கணிப்பொறி குற்றம் வைரஸ் மற்றும் தகவல் திருடுதல்
>> Monday, April 14, 2008
கணிப்பொறி குற்றம் வைரஸ் மற்றும் தகவல் திருடுதல்
கணிப்பொறி கண்டுபிடிக்கப்பட்ட போதும் சரி, தற்போது வளர்ந்து புகழ்பெற்று விளங்கும் இந்த கால கட்டத்திலும் சரி. இது மக்களுக்கு நல்ல முறையில் பயன் தர வேண்டும். நமது அன் றாட வேலைகளில் சிலவற்றை கணிப்பொறி உதவியுடன் செய்ய வேண்டும் என்பது போன்ற பல நல்ல எண்ணங்களை மனதில் வைத்து தான், இந்த கணிப்பொறி உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று பல குற்றங்கள் செய்யும் அளவிற்கு இந்த கணிப்பொறிறயில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இது போன்ற கணிப்பொறிக் குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் கணிப்பொறிக் குற்றங்கள் நிகழும் போது அதை சரியான முறையில் தடுத்து நிறுத்த வேண்டும். இதனைப் பற்றிய முழுமையான விளக்கங்களை இங்கு காணலாம்.
இந்தக் கணிப்பொறிக் குற்றம் என்பது இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு உண்மை யான நிகழ்வாகவே கருதப்படு கின்றது. இது போன்ற குற்றங்களை சில சமயங்களில் கண்டு பிடிப்பது கடினம். மேலும் அவற்றை கண்டுபிடித்து நிரூபிப்பதும் சற்று கடினம் என் பதாலும், பலர் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. சாதாரணமாக ஒரு செயலை உலக அளவிலே செய்யும் போது அது தணிக்கை செய்யப்படும். ஆனால் இந்த விதமான கணிப்பொறி செயல் பாடு களில் இதுபோன்று தணிக்கை (அஞிக்ஷகூஞ்) செய்யும் முறை கிடையாது. ஏனென்றால் மற்ற முறைகளில் தகவல்கள் என்பது ஒரு புத்தக வடிவிலோ அல்லது பேப்பர் வடிவிலோ முறையான விதத்தில் தயாரித்து அனுப்பப் படுவதால், அஞிக்ஷகூஞ் எனப்படும் தணிக்கை முறையை கையாள்வது என்பது சுலபம். ஆனால் ,இந்த கணிப்பொறி மூலம் தகவல் அனுப்பும் முறையானது, யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டு மானாலும் செய்து கொள்ள லாம் என்றிருப்பதால், நம்மிடம் ஒரு சரியான தணிக்கை முறை கிடையாது.
பொதுவாக இந்த கணிப்பொறி குற்றமானது 3 வகையாக கருதப்படுகின்றது. இந்த 3 முறைகளும் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன.
1.VIRUS எனப்படும் தகவல்களை அழிக்கும் புரோகிராம்கள். 2.HACKERS எனப்படும் தகவல்கள் திருடுபவர்கள். 3. தவறான தகவல்களை வெளியிடுபவர்கள்.
கணிப்பொறி உலகத்தில் தகவல்கள் அனுப்புவது என்பது, எப்பொழுதுமே பாதுகாப்பு இல்லை. ஏனென்றால், நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் என்று கூறுவது போல, ஒவ்வொரு நாளும் கம்ப்ïட்டரில் புதிய வைரஸ்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது.
இவற்றைத் தடுக்கவும், வந்த பிறகு அவற்றை அழிக்கவும் பலவிதமான சாப்ட்வேர்கள் தயாரிக்கப்பட்டு வந்தாலும், அவற்றையும் மீறி இன்று வைரஸ்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இன்னும் சொல்லப் போனால், உலகிலே வைரஸ் வராத கம்ப்ïட்டர் என்று ஒரு கம்ப்ïட்டரை கூட சொல்ல முடியாது. ஏனென்றால் ஏதாவது ஒரு காலக்கட்டத்தில், ஏதாவது ஒரு வைரஸ் மூலம் நாம் பாதிப்புக்கு உள்ளாகி இருப்போம்.
தற்போதைய காலகட்டத்தில் கம்ப்ïட்டர் வைரஸ் புரோகிராம் எழுதும் நபர்களுக்கும், அதைத் தடுக்கும் Antivirus எனப்படும் சாப்ட்வேர் தயாரிப்பவர்களுக்கும் இடையே கடும் போட்டி நடைபெறுவதைப் போன்ற ஒரு தோற்றத்தையே நம்மால் இன்று காண முடிகின்றது. இது போன்ற வைரஸ் புரோகிராம்கள் தானாக உருவாவதில்லை. ஆனால், நம்மைப் போன்ற மனிதர்கள் இது போன்றவைரஸ் புரோகிராம்கள் எழுதி ஒரு கம்ப்ïட்டரில் இருந்து மற்றொரு கம்ப்ïட்டருக்கு அனுப்புவதால்தான் இந்த பாதிப்பு ஏற்படுகின்றது. கடந்த காலங்களில் பல வைரஸ்கள் பல விதமான பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தாலும், குறிப்பாக I LOVE YOU, MELISSA மற்றும் மோரிஸ் WORM போன்ற வைரஸ்கள் ஏற்படுத்திய பாதிப்புகளை கணிப் பொறியில் பல ஆண்டுகள் பணிபுரியும் நபர்கள் மறந்திருக்க முடியாது.
இன்றைய நிலவரப்படி ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 10 முதல் 12 வைரஸ் புரோகிராம் கள் உருவாக்கப்படுகிறது. அதாவது ஒரு வருடத்தில் 3500 முதல் 4000 வைரஸ் புரோகிராம்கள் உருவாக்கப் படுகிறது. இந்த நவீன இன்டர் நெட் உலகில், வைரஸ்கள் விரைவில் பரவ இன்டர் நெட் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகையால் தான் இந்த வைரஸ் விரைவாக உலகெங் கும் பரவி விடுகின்றது.
Antivirus சாப்ட்வேர் செயல்படும் விதம்
தற்பொழுது உபயோகத்தில் இருந்து வரும் பல Antivirusசாப்ட்வேர்கள் மிகவும் எளிதான முறையில் வடிவமைக்கப்பட்டு உபயோகத்திற்கு சிறந்த வகையில் உள்ளது. இவையனைத்துமே, குறிப்பாக சில வகையான வைரஸ்களில் இருந்து பாது காத்து கொள்ளும் வகையிலேயே தயாரிக்கப்பட்டு உள்ளது. ஏனென்றால் இது போன்ற Antivirus புரோ கிராம்கள் எழுதும் போது, சில வகையான கற்பனையான குறிப்புகளை வைத்துத்தான் எழுத முடியும். ஆனால், வைரஸ் புரோகிராம்கள் எழுதுபவர்கள் அவர்களை விடபுத்திசாலிகள். ஏனென்றால் யாரும் எதிர்பாராத வகையில் பாதிப்பு இருக்கும் வண்ணம் வடிவமைத்து விடுவார்கள்.
வைரஸ் கண்டுபிடிக்கும் புரோகிராம்கள் சாதாரண மாக கம்ப்ïட்டரில் உள்ள அனைத்து தகவல்களையும் (File) எடுத்து வைரஸ் உடைய அறிகுறிகள் எனப்படும் முகவரிகள் உள்ளதா? என்று சோதித்து அவை கண்டறியப்பட்டால், வைரஸ் உள்ளது என்று தீர்மானிக்கப்படுகின் றது. இன்னும் சில Antivirus Software எனப்படும் சாப்ட்வேர்களில் தத்துவம் சார்ந்த விதிமுறைகளைக் கொண்டு பரிசோதனை செய்யப்படு கின்றது.
இது போன்ற வைரஸ்கள் கண்டறியப்பட்டவுடன், உடனே Antivirus மையம் எனப்படும் இடத்திற்கு தெரியப்படுத்தப்படுகின்றது. அந்த Antivirus மையம், அது என்ன விதமான வைரஸ் என்பதை கண்டறிந்து அதற்கான குணமாக்கும் புரோகிராமை தயார் படுத்தி வைரஸ் சம்பந்தமான புரோகிராம் வரிகளை அழிக்கிறது. ஆகையால்தான் நாம் வைரஸ் இடமிருந்து வெளி வர முடிகிறது.
வைரஸ் பரவும் முறை
வைரஸ் என்பது ஒரு ஆபத்தான புரோகிராம் போல இருப்பதாக நாம் அறிந்திருந்தாலும், அவற்றால் ஏற்படும் பலவிதமான பாதிப்புகளை உணர்ந்திருந்தாலும், எவ்வாறு இந்த வைரஸ்கள் பரப்பப்படுகின்றது என்பது பற்றி காணலாம்.
1.BBS எனப்படும் Bullet in Board Service முறை மூலம் பரவுதல்
இது ஒரு பொதுவான முறையாக கருதப்பட்டாலும், இந்த முறை மூலம்தான் சர்வதேச அளவில் வைரஸ்கள் பரவுகிறது. இந்த Bullet in Board Service என்பது ஒரு அறிவிப்பு பலகையைப் போன்று, ஏதேனும் செய்திகளை கொண்டிருக்கும். அந்தச் செய்தியை படிக்க முற்படும் போது வைரஸ்கள் நம்முடைய கம்ப்ïட்டரில் உள்ள மெமரியில் சென்று தங்கி விடுகிறது. ஏனென்றால், இது போன்ற வைரஸ்கள் வர முக்கிய காரணம், நாம் கம்ப்ïட்டரை தொலைபேசி Wire மூலமாகவோ அல்லது Telnet என்ற முறையின் மூல மாகவோ தொடர்புகொள்ளும் போது இது நிகழக்கூடும்.
2. நெட்வொர்க் மூலம் வைரஸ் பரவுதல்
நாம் கம்ப்ïட்டரை உபயோகிக்கும் போது பலவிதமான தேவைகளுக்காக பயன் படுத்தினாலும், முக்கியமாக நெட் வொர்க் மூலம் கம்ப்ïட்டர்களை இணைத்து ஒரு கம்ப்ïட்டரில் இருந்து மற்றொரு கம்ப்ïட்டருக்கு தகவல்களை அனுப்பும் போது இது போன்ற வைரஸ் புரோகிராம்கள் எளிதில் மற்ற கம்ப்ïட் டருக்கு சென்று விடுகின்றது. உதாரணமாக, Email எனப்படும் மின்னணு அஞ்சல் முறை மூலம் தகவல்களை அனுப்பும் போது, Email செய்தியுடன் வைரஸ் புரோகிராம்களும் சென்று விடுகின்றது. இதனால் பாதிப்புகள் ஏற்படுகின்றது.
3. இணையதளம் மூலம் வைரஸ் பரவுதல்
இன்றைய கால கட்டத்தில் இன்டர்நெட் பற்றி தெரியாத நபர்களே இருக்க முடியாது. ஏனென்றால், கம்ப்ïட்டரை உலகில் உள்ள எல்லா மக் களுக்கும், பிரபலமடைய வைத்ததே இந்த இன்டர்நெட் என்றால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட இந்த இன்டர் நெட் மூலம், சில இணைய தளங்களை, நாம் பார்க்கும்போது அவற்றின் மூலம் இந்த வைரஸ் புரோகிராம்கள் நம்முடைய கம்ப்ïட்டருக்கு பரவி விடுகின்றது.
இந்த இன்டர்நெட் வைரஸ் என்பது இன்று பொதுவான ஒரு வைரஸ் பரவும் முறையாகும். ஆகையால் நாம் எப்போது இணையதளத்தை உபயோகிக்க தொடங்குகிறோமோ, அப்போது நம்முடைய கம்ப்ïட்டரில் Antivirus சாப்ட்வேர் எனும் புரோகிராம்களை வைத்து சோதனையிட்டுக் கொள்வது நல்லது.
4. File Server மூலம் வைரஸ் பரவுதல்
நாம் சாதாரணமாக நமது அலுவலகங்களில் பல கம்ப் ïட்டர்களை ஒன்றாக நெட் வொர்க் முறையில் இணைத்திருக்கும் போது ஒரு கம்ப் ïட்டரை சர்வர் என்றும் மற்ற கம்ப்ïட்டர்களை என்றும் அழைக்கின்றோம். அந்த சமயங்களில், இந்த Client என்பவர் ஏதேனும்File-களை Server கம்ப்ïட்டரில் இருந்து பெற அனுமதி கேட்கும்போதும், Server கம்ப்ïட்டர் அனுப்பும் தகவல்களில் வைரஸ் இணைந்து சென்றுவிடும். அவ்வாறு அனுப்பப்பட்ட வைரஸ், அந்த கம்ப்ïட்டரில் இருந்து கொண்டு பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
நாம் வைரஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பி, சில சமயங்களில், வைரஸ் சம்பந்தமான புத்தகங் களை கம்ப்ïட்டரில் பதிவு செய்து, அவற்றை படிப்பதன் மூலம், இந்த வைரஸ் புரோ கிராம்கள் பரவி விடுகின்றன. இது ஒரு வித்தியாசமான முறையாகும். ஏனென்றால் வைரஸ் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு பலர் அந்த புத்தகங்களை படிக்க முயற்சிப்பர். அந்த நேரத்தில் வைரஸ் நமது கம்ப்ïட்டரில் பரவி விடும். இது ஒரு வித்தியாசமான முறை மூலம் நிகழும் குற்றமாகும்.
6. வைரஸ் விற்பனை முறை
இன்னும் சிலர், இது போன்ற வைரஸ் புரோகிராம் களை எழுதி விற்பனை செய்கின்றனர். உதாரணமாக, சில கம்ப்ïட்டர் பற்றிய வார மற்றும் மாத இதழ்களில் (Magazine ) இது போன்ற கம்ப்ïட்டர் வைரஸ் உடைய புரோகிராம் வரிகளை வெளியிடுகிறார்கள். அது போன்ற புரோகிராம்களை படித்து விட்டு, சில மாணவர்கள், நாமும் முயற்சி செய்து பார்க்கலாமே என்று அந்த வைரஸ் புரோகிராம்கள் முழுவீச்சில் உருவாக்கி விளையாட்டாக பிறருடைய கம்ப்ïட்டருக்கு அனுப்பி விடுகின்றனர். இது போன்ற வைரஸ் புரோகிரம்களின் விற்பனை அமெரிக்கா போன்ற நாடுகளில் சட்டப்படி அனுமதி பெற்று நடைபெறுகிறது. இன்னும் சில விற்பனை நிறுவனங்கள், வைரஸ் புரோகிராம்களையும் எழுதி பரவவிடுவதோடு, அவற்றை சரி செய்யும் Antivirus Software எனப் படும் புரோகிராம்களையும் எழுதி விற்பனை செய்கிறார்கள்.
0 கருத்துரைகள்:
Post a Comment