|
சமீபத்திய பதிவுகள்
ராஜபக்ஷேயை புகழ்ந்த தமிழர்
நாட்டை இணைத்த நல்ல ஜனாதிபதி என ஆரம்பித்த வரவேற்புரை, சிறிது சிறித்தாக போரையும், தமிழர்கள் படும் அவஸ்தையையும் விவரித்தன. அமெரிக்கர்களும், வேற்றின மக்கள் பலரும் கலந்துகொண்ட இன் நிகழ்வில், அவர் உரையை நிறுத்தமுடியாமல் ஏற்பாட்டாளர்கள் திண்டாடியதாக அறியப்படுகிறது. அவரை மேடைக்கு அழைக்கும்போது, ஒரு சில வார்த்தைகள் பேசுமாறு அழைக்கிறோம் என்று கூறி அழைத்திருந்தார்கள் ஏற்பாட்டாளர்கள். இருப்பினும் வரவேற்புரையை ஜோர்ஜ் வில்லி நீண்டநேரமாக உரையாற்றி தான் சொல்லவந்த அனைத்தையும் சொல்லிவிட்டுத் தான் சென்றுள்ளார்.
ஒரு கட்டத்தில், துட்டகைமுணுவுக்கு ஒப்பாக ஜனாதிபதியை ஒப்பிட்ட ஜோர்ஜ் வில்லி, துட்டகைமுணு, எல்லாளனை போரில் வென்றாலும் பலமான எதிரியை வீழ்த்தியமைக்காவும், எல்லாளன் வீரத்தைப் பாராட்டியும் அவருக்கு நினைவுச் சின்னம் அமைத்ததையும் நினைவு கூர்ந்தார், ஒரு கணம் எங்கே இவர் விடுதலைப் புலிகளுக்கு நினைவுச் சின்னம் அமைக்கச் சொல்லிவிடுவாரோ என பலர் திகைப்பில் இருந்தாகவும் சொல்லப்படுகிறது. 1958ம் ஆண்டு கலவரம், பல்கலைக்கழகத்தில் தமிழர்களுக்கு சம ஒதுக்கீடு என பல உதாரணங்களைச் சுட்டிக்காட்டி, ஜனாதிபதையை மிகுந்த சங்கடத்தில் இவர் ஆழ்த்தியதை எவராலும் மறுக்கமுடியாது.
மேடையில் அமர்ந்திருந்த ஜனாதிபதி விழா ஏற்ப்பாட்டாளரை அடிக்கடி உத்துப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தார். கடைசியாக இனி பள்ளி செல்லும் தமிழ் மாணவர்களின் வெள்ளைச் சட்டையில் இரத்தம் படியக்கூடாது, நீங்கள் ஒரு பிரபாகரனை வென்றிருக்கலாம், ஆனால் அது போல பலர் தோன்றலாம், அவர்கள் அவ்வாறு தோன்றுவதும் தோன்றாமல் இருப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது என அவர் பேசிமுடிக்க , என்ன நடந்தது என சற்றும் புரியாமல், அமெரிக்கர்களும், வேற்றின மக்களும் எழுந்து நின்று கைதட்டியதே மிகக் கொடுமையான விடையமாக ஜனாதிபதிக்கு இருந்தது. அசடுவழியும் முகத்தை ஒருவாறு சீர்திருத்திக்கொண்டு, மற்றைய நிகழ்ச்சிகளுக்கு நகர்ந்தார் ஜனாதிபதி. இருந்தாலும் அவர் இந்த அவமானத்தை இலகுவில் மறக்கப்போவது இல்லை.
விழா முடிவில் யாரை எல்லாம் திட்டித் தீர்த்தாரோ தெரியவில்லை. ஒட்டுமொத்தத்தில் அமெரிக்கா அவருக்கு பல அவமரியாதைகளை கொடுத்த நாடாக அமைந்துவிட்டது.... முழத்திற்கு முழம் தனது உரையில் "யுவர் எக்சலன்ஸி"( மாண்புமிகு) "யுவர் எக்சலன்ஸி" your excellency என்று ஜோர்ஜ் வில்லி கதைத்ததால், மகிந்த அவர் என்ன கதைக்கிறார் என்பதைக் கூட விரைவாக சுதாரித்துக்கொள்ளவில்லை !
அமெரிக்க செனட்டர், ஜனாதிபதி மகிந்த, புத்திஜீவிகள், கல்விமான்கள், வேற்றின மக்கள் என பலர் கலந்துகொண்ட இவ் விழாவில் மிகத் துணிச்சலாக தனது கருத்துக்களை வெளிப்படுத்திய ஜோர்ஜ் வில்லி அவர்களை நாம் பாராட்டாமல் இருக்கவே முடியாது. இதைத் தான் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல என்பார்களோ ????
source:athirvu
Read more...
குழந்தை பெற்றால் பெண்கள் மூளை வளரும்: ஆய்வில் தகவல்
--
http://thamilislam.tk
கம்ப்யூட்டரின் கிளிப் போர்டுகள்
ஆபீஸ் தொகுப்பில் உள்ள எந்த புரோகிராமிலும், கிளிப் போர்டினைத் திறந்து பார்க்கலாம். வேர்ட், எக்ஸெல் என ஏதேனும் ஒரு புரோகிராமினைத் திறந்து, கண்ட்ரோல் +சி+சி என அழுத்துங்கள். வலது புறமாகக் கிளிப் போர்டு திறக்கப்பட்டு, அதில் காப்பி செய்து வைக்கப்பட்டுள்ள ஐட்டங்கள் வரிசையாகக் காட்டப்படும். இந்த கிளிப் போர்டு திறந்தவுடன் கீழாக Options என்று ஒரு கட்டம் தெரியும். இதில் கீழாக உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்தால் அதில் பல ஆப்ஷன்களுடன் மெனு ஒன்று கிடைக்கும். இதில் 1) ஆபீஸ் கிளிப் போர்டு தானாகக் காட்டப்பட, 2) கண்ட்ரோல் +சி இருமுறை இயக்கப்பட்டால் ஆபீஸ் கிளிப் போர்டு திறக்கப்பட, 3) ஆபீஸ் கிளிப் போர்டு காட்டப்படாமலேயே காப்பி செய்யப்படும் ஐட்டங்கள் இணைக்கப்பட, 4) டாஸ்க்பாரில் ஆபீஸ் கிளிப் போர்டு ஐகான் காட்டப்பட மற்றும் 5) காப்பி செய்யப்படுகையில் அதன் நிலை என்ன என்று டாஸ்க் பாரில் காட்ட என ஐந்து ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். நாம் விரும்பும் வகையில் தேவையானதை டிக் செய்து வைத்துக் கொள்ளலாம்.
கிளிப் போர்டு திறக்கப்பட்டால், அது ஸ்டேட்டஸ் பாரில், நேரம் காட்டப்படும் இடம் அருகே காட்டப்படும். அதன் அருகே கர்சரைக் கொண்டு சென்றால், கிளிப்போர்டில் 24 வைக்கும் இடத்தில் எத்தனை ஆப்ஜெக்ட் காப்பி செய்து வைக்கப்பட்டுள்ளது என்று காட்டும். காப்பி செய்யப்படும் ஒவ்வொரு ஐட்டத்திற்கும் ஆபீஸ் கிளிப் போர்டில் ஒரு ஐகான் தெரியும். அந்த அந்த புரோகிராமின் ஐகான் காட்டப்பட்டு காப்பி செய்யப்பட்டிருப்பது எந்த புரோகிராமிலிருந்து எடுக்கப்பட்டது எனக் காட்டப்படும். மேலும் காப்பி செய்யப் பட்ட டெக்ஸ்ட்டிலிருந்து ஒரு சிறிய பகுதி காட்டப் படும். அது கிராபிக் ஆக இருந்தால் அதன் சிறிய படம் தெரியும். இதன் மூலம் நாம் கிளிப் போர்டு பட்டியலைப் பார்க்கையில் அது என்ன என்று அறிந்து கொண்டு தேவையான தை பேஸ்ட் செய்திடலாம். கிளிப் போர்டில் இருப்பதை அப்படியே மொத்தமாக நாம் விரும்பும் பைலில் பேஸ்ட் செய்திடலாம். அல்லது தேவைப்பட்ட ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்து பேஸ்ட் செய்திடலாம். ஜஸ்ட் பேஸ்ட் கட்டளை கொடுத்தால் இறுதியாக எதனைக் காப்பி செய்தோமோ அது மட்டுமே பேஸ்ட் செய்யப்படும். அல்லது கிளிப் போர்டில் உள்ள பட்டியலில் நமக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்து கிடைக்கும் மெனுவில் பேஸ்ட் கட்டளை கொடுத்தால் பேஸ்ட் ஆகும். இதற்கு மாறாக சிஸ்டம் கிளிப் போர்டு இயங்குகிறது. இதில் நாம் அப்போது காப்பி செய்திடும் ஐட்டம் தங்கும். இங்கு ஒரே ஒரு ஐட்டம் மட்டுமே தங்கும். இரண்டு கிளிப் போர்டும் எப்படி இணைந்து செயல்படு கின்றன? ஆபீஸ் கிளிப் போர்டில் பல ஐட்டங்களை காப்பி செய்திடுகையில் கடைசி ஐட்டம் மட்டுமே சிஸ்டம் கிளிப் போர்டில் தங்கும். கண்ட்ரோல்+ வி அல்லது பேஸ்ட் கட்டளை கொடுத்தால் இறுதியாகக் காப்பி செய்த ஐட்டம் மட்டுமே பேஸ்ட் செய்யப்படும். இது சிஸ்டம் கிளிப் போர்டிலிருந்து நமக்குக் கிடைக்கும்