சமீபத்திய பதிவுகள்

மன்மோகன் சிங் என்னும் கல்லுளி மங்கனின் திருட்டுத்தனம் அம்பலம் !

>> Saturday, August 27, 2011

ஊமை ஊரைக் கெடுக்கும்​, பெருச்சாளி பேரைக் கெடுக்கும்
ஊமை ஊரைக் கெடுக்கும், பெருச்சாளி பேரைக் கெடுக்கும் என்று தமிழ்நாட்டில் ஒரு சொலவடை உண்டு. இந்த சொலவடைக்கு பொருத்தமான நபர் யார் என்று கேட்டால் நமது பிரதமர் மன்மோகன் சிங் தான். இந்த மன்மோகன் சிங் சாதாரணமான நபர் அல்ல. இன்று இந்தியாவை உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கும் அத்தனை ஊழல்களுக்கும் மன்மோகனே காரணம் என்றால் அது மிகையாகாது. மிஸ்டர்.க்ளீன் என்ற ஒரு இமேஜை வேறு வைத்துக் கொண்டு ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஒரு நபர் என்றால் அது மன்மோகன் சிங் தான். இந்த மிஸ்டர்.க்ளீன் நினைத்திருந்தால் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடைபெற்ற ஊழலை நிச்சயமாக தடுத்திருக்க முடியும். 25.10.2007 அன்று, அப்போதைய தொலைத் தொடர்புத் துறைச் செயலர் டி.எஸ்.மாத்தூர், குறைந்த பட்சம், ட்ராயின் கருத்தைக் கேட்டாவது முடிவெடுக்கலாம் என்றும், ராசாவின் பார்வைக்கு, ஒவ்வொரு மாநிலத்திலும், ஸ்பெக்ட்ரம் எவ்வளவு உள்ளது என்பதையும், பல மாநிலங்களில் கையிருப்பு மிகக் குறைவாக உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டி அலுவலகக் குறிப்பு ஒன்றை வைக்கிறார். பின்னாளில் அளித்த ஒரு பேட்டியில், அப்போதைய தொலைத் தொடர்புத் துறைச் செயலாளர் டி.எஸ்.மாத்தூர் தெரிவித்தது என்ன தெரியுமா ? �மே 2007ல் மந்திரியாக ஆனதும், ராசா என்னை அழைத்தார். �சார் குறைஞ்சது 500 லைசென்ஸாவது குடுக்கனும். என்ன பண்ணலாம்னு சொல்லுங்க� என்று கூறினார். அதற்கு மாத்தூர், ஸ்பெக்ட்ரம் அந்த அளவுக்கு இல்லை. கொடுக்க இயலாது என்று தெரிவிக்கிறார். உடனே ராசா �லாஸ்ட் டேட்ட மாத்திட்டா குடுக்கலாம்ல ?� என்று எதிர்க் கேள்வி போடுகிறார். அதற்கு மாத்தூர், இது இயற்கை நீதிக்கு எதிரானது. 1 அக்டோபர் 2007 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்து விட்டு, சொல்லாமல் கொள்ளாமல் கடைசித் தேதியை மாற்றுவது என்பது தவறானது அதனால் அவ்வாறு செய்ய இயலாது� என்று கூறுகிறார். மாத்தூர் இவ்வாறு மறுத்ததும், அவர் லீவ் போட்ட அன்று, தொலைத் தொடர்புத் துறை கமிஷனின், தொழில்நுட்ப உறுப்பினராக இருந்த ஸ்ரீதரன் என்பரிடம் கையெழுத்து வாங்கி விடுகிறார் ராசா�. இது போல ராசாவுக்கு, பல்வேறு எச்சரிக்கைகள் விடப்பட்டன. ராசா எச்சரிக்கையை சட்டை செய்பவரா என்ன ? பெயருக்கேற்றார் போல எதேச்சதிகாரமாக செயல்பட்டார். தகத்தகாய கதிரவனல்லவா ? 02.11.2007 அன்று, 25.09.2007 அன்று வரை பெறப்பட்ட விண்ணப்பங்களை மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப் படும். அதுதான் கடைசித் தேதி என்று முடிவெடுக்கிறார். இந்த முடிவின் முக்கியப் பின்னணி, 25.09.2007 அன்று கடைசி தேதி என்று முடிவெடுத்தால், டெல்லியில் உள்ள ஒரே ஒரு நிறுவனத்துக்கான ஸ்பெக்ட்ரம், ராஜாதி ராசாவுக்கு நெருக்கமான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு கொடுக்க இயலும். சரி. நான் எடுத்ததுதான் முடிவு என்று தொலைத் தொடர்புத் துறையில் சொல்லியாகி விட்டது. ட்ராய் அமைப்புக்கு கூட தகவல் தெரிவிக்க மாட்டேன், என்றும் சொல்லியாகி விட்டது. இத்தோடு விவகாரம் முடிந்து விடுமா என்ன ? ராசாவுக்கு மேல் சக்கரவர்த்தி என்று ஒருவர் இருக்கிறாரே�. மன்மோகன் என்று. அவருக்கு சொல்ல வேண்டாமா ? 02.11.2007 அன்று, ராசா பிரதமர் மன்மோகனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். 25.09.2007தான் விண்ணப்பம் அளிக்க கடைசி தேதி என்ற விபரம் பத்திரிக்கைகளில் அறிவிப்பாக வந்ததாக கூசாமல் ஒரு பொய்யை எழுதுகிறார். அதோடு நில்லாமல், சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம், ஸ்பெக்ட்ரம் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி நாளை நிர்மாணிப்பது தொடர்பான விவகாரத்தை அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறிய கருத்து, தவறானது என்றும் குறிப்பிடுகிறார். எப்படி இருக்கிறது ? சட்டத்துறை அமைச்சகம் தவறாக கூறியதாம், சரியாகச் சொன்னாராம். இது மட்டுமல்லாமல், ஸ்பெக்ட்ரம் வழங்குவது தொடர்பான விவகாரத்தில், தொலைத் தொடர்பு அமைச்சகம், சட்டத்திற்கு உட்பட்டு, நூல் பிசகாமல் நடந்து கொள்வதாகவும் ராசா தெரிவித்திருந்தார். 99ம் ஆண்டின் தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை பத்தி 3.1.1ல் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டதை ராசா வசதியாக குறிப்பிட மறந்தார். இந்தக் கடிதத்தை ராசா அனுப்பிய 02.11.2007 அன்றே, பிரதமர் ராசாவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில், �அன்பான ராசா, ஸ்பெக்ட்ரம் கொஞ்சூன்டு தான் இருக்கு. நெறய்யயய பேரு அப்பிளிகேசன் போட்ருக்காங்க.. நெறய்ய பேரு கேட்ருக்கதால, இன்னும் பல வருசத்துக்கு ஸ்பெக்ட்ரம் இருக்காதுன்றதால, அப்ளை பண்ண நெறய்ய பேருக்கு ஸ்பெக்ட்ரம் கெடைக்காம பூடும். அத்தோட இல்லாம, டெலிகாம் பாலிசின்னு ஒன்னு வச்சுருக்காங்க. அது படி பாத்தா, இருக்கற ஸ்பெக்ட்ரம்ம, எல்லாருக்கும் நயந்து குடுக்குனும்னு அதுல சொல்லிக்கீது. அதனால, எவ்ளோ ஸ்பெக்ட்ரம் கீதுன்னு, பாத்துப்புட்டு, அப்பாலிக்கா லைசென்ஸ் குடுங்க. ஸ்பெக்ட்ரமே இல்லாம வெறும் லைசென்ஸ் மட்டும் குடுத்தீங்கன்னாக்கா, அந்த கம்பேனிக்காரன் லைசென்ச வச்சுக்கிட்டு இன்னா பண்ணுவான் ?� என்று எழுதுகிறார். அவ்வளவுதான், ராசாவுக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. என்னடா இது, நம்பளுக்கு தெரியாதது எதுவுமே இல்லை. நம்பகிட்டயே இவரு கேள்வி கேக்கறாரே என்று அதிசயித்த ராசா, இரவோடு இரவாக, அவருக்கு பதில் அனுப்ப முடிவு செய்கிறார். அது மட்டும் அல்லாமல், ராசா, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், எல்லாவற்றையும் கரீட்டாக செய்திருக்கிறேன் என்று அனுப்பிய கடிதம், பிரதமர் அலுவலகத்தை அடையும் முன்பே, பிரதமரின் கடிதம் வந்து சேர்ந்ததால் ராசாவின் அதிர்ச்சி மேலும் கூடியது. அன்று இரவே பதில் கடிதம் தயாரிக்கலாம் என்ற முடிவெடுத்து, தனது செயலாளர் சந்தோலியாவை வரவழைக்கிறார். அவர் வந்தால் போதுமா� கடிதத்தை டைப் அடிக்க நம்பகமான ஆள் வேண்டுமில்லையா�.. அதனால், 2004ம் ஆண்டு முதல், ராசாவின் காரியதரிசியாக இருந்த, ஆச்சார்யா ஆசீர்வாதம் என்பவரை, இரவு 8 மணிக்கு உடனே வீட்டுக்கு வாருங்கள் என்று கூறுகிறார். அனைவரும், ராசாவின் வீட்டில் கூடுகிறார்கள். ஆசீர்வாதம் வீட்டுக்கு வந்ததும், ராசாவே அவரோடு அமர்ந்து கடிதத்தை டிக்டேட் செய்கிறார். �கண்மணி, அன்போட�.� என்று அல்ல. �டியர் மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்� என்று தொடங்கும் அந்தக் கடிதத்தில், ராசா, �எல்லாம் கரீட்டா நடந்துகினு கீது. ஒரு தப்பும் பண்ணல. இந்த மேரி வெளிப்படையா யாருமே நட்ந்து கிட்டது இல்ல. இப்போ மட்டும் இல்ல.. ப்யூச்சர்ல கூட, இதே மேரி நூல் புட்சா மாதிரி எல்லாம் நடக்கும். நீ ஒன்யும் கவலைப் படாதே வாத்யாரே� என்று பதில் எழுதுகிறார். ராசா, சந்தோலியா, தொலைத் தொடர்புக் கமிஷன் உறுப்பினர் ஸ்ரீதர், ஆகியோர் சேர்ந்து இந்த கடிதத்தை தயார் செய்கிறார்கள். இரவு 11 மணிக்கு வேலை முடிகிறது. இரவோடு இரவாக, சிறப்புத் தூதுவர் மூலம், அந்தக் கடிதம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப் படுகிறது. என்ன ஆயிற்றோ தெரியவில்லை. 26.12.2007 அன்று சந்தோலியா, அந்தக் கடிதத்தை தயாரித்த ஆசீர்வாதத்தை அழைத்து, நீங்கள் அடித்த கடிதம் எங்கே என்று கேட்கிறார். அவர் இந்தக் கம்ப்யூட்டரில் தான் இருக்கிறது என்று கூறியதும், அதை பென் டிரைவில் காப்பி செய்து, மீண்டும் ப்ரின்ட் எடுத்து, பிரதமருக்கு அனுப்பப் படுகிறது. இந்த ஆசீர்வாதம், சிபிஐ ன் முக்கிய சாட்சியாக சேர்க்கப் பட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தகுந்தது. இவரின் முக்கியத்துவம் கருதி, இவர் இருக்கும் இடம் ரகசியமாக வைக்கப் பட்டு, இவருக்கு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்த லைசென்ஸ் வழங்குவது குறித்த கோப்புகள், பல்வேறு அதிகாரிகளிடம் சென்று வந்த போது, நேர்மையான அதிகாரிகள் பலர், ராசாவின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தே வந்துள்ளனர். அப்போது, தொலைத் தொடர்பு கமிஷனின் நிதிக்கான உறுப்பினராக இருந்த மஞ்சு மாதவன் என்பவர், இது வரை லைசென்ஸ் கொடுத்து வந்தது 2001ல் உள்ள விலை. இப்போது ஸ்பெக்ட்ரத்துக்கான தேவை (Demand) மிக அதிகமாக உள்ளது. அதனால், ஏலம் விட்டால், அதிகத் தொகையை ஏலத்தில் கேட்பவர்கள், ஸ்பெக்ட்ரம் பெற இயலும், மேலும், அரசுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று, சம்பந்தப் பட்ட கோப்பிலேயே எழுதுகிறார். ஆனால், தகத்தகாய கதிரவன், அவ்வாறு எழுதப்பட்டதன் மீது, எந்த முடிவும் எடுக்காமல், டபாய்து விடுகிறார். அப்போதைய தொலைத் தொடர்புத் துறைச் செயலர் மாத்தூர், இது தொடர்பாக நடைபெற்ற கூட்டங்களில் விவாதிக்கும் போதெல்லாம், ஏலமெல்லாம் விட முடியாது என்பதை தீர்மானமாக தெரிவித்தார். மேலும், 2001ல் உள்ள விலைக்குத் தான் கொடுக்க முடியும் என்றும் தெரிவித்தார் என்கிறார் மாத்தூர். ராசா 2001ல் வாங்கிய வீட்டை, இன்று அதே விலைக்கு கொடுப்பாரா ? 26 டிசம்பர் அன்று எழுதிய கடிதத்தில் ராசா, நான் உங்களோடு தொலைத் தொடர்புத் துறை குறித்து விவாதித்தது போல என்று குறிப்பிட்டிருப்பதை கவனிக்க வேண்டும். மன்மோகனோடு விவாதித்த பிறகு ராசா முடிவெடுத்தார் என்றால், சிபிஐ மன்மோகனை ஒரு சாட்சியாகவாவது விசாரித்திருக்க வேண்டுமா வேண்டாமா ? ஆனால் மன்மோகன் கீழ் பணியாற்றும் சிபிஐக்கு, மன்மோகனை விசாரிக்க எப்படி தைரியம் வரும் ? இவ்வாறு ராசா பிரதமருக்கு கடிதம் அனுப்பியவுடன் பிரதமர் என்ன செய்திருக்க வேண்டும் ? சட்ட அமைச்சகம் அமைச்சரவை குழுவுக்கு அனுப்பவும் என்று தெரிவித்த கருத்தை மீறி, நீங்கள் தன்னிச்சையாக முடிவெடுத்திருக்கக் கூடாது, அதனால் நான் அந்தக் கோப்பை அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்புகிறேன் என்றல்லவா உத்தரவிட்டிருக்க வேண்டும். பிரதமரும் பதில் கடிதம் அனுப்பினார். ஆனால் அந்தக் கடிதத்தில், உங்களின் 26.12.2007 நாளிட்ட கடிதத்தை வரப்பெற்றேன் என்று பதில் எழுதுகிறார். அப்போது ராசா மன்மோகனோடு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக விவாதித்ததை மறுக்கவில்லை என்றுதானே பொருள்.... ஏன் மவுனமானார் இந்த ஊமைச் சாமியார் ?  ஏன் இவ்வாறு எழுதுகிறார் என்று கேட்கிறீர்களா ? ராசா திமுகவின் அமைச்சராயிற்றே�.. மன்மோகன் பிரதமாராக இருக்க வேண்டாமா ? மன்மோகன் பிரதமர் பதவியில் நீடித்ததற்காகத் தான் இந்தியா ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியை இழந்தது. அன்று மன்மோகன், அந்தக் கோப்பை ராசாவிடமிருந்து பறித்து, அமைச்சரவை குழுவுக்கோ, அல்லது தன்னிடமோ மாற்றியிருந்தால், இந்த நஷ்டம், ஊழல் விசாரணை இதெல்லாம் தேவையா ? கடந்த வாரம் பத்திரிக்கை ஆசிரியர்களோடு நடந்த சந்திப்பின் போது, மன்மோகனிடம், 2ஜி விவகாரம் தொடர்பாக கேள்விகள் கேட்கப் பட்டன. நீங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளை இன்னும் கடினமாக கையாண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு, �எது சரியான வழி என்று எனக்குத் தெரியவில்லை. சில விஷயங்களை (ஸ்பெக்ட்ரம்) தவிர்த்திருக்க முடியுமா என்பதும் தெரியவில்லை. 2ஜி விவகாரத்தை எடுத்துக் கொண்டால், நான் ராசாவிடம் ஏலம் விடலாம் என்று எழுதினேன். அவர் ட்ராய் ஏலம் விட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. ட்ராய் அரசுக்கு ஆலோசனை வழங்கத் தானே இருக்கிறது என்பதால் அத்தோடு அதை விட்டு விட்டேன். நேர்மையாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப் படும் என்று ராசா கூறியதை நம்பினேன். என்னுடன் பணியாற்றும் ஒரு நபர் இது போல சொல்லும் போது அதை நம்பாமல் நான் எப்படி இருப்பது ? அதற்குப் பிறகு சிவிசியிடம் புகார் அளிக்கப் பட்டது. சிபிஐ விசாரணையை தொடங்கியது. தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் சோதனையிடப் பட்டது� என்றார். இந்த விவகாரம் செய்தித் தாள்களில் தினந்தோறும் வெளி வந்ததே என்ற கேள்விக்கு, �செய்தித் தாள்களை வைத்து முடிவெடுப்பதாக இருந்தால், நான் அத்தனை விவகாரங்களையும் சிபிஐயிடம் தினந்தோறும் அனுப்பிக் கொண்டிருக்க வேண்டும்� என்று இறுமாப்பாக பதிலளித்துள்ளார். ராசாவை நான் நம்பினேன் என்று மன்மோகன் சிங் சொல்வதை ஏற்றுக் கொள்வதற்கில்லை. இன்டெலிஜென்ஸ் ப்யூரோ என்னும், மத்திய உளவுத்துறை ஏறக்குறைய அனைத்து அமைச்சர்களின் நடவடிக்கைகளையும் கண்காணிக்கும். அவ்வாறு கண்காணித்து தினந்தோறும் பிரதமருக்கு அறிக்கை அளிக்கும். ராசாவை யார் சந்திக்கிறார்கள், என்ன செய்து கொண்டிருக்கிறார், யாரோடு பேசுகிறார், என்பதையெல்லாம் தினமும் கண்காணிக்கும். அவ்வாறு கண்காணித்தன் விளைவே, ராசா 2.11.2007 அன்று தனக்கு கடிதம் எழுதிய விபரம் அறிந்த மன்மோகன், அந்தக் கடிதம் கிடைக்கும் முன்பே முந்திக் கொண்டு ராசாவுக்கு கடிதம் எழுதியது. அதனால் ராசாவை நான் நம்பினேன் என்பதை ஏற்பதற்கில்லை. பத்திரிக்கைகளை நான் நம்ப முடியாது என்ற மன்மோகனின் பேச்சு திமிர்த்தனமானது. ஸ்பெக்ட்ரம் விவகாரம், வெளி வந்ததும், இன்று ராசா, கனிமொழி உள்ளிட்டோர் சிறையில் இருப்பதற்கும், 80 சதவிகித காரணம் பத்திரிக்கைகளே�. பயனீர் நாளேடு, டிசம்பர் 2008ல் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த முதல் செய்தியை வெளியிடாமல் போயிருந்தால் இன்று ராசாவும் கனிமொழியும் சிறையில் இருந்திருப்பார்களா ? பத்திரிக்கைகள் என்ன பொறுப்பில்லாமல் எழுதுகிறார்களா என்ன ? அவ்வாறு எழுதினால் மன்மோகன் சிங் அரசு விட்டு விடுமா என்ன ? மன்மோகன் சிங்கின் அடுத்த அயோக்கியத்தனம் இன்னும் மோசமானது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி 1ல் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர், தமிழகத்தைச் சேர்ந்த மணி சங்கர் அய்யர். இவர் 9 மார்ச் 2006ல், இவர் மன்மோகனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அக்கடிதத்தில் �காமன் வெல்த் விளையாட்டுக் போட்டிகளுக்காக 150 கோடிக்கு உட்கட்டமைப்பு வசதிகள் செய்ய வேண்டும் என்று செய்யப் பட்ட மதிப்பீடு 500 கோடியாக உயர்ந்துள்ளது. 250 கோடி என்று நிர்ணயிக்கப் பட்ட விளையாட்டுக்களை நடத்துவதற்காக செலவுகள், 900 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த மதிப்பீடு நம்ப முடியாத வண்ணம் உள்ளது. உடனடியாக என்னைச் சந்திக்க நேரம் ஒதுக்குவீர்களேயானால், விரிவாக எடுத்துரைக்கிறேன்� என்று எழுதுகிறார். மன்மோகன் என்ற ஊமைச் சாமியார் எதுவும் பேசவில்லை. 25 அக்டோபர் 2007ல் அடுத்த கடிதம் எழுதுகிறார் அய்யர். இந்தக் கடிதத்தில், �காமன் வெல்த் விளையாட்டுக்களில் பங்கேற்பது போன்ற முக்கால் அளவுக்கு விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற ராணுவ விளையாட்டுக்கள் 200 கோடி செலவில் நடந்து முடிந்தன. ஆனால், காமன் வெல்த் போட்டியை நடத்த 20 ஆயிரம் கோடிக்கும் மேல் செலவாகும் என்று நிர்ணயித்திருப்பது, மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. சுரேஷ் கல்மாடியின் நடத்தை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது� என்று எழுதினார். இதற்கும் இந்த ஊமைச் சாமியார் வாயைத் திறக்கவில்லை. சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த ஊமைச் சாமியாரிடம், மணி சங்கரின் கடிதம் குறித்து கேட்கப் பட்டது. அதற்கு மன்மோகன் சிங் �மணி சங்கர் அய்யரின் கடிதம் தத்துவார்த்த ரீதியானது. சுரேஷ் கல்மாடி காமன் வெல்த் விளையாட்டுக்களை நடத்தக் கூடாது என்பது தொடர்பானது. மணி சங்கர் அய்யர் பல கடிதங்களை எழுதியிருக்கிறார். காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்பதற்கான ஒப்பந்தம் 2003ல் முந்தைய அரசாங்கத்தால் கையொப்பம் இடப்பட்டது.� எப்பேர்பட்ட அயோக்கியத்தனம் பாருங்கள். முந்தைய அரசாங்கம் இதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டால் என்ன ? அவர்களா 20 ஆயிரம் கோடியை கொள்ளையடித்தார்கள் ? சுரேஷ் கல்மாடி கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார் என்பது நன்றாக தெரிந்தும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு, இப்போது ஒன்றுமே தெரியாதது போல பசப்புவது இந்த ஊமையின் உச்சபட்ச குசும்பு. இந்த குசும்புகளைத் தவிர்த்து, மன்மோகனின் மற்றொரு சிறப்பு, அமெரிக்காவின் அடிமையாக இருப்பது. அமேரிக்காவின் காலை நக்குவது என்றால், மன்மோகனுக்கு அவ்வளவு பிடிக்கும். அணு ஆயுத ஒப்பந்தத்தைச் செய்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருந்த மன்மோகன், இடது சாரிகள் இதன் காரணமாக ஆதரவை வாபஸ் பெற்ற போது, பல ஆயிரம் கோடிகளை எம்.பி.க்களுக்கு லஞ்சமாக கொடுத்து, அரசைக் காப்பாற்றி, அணு ஆயுத ஒப்பந்தத்தை செயல்படுத்தியவர் தானே இந்த மன்மோகன் ? இவர் என்ன மிஸ்டர் க்ளீன்�. ? 2004ல் நவம்பர் மாதத்தில், ப்ரான்ஸ் நாட்டில், பள்ளிக்குச் செல்லும், சீக்கிய மாணவர்கள் டர்பன் அணியக் கூடாது என்று உத்தரவு போட்ட போது, ப்ரான்ஸ் பிரதமரிடம் பேசி, உடனடியாக அந்தப் பிரச்சினையில் தலையிட்டவர் மன்மோகன் சிங். சீக்கியனின் மயிருக்காக துடித்த மன்மோகன், தமிழனின் உயிர் போன போது என்ன செய்தார் ? தமிழினத்தை அழித்தவனோடு கூட்டு சேர்ந்து அவனுக்கு ஆயுதம் வழங்கினார். இந்திய மீனவனை கொன்று குவிப்பவனோடு, கொஞ்சிக் குலவினார். கடைசியாக இந்த ஊமை செய்த குசும்பு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து சிபிஐக்கு விலக்கு அளித்து போடப்பட்ட உத்தரவு. அப்படி விலக்கு அளிக்க வேண்டிய காரணம் என்ன ? ஏனென்றால், சோனியாவின் குடும்ப நண்பர் ஒட்டாவியோ கொட்டராச்சியின் மீது இருந்த ரெட் கார்னர் நோட்டிசை விலக்கிக் கொள்ளச் சொல்லியும், முடக்கப் பட்டிருந்த கொட்டரோச்சியின் வங்கிக் கணக்கை விடுவிக்கவும் இந்த ஊமை சிபிஐக்கு போட்ட உத்தரவுகளும், 2ஜி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடும் வரை அமைதி காத்த விவகாரமும் சந்திக்கு வந்து விடும் அல்லவா ? அதற்காகத் தான். கடைசியாக இந்த ஊமை செய்த குசும்பு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து சிபிஐக்கு விலக்கு அளித்து போடப்பட்ட உத்தரவு. அப்படி விலக்கு அளிக்க வேண்டிய காரணம் என்ன ? ஏனென்றால், சோனியாவின் குடும்ப நண்பர் ஒட்டாவியோ கொட்டராச்சியின் மீது இருந்த ரெட் கார்னர் நோட்டிசை விலக்கிக் கொள்ளச் சொல்லியும், முடக்கப் பட்டிருந்த கொட்டரோச்சியின் வங்கிக் கணக்கை விடுவிக்கவும் இந்த ஊமை சிபிஐக்கு போட்ட உத்தரவுகளும், 2ஜி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடும் வரை அமைதி காத்த விவகாரமும் சந்திக்கு வந்து விடும் அல்லவா ? அதற்காகத் தான்.
source:athirvu
-- http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP