சமீபத்திய பதிவுகள்

எடுத்துச் செல்லக்கூடிய டிவிடி ரைட்டர்

>> Saturday, March 20, 2010


 
 


ட்ரான்ஸெண்ட் நிறுவனம் கையில் எடுத்துச் சென்று இணைத்துப் பயன்படுத்தக் கூடிய சிடி/டிவிடி ரைட்டர் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றை லேப் டாப் கம்ப்யூட்டர் மற்றும் நெட்புக் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தலாம். மிகவும் ஸ்லிம்மான இந்த போர்ட்டபிள் டிவிடி ரைட்டர், 8எக்ஸ் வேகத்தில் டிவிடியையும், 24 எக்ஸ் வேகத்தில் சிடியையும் இயக்குகிறது. இதனை இயக்குவதற்கு தனியே மின் இணைப்பு வழங்க வேண்டியதில்லை. யு.எஸ்.பி. சக்தியிலேயே இயங்குகிறது. 
இந்த ரைட்டருடன் பைல்களை எழுத, சைபர் லிங்க் பவர் டுகோ என்ற சாப்ட்வேர் வழங்கப்படுகிறது. சைபர்லிங்க் தரும் மீடியா �ஷா என்ற சாப்ட்வேர், 30 நாட்களுக்கு சோதனை செய்து பார்க்கத் தரப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி சிடி/டிவிடிக்களில் டேட்டா எழுதுவது மற்றும் படிப்பதை மேற்கொள்வது மட்டுமின்றி, சிறிய சாப்ட்வேர் இன்டர்பேஸ் ஒன்றின் வழியாக இந்த மீடியா பைல்களை அடுக்கி வைக்கலாம். அண்மையில் பிரபலமான டூயல் லேயர் டிவிடி மீடியா வரையில் அனைத்து பார்மட்களிலும் இது இயங்குகிறது. இரண்டு ஆண்டு வாரண்டியுடன் ரூ.4,300க்குக் கிடைக்கிறது.



கூகள் சீதோஷ்ண நிலை அறிக்கை
ஒரு ஊரில் அப்போதைய சீதோஷ்ண நிலை எப்படி உள்ளது என்று எப்படி அறியலாம்? அங்கே மழை பெய்கிறதா? பனி கொட்டுகிறதா? வெயில் எவ்வளவு? அந்த ஊரில் உள்ள ஒருவருக்கு போன் போட்டுப் பேசி அறியலாம். பாரிஸ், வாஷிங்டன் போன்ற தொலை தூர நகரங்களில் நிலவும் வானிலை குறித்து அறிய என்ன செய்யலாம்? இங்கு கூகுள் நமக்கு உதவுகிறது. 
சீதோஷ்ண நிலை குறித்துத் தகவல் தரும் இணைய தளங்களைத் தேடிப் பின் நீங்கள் தேடும் ஊரின் நிலை குறித்து தேடி அறியலாம். இந்த சுற்று வேலை எல்லாம் வேண்டாம். கூகுள் சர்ச் பாக்ஸில் இதனை சற்று விளக்கமாகவே பெறலாம். மதுரை சீதோஷ்ண நிலை தெரிய வேண்டுமா?  Madurai weather  என்று டைப் செய்து என்டர் தட்டவும். உடன் கிடைக்கும் திரையில் மதுரையின் அப்போதைய சீதோஷ்ண நிலை செல்சியஸில் காட்டப்படும். அப்போதைய மேகக் கூட்டம் எப்படி? காற்று எப்படி வீசுகிறது. அதன் ஈரப்பதம் என்ன? என்றெல்லாம் காட்டப்படும். பின் அடுத்த நான்கு நாட்களுக்கு எந்த அளவில் சீதோஷ்ண நிலை இருக்கும் என்று காட்டப்படும்.


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

யு.எஸ்.பி. டிரைவில் குரோம் ஓ.எஸ்


 .
 குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து தகவல்கள் வந்தன. ஆனால் நாம் நெட்புக் கம்ப்யூட்டர்களிலோ அல்லது மற்றவகை கம்ப்யூட்டர்களிலோ பயன்படுத்தும் வகையில் ரெடியாக அது இன்னும் கிடைக்கவில்லை. இந்த சிஸ்டம் எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டும் சோர்ஸ் கோட் வரிகள் தான் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால் அண்மையில் டவுண்லோட் செய்திட உதவும் டாரண்ட் (Torrent)தளங்களில், யு.எஸ்.பி. டிரைவில் பதிந்து நெட்புக் கம்ப்யூட்டர்களை இயக்கக் கூடிய அளவில் குரோம் ஓ.எஸ். கிடைப்பதாக செய்திகள் வந்துள்ளன. Engadget  தளத்தில் இயங்கும் சிலர், இதனைப் பெற்று Dell Vostro A90 என்ற நெட்புக் கம்ப்யூட்டரில் இயக்கியதாகத் தகவல் தரப்பட்டுள்ளது. குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பூட்டிங் நேரம் 22 விநாடிகள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். உடனே இணைய தளத்தினை பிரவுஸ் செய்வதற்கு முடிந்ததாகவும் அறிவித்துள்ளனர். 

ஆனால் இந்த சிஸ்டத்தில் உள்ள டிவைஸ் டிரைவர்கள் அனைத்தும் வடிவமைப்பின் தொடக்க நிலையிலேயே உள்ளதாகத் தெரிகிறது. எனவே குரோம் சிஸ்டம் இயக்கத்தில் உங்கள் கம்ப்யூட்டரின் சில பகுதிகள் எதிர்பார்க்கும் வேகத்தில் இயங்காது எனத் தெரிகிறது. நீங்களும் குரோம் ஓ.எஸ். அதிகாரப் பூர்வமாக மக்களுக்கு வழங்கப்படும் முன், அதனைப் பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என எண்ணினால், http://carbon.hexxeh.net/chromiumos/ என்ற முகவரியில் கிடைக்கும், பூட் செய்யக் கூடிய இமேஜை டவுண்லோட் செய்து, பிளாஷ் டிரைவில் பதிந்து, உங்கள் நெட்புக் கம்ப்யூட்டரில் பயன்படுத்தலாம். விண்டோஸ், மேக், லினக்ஸ் இயக்கங்கள் உள்ள கம்ப்யூட்டரில் இதனை எப்படிப் பயன்படுத்துவது என்ற குறிப்புகளும் இங்கே தரப்பட்டுள்ளன. அதற்கு முன் குரோம் சிஸ்டத்தில் எவை எவை இயங்கும் என்ற பட்டியலை கூகுள் தளத்தில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP