சமீபத்திய பதிவுகள்

மனைவியின் முலை குடித்தால் மகனாவேனா?

>> Monday, March 3, 2008

என் மனைவியிடம் பால் அருந்தினால் நான் என் மனைவிக்கு மகனாகி விடுவேனா?சிலர் அப்படி சொல்லுகிறார்களே என்று கேள்வி கேட்பவர் எதோ கற்கால மனிதர் இல்லை.இந்த 21 நூற்றாண்டில் இந்தியாவில் அதுவும் ஆம்பூரில் வாழும் ஒருவர் கேட்கிறார்.பாவம் இஸ்லாம் இவரை எவ்வளவு முட்டாளாக்கி விட்டது என்பதை பாருங்கள்.

சரி விஷயத்துக்கு வருவோம்.இந்த அப்பாவி மட்டும் இப்பட்டி புரிந்து கொள்ள வில்லை இவர்களின் அழகிய நபியின் ஆசை மனைவி ஆயிஷா அவர்கள் கூட இதை இப்படியே புரிந்து வைத்திருந்தார்கள் என்பது தனி கதை.

இவர்களின் சில மெளலவிகள் கூட இதை தவறாகவே புரிந்து கணவன்,மனைவிகளை பிரித்து வைத்துள்ளனர் என்பது ஹைலைட்

என்ன கண்றாவியோ தெரியலடா சாமி?

ஐயம் : மனைவியிடம் பால் அருந்தினால் அவன் மனைவி தாயாக ஆகிவிடுகிறாள் என்றும் திருமண உறவு முடிந்து விடுகிறது என்றுறம் ஒரு மெளலவி கூறுகிறார். மார்க்கம் என்ன சொல்கிறது?

"அம்சா" கபீர் , ஆம்பூர்.

தெளிவு : ஒரு பெண்ணிடம் பால் அருந்தி விட்டால் அந்தப் பெண் தாயாகி விடுவாள் என்பது பொதுவானது அல்ல. மாறாக அதில் விலக்குகளும் உண்டு. ஒரு பெண்ணிடம் பால் அருந்துபவனின் வயது இரண்டு ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால் தான் அந்தப் பெண் அவனுக்குத் தாய் ஆவாள், இரண்டு வயதைத் தாண்டியவன் ஒரு பெண்ணிடம் பால் அருந்தி விட்டால் அவள் தாயாக மாட்டாள் . அதற்கு ஆதாரம்:

இரண்டு வயதிற்குட்பட்ட பால்குடியினால் தவிர ஹராம் ஏற்படாது (நபிமொழி)

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி) நூல் : தார குத்னீ

இதை வலுப்படுத்தக்கூடிய இன்னொரு நிகழ்ச்சியை ஹதீஸிலிருந்து பார்ப்போம்.

ஒரு மனிதர் அபூமூஸா (ரழி) என்ற சஹாபியிடம் வந்து "நான் என் மனைவியின் மார்பகத்திலிருந்து பால் அருந்தி விட்டேன். அது என் வயிற்றுக்குள்ளும் சென்று விட்டது" என்று சொன்னார். 'அவள் நிச்சயமாக ஹராமாகி விட்டாள் என்றே நான் கருதுகிறேன்' என்று அபூமூஸா(ரழி) அவர்கள் கூறினார்கள்.

அப்போது (அருகே இருந்த) அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் "இவர் என்ன தீர்ப்பளிக்கிறார் என்று பாருங்கள்!" என்ற ஆட்சேபித்தார்கள். உடனே அபூமூஸா(ரழி) அவர்கள் "நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்று விளக்கம் கேட்கிறார்கள். அதற்கு "அப்துல்லா இப்னு மஸ்வூது (ரழி) "இரண்டு வயதிற்குட்பட்டு இருந்தால் மட்டுமே பால் குடி சட்டம் (அமுலாகும்) " என்றனர்.

அறிவிப்பவர் : யஹ்யா இப்னு சயீத் (ரழி) நூல் : முஅத்தா

குறிப்பு : இப்னு மஹ்தூத் பீவி, (சென்னை) அவர்களின் கேள்விக்கும் இதுவே பதிலாகும்.http://www.annajaath.com/?p=217


இதே கேள்வி இன்னொரு இணையத்தில்

404)

கேள்வி: தங்களின் கேள்வி பதில் பகுதியில் ஒரு நண்பர் மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? என்று கேட்டிருந்தார். அதற்கு நீங்கள் இதற்கான பதிலை முன்னரே கேள்வி பதில் பகுதியில் வெளியிட்டுள்ளோம் படித்து தெரிந்து கொள்ளவும் என பதிலளித்துள்ளீர்கள், நான் தேடிப்பார்த்த வரையில் அது சம்பந்தமாக தங்கள் தொகுப்பில் எதுவும் கிடைக்க வில்லை. 'தேடுக' பகுதி மூலமும் முயற்சி செய்துவிட்டேன் பலனில்லை, எனவே இதற்கான பதிலை அடுத்த தொகுப்பில் இடம் பெறச் செய்யவும். mihouse@rediffmail.com

மனைவியின் மார்பில் வாய் வைத்து பால் குடித்தால் மனைவியின் பால் கணவனின் வயிற்றுக்குள் சென்று விடுவதால் தாய் மகன் உறவு ஏற்பட்டு விடுமோ என்பது பெருவாரியான முஸ்லிம்களுக்கு உள்ள சந்தேகம். உணர்ச்சி மேலீட்டால் அந்த காரியத்தை செய்து விட்டு பிறகு என்ன செய்வதென்று வழி தெரியாமல் தவிக்கும் முஸ்லிம்கள் அனேகம் பேர். சிலர் இது பற்றி மார்க்க தீர்ப்பு பெறுவதற்காக அரபு மதரஸாக்களை நாடுகிறார்கள். மதரஸாக்கள் பெரும்பாலும் மத்ஹபை சரிகண்டுக் கொண்டு இருப்பதால் நேரடியாக குர்ஆன் சுன்னாவைப் பார்த்து பதிலளிக்காமல் எடுத்தவுடன் 'ஆம் கணவன் மனைவி என்ற உறவு விலகி தாய் மகன் என்ற உறவு ஏற்பட்டு விடும்' என்று ஃபத்வா கொடுத்து விடுகிறார்கள். இத்தகைய ஃபத்வாக்களால் மார்க்க தீர்ப்பு கேட்ட சிலரது வாழ்க்கை பாழ்பட்டு போய் விட்டதை யாரும் மறுக்க முடியாது.

இத்தகைய ஃபத்வாக்கள் வருவதால் 'மார்க்க தீர்ப்பாவது மண்ணாங்கட்டியாவது' என்று மார்க்கத்தை அலட்சியப்படுத்தி விட்டு சந்தேகத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்தக் காரியத்தை செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இல்லறத்தில் சேரும் அந்த பொழுதுகள் எத்துனை உணர்ச்சிப் பூர்வமானவை என்பதை விளங்காதவர்கள் தான் இத்தகைய முடிவுகளுக்கு வருவார்கள்.

(இந்த பதில் முழுமையாக வேளியிடவில்லை)

http://www.tamilmuslim.com/QA/qa32.htm

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

1 கருத்துரைகள்:

நெல்லை கண்ணன் April 15, 2008 at 5:16 AM  

கையால் பற்ற தாயின் மார்பா

காலே போதும் புட்டிப்பாலே

நெல்லையின் சிறந்த கண் மரூத்துவர்
போத்திலிங்கம் மருத்துவ மனையில்
ஒரு குழந்தை காலால் புட்டிப்பாலைக்
குடிப்பது போன்ற ஒவியம் கண்டவுடன்
நான் அவரிடம் சொன்ன கவிதை

நெல்லைகண்ணன் 15-04-2008

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP