ஹெக்டர் அலீமை காப்பாற்றுங்கள், தூஷண சட்டத்தை ஒழித்துக்கட்டுங்கள்
>> Wednesday, August 4, 2010
Hector Aleem: Repeal Blasphemy Law in Pakistan
ஹெக்டர் அலீமை காப்பாற்றுங்கள், தூஷண சட்டத்தை ஒழித்துக்கட்டுங்கள்
பாகிஸ்தான் பிரதமர் ஜிலானியிடம் அமைதி பரிசு பெற்றவர் இப்போது தூஷண குற்றச்சாட்டில் சிறையில் வாடுகின்றார்.http://www.faithfreedom.org/articles/persecution/please-save-my-father-hector-aleem/
ஹெக்டர் அலீம் என்ற பாகிஸ்தானியர், மனித உரிமை சமூகத் தொண்டராவார். இவர் முஹம்மதுவை அவமதித்தார் என்றுச் சொல்லி இவரை சிறையில் அடைத்துள்ளனர். இரண்டாண்டுகளாக இவர் சிறையில் உள்ளார். இவரது குடும்பத்தினர், தொடர்ச்சியான பயமுறுத்தல்களின் நடுவில் பயத்தோடு வாழ்ந்து வருகின்றனர்.
அலி சினா: ஹெக்டர் அலீம் என்பவரின் மூத்த மகள் எழுதிய கடிதத்தை கடந்த ஆண்டு நாம் வெளியிட்டோம். இவர் மீது தவறான குற்றம் சுமத்தி அதாவது முஹம்மது மீது அவதூறாக பேசினார் என்றுச் சொல்லி சிறையில் அடைத்துள்ளனர். ஒரு மனிதன் இப்படிப்பட்ட பிரச்சனையில் மாட்டிக்கொண்டால், அம்மனிதர் குற்றவாளி அல்ல என்று நிருபனம் ஆகும்வரை அவர் சிறையில் இருக்கவேண்டும். ஹெக்டர் இரண்டு ஆண்டு காலமாக சிறையில் உள்ளார். இவர் சிறைச்சாலையில் கொடுமைப்படுத்தப்பட்டார் தாக்கப்பட்டார், இவர் மீது குற்றம் சுமத்தியவர் ஒரு முல்லா ஆவார்.
கடந்த ஆண்டு நடந்த நீதிமன்ற அமர்வில் இவர் நிரபராதி என்று நிருபனமாகியுள்ளது. இவர் மீது குற்றம் சுமத்திய முல்லா இவ்விதமாக கூறினார்: "இவர் ஒரு நிரபராதி என்று விடுதலை ஆக்கப்பட்டால், நீதிமன்றத்திற்கு வெளியே இருக்கும் இஸ்லாமியர்கள் இவரையும், நீதிபதியையும் கொலை செய்துவிடுவார்கள். ஆகையால், இவர் மறுபடியும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார், துன்புறுத்தப்படுகின்றார்.
ஹெக்டரின் கேஸ் மறுபடியும் நீதிமன்ற அமர்வில் வந்துள்ளது. ஆனால், இவருக்காக வாதாடும் வழக்கறிஞருக்கு சம்பளம் தரவேண்டும். ஹெக்டர் இல்லாமல், இவரது குடும்பம், அதாவது மனைவி மற்றும் நான்கு பிள்ளைகள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள், இதில் வேறு வழக்கறிஞருக்கு கொடுப்பதற்கும் இவர்களால் முடிவதில்லை.
இறைத்தூதர் தூஷணம் என்பது மிகவும் கொடுமையான சட்டமாகும். சிறும்பான்மையினரை சட்டபூர்வமாக துன்புறுத்த இந்த சட்டம் வழிவகுக்கிறது. இஸ்லாமியரல்லாதவருக்கு இருக்கும் அனைத்து உரிமைகளையும் பரித்துக்கொள்ளவேண்டுமானால், இவர்கள் முஹம்மதுவைப் பற்றி அவதூறாக பேசினார்கள் என்றுச் சொன்னாலே போதும். உண்மையாகவே, சிறும்பான்மையினர் தவறு செய்திருக்கவேண்டியதில்லை, இந்த குற்றம் சுமத்தினாலே போதும், சிறையில் அடைக்கப்படுவார்கள், துன்புறுத்தப்படுவார்கள் மற்றும் கொடுமைப்படுத்தப்படுவார்கள். அவரது குடும்பம் பயமுறுத்தப்படும் மற்றும் அவரது பொருளாதார வாழ்க்கை அழிந்துவிடும். அவர் ஒரு வேளை தன் மீது குற்றம் இல்லை என்றுச் சொல்லி நிருபித்து சிறையிலிருந்து வெளியே வந்தாலும் சரி, அவரை கொல்ல ஒரு இஸ்லாமிய கூட்டம் நீதிமன்றத்திற்கு வெளியே காத்துக்கொண்டு இருக்கும். இதே போலத் தான் இரண்டு கிறிஸ்தவ சகோதரர்கள் பைசலாபாத் நீதிமன்றத்திலிருந்து காவல்துறையின் பாதுகாப்புடன் வெளியே வந்தபோது, ஒரு இஸ்லாமிய தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் (ஜூலை 19).
இறைத்துதர் தூஷணச்சட்டம் என்பது அருவருக்கத்தக்கது. இது மனித உரிமைக்கு கேடு விளைவிப்பது. உலகத்தில் உள்ள சுதந்திரமான நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பாகிஸ்தானின் இப்படிப்பட்ட சட்டத்தை இரத்து செய்துக்கொள்ளும் படி நிர்பந்தம் செய்யவேண்டும். இஸ்லாமிய நாடுகளில் அதிகமாக தீவிரவாதிகளை தயார்படுத்துவதில் பாகிஸ்தானை யாரும் மிஞ்ச முடியாது.
ஹெக்டர் அலீம் அவர்களின் குடும்பம் மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளது. அவர்களுக்கு உதவி தேவை. ஹெக்டரின் மனைவி ஒரு மருத்துவ மனையில் வேலை செய்கிறார்கள், ஆனால், அவருக்கு கிடைக்கும் சம்பளத்தில் தன் குடும்பத்தை காப்பாற்றவும், அதே நேரத்தில் வழக்கறிஞருக்கு சம்பளம் தரவும் போதுமானதாக இல்லை. உங்களுடைய பொருளாதார உதவி இந்த குடும்பத்திற்கு தேவை. தாராளமாக இவர்களுக்கு கொடுங்கள். பேபால் என்ற தொடுப்பு இங்கு உள்ளது, இதன் மூலம் இவர்களுக்கு பண உதவி செய்யலாம்.
Paypal: http://tinyurl.com/hectoraleem
நீங்கள் மெஹ்விஷ்ஷிற்கு கடிதம் எழுதலாம் மற்றும் உங்கள் ஆதரவை தெரிவிக்கலாம். நம்முடைய மனிதாபமானத்தை காட்டக்கூடிய சந்தர்ப்பம் இப்போது வந்துள்ளது.
Mehwishaleem @ gmail.com
உங்கள் பாராளுமன்றத்தின் உறுப்பினர்களையும் (எம்பி) சட்டசபை உறுப்பினர்களையும் இன்னுமுள்ள அதிகாரிகளையும் சந்தித்து அவர்களுக்கு பாகிஸ்தானில் மனித உரிமை பறிக்கப்படுகின்றது பற்றி தெரிவியுங்கள்,பேசுங்கள். ஐரோப்பிய பாராளுமன்றங்கள் இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் இப்படிப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றி பேசக்கூடிய சமயம் வந்துவிட்டது. அமெரிக்க, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இறைத்தூதர் தூஷண சட்டத்தை கண்டித்து, இப்படிப்பட்ட இஸ்லாமிய நாடுகளில் சிறைச்சாலையில் வடும் நபர்களையும்,கொல்லப்படும் நபர்களையும் காப்பாற்ற முன்வரவேண்டும்.
இந்த செய்தியை பரவலாக்குங்கள். ஹெக்டர் அவர்களின் ஃபேஸ்புக் தளம் இங்குள்ளது:
Facebook http://www.facebook.com/group.php?gid=298776303670
இன்னும் பாகிஸ்தான் எம்பஸ்ஸியுடனும், அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு, தொலை பேசி மூலமாகவோ ஈமெயில் மூலமாகவோ தொடர்பு கொண்டு பாகிஸ்தானில் நடக்கும் மனித உரிமை அத்துமீறல்கள் பற்றி தெரிவியுங்கள்.
உடனடியாக, ஹெக்டர் அலீமை விடுதலையாக்கும் படியும், தூஷண சட்டத்தை நீக்கவும் வேண்டி கோரிக்கை விடுங்கள். இறைவன் தன்னை காப்பாற்றிக்கொள்ள மனிதர்களின் உதவியை நாடமாட்டான். தூஷணச் சட்டம் என்பது சட்டபூர்வமாக்கப்பட்ட கொடுமைப்படுத்தலாகும். இந்த காலகட்டத்தில் இப்படிப்பட்ட சட்டத்திற்கு இடமே இல்லை.
இதர விவரங்கள்
1.ppp@comsats.net.pk
2.Supreme Court of Pakistan (பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்)
Constitution Avenue, Islamabad
Telephone: 051-9220581-9220600
Fax: 051-9213452
3. secretarygeneral@president.gov.pk
4.chairman@ppp.org.pk
5. Mr. Syed Yousaf Raza Gillani
Prime minister of Pakistan
Prime Minister House, Islamabad
PAKISTAN
Fax: + 92 51 9221596
E-mail: webmaster@infopak.gov.pk
6. Federal Minister of Law
Justice and Human Rights
S Block, Pakistan Secretariat, Islamabad
PAKISTAN
Fax: +92 51 920 2628
E-mail: minister@molaw.gov.pk
7.Mr. Rehman Malik
Advisor for Ministry of Interior
Room No. 404, 4th Floor, R Block,
Pak Secretariat
Islamabad
PAKISTAN
Fax: +92 51 920 2624
Tel: +92 51 921 2026
E-mail: minister@interior.gov.pk
8.Mr. Mian Shahbaz Sharif
Chief Minister of Punjab
H-180 Model Town, Lahore
PAKISTAN
Fax: +92 42 5881383
9. Minister of Law
Government of Punjab
Punjab Secretariat
Ravi Road
Lahore
PAKISTAN
E-mail: law@punjab.gov.pk
10.Chief Secretary of Government of Punjab
Punjab Secretariat
Lahore
PAKISTAN
Fax: +92 42 7324489
E-mail: chiefsecy@punjab.gov.pk
11.Dr. Faqir Hussain
Registrar
Supreme Court of Pakistan
Constitution Avenue, Islamabad
PAKISTAN
Fax: + 92 51 9213452
E-mail: mail@supremecourt.gov.pk
12.Mr. Syed Hamid Saeed Kazmi
Minister for Religious Affairs
Islamabad
PAKISTAN
Tel: +92 51 9214856 / 9206982
Fax: +92 51 9213593
E-mail: mra.hajj@gmail.com
Source: http://www.faithfreedom.org/features/news/helo-hector-aleem-repeal-blasphemy-law-in-pakistan/
During this time Hector Aleem received a Peace award by Mr. Yousaf Raza Gillani the prime minister of Pakistan. One month later, on 21st January, 2009 he was arrested by the police. They severely beat him and tortured him mentally and physically. After 24 hours of not knowing what were the charges, we were told that his offence is blasphemy, a charge that caries death penalty in Pakistan.
பாகிஸ்தான் பிரதமர் ஜிலானியிடம் அமைதி பரிசு பெற்றவர் இப்போது தூஷண குற்றச்சாட்டில் சிறையில் வாடுகின்றார்
--
http://thamilislam.tk