். குர்ஆன் பெயரைச்சொல்லி நடந்த குண்டுவெடிப்பால் இவர்கள் அவமானப்படவில்லை. (அந்த ஜிகாதி அமைப்பு தங்கள் நடவடிக்கைக்கு குர்ஆன், ஹதீத், முகம்மது நபி அவர்களின் ஆதாரங்களைக் குறித்துள்ளது) ஆனால், விசாரணைக்காக சில இஸ்லாமியர்களை அணுகினால் அது இவர்களுக்கு அவமானமாக இருக்கிறதாம்
இது குறித்து இஸ்லாமியர்கள் அவமானப்பட்டு அதை உண்மையில் தவிர்க்க வேண்டுமானால் அவர்கள் தங்கள் சமுதாய கட்டமைப்புகளில் ஊடுருவிய இந்த ஜிகாதி சக்திகளை எப்படி அடையாளம் கண்டு வேரறுப்பது என்பது குறித்து ஆலோசிக்கவேண்டும். இந்த ஜிகாதி சக்திகளுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுக்கும் பெரும்பான்மை இஸ்லாமிய சமுதாயத்தை எப்படி மேம்படுத்துவது என்று ஆலோசிக்க வேண்டும். ஆனால், வருத்தம்படும் விதமாக, இது குறித்து இஸ்லாமியர்களின் ஒரு கட்டுரை, பேச்சு, பரிந்துரை என்று எதையும் நாம் காணவில்லை.
மாறாக, எல்லா குண்டுவெடிப்புகளிலும் எடுத்த அதே வழிமுறையாக, இந்த முறையும் இஸ்லாமியர்கள், குண்டுவெடிப்புக்கு உடனே, "விசாரணையில் இஸ்லாமிய சமுதாயத்தை இழுக்க கூடாது" என்று எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போட ஆரம்பித்துவிட்டார்கள்.
இதனால் தடை இல்லாத விசாரணை நடம்பெறாமல் போனாலோ, விசாரணை தடம் திரும்பினாலோ, உண்மையான தீவிரவாதிகள் தப்பினாலோ அதனால் இவர்களுக்கு சிறிதும் கவலை இல்லை!
ஜமாத்-ஏ-இஸ்லாமி-ஹிந்த் (JIH) கைதான முஸ்லிம் இளைஞர்கள் அப்பாவிகள் என்று இப்போதே தீர்ப்பு சொல்லி விட்டது. அதற்கான ஆதாரம் அவர்கள் இஸ்லாமியர்கள் என்பது மட்டும்தான்! இஸ்லாமியர் என்ற ஒரே காரணத்துக்காக அவர்கள் அப்பாவிகள், தொடமுடியாதவர்கள் என்பது இவர்கள் வாதம்.
இதற்கு முந்தைய பல தீவிரவாத குண்டுவெடிப்பு சம்பவங்களிலும் இஸ்லாமிய அமைப்புகள் கோரசாக அய்யோ, முஸ்லிம்களை விசாரிக்கிறார்களே என்று கூச்சல் போட்டார்கள். பிரதமர் மன்மோகன்சிங் கிடம் முறையிட்டார்கள். மலேகான் முதலான குண்டுவெடிப்புகளில் மனித உரிமை அமைப்புகள் வாயிலாகவும் பல தடைகளை ஏற்படுத்தினார்கள். ஊடகங்களிலும் தடங்கல் இல்லாத விசாரணைக்கு தங்களின் எதிர்ப்பை இடை விடாமல் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.
இதைத்தான் நான் முதலில் சொன்ன கதையோடு ஒப்பிடுகிறேன். மாமியார் செத்தாலும் பட்டுப்புடவை கெடாமல் இருந்தால் சரி என்கிற மருமகள் போல, எத்தனை இந்தியர்கள் மடிந்தாலும் என் பேர் மட்டும் மாட்டாமல் இருந்தால் சரி என்ற ஒரு தேச விரோத, ஏன் மனித விரோத, அணுகுமுறை இந்திய இஸ்லாமியர்களிடம் இருக்கிறது.
இதோடு நம் இந்திய இஸ்லாமியர்கள் நின்ற பாடில்லை!
இதற்கு ஒரு படி மேலே போய் இந்த குண்டு வெடிப்புக்கு காரணங்களையும், காரணமானவர்களையும் அவர்கள் தங்கள் கற்பனையில் கண்டுபிடித்து அறிவித்து விட்டார்கள்.
இவ்வளவு சுலபமாக இவர்கள் இந்த வழக்கை தீர்த்து விட்டது குறித்து மகிழ்ச்சி அடையாதீர்கள். ஏனென்றால், எல்லா இஸ்லாமிய தீவிரவாதத்திற்கும் இதே தீர்ப்புதான் இவர்களிடத்தில்.
அகில இந்திய இஸ்லாமிய தனிச்சட்ட அமைப்பின் தலைவர் இல்யாஸ் இந்த குண்டுவெடிப்பு அகில உலக சதி என்று தீர்ப்பு சொல்லி விட்டார். அவர் "உலகளாவிய இஸ்லாமிய விரோத சக்திகள் முஸ்லிம்களின் பேரைக்கெடுக்க இந்துத் தீவிரவாதிகளுடன் சேர்ந்து இந்த குண்டுவெடிப்பு செய்தார்கள்" என்கிறார்.
"It seems some international agencies hell-bent on tarnishing the image of Islam and Muslims are conniving with Hindu extremist groups to carry out such attacks so that the entire community could be put in the dock."
"இஸ்லாமிய தீவிரவாதம்" என்கிற வரிகளை சொல்லக்கூடாது, பேசக்கூடாது என்று தீவிரமாக எதிர்க்கும் இந்த இஸ்லாமியர்கள் அதே சமயம் "இந்து தீவிரவாதம்" என்ற வரிகளை கூசாமல் பேசுவதும், எழுதுவதும் எப்படிப்பட்ட இரட்டை வேடம் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.
விசாரணையைத் திசை திருப்பும் முயற்சிகளில் இதைவிட அபத்தமான ஒரு வழியை நான் அறிந்ததில்லை!
உலகெங்கிலும் நடக்கும் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு அந்தெந்த ஊருக்கு ஏற்றாற்போல அமெரிக்கா, இஸ்ரயில் என்று காரணம் சொல்லி இந்த பிரச்சனையை பைசல் செய்துவிடும் இஸ்லாமிய அமைப்புகள், இந்தியாவில் தீவிரவாதத்துக்கு அம்மாதிரி காரணிகள் ஏதும் இல்லாததால் இந்து-தீவிரவாதிகள் இதைச்செய்து இவர்கள் பெயரைக் கெடுக்கிறார்கள் என்கிறார்கள்.
மாறாக, இந்த குண்டுவெடிப்புக்கு காரணம் ஏற்ற இந்திய முஜாஹிதின் அமைப்பு விடுத்த அறிக்கையே இவர்களின் திசை திருப்பலை பொய் என்று தெளிவாக்குகிறது. முஜாஹிதின் விடுத்த ஈ-மெயில் செய்தி இந்த குண்டுவெடிப்புக்கான காரணத்தை தெளிவாக சொல்கிறது. குர்ஆனின் வரிகளை ஆதாரமாக்கி இவர்கள் இந்த குண்டுவெடிப்பை நடத்தி இருப்பது வெளிப்படை.
இஸ்லாமிய தீவிரவாதம் இல்லை என்று சொல்லும் மற்ற திம்மி முஸ்லிம்களை இந்த ஜிகாதி அமைப்பே நாய்கள் என்று இழிவுபடுத்துகிறது.
இதனால், இந்த தீவிரவாதத்தின் அடிப்படை ஊற்று எங்கு இருக்கிறது என்று தெளிவாகிறது.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக நம் தமிழ்நாட்டில் தமுமுக ஏமாற்று அறிக்கையே வெளியிட்டிருக்கிறது.
இந்த குண்டுவெடிப்பின் எதிரொலியாக தமுமுக விடுத்த அறிக்கையில் இந்த தீவிரவாதிகளை தூக்கில் போடவேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறார்கள்.
அடாடா, என்ன நியாயமான குமுறல் என்று ஒரு கணம் மகிழ்ந்து விடாதீர்கள். இதே தமுமுக தான் முகம்மது அப்ஸலின் தூக்குதண்டனையை ரத்து செய்ய தீவிரமாக போராடியது. இந்தியாவில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் அப்ஸலின் தூக்கு தண்டனையை எதிர்த்தன.
சுப்ரீம் கோர்ட்டால் "சமுதாயத்திற்கு களங்கம் மற்றும் அச்சுறுத்தல்" என்று அறிவிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட ஒரு தீவிரவாதியின் தூக்கு தண்டனையை அவன் இஸ்லாமியன் என்ற ஒரே காரணத்திற்காக எதிர்த்து விட்டு (அதன் பின்னர் வந்த மற்ற தூக்கு தண்டனைகளை நிறுத்த இவர்கள் போராடவில்லை!), இப்போது இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இந்தியர்களின் உள்ளம் பதறிக்கொண்டிருக்கும்போது "தூக்கில் போடு" என்று அறிக்கை விடுவது கடைந்தெடுத்த இரட்டை வேடம்.
முதலில் ஒடும் திருடன் பின்னால் தன்னை பிடிக்க துரத்துவர்களிடமிருந்து தப்பிக்க "திருடன் பிடி பிடி" என்று கத்திக்கொண்டு ஓடுவான் இல்லையா அதுதான் இவர்களின் அறிக்கை.
அப்படி தீவிரவாதத்தை கண்டிப்பதாக அறிக்கை விடும் இந்திய இஸ்லாமிய அமைப்புகள் எல்லாம் அதே அறிக்கைகளில் தீவிரவாதத்துக்கு நியாயம் கற்பிக்கும் வரிகளை தவறாமல் சேர்ப்பது வழக்கம். இதனால் இந்த அறிக்கைகள் தீவிரவாதத்திற்கு சப்பைகட்டாகவே முடியும்.
அதுபோலவே, தமுமுகவும் இதுவரை நடந்த குண்டுவெடிப்பில் கைதானவர்கள் அப்பாவிகள் என்றும் அவர்களை விடுதலை செய்து உண்மையான குற்றவாளிகளை கைது செய்திருந்தால் இப்படி குண்டுகள் வெடிக்காது என்றும் கண்டுபிடித்து அந்த அறிக்கையில் சொல்லியிருக்கிறது. அதாவது, 'இந்து தீவிரவாதிகளை' கண்டுபிடித்து தூக்கில் போட வேண்டும். அப்போது குண்டுவெடிக்காது. அப்படியே வெடித்தாலும், மீதமுள்ள இந்துக்களையும் தூக்கில் போடவேண்டும். அதாவது, இந்தியாவில் இந்துக்கள் இருக்கும்வரை குண்டுவெடிக்கும். இதுதான் இவர்கள் சொல்ல வருவது.
இந்த ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பின் காரணம் வெளிப்படை. அதை அந்த குண்டுவெடித்த அமைப்பே தெளிவுபடுத்தியிருக்கிறது. ஆனால், இந்த உண்மையை உணர மறுத்து முக்காடு போட்டு கண்ணை மூடி முதலைக்கண்ணீர் விடும் நம் இஸ்லாமிய சகோதரர்கள் திருந்தினால் தீவிரவாதம் மடியும், இஸ்லாமிய சமுதாயம் தழைக்கும். மாறாக, உண்மையை உணர மறுத்தால் தீவிரவாதம் மடியும் மற்றும் இஸ்லாமிய சமுதாயமும் தனிமைப்படுத்தப்பட்டு மடியும்.
*****
,
http://sathiyaislam.wordpress.com/2008/05/21/crocodiletears/
கையில் ரோஜாப்பூவோடு ஒன்பது ஆண்டுகாலம் ஒரு பெண்ணின் பின்னால் சுற்றித் திரிந்த ஒருவன்
முகேஷ் அம்பானிக்கு ரூ.இரண்டரை லட்சம் அபராதம்
முகேஷ் அம்பானிக்கு ரூ.இரண்டரை லட்சம் அபராதம் | |
மும்பை : ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி, முறையான அனுமதியின்றி தனது வீட்டில் ஹெலிபேட் அமைத்துள்ளதற்காக இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மும்பை தெற்குப் பகுதியில் சீவைண்ட் அபார்ட்மென்டில் வசித்து வருகிறார். ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதற்காக, தனது வீட்டின் மாடியில் ஹெலிபேட் அமைக்க இவர் மும்பை மாநகராட்சியில் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்ததாகவும், ஆனால், அனுமதி வழங்கப்படுவதற்கு முன்பே, ஹெலிபேட் அமைக்கும் பணியை அம்பானி தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இது மாநகராட்சியின் விதியை மீறிய செயல் என்றும், அவர் கட்டிவரும் கட்டிடத்தின் மதிப்பிற்கு இணங்க முகேஷ் அம்பானிக்கு இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகவும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், தற்போது நடைபெற்றுவரும் ஹெலிபேட் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு முகேஷ் அம்பானிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார் |
இந்தியா டுடே பத்திரிக்கை சொல்லும் ஜனநாயகத்தின் கொழுத்த பயனாளி யார்?உங்களுக்கு தெரியுமா?
உணர இஸ்லாமிய