சமீபத்திய பதிவுகள்

ஒரு பெண் மூன்று நாட்கள் தொலைதூரத்திற்கு தனியாக பயணம் செய்யக்கூடாது

>> Friday, May 2, 2008



இந்த 21 ஆம் நூற்றாண்டில் உலகில் பெண்கள் நிலவுக்கே போய் திரூம்பி வரும் நிலையில் குரானும்,முகமதுவும் சொன்ன பாதை எவ்வளவு கேவலமான முறையில் பெண்களை அடிமைகளாக நடத்துகிறது என்பதற்கான ஒரு சிறந்த அத்தாட்சி இங்கு பதிவு செய்யப்படுகிறது

மஹ்ரம் அல்லாத ஆணுடன் பெண் பயணம் செய்தல்

http://www.islamkalvi.com/discipline/prohibited_17.htm

(மஹ்ரம் என்போர்: பெண்ணுடைய தந்தை, உடன் பிறந்த சகோதரர்கள், அவளுடைய மகன், அவளுடைய கணவன், மற்றும் அவளை திருமணம் செய்ய அனுமதியற்றோர் அனைவரும் ஒரு பெண்ணின் மஹ்ரம் ஆவார்கள்.)


நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: ஒரு பெண் மஹ்ரமானவர்கள் இல்லாமல் பயணம் செய்யக் கூடாது. (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரீ)


இது ஹஜ் உட்பட அனைத்து பயணத்திற்கும் பொதுவான கட்டளையே! மஹ்ரமின்றி பயணம் செய்வதினால் அவள் பாவமான செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. பெண் பலவீனமானவள் என்பதால் பிறர் அவளை மிக எளிதாக தன் வசப்படுத்தி விடலாம். பெண் தனிமையிலோ, அல்லது மஹ்ரமில்லாத பிற ஆண்களுடனோ பயணம் செய்தால் அவளுடைய கண்ணியமும் பத்தினித்தனமும் சமூகத்தில் கேள்விக் குறியாகிவிடுவது நாம் அறிந்ததே!


பெண் தனியாக விமானத்தில் பயணம் செய்வதும் இது போன்றதே! அங்கு ஒருவர் அவளை வழியனுப்பி விடுகிறார். இங்கு மற்றொருவர் அவளை எதிர்பார்த்து நிற்கிறார். அவளுடைய இருக்கையிலோ, அல்லது அவளுக்கருகிலோ மற்ற யார் உட்காரப் போகிறார்கள்? என்றெண்ணி அலட்சியமாக தனியாக பயணம் அனுப்பிவிடுகிறார்கள். விமானக்கோளாறு ஏற்பட்டு வேறு தளத்தில் இறங்கிவிட்டாலோ, அல்லது ஏதேனும் காரணத்தினால் கால தாமதாமாகிவிட்டாலோ அதில் ஏற்படும் அப்பெண்ணின் தனிமைக்கு அவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? எனவே இவ்வாறு பயணம் செய்வதும் தவறேயாகும்.


மஹ்ரமானவர்களுக்குரிய தகுதிகள் நான்கு:

(1) முஸ்லிமாக இருக்கவேண்டும்.

(2) பருவமடைந்தவராக இருக்கவேண்டும்.

(3) அறிவுடையவராக இருக்க வேண்டும்.

(4) ஆணாக இருக்க வேண்டும்.


நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு பெண் மூன்று நாட்கள் அல்லது அதைவிட அதிகமான தொலைதூரத்திற்கு அவளுடைய தந்தை அல்லது அவளுடைய சகோதரன் அல்லது அவளுடைய மகன் அல்லது அவளுடைய கணவன் அல்லது -அவளை திருமணம் செய்ய அனுமதிக்கப்படாத -மஹ்ரமானோர்களுடனே தவிர பயணம் செய்யக் கூடாது. (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி) நூல்: இப்னுமாஜா)

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP