சமீபத்திய பதிவுகள்

விடுதலைப் புலிகளின் சொந்தத் தயாரிப்பான நீர்மூழ்கி வாகனம் கண்டுபிடிப்பு

>> Sunday, July 19, 2009

 
 

நேற்று(18) இரவு 56வது படைப்பிரிவினரும் T- 8 படைப்பிரிவினரும் இணைந்து வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் தேடுதலில் ஈடுபட்டிருந்ததாகவும். கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இருந்து இந்த நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. முழுக்க முழுக்க உள்ளூர் தயாரிப்பில் விடுதலைப் புலிகளால் வடிவமைக்கப்பட்டுள்ள  நீர்மூழ்கி வாகனம்  பாவனைக்குகந்த நிலையில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

சுமார் 24 அடி நீளமும் 4 அடி உயரமும் கொண்ட இந்த நீர்மூழ்கி வாகனத்தின் மேலதிக விபரங்களை வெளியிட இலங்கை இராணுவம் மறுத்துள்ளது. இருப்பினும் சுமார் 6 பேர் பயணம் செய்யக் கூடிய வகையில் இது அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

StumbleUpon.com Read more...

பெண் அர்ச்சகர்கள் இந்து முன்னணி கடும் எதிர்ப்பு

 

ஆலயங்களில் பெண் அர்ச்சகர்களை நியமித்து பாரம்பரிய, ஆகம நடைமுறைகளை சீர்குலைக்க தமிழக அரசு முயற்சிப்பதாக இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திருக்கோவில்களில் பெண் அர்ச்சகர்களை நியமிக்கப் போவதாக சட்டசபையில் முதல்வர் கருணாநிதி பேசியிருக்கிறார். இது இந்துக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, இந்துக்களின் நடைமுறைகளை, மரபுகளை குலைத்து ஆலயங்களின் புனிதத்தை கெடுக்கும்.

பல அம்மன் கோவில்களில் தாய்மார்கள் பூஜாரிகளாக இருந்து வழிபாடு நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு வேண்டிய அடிப்படை தேவையை கூட இந்து அறநிலையத்துறையோ, தமிழக அரசோ செய்து கொடுப்பதில்லை. அதே சமயம் வருமானம் அதிகமாக வருவதாகத் தெரிந்தால் உடனே அங்கு ஒரு தனி அலுவலரை போட்டு உண்டியல் வைத்து கோவிலை அரசு ஆக்கிரமித்து கொள்கிறது.

இந்நிலையில், ஆலயங்களில் பெண் அர்ச்சகர்களை நியமிப்பது தொடர்பான அறிவிப்பு, நடைமுறையில் இருக்கும் பாரம்பரிய, ஆகம நடைமுறைகளை சீர்குலைக்க அரசு எடுக்கும் முயற்சியாகவே தெரிகிறது.

கோவில்களில் பூஜை முறைகள், ஒழுங்குகள் ஆன்மீக பெரியோர்கள் வழிகாட்டுதலில் செயல்படுத்தப்பட வேண்டும் தவிர தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போல தமிழக அரசு ஆலய வழிபாட்டு முறைகளில் தலையிடுவது அத்துமீறிய செயல்.

மரபுகளை, வழிமுறைகளை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை, அறிவிப்பு நிலையிலேயே தமிழக அரசு கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP