சமீபத்திய பதிவுகள்

சீதை தெளிவாக அவனை நிர்வாணப்படுத்திக் கூறுவதைப் பார்ப்போம்

>> Monday, March 24, 2008

பெண்ணின் உடலைச் சிதைக்கும் இராமாயண நீதி!

பார்ப்பன மதக் கோட்பாடுகளில் ஆண் - பெண் வக்கரித்த உறவுகள்! - 3

ஒரு பெண் ஆணை விரும்பி திருமணம் செய்யக் கோருவது குற்றமா? இதை இராமாயணம் மறுக்கிறது.

பெண்ணின் உடலைச் சிதைப்பதுதான் இராமாயண நீதி. இன்று பெண் மீதான சித்ரவதைகள் இதுபோன்று இராமனின் வழிகாட்டலில் நடப்பதை நாம் எதார்த்தத்தில் காண்கின்றோம்.

காட்டுக்குச் சென்ற இராமன் சீதையின் மடியில் தலைவைத்துப் படுத்து இருக்கும்போது, கடவுளாகப் போற்றப்படும் இந்திரனுடைய மகன் சயந்தன் காக்கா வேடம் போட்டு வந்து, சீதையின் முலைக் காம்பைக் கொத்தி தனது பாலியல் வக்கிரத்தைத் தீர்த்த போது, அது குற்றமாகி விடவில்லை. சீதையின் கற்பின் ஒழுக்கத்தைக் கணவன் சார்ந்து மானம்கெட்டுப் போற்றப்படுகின்றது.

இன்று பெண்களின் முலையை விளம்பர உலகம் முதல் பாடசாலை மாணவர்கள் ஈறாகத் தோல் உரித்து இரசித்துப் பார்க்க விரும்பும் ஆணாதிக்கப் பண்பாட்டையே, இந்து மதம் போற்றி இரசித்த வரலாற்றுக் கதைகள் எழுதியவர்கள், அதன் தொடர்ச்சியில் இன்றும் அதைப் போற்றுகின்றனர்.

சீதை இராமனின் சகோதரி என்ற இராமாயண வரலாறு மூலம், சகோதர - சகோதரி திருமணம் நிகழ்ந்த சமுதாயத்தையே எமக்குக் கோடிட்டுக் காட்டுகின்றது.

வால்மீகி இராமாயணத்தில் அயோத்தியா காண்டம் சரகம் 8 சுலோகம் 12 இல், இராமன் பல மனைவிமாரை வைப்பாட்டியாக வைத்திருந்ததை அம்பலப்படுத்துகின்றது.

இராவணனை வென்ற இராமன் சீதையைப் பார்க்க மறுத்த நிலையில், "இராவணனால் ஏற்பட்ட அவமானத்தைத் துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெருந்தொல்லையை மேற்கொள்ளவில்லை" என்று தனது ஆணாதிக்க வக்கிரத்தை வெளிப்படுத்தினான்.

மேலும் அவன் "உன் (சீதை) நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். இராவணன் உன்னைக் களங்கப்படுத்தி இருக்கவேண்டும். உன்னைப் பார்க்கிறதே எனக்குப் பெரும் எரிச்சலூட்டுகிறது. சகிக்கவில்லை. ஓ, ஜனகனின் மகளே! உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்ச் சேரலாம்... அழகிய பெண்ணொருத்தியை இராவணன் சும்மா விட்டிருப்பானா.." என்று கேட்கின்றபோது, தனது நிலையில் நின்றே உரைக்கின்றான். தான் இராவணன் இடத்தில் இருந்தால் கற்பழித்திருப்பேன் என்பதையே சொல்லாமல் சொல்லுகின்றான்.

இந்த இடத்தில் சீதை தெளிவாக அவனை நிர்வாணப்படுத்திக் கூறுவதைப் பார்ப்போம். "நானே தற்கொலை செய்து என்னை மாய்த்துக் கொண்டிருப்பேனே."

இந்த இராமன், இராவணனிடம் இருந்து மீட்ட சீதை மீதான ஆணாதிக்கச் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள அவளைத் தீக்குளிக்கும்படி கட்டாயப்படுத்தினான். கற்பு பற்றி ஆணாதிக்க இறை ஒழுக்கம் வக்கிரம் பிடித்திருப்பதை இது காட்டுகின்றது.

நாடு திரும்பிய பின் சீதை கர்ப்பமாக இருக்கும்போது, வண்ணான் ஒருவன் சீதையின் ஆணாதிக்கக் கற்பு ஒழுக்கத்தை ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் சந்தேகப்பட்ட நிலையில், இராமன் அதன் வழியில் சீதையின் கண்ணைக்கட்டி, நடுக்காட்டில் துரத்திவிட்டான். இந்த இறைத் தூதர்களின் ஆணாதிக்கம் பெண்வதைகளைக் கொண்டது.

நன்றி: http://www.tamilcircle.net/

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

1 கருத்துரைகள்:

Anonymous March 25, 2008 at 12:40 AM  

இப்ப முடிவா என்ன சொல்ல வர்ரீங்க. இராமனை கும்பிடாதீங்கன்னு சொல்றீங்களா?

இராமாயணத்தில் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்க கனியிருப்ப காய் கவர்ந்த உங்களை எப்படி பாராட்ட என்று தெரியவில்லை.

அன்புடன்,
நா.ஆனந்த குமார்

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP