சமீபத்திய பதிவுகள்

இன்டர்நெட் பற்றிய அடிப்படை தகவல்கள்

>> Tuesday, May 6, 2008

 

 கணிப்பொறித்துறையிலே நாம் எவ்வளவோ மாற்றங்களை கண்டுவந்த போதிலும், இந்த இணையம் என்று அழைக்கப்படும் இன்டர்நெட் வந்த பிறகு மக்களிடம் ஒரு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக் கிறது என்பது தான் உண்மை. ஒரு காலத்தில் கம்ப்ïட்டர் என்பது ஒரு காட்சிப்பொருளாகவும், மாயாஜாலம் செய்யும் ஒரு எந்திரமாகவும் கருதப்பட்டது. ஆனால், அதன் பிறகு மக்களிடம் சற்று அதிகமான விழிப்புணர்வு ஏற்பட்ட போதிலும் இந்த இன்டர்நெட் வந்த பிறகு தான் எந்தத்துறையைச் சார்ந்தவர்களும் கணிப்பொறித் துறையில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். இன்று பலரும் இந்த இன்டர்நெட் மூலம் பல வேலைகளைச் செய்துÖலும் இன்னும் சிலருக்கு இந்த இன்டர்நெட் என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகின்றது என்பது போன்ற அடிப்படை விளக்கங்கள் தெரியாது. அதை மனதில் கொண்டு இன்னும் சில வாரங்களுக்கு இந்த இன்டர்நெட் பற்றிய அடிப்படைத் தகவல்களும், மின் அஞ்சல் (email) பற்றிய முக்கியமான தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் ஒரு இன்டர்நெட் இணைப்பை பெற்றவர் பல வேலைகளைச் செய்ய முடிந்தாலும், அதன் முக்கியமான வேலையாக கருதுவது மின் அஞ்சல்யாகும். இந்த வகை முறையின் மூலம் தகவல்கள், செய்திகள் (masage) உருவாக்கி மற்றொருவருக்கு அனுப்புவது, மற்றும் அந்த தகவல்களை பெற்ற பிறகு அதற்கு பதில் அனுப்புவது போன்ற வேலைகளைச் செய்வது இதன் சிறப்பம்சமாகும். அதுவும் இந்த வேலைகளை உடனுக்குடன் (send) செய்வது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இன்டர்நெட் பற்றிய அடிப்படை தகவல்கள்

 

இன்டர்நெட் என்ற கருத்தை பொறுத்தவரை, அதனை சரியாக புரிந்து கொள்ள இரண்டு முக்கியமான வகை புரோகிராம்களைப் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். 1. Client (கிளையன்ட்-வாடிக்கையாளர்) 2. Server (செர்வர்-சேவைகளை வழங்குபவர்). இந்த `கிளையன்ட்'மற்றும் `செர்வர்' என்ற இரண்டு கம்ப்ïட்டர்களை வைத்து தான் இணைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. குறிப்பாக `கிளையன்ட்'எனப்படும் பலவிதமான வாடிக்கையாளர் களை ஒரு `செர்வர்' எனப்படும் சேவைகளை வழங்கும் கம்ப்ïட்டருடன் இணைக்கலாம். இந்த `கிளையன்ட்' கம்ப்ïட்டரும் `செர்வர்'கம்ப்ïட்டரும் செய்து கொள்ளும் தொடர்பினை இங்கே உள்ள படம் விளக்குகிறது.

`செர்வர்'-'கிளையன்ட்' பரிமாற்றம் இந்த இன்டர்நெட் என்ற கருத்தைப் பொறுத்த வரை பலமில்லியன் கம்ப்ïட்டர்களை பலவிதமான வயர்களைக் கொண்டு, கேபிள்களைக் கொண்டு தொலைபேசி இணைப்பு களைக்கொண்டு அல்லது செயற்கைக்கோள் உதவியுடன் ஒன்றாக இணைத்து தகவல்களை பரிமாறிக்கொள் வதாகும். இந்த இணைப்பு ஏற்படுத்துவதன் முக்கிய நோக்கமானது ஒரு `கிளையன்ட்' கம்ப்ïட்டரையும், `செர்வர்' கம்ப்ïட்டரையும் ஒன்றுடன் ஒன்று உரையாடச் செய்வதாகும். உதாரணமாக, மின் அஞ்சல் என்றழைக்கப்படும் முறையை எடுத்துக் கொண்டோமேயானால், ஒரு `கிளையன்ட்' மற்றொரு `கிளையன்ட்' உடன் தொடர்பு கொண்டு தகவல்களை பரிமாறிக் கொள்வதாகும். அவ்வாறு தொடர்பு கொள்ளும் முறையில் `செர்வர்' எனப்படும் கம்ப்ïட்டர் `கிளையன்ட்' கம்ப்ïட்டருக்குத் தேவையான சேவைகளை வழங்குகின்றது.

இதுபோன்ற `செர்வர்' கம்ப்ïட்டர்களில் மின் அஞ்சல் முறை தொடர்பு ஏற்படுத்தி தகவல்களை சரியான முறையில் பராமரிப்பதற்கு மெயில் செர்வர் (ஙஹகூஙீ நக்சுஞீக்சு) என்று அழைக்கிறோம். அந்தவிதமான கம்ப்ïட்டரில் ((Mail Box-மெயில் பாக்ஸ்) எனப்படும் தகவல் பதிவு செய்யும் பெட்டி ஒன்றை பயன்படுத்த வேண்டியுள்ளது. இதுபோன்ற `மெயில் பாக்ஸ்' என்பது ஒரு இடைப்பட்ட தகவல் மையமாக செயல்படுகின்றது. இது தகவல்களை பெறுகிறது. தகவல் சென்றடைய வேண்டியவரிடம், தகவல் வந்திருக்கும் செய்தியை தெரிவிக்கிறது. மேலும் தகவல் பெற்றவர் அனுப்பும் பதிலை பெற்று அதையும் சரியான முறையில் உரியவரிடம் சேர்க்கிறது.

இவ்வாறு மின் அஞ்சல் தகவல் அனுப்புவதற்கு மெயில் செர்வர் பற்றி தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. எவ்வாறு இந்த முறை செயல்படுகிறது என்ற கருத்தை மட்டும் நாம் அறிந்து வைத்திருத்தல் போதுமானது. இன்றைய சூழ்நிலையில் கணிப் பொறி பற்றி நன்கு அறிந்து வைத்திருப்பவர்களும் சரி அல்லது குறைவாக தெரிந்த வர்களும் சரி, அதிகம் இன்டர்நெட்டை உபயோகிப்பது இது போன்ற மின் அஞ்சல் அனுப்பும் வேலையைச் செய்வதற்குத்தான். மேலும், பலர் இன்று அதிகம் `சேட்டிங்' என்றழைக்கும் இன்டர் நெட் மூலம் மற்றொரு நபருடன் உரையாடல் வேலையைச் செய்வதற்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP