சமீபத்திய பதிவுகள்

'ஆர்குட்'டில் நுழைந்து விட்டது ஆர்.எஸ்.எஸ்.,

>> Saturday, February 6, 2010

 

நாக்பூர் : எப்போதும் தனது தொண்டர்களை நேரடியாகவே தொடர்பில் வைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ்., இன்றைய நவீன தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த தவறுவதில்லை. சமூக வலைத்தளங்களில் பிரபலமான  "ஆர்குட்' போன்றவற்றையும் அது பயன்படுத்திக் கொள்கிறது. ஆர்.எஸ்.எஸ்.,சைப் பொறுத்தவரை, தொண்டர்களை நேரடியாகத் தொடர்பில் வைத்திருப்பதுதான் அதன் பலம் என்று  குறிப்பிடுவர். தகவல் தொழில்நுட்பம் அபரிமிதமாக வளர்ந்து விட்ட இன்றைய சூழலிலும் ஆர்.எஸ்.எஸ்., தனது நேரடித் தொடர்பைத்தான் பலமாகத் தக்க வைத்துள்ளது.
இருப்பினும், அவ்வப்போது தேவையான அளவுக்கு நவீன தொழில்நுட்பத்தையும் அது பயன்படுத்திக் கொள்கிறது.  ஐ.டி., துறையிலுள்ள ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் தங்களுக்கிடையில் "ஆர்குட்' போன்ற சமூக வலைத்தளங்களில் தொடர்பு வைத்துக் கொள்கின்றனர். ஆண்டுதோறும் ஜன., 26ல் "பாரத மாதா பூஜை' தினம் ஆர்.எஸ். எஸ்.,சால் நடத்தப்படும். இந்த ஆண்டும், அவ்வாறு நடத்தப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம்,  இந்த ஆண்டு "ஆர்குட்' மூலம் தகவல் பரிமாறிக் கொண்டு "பாரத மாதா பூஜை' நடத்தப்பட்டது தான்.
ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு முழுநேர ஊழியர்களாக வருபவர்கள், நவீனதொழில்நுட்பத்தைக் கையாள்வதில் தேர்ந்தவர்களாகத்தான் இருக்கின்றனர்.  பழைய முழுநேர ஊழியர்களில் கூட சிலர் மொபைல் போன், இ-மெயில் தொடர்பு போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர். இவற்றைப் பயன்படுத்துவதில் ஆர்.எஸ்.எஸ்.,சில் தடை எதுவும் இல்லையென்றாலும், நவீன தொழில்நுட்பத்தையே முழுக்க முழுக்க சார்ந்து இருப்பதை ஆர்.எஸ்.எஸ்., விரும்புவதில்லை.
இதுகுறித்து, அதன் செய்தித் தொடர்பாளர் இந்திரேஷ் குமார் கூறுகையில், "நமது கலாசார விழுமியங்களைக் கைவிட்டு விட்டு, வெறும் நவீன தொழில்நுட்பத்தை மட்டுமே சார்ந்திருந்தால் அந்தத் தொழில்நுட்பமே நம்மை அழித்து விடும்.  சுற்றுச்சூழல் மாசு, பொருளாதாரத்தில் சமநிலையின்மை, உலகவெப்பமயமாதல், ஊழல், விலைவாசியேற்றம், பயங்கரவாதம் போன்றவை நம் கலாசார விழுமியங்களை நாம் கைவிட்டதால் ஏற்பட்டவை தான்' என்று தெரிவித்தார். 


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

சிவசேனா குரங்குகளின் படை;நடிகை கஜோல்

  


அந்த படையால் எங்களை எதுவும் செய்ய முடியாது:  

 மும்பையில் பாகிஸ்தான் வீரர்களை விளையாட அனுமதிக்க மாட்டோம் என்று சிவசேனா அறிவித்தது. ஆனால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்கள் இடம் பெற வேண்டும் என்று பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் கூறினார்.
 
இதையடுத்து ஷாருக்கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா மிரட்டல் விடுத்தது. ஷாருக்கானுக்கு தேசப்பற்று இல்லை. பாகிஸ்தான் வீரர்களை ஆதரித்துப்பேசியதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்  என்று சிவசேனா எச்சரித்தது. ஷாருக்கான் படங்களை மும்பையில் திரையிட விட மாட்டோம் என்றும் எச்சரித்தது.
 
ஆனால் ஷாருக்கான் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார். இந்த நிலையில் ஷாருக்கான் இன்று மும்பை திரும்பினார். சிவசேனா போராட்டத்தை எதிர்க்கொள்ள தயார் என்று அவர் அறிவித்துள்ளார்.
 
இந்த நிலையில் நடிகர் ஷாருக்கானுக்கு இந்தி நடிகர், நடிகைகள் தங்களது ஒட்டு மொத்த ஆதரவை தெரிவித்துள்ளனர். ஷாருக்கான் கருத்தில் எந்த தவறும் இல்லை என்று நடிகர், நடிகைகள் கூறி உள்ளனர்.
 
நடிகை காஜோல், ஷாருக்கானுக்கு ஆதரவு தெரிவித்ததோடு மட்டுமின்றி சிவசேனா கட்சியையும் கடுமையாக சாடி உள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் இணையத்தளத்தில்,
 
''சிவசேனா கட்சி நமது நாட்டின் ஜோக்கர் கட்சியாக மாறி விட்டது. அவர்கள் எப்போதும் வெறுப்பை வெளியிட்டு வருகிறார்கள்.
 
சிவசேனாவை குரங்குகளின் படை என்று தான் சொல்ல வேண்டும். அந்த குரங்கு படையால் எங்களை எதுவும் செய்ய இயலாது. தேர்தலில் தோல்வியை சந்தித்த பிறகும் அவர்கள் பாடம் கற்றுக் கொள்ள வில்லை.
 
இப்படிப்பட்ட அசிங்கம் பிடித்த அரசியலால் தான் நாம் உலகில் பின்னணியில் இருக்கிறோம். நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். அதன் மூலம் தான் நாம் ஜனநாயக சக்தியை உலகுக்கு காட்ட முடியும்''என்று தெரிவித்துள்ளார்.


source:nakkheeran


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

சனல் 4 தொலைக்காட்சியை முடக்க இலங்கை அரசு சதி: அதிர்சித்தகவல்

 

கடந்த வருடம் பிரித்தானியத் தொலைக்காட்சி சனல் 4 ஒளிபரப்பிய இலங்கை இராணுவத்தின் படுகொலைக் காட்சிகளின் பின்னர், அது பெரும் நெருக்கடிகளைச் சந்தித்துவருவதாகக் கூறப்படுகிறது. பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் அனைத்துத் தொலைக்காட்சிகளையும் கட்டுப்படுத்தும் அல்லது நெறிப்படுத்தும் ஸ்தாபனமாக விளங்கும் ஓப்காம்(OFCOM) நிறுவனத்திடம் இலங்கை பல பாரதூரமான முறைப்படுகளை மேற்கொண்டுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. எந்தக் காட்சிகளை மக்கள் பார்க்கலாம் அவை பயங்கரவாதத்தை துண்டுகின்றனவா என்பது போன்ற ஒளிபரப்புக்களை நெறிப்படுத்தும், ஓப்கொம் நிறுவனம் ஒரு தனியார் நிறுவனமாகும். இந்நிறுவனம் நினைத்தால் ஒரு தொலைக்காட்சியின் அனுமதிப் பத்திரத்தை ரத்துச்செய்து அதனை மூட முடியும்.

இப்படியான இலங்கை அரசின் முறைப்பாட்டின் பேரிலேயே TRT, TNT, TTN போன்ற தொலைக்காட்சிகள் கடந்தகாலங்களில் மூடப்பட்டன. இதே நடவடிக்கையை தற்போது இலங்கை அரசு சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக ஆரம்பித்துள்ளது. பிரிட்டனிலுள்ள ஊடகச் சுதந்திரத்தை முடக்க அங்குள்ள சட்டம் ஒருபோதும் முயற்சி செய்யமாட்டாது என்பதால் பிரிட்டனின் அவதூறு சட்டங்களைக் கடந்து நேரடியாக ஓப்காமைப் பயன்படுத்தி சனல் 4 இன் ஒளிபரப்பை நிறுத்துவதற்கு இலங்கை அரசு முயற்சிப்பதாக அதிர்வு இணையத்துக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. 

கடந்த வருடம் சனல் 4 ஒளிபரப்பிய வீடியோவில் 9 இளைஞர்கள் நிர்வாணமாக்கப்பட்டு கட்டப்பட்டு இருந்ததையும், அதில் இருவர் சுடப்பட்டுக் கொல்லப்பட்டதையும், இந்த பாதகச் செயலைச் செய்தவர்கள் இலங்கை ராணுவச் சீருடையில் இருந்ததையும் கண்ட உலகம் ஆடிப்போயுள்ளது. ஆனால் அந்த வீடியோ ஒளிபரப்பபட்ட உடனுமே இலங்கைத் தூதரகம் அந்த வீடியோ உண்மை அல்ல என மறுப்பும் தெரிவித்திருந்தது.

இதையடுத்து அவசரம் அவசரமாக இரு வாரங்களின் பின்னர் கொழும்பு நகரில் ஊடகவியலாளர் மாநாட்டைக் கூட்டிய இலங்கை அந்த வீடியோவைத் தாம் அராய்ந்து பார்த்து விட்டதாகவும் அது ஒரு போலியான வீடியோ எனவும் தெரிவித்தது. அதோடு சனல் 4 இன் லண்டன் தலைமை அலுவலகத்துக்கு வெளியே ஒரு எதிர்ப்புப் போராட்டத்தையும் நடத்தியது. இதையடுத்து, பிரிட்டனில் தனது இரண்டாம் கட்ட நடவடிக்கையாக ஓப்காமில் தொடரான முறைப்பாடுகளைப் பதிவு செய்தது, ஒன்று அந்த வீடியோவின் துல்லியத்தன்மை மற்றும் சீரற்றதன்மைக்கு, இன்னொன்று நியாயம் மற்றும் தனியுரிமை ஆகியன தொடர்பான முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

எனவே சனல் 4 க்கு எதிராக ஊடக நெறிப்படுத்துனரைப் பயன்படுத்தி இலங்கை அரசு போராட்டம் நடத்தியது. ஆனால் இலங்கையின் பகுப்பாய்வைச் செல்லாததாக்கி மேற்படி வீடியோவானது உண்மையானது என்று ஐக்கிய நாடுகள் தமது அறிக்கையைச் சமர்ப்பித்ததும் சனல் 4 க்கு எதிரான நடவடிக்கைகளும் கைவிடப்பட்டன. இருந்தும் ஐ.நா இன் அறிக்கை வெளியிடப்பட்ட அன்று மாலையே இலங்கையரசு தனது முறைப்பாடுகளை(OFCOM) ஓப்காமிடம் கூறியுள்ளதாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

வழமையாகவே தமது நாட்டில் நடக்கும் அட்டூழியங்களை வெளி உலகுக்குத் தெரியாமல் மறைத்து வரும் இலங்கை அரசானது, இப்போது மேற்படி வீடியோ குறித்த புலனாய்வில் சனல் 4 தொலைக்காட்சி இறங்கக்கூடாது என்று மட்டும் கட்டுப்பாடு விதிக்க முயற்சி செய்யாமல், இலங்கையைப் பற்றிய செய்திகளையே முடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அதிர்வு அறிந்துள்ளது. இலங்கை அரசு தனது அரசியல் லாபத்துக்காக நெறிப்படுத்துகை நடவடிக்கைகளை தன்னகப்படுத்திவருவதன் ஆபத்துக்கள் குறித்துப் பார்க்கவேண்டியது அவசியமாகின்றது.

இப்போது இலங்கையின் மனித உரிமைகள் பதிவுகள் குறித்த சர்வதேச வரிசையின் முக்கிய இடத்தில் ஓப்காம் உள்ளது. இலங்கை அரசின் முறைப்பாடுகள் கிடைக்க முன்னர் இவ்விடயத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே பிரிட்டனின் அரசியல் விவாதங்களை நிறுத்துவதற்கு மட்டுமல்லாமல் சர்வதேச முக்கிய நெருக்கடிகளுக்குள் ஓப்காமும் இழுக்கப்படுவதைத் தடுப்பதற்காக, வெளிநாடுகள் ஓப்காமின் முறைப்பாட்டு நடவடிக்கைகளை அணுகுவதற்கு தெளிவான சட்டங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்பது எங்கள் கருத்தாகும்.

சட்டதிட்டங்கள் இப்போது இல்லாத நிலையில், எந்த மாதிரியான முறைப்பாடுகள் இடப்படலாம் என்பதில் பிரிட்டன் பாராளுமன்றம் மட்டுமே மாற்றம் கொண்டு வர முடியும். அதோடு ஓப்காம் என்னும் உள்நாட்டு முறைப்பாடு நடவடிக்கைகளில் வெளிநாடு ஒன்று தனது சுய லாபத்துக்காக முறைப்பாடு செய்வதைத் தடுக்க முயற்சி செய்யவேண்டும். இவ்வாறு முறைப்பாடு செய்ய அனுமதி அளிக்கப்படும் வெளிநாடுகளின் வரிசையில் இலங்கைதான் கடைசி நாடு என்பதை ஓப்காம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அதிர்வு விருப்பப்படுகிறது.

பிரித்தானியாவில் இயங்கும் அரசியல் கட்சிகளான, லேபர் கட்சி, கான்சவேட்டிவ், மற்றும் லிபரல் டெமொகிராட் கட்சிகளில் முக்கிய பதவிகளில் இருக்கும் தமிழர்கள் இது தொடர்பாக பாராளுமன்றில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற முயல்வது நல்லது. இதன் மூலம் நாம் எமது தமிழ் தொலைக்காட்சிகளை பிற்காலத்தில் இவ்வாறான இலங்கை அரசின் அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கமுடியும்.



source:athirv

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP