சமீபத்திய பதிவுகள்

தினமலர் நாளிதழ் வெளியிட்ட தவறான செய்தி-உடனே மாற்றம்.

>> Saturday, May 17, 2008





டுவென்டி 20 கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று மும்பையில்

நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா

நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.அதில் மும்பை இந்தியன்ஸ்

பந்து வீச்சில் சுருண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பரிதாபமாக

தோல்வியைத் தழுவியது.மும்பை இந்தியன்ஸ் அணியின் சனத் ஜெயசூர்யா

மறுபடியும் ஒரு பட்டாசு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 48 ரன்களைக் குவித்த

அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.



இந்த செய்தி எல்லோரு அறிந்ததே.ஆனால் இன்றைக்கு காலை தினமலர்

பத்திரிக்கை எடுத்து படித்த எனக்கு மிகுந்த அதிர்ச்சி.நேற்று 48 எடுத்திருந்த

ஜெயசூர்யா காலையில் தினமலரில் 52 ரன்கள் எடுத்து இருந்தார்.ஆனால்

பின்புதான் தெரிந்தது தினமலர் பத்திரிக்கை தவறான செய்தியை வெளியிட்டு

இருந்தது என்று அறிந்து கொண்டேன்.


ஆனால் தினமலர் இ-பேப்பர் யாருக்கும் தெரியாமல் இருக்க செய்தியை

மாற்றிவிட்டது.அதனால் சிறிது சிரமம் எடுத்து உங்கள் முன் வைத்திருக்கிறேன்.









http://i284.photobucket.com/albums/ll28/ungalislam/dinamala1.jpg">

http://i284.photobucket.com/albums/ll28/ungalislam/dinamala1.jpg





தினமலர் வெளியிட்ட ஸ்கோர் போர்ட்






http://i284.photobucket.com/albums/ll28/ungalislam/dinamala.jpg">


http://i284.photobucket.com/albums/ll28/ungalislam/dinamala.jpg


தினமலரின் மாற்றப்பட்ட செய்தி




http://epaper.dinamalar.com/Web/Coimbatore/Article/2008/05/17/017/17_05_2008_017_007.jpg


உண்மமயான செய்தி கீழே


போலாக் புயல் வீச்சு - நிலை குலைந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

thatsTamil RSS feedthatsTamil  iGoogle gadgets


மும்பை: மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சில் சுருண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பரிதாபமாக தோல்வியைத் தழுவியது.

ஐபிஎல் டுவென்டி 20 கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று மும்பையில் நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

வலுவான சென்னை அணியை வீழ்த்திய தெம்பில் இருந்த மும்பை அணி, கொல்கத்தாவை தைரியத்துடன் சந்தித்தது. முதலில் கொல்கத்தா அணி பேட் செய்தது.

யாரும் எதிர்பாராத வகையில் நேற்று கொல்கத்தா அணியின் பேட்டிங் படு மோசமாக இருந்தது. மும்பை அணியின் பந்து வீச்சாளர்களை குறிப்பாக ஷான் போலாக்கை சந்திக்க முடியாமல் சுருண்டு விழுந்தனர் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள்.

சல்மான் பட் 13 ரன்களும், ஆகாஷ் சோப்ரா ஒரு ரன்னும் எடுத்தனர். கேப்டன் செளரவ் கங்குலி 15 ரன்களில் வீழ்ந்தார். அடுத்தடுத்து கொல்கத்தா அணியின் வீரர்கள் வீழ்ந்ததால் அந்த அணி பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டது.

மும்பை பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 15.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 67 ரன்களில் சுருண்டது கொல்கத்தா.

ஷான் போலாக் அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். பிரேவோ 2 விக்கெட்டுக்ளையும், ரோஹன் ராஜே 2 விக்கெட்டுக்களையும், தான்ர்லி 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி கொல்கத்தாவை நிலை குலைய வைத்தனர். சச்சின் டெண்டுல்கர் 4 கேட்சுகளைப் பிடித்து கொல்கத்தாவின் சீர்குலைவுக்கு முக்கியப் பங்கு வகித்தார்.

பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் சனத் ஜெயசூர்யா மறுபடியும் ஒரு பட்டாசு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 48 ரன்களைக் குவித்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சச்சின் மட்டும் வழக்கம் போல பேட்டிங்கில் ஏமாற்றி டக் அவுட் ஆனார்.

இறுதியில், 5.3 ஓவர்களிலேயே 68 ரன்களைக் குவித்து இரண்டு விக்கெட்டுக்களை மட்டும் இழந்து மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி வாகை சூடியது.

கொல்கத்தா தரப்பில் சோயிப் அக்தர், இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
http://thatstamil.oneindia.in/news/2008/05/17/sports-mumbai-indians-steamroll-kolkata-knight.html


NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP