முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டேன்:கங்கூலி வருத்தம்
>> Wednesday, November 12, 2008
|
இந்திய கிரிக்கெட் அணித் தலைவர்கள் வரிசையில் மிகவும் சிறப்பான வெற்றிகளை ஈட்டி முதலிடத்தைப் பிடித்துள்ள கங்கூலி,தாம் முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக வருத்ததுடன் கூறியுள்ளார். டெஸ்ட்,ஒருநாள் என சர்வதேச கிரிக்கெட்டின் இரண்டு வெவ்வேறு பரிணாமங்களிலும் 40ரன்களுக்கு மேல் சராசரி வைத்துள்ள சிறந்த பேட்ஸ்மென்கள் வரிசையிலும் கங்கூலி இடம்பெற்றுள்ளார். இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு கங்கூலி அளித்துள்ள பேட்டியில்,களத்திற்கு வெளியே நான் எப்படி இருப்பேனோ அதேபோல்தான் களத்திலும் செயல்பட்டதாக சிலர் கருதுகின்றனர்.ஆனால் களத்திற்கு வெளியே நான் வித்தியாசமான மனிதன் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். என்னைப் பொறுத்தவரை இந்திய அணியை உலக வரைபடத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதே முதன்மைப் பொறுப்பாக இருந்தது.அது எனது கடமை என்று கூட எண்ணினேன்.அதனை நிறைவேற்ற எனக்கென்று ஒரு அணி உள்ளதாகவும் உணர்ந்தேன் என்று கூறியுள்ளார். கிரிக்கெட் அரங்கில் இந்தியா புகழ்பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் அனைத்தையும் செய்தேன்.அதுதான் (தனக்குப் பிறகு) எதிர்காலத்திலும் நடந்தது என்று கங்கூலி அப்போது மகிழ்ச்சி தெரிவித்தார் |