|
சமீபத்திய பதிவுகள்
தமிழரின் உரிமைப் போராட்ட வரலாற்றில் இருந்து படிக்கவேண்டிய பாடங்கள்
|
|
காலகண்டன் உலகின் எந்தவொரு அரசாங்கமும் தமது ஒடுக்குமுறை நிகழ்ச்சி நிரலை மக்களுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கை என ஒப்புக்கொள்வதில்லை. தமது செயற்பாட்டை நியாயப்படுத்த தீவிரவாதம், பயங்கரவாதம். பிரிவினைவாதம் ஆட்சிக்கு எதிரான சதி முயற்சி போன்ற பெயர்களைப் பயன்படுத்திக் கொள்வர் . அவற்றைப் பரப்புரை செய்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பிக் கொள்ள பலமான ஊடக வலையமைப்பையும் கைகளில் வைத்துக்கொள்வார்கள். அதன் மூலம் அரசாங்க அடக்குமுறைகளுக்குப் பின்னால் காணப்படும் பலவேறு உண்மைகளும் யதார்த்தங்களும் மறைத்துக் கொள்ளப்படும். ஒவ்வொரு பிரச்சினைக்குப் பின்னாலும் சமூக முரண்பாடுகளும் ஒடுக்குமுறைகளும் இருந்து வரவே செய்கின்றன. அவற்றின் காரணமாகவே அரசியல் சமூகப் பிரச்சினைகள் தாழ் நிலையில் இருந்து உயர் நிலைக்கு வளர்ச்சி பெறுகின்றன. அந்த வளர்ச்சியின் உயர்ந்த கட்டத்திலேயே போராட்டம், யுத்தம் என மாற்றம் பெறுகின்றன. இத்தகைய நெருக்கடிச் சூழலில் தமது நாட்டின் சொந்த மக்களை அடக்கி ஒடுக்குவதில் எந்தவொரு அரசாங்கமும் பின்நிற்பதில்லை. ஏனெனில், தமது ஆட்சி அதிகார இருப்பின் தேவையானது பரந்துபட்ட மக்களின் தேவைகள் அபிலாசைகளுக்கு அப்பாற்பட்டதாகும். ஏனெனில் சமூக அமைப்பில் மிகக் குறைந்த எண்ணிக்கை கொண்டோரின் சொத்து சுரண்டல் சுகபோக வாழ்வுக்கு அரணாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதையே அரசாங்கங்கள் முழு முதல் கடமையாகக் கொண்டுள்ளன. இவையே ஒட்டுமொத்த அரசியலின் அடிப்படையாகவும் இருந்து வருகின்றன. இத்தகைய நிலைமைகளை அனுபவ வாயிலாகக் கண்டறிவதற்கு உலகின் வேறு நாட்டுக்குச் செல்ல வேண்டியதில்லை. நமது நாட்டின் கடந்த கால , நிகழ்கால அனுபவங்கள் போதுமானவையாகும். கடந்த அறுபது வருடகால பாராளுமன்ற ஆட்சி அதிகார அமைப்பின் கீழ் அதிகாரத்திற்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் ஏகப் பெரும்பான்மையான மக்களின் நலன்கள், தேவைகள், அபிலாசைகள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றிற்கு விரோதமாகவே இருந்து வந்துள்ளன. அவற்றின் காரணமாக உருவாகி வளர்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக அவற்றை வளரச் செய்வதற்கே இடம் வைத்து வந்துள்ளன. அவை சார்பாக மக்கள் குரலெழுப்பி போராட முன்வந்த பேதெல்லாம் அடக்குமுறை இயந்திரம் முழு வேகத்துடன் ஏவப்பட்டது. இத்தகைய நிலைமை தெற்கிலும் மேற்கிலும் வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெற்றன. வடக்கில் வன்னிப் பிரதேசத்தில் முல்லைத்தீவு கடலோடு அருகமைந்த சிறிய நிலப்பரப்பிலே நடைபெற்று வரும் யுத்தம் மிகக் கொடூரமானதாகும். ஏற்கனவே சிங்கள இளைஞர்கள் மேற்கொண்ட இரண்டு ஆயுதக் கிளர்ச்சிகளின் போதும் பின்வந்த இயற்கை அழிவான கடல்கோளின் போதும் அனுபவித்தவைகளை விடக் கொடுமையானவற்றையே இன்று புதுக்குடியிருப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் அனுபவித்து வருகிறார்கள். சகல திசைகளாலும் படைகளால் சுற்றி வளைக்கப்பட்ட அப் பிரதேசத்தில் முற்றுகைத் தாக்குதல்களுக்கு மத்தியில் வாழ்வா, சாவா என்ற நிலையிலேயே மக்கள் அன்றாடம் உயிரிழப்புப்பொழுதுகளைக் கழித்து வருகின்றனர். சுமார் முப்பத்தையாயிரம் மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்துள்ளனர். அவர்கள் கூட இலகுவான வழிகளில் வரவில்லை. நெருப்பாறு கடந்தே வந்துள்ளனர்.அப்படி வந்தவர்கள் கூட நிம்மதிப் பெருமூச்சுடன் இருக்கவில்லை. தமது உறவுகளையும் உற்றாரையும் தாக்குதல்களுக்குப் பலிகொடுத்துவிட்டும் எஞ்சியிருப்போரைப் பிரிந்துமே வந்திருக்கிறார்கள். பயங்கரவாதத்தைப் பூண்டோடு ஒழிப்பது என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் இந்த யுத்தத்தின் மூலகாரணம், இன முரண்பாட்டுப் பிரச்சினையேயாகும். தேசிய இனப் பிரச்சினையாக வளர்ச்சி கண்ட வரலாற்றுப் போக்கில்அதற்குரிய அரசியல் தீர்வு என்றுமே காணப்பட்டதில்லை. தீர்வுக்கான முயற்சிகள் அவ்வப்போது முன்னெடுக்கப்பட்ட போதிலும் பேரினவாத சக்திகளின் தீவிர தலையீட்டாலும் தீர்வுகள் எனப்பட்டவற்றின் போதாமைகள் காரணமாகவும் எல்லாம் முடிந்த கதைகளாகிக் கொண்டன. இதன் தொடர்ச்சி தான் இன்றும் அரசியல் தீர்வு விடயத்தில் முன்னையவைகளை விட மும்முரம் காட்டி நிற்கின்றன. வெறும் ஒப்பிற்கு அரசியல் தீர்வு பற்றிப் பேசப்படுகிறதே தவிர, அரசின் இலக்கு அதுவல்ல. இத்தகைய போக்கின் உச்சத்தையே இன்று புதுக்குடியிருப்பில் காண முடிகின்றது. அரசாங்கம் அங்கே சிக்குண்டுள்ள மக்கள் மீது கவலை கொண்டுள்ளமை போன்று ஒரு காட்சியினைக் காட்டி வருகிறது. அதற்குக் காரணம், இந்தியாவிலும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் எழுந்துள்ள வன்னி மக்களுக்கான அனுதாப நிலையேயாகும். முல்லைத்தீவுக்கு வடக்கே தாக்குதலற்ற பிரதேசத்தைப் பிரகடனப்படுத்தி அதன் ஊடாக மக்களின் வெளியேற்றத்தை அரசாங்கம் எதிர்பார்த்து நிற்கிறது. ஏற்கனவே காயப்பட்ட நோயாளர்கள், பெண்கள், வயோதிபர்கள் இப்பகுதியிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் வெளியே கொண்டு வரப்பட்டுள்ளனர். அத்தகையோர் அனுபவிக்கும் துயரங்கள் விபரிக்க முடியாதவைகளாகும். ஏன்தான் உயிரோடு வந்தோம் என்று வாய்விட்டுக் கதறி அழும் நிலைக்குப் பலர் உள்ளாகி இருக்கிறார்கள். அங்கு கட்டாயத்தடுப்பு என்றால் இங்கு திறந்த வெளிச்சிறை வாழ்வுதான் . அத்துடன் கையேந்தி நிற்கும் அவல வாழ்வு. ""யாரோடு நோவோம் யார்க்கெடுத்துரைப்போம்' என்ற விரக்தி நிலையில் தான் வன்னியில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வந்த மக்கள் கண்ணீர் கதைகளுடன் இருந்து வருகின்றனர். அதேவேளை, புதுக்குடியிருப்பின் சிறிய நிலப்பரப்பில் சுமார் இரண்டு இலட்சம் பேர் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், அரசாங்கம் 70 ஆயிரம் பேர் மட்டுமே சிக்குண்டிருப்பதாகக் கூறுகிறது. அம் மக்களை புலிகள் இயக்கம் மனிதக்கேடயங்களாகத் தடுத்து வைத்திருப்பதாக அரசு கூறி வருகிறது. அம் மக்களை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கைகளாகவே விமானக் குண்டு வீச்சும் பீரங்கித்தாக்குதல்களும் தரைவழி முன்னேற்றங்களும் நடத்துவதாக அரச ஊடகங்கள் ஓயாது பிரசாரம் செய்து வருகின்றன. மறுபுறத்தில் தமது இருப்பிற்கான தேவை காரணமாக மக்களை சுதந்திரமாக வெளியேற விடாது புலிகள் இயக்கம் தடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. மக்களின் இழப்பு அதிகரிக்க அதிகரிக்க அதுவே தமக்குரிய பலம் என புலிகள் இயக்கம் நம்புவதாகவும் கூறப்படுகிறது. தமது தாக்குதல் வீச்சின் எல்லைகள் சுருக்கமடைந்தநிலையில், தற்காப்பிற்கும் இருப்பிற்கும் உரிய உத்தியாக யுத்த நிறுத்தம் பேச்சுவார்த்தைக்கான கோரிக்கையை அண்மையில் புலிகள் இயக்கம் வெளியிட்டது. அதனை எவ்வித காலதாமதமும் இன்றி அரசாங்கம் நிராகரித்துக் கொண்டதுடன், புலிகள் இயக்கத்தைச் சரணடையுமாறு கூறி பதில் விடுத்துள்ளது. எப்படியும் இன்னும் சில நாட்களில் புலிகளையும் அவர்களது பயங்கரவாதத்தையும் அழித்து இறுதி வெற்றி இலக்கை அடைந்து விடப்போவதாகவே ஜனாதிபதி முதல் இராணுவத்தளபதி வரை சூளுரைத்து வருகின்றனர். இவ்வாறு அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கும் புலிகள் இயக்கத்தின் இருப்பிற்குமான இன்றைய புதுக்குடியிருப்பு யுத்த களத்திலே மக்கள் உச்சநிலை அவலங்களிடையே அகப்பட்டு நிற்பது தான் நெஞ்சை உருக்குவதாக உள்ளது. இம்மக்கள் மட்டுமன்றி, ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனமும் ஒரு இருண்ட அரசியல் பாலைவனத்தில் திக்குத் திசை தெரியாது தவித்து நிற்க விடப்பட்டுள்ளனர். இதற்கான பொறுப்பை யார் ஏற்கப் போகிறார்கள்? எவ்வாறு பொறுப்புக் கூறப் போகிறார்கள்? இவையாவற்றுக்கும் பேரினவாத ஒடுக்குமுறையாளர்கள் மட்டும் பொறுப்புதாரிகள் ஆகிவிட முடியாது. அவர்கள் பெரும்பகுதிப் பிரச்சினைகளுக்கு காரணமாகிய போதிலும் தமிழ்த் தேசிய இனத்தை வழி நடத்தி அழைத்துச் சென்ற அனைத்துத் தலைமைகளும் இதற்குப் பொறுப்புக் கூறியே ஆக வேண்டும். இவை அரசியல் களத்தில் ஆழ்ந்து சிந்திக்கப்படவும் வேண்டும். சுமார் முக்கால் நூற்றாண்டு கால இலங்கையின் அரசியல் வரலாற்றின் சகல பக்கங்களும் தெளிவாகப் படிப்பிக்கப்பட வேண்டும். அதில் தமிழ்த் தேசியவாதத் தலைமைகளின் சாதக, பாதக நிலைப்பாடுகளின் தொடர்ச்சி உரியவாறு அலசி ஆராயப்படல் வேண்டும். காலத்திற்குக் காலம் பேரினவாத ஒடுக்குமுறையாளர்கள் எடுத்து வந்த இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளும் அதற்கு எதிர் வினையாக முன்னெடுக்கப்பட்டு வந்த தமிழ்த் தலைமைகளின் கொள்கை நிலைப் போராட்ட வழிமுறைகள் பற்றியும் ஆழ்ந்து ஆராயப்பட வேண்டும். நாட்டின் பொருளாதார, அரசியல், புவியியல், வரலாற்றுச் சூழலின் வளர்ச்சிகளை உரியவாறு அடையாளம் கண்டு நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? என்பது தீர்க்கமான முறையில் தீர்மானித்திருக்கவேண்டும். அப்படியான ஒருகொள்கை முன்னெடுக்கப்பட்டிருந்தால் எதிரிகள் தனிமைப்படுத்தப்படவும் நேசசக்திகள் தமிழ் மக்கள் பக்கமும் இருந்திருக்கும் வாய்ப்புகள் அதிகரித்திருக்கும். அதன் விளைவு வெவ்வேறு வழிகளில் தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளுக்கு பலம் சேர்த்திருக்க முடியும். உள்நாட்டு அணுகுமுறைகளில் இழைக்கப்பட்ட தவறுகள் மட்டுமன்றி, இந்திய பிராந்திய மேலாதிக்கத்தையும் அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களையும் நம்பி ஏமாந்து நடுத்தெருவுக்கு வந்துள்ள அவலத்தையே இன்று தமிழ்த்தேசியவாதத் தலைமைகள் எதிர்கொண்டு நிற்கின்றன. இத்தகைய அரசியல் அவலம் தொடர்வதால் ஒடுக்கப்படும் தமிழ்த்தேசிய இனத்திற்கு விடிவு கிடைத்துவிடமாட்டாது. அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரத்தின் அதன் எதிர்காலம் நிலைப்பிற்கும் ஒட்டுமொத்தத் தமிழ்த்தேசிய இனமும் பலியாக்கப்படக்கூடாது. அவ்வாறே புலிகள் இயக்கத்தின் இருப்பிற்கும் நிலைப்பாட்டுக்கும் 2 இலட்சம் மக்கள் பாதுகாப்பு வேலியாக்கப்பட்டு அழிவுகளுக்கு உள்ளாக்கப்படக்கூடாது. அம்மக்கள் பாதுகாப்பாக புதுக்குடியிருப்புப் பிரதேசத்திலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டு சுதந்திரமாக வாழவிடப்படவேண்டும்.அதுவே முதற்பணியாக இன்று காணப்படுகின்றது. |
சுண்டிக்குளம் ஊடாக சாலை வரை முன்னேறியுள்ள 55 வது படையணிகள் மீது விடுதலைப் புலிகள் நேற்று நள்ளிரவு முதல் பாரிய தாக்குதல்கள்
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளை நோக்கி இடம்பெற்று வருகின்ற ராணுவ நடவடிக்கைகள் முக்கியமானதோர் பரிணாமம் மிக்க கட்டத்தை எய்தியிருப்பதாக படைத்தரப்புடன் தொடர்புடைய அதிகாரிகள் மூலம் தெரிய வருகின்றது. இலங்கை ராணுவத்தின் யாழ்ப்பாணத்திலிருந்து சுண்டிக்குளம் ஊடாக சாலை வரை முன்னேறியுள்ள 55 வது படையணிகள் மீது விடுதலைப் புலிகள் நேற்று நள்ளிரவு முதல் பாரிய தாக்குதல்களை ஆரம்பித்திருப்பதாக இந்த ராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக இராணு அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் விடுதலைப்புலிகளுடன் நேற்றிரவு முதல் மூண்ட மோதல்கள் தற்போது வரை நீடித்துக் கொண்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அகோரம் மிக்கதாகக் காணப்படுவதாகவும் கருத்துத் தெரிவித்தார். சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ராணுவத்தின் 55வது படைப்பிரிவு சேதங்களைச் சந்தித்திருப்பதாக அவர் தகவல்களை வெளியிட்ட போதிலும் உயிரிழப்புகள் தொடர்பான புள்ளிவிபரங்களை வெளியிட மறுத்துவிட்டார். எனினும் ராணுவத்தினரின் கணிசமான படைக் கலசங்கள் விடுதலைப் புலிகள் வசம் வீழ்ந்திருப்பதாக மற்றுமோர் உறுதிப்படுத்தப்படாத பாதுகாப்புத் தரப்புச் செய்தி தெரிவிக்கின்றது. 4ம் கட்ட ஈழப் போரின் முக்கிய பரிமாணம் தற்போது எய்தப்பட்டு வருவதாக படைத்தரப்பு கூறுகின்ற போதிலும் விடுதலைப்புலிகள் தம் மீதான முற்றுகையை உடைத்துக் கொள்வதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் அந்தப் படையதிகாரி தெரிவித்தார். விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக தமது கொமாண்டோக்களைப் பயன்படுத்தி தாக்குதல்களை மெற்கொள்வதாகவும் தற்கொலைப் படையாளிகளே பெருமளவில் களப்பகுதியில் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் இதனால் படைத்தரப்பிடையே பெரும் அச்சமான சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்த அந்தப் படையதிகாரி இந்த மோதல் தற்போது வரை தொடர்வதால் சேதங்கள் தொடர்பான விபரங்களைத் தம்மால் திரட்ட முடியாமல் இருப்பதாகவும் எனினும் உயிரிழந்த காயமடைந்த படையினரின் எண்ணிக்கை கணிசமான அளவு இருக்கும் எனவும் காயமடைந்த படையினரை அகற்றும் பணி மிகத் துரிதமாக இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உண்மையில் இந்தப் பகுதிகளில் மோதல்கள் மூண்ட வண்ணமே இருக்கின்றது. குறிப்பாக சாலை சுண்டிக்குளம் மற்றும் புதுக்குடியிருப்பை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல்கள் இடம்பெறுகின்றன. சாலை வரையான தமது கடற்பகுதியை விஸ்தரிப்பதற்கும் முற்றுகைக்குள்ளாகியிருக்கும் தமது பிரதேசங்களின் எல்லைகளை விஸ்தரிப்பதற்குமே விடுதலைப்புலிகள் இந்தத் தாக்குதல்களை மேற்கொள்வதாக அந்தப் படையதிகாரி தெரிவித்துள்ளார். புதுக்குடியிருப்பகுதிகளில் படைநடவடிக்கைகளை புதுக்குடியிருப்புச் சந்தி வரை படையினர் நோக்கி மேற்கொள்கின்ற போதிலும் இந்த மோதல் படைத்தரப்பிற்கு பாரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ள ஓர் நகர்வாக அமைந்திருந்ததாக 58வது படைப்பிரிவுடன் தொடர்புடைய தரப்புகள் கூறுகின்றன. விடுதலைப் புலிகள் ஒவ்வோர் தனியார் வீடுகளில் இருந்தும் வீடு வீடாகத் தாக்குதல்களை நடத்துவதாகவும் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் 2 அல்லது 3 படையினர் உயிழந்தோ அல்லது களத்திலிருந்து அகற்றப்படும் நெருக்குவாரங்கள் இருந்ததாகவும் படைத்தரப்புக் கூறுகின்றது. இதனால் புதுக்குடியிருப்பை நோக்கிய நகர்வில் அப்பகுதியிலுள்ள வீடுகள் முற்றாகவோ அல்லது கணிசமாகவோ அழிந்து சேதமடைந்துள்ளன. படையினர் டாங்கிகள் மற்றும் பீரங்கிகளைக் கொண்டு வீடுகளைத் தகர்த்த பின்னரேயே முன்னகர்வுகளை மேற்கொள்வதாகவும் விடுதலைப்புலிகள் வீடுகளில் இருந்தே தாக்குதல்களை மேற்கொள்வதாகவும் அதனாலேயே இந்தத் தாக்குதலை படைத்தரப்பு மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விடுதலைப்புலிகளும் இலங்கை ராணுவத்தினருக்கும் அக்கினிச்சுவாலை எனும் ராணுவ நடவடிக்கைகள் 2000 ஆம் ஆண்டு முகமாலையிலிருந்து ஆனையிறவை நோக்கி மேற்கொள்ளப்பட்டிருந்தது. அக்கினிச்சுவாலையின் போது அந்தப் பகுதியில் எந்த வகையில் சேதங்கள் ஏற்பட்டதோ அதேயேளவு சேதங்கள் புதுக்குடியிருப்புப் பகுதயிலும் ஏற்பட்டுள்ளதாக படைத்தரப்புக் கூறுகின்றது. விடுதலைப்புலிகள் இந்தத் தாக்குதல்; தொடர்பாக எந்தத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ளாத போதிலும் யுத்த களமுளை அடுத்து வரும் நாட்களில் மிகவும் கடுமையானதும் மோசமானதுமாகவுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. |
சங்கரன்கோவில் அருகே தீண்டாமை கொடுமையின் உச்சகட்டம் : 2 தலித்துகள் படுகொலை.
சங்கரன்கோவில் அருகே கோவிலில் வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட முயன்ற தலித் மக்களில் 2 பேர் கொடூரமாக படு கொலை செய்யப்பட்டனர். தீண்டாமைக் கொடுமையின் உச்சகட்டமாக நடந்துள்ள இந்தக் கொலை வெறியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது செந்தட்டி கிராமம். இங்கு அனைத்து சமுதாய மக்களிடமும் வரி வசூல் செய்து கட்டப்பட்ட முப்பிடாதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் தலித் மக்கள் சென்று வழிபட முடியாத நிலைமை பல காலமாக தொடர்ந்து இருந்து வந்துள்ளது.
இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் பல கட்ட பேச்சு வார்த்தை நடந்துள்ளது. எனினும், அரசு உரிய கவ னம் செலுத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரவில்லை. இந்நிலையில், கோவில் திருவிழா நெருங்கியது. இச்சூழலில் வெள்ளி யன்று (மார்ச் 6) நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் தலித் மக்களும், கோவிலுக்குள் சென்று வழிபடலாம் என்று அரசு அதிகாரிகள் வழிகாட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தலித் மக்கள் கோவில் முன்பு பந்தக்கால் நடுவதற்கு முயன்றனர். அப்போது வேறு பிரிவினர் தடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, சின்ன கோவிலான்குளம் காவல் நிலையத்தில் இரு தரப்பினர் மீதும் வழக் குப்பதிவு செய்துள்ளனர். எனினும், திருவிழாவை சுமூகமாக நடத்த உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அரசு தவறி விட்டது.
இந்நிலையில், வெள்ளி யன்று இரவு சங்கரன் கோவிலில் இருந்து தலித் வகுப்பைச் சேர்ந்த கருப்பசாமி, ஈஸ்வரன், பரமசிவம், சுரேஷ் உள்ளிட்டோர் செந்தட்டி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப் போது, வழியில் சாதி ஆதிக்க வெறியர்களால் கருப்பசாமி கடுமையாக தாக்கப்பட்டார். படுகாயத்துடன் அவர் தப்பி ஓடினார். அவருக்குப் பின்னால் வந்த ஈஸ்வரன், பரமசிவம், சுரேஷ் ஆகியோர் மீது கடுமையான ஆயுதங்களால் கொடூரமான முறையில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் ஈஸ்வரன் (45), பரமசிவம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர். சுரேஷ் படுகாயம் அடைந் தார். அவர் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தலித் மக்களின் வழி பாட்டு உரிமையை மறுக்கும் விதமாக சாதி ஆதிக்க வெறியர்களால் நடத்தப்பட்டுள்ள இந்த கொடூர படு கொலை நெல்லை மாவட்டத்தையே உலுக்கியுள்ளது.
சிபிஎம் கண்டனம்
இந்தப் படுகொலையை கட்சியின் திருநெல்வேலி மாவட்டக்குழு வன்மையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பாக மாவட்டச் செயலாளர் வீ.பழனி வெளியிட்டுள்ள அறிக்i கயில், படுகொலையில் ஈடு பட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண் டும் என்றும், கோவிலில் வழிபட தலித் மக்களுக்கு உரிய ஏற்பாடு செய்யப் படவேண்டும் என்றும் வலி யுறுத்தியுள்ளார்.
21-ம் நூற்றாண்டிலும் தீண்டாமைக் கொடுமை நீடித்து வருவது வெட்கக் கேடானது என்று குறிப் பிட்டுள்ள அவர், தீண்டாமையை பின்பற்றுவோர் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அதிகாரிகள் தயங்குவதாலேயே இது போன்ற கொடூரச் சம்பவங்கள் நடக்கின்றன என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இச்சம்பவம் நடந்துள்ள செந்தட்டி கிராமத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டுமென் றும், கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும் வீ.பழனி வலியுறுத்தியுள்ளார்.
நெல்லை மாவட்டம் உட்பட தமிழகம் முழுவதும் தீண்டாமைக் கொடுமைகள் பல வடிவங்களில் நீடித்து வருகின்றன. இது குறித்து அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி
செந்தட்டி கிராமத்தில் கோவிலில் வழிபாட்டு உரிமை கோரிய தலித் மக்கள் மீது நடத்தப்பட் டுள்ள தாக்குதலையும், கொடூரப் படுகொலையையும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் வன்மையாகக் கண்டித்துள்ளார். குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, செயலாளர் எஸ்.கண்ணன் ஆகியோரும் தங்களது அறிக்கையில் இந்தப் படுகொலையை வன்மை யாகக் கண்டித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பில் நான்கு டிவிசன் சிறிலங்கா படையினரின் மும்முனை முன்நகர்வு முறியடிப்பு: 450 பேர் பலி; 1,272 பேர் காயம்
|
|
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பின் முன்னணிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் நான்கு டிவிசன் படையினரின் மும்முனை முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு படைத்தரப்புக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. |
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர்-கட்டளை மைய வட்டாரங்களை மேற்கோள் காட்டி 'புதினம்' செய்தியாளர் தெரிவித்ததாவது: தமிழீழ விடுதலைப் புலிகளின் பலத்தை முடித்து விட்டதாக பெரும் பரப்புரையை சிறிலங்கா படைகள் மேற்கொண்டு 'இறுதி நடவடிக்கை' என்ற பெயரில் மார்ச் முதலாம் நாள் தொடக்கம் பாரிய எடுப்பிலான முன்நகர்வுகளை சிறிலங்கா படையினர் மும்முனைகளில் மேற்கொண்ட நிலையில் அவை யாவும் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பின் தென்பகுதியில் மந்துவில்-குழந்தையேசு கோவிலடி-பாண்டியன்வெட்டை ஆகியன உட்பட்ட மும்முனைகளில் சிறிலங்கா படையினரின் கொமாண்டோக்களைக் கொண்ட 53 ஆம் டிவிசன், 58 ஆம் டிவிசன், இடுபணிப் படையணி - 03 (Task force - 03), இடுபணிப் படையணி - 08 ஆகியன பெரும் வலுவுடன் போர்க்கல வளத்துடன் மேற்கொண்ட முன்நகர்வுகள் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டன. இதில் சிறிலங்கா படைத்தரப்பில் நேற்று வரை 450 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 1,272 பேர் காயமடைந்துள்ளனர். பெருமளவு படைக்கலங்களும் படையினரின் உடலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. நாள்தோறும் 50-60 வரையான படையினர் கொல்லப்பட்டு வருகின்றனர். சிறிலங்கா தரைப்படையின் 53 ஆம், 57 ஆம், 58 ஆம் டிவிசன், இடுபணிப் படையணி - 02, இடுபணிப் படையணி - 03, இடுபணிப் படையணி - 08 ஆகியன புதுக்குடியிருப்பு பகுதியில் நடவடிக்கையில் ஈடுபடும் நிலையில் விடுதலைப் புலிகள் படையினரின் சகல நடவடிக்கைகளுக்கும் தகுந்த பதிலடியைக் கொடுத்து அவற்றினை முறியடித்து வருகின்றனர். தமிழ் மக்களின் நிலங்களை விழுங்கும் சிங்களத்தின் கனவை தவிடு பொடியாக்கும் வகையில் விடுதலைப் புலிகளை தமிழ்மக்கள் பலப்படுத்திக்கொண்டு வருகின்றனர் என சமர்-கட்டளை மைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. |